கர்ப்ப ஸ்தீரிகள் சொல்லும் ஜெபம்.

கன்னியும் தாயுமான அர்ச்சியசிஷ்ட மரியாயே! நீர் இயேசு நாதரை உமது திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்த நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில் அமிழ்ந்தி பேறுகாலமான போது வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் பிரவேசித்து திவ்விய பாலனைப் பெற்றீரே!

அந்த புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில் கிருபையாயிரும். நானோ பாவத்தில் பிறந்து சகலமான உபத்திரவங்களுக்கும் உள்ளாகியிருக்கிறேன். ஏவைக்கிட்ட ஆக்கினை என் மேலிருக்கிறது. ஆகையால் என் முடியாமையைப் பார்த்து என் பலகீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி மிதமான வருத்தத்தோடு பெற்றெடுக்க அனுகிரகம் செய்தருளும்.

மேலும் அந்தப் பாலகன் அறிவு, அன்பு, பண்புகளில் மேன்மையுற்று வளரவும், உமது திருமகனுடையவும் உம்முடையவும் ஊழியத்திலே நிலைக்கொண்டு பேரின்ப பாக்கியத்தின் வழியிலே நடக்கவும் உமது திருமகனை வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.