இனிய இயேசுவே! மக்களிடையே வாழ்வதும், அவர்கள் மேல் உமது ஆசியை ஏராளமாகப் பொழிவதும் உமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்பிக்கையோடு உம்மை நாடி வந்த பக்தர் அநேகர் வியப்புக்குரிய வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர். அவர்கள் கோரிய மன்றாட்டுக்களையும் அடைந்துள்ளனர். உமது அற்புத திருச்சுரூபத்திற்கு முன் முழந்தாளிட்டு, என் இதயத்தை திறந்து, என் விண்ணப்பங்களையும், கோரிக்கைகளையும், ஏக்கங்களையும்...
(தேவையை உறுதியோடு குறிப்பிடவும்)
உம்மிடம் கேட்கிறேன். உமது விருப்பம் போல் எனக்கு ஆகட்டும். உமது ஞானத்திற்கும், அன்பிற்கும் ஏற்ப, என் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்று நான் அறிவேன். இத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக வந்து, மகிழ்ச்சியையும் தந்து கிருபை பாலிக்க வேண்டும் என்று குழந்தை இயேசுவே உம்மிடம் பணிவோடு கேட்கிறேன்.
ஆமென்.