⛪ செபமாலை மாதாவின் மன்றாட்டு மாலை.

ஆண்டவரே இரக்கமாயிரும், மற்றதும்...

- பரிசுத்த செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- கபிரியேல் என்னும் தூதுவனால் அருள் நிறைந்தவளே என்று துதித்து வணங்கப்பட்ட தூய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- சர்வேசுரனுடைய மாதாவென்று எலிசபேத்தம்மாளால் புகழ்ந்து அழைக்கப்பட்ட அமல உற்பவியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலைத் தியானத்தினால் உம்மைத் துதிப்பது நலமென்று மறைவல்லுனரான புனித பொனவெந்தூர் சொல்லியபடி துதிக்கப்படுகின்ற உத்தமியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- இவ்வச்சித வணக்கத்தால் எல்லோரும் சகல நன்மைகளையும் அடையப்பண்ணுகிற நல்ல நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- பரலோகத்திலுள்ள தேவ தூதருக்கு மேலாக உயர்ந்த வழிபாட்டினால் புகழப்படுகின்ற புனித சீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலைத் தியானத்தை தேவ சந்நிதிக்கு மிகவூம் உச்சிதமானதும் சிறப்புமிக்க பெறுபேறு உள்ளதுமாகச் செய்கின்ற அருள் பூரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- தாவீது அரசன் தன் இசைத்திறமையால் பத்து நரம்புள்ள வீணையில் சருவேசுரனை வாழ்த்துவேனென்ற மேரையாய் செபமாலை என்னுஞ் சுத்தமான கருவியால் துதிக்கப்படுகின்ற உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- இஸ்ராயேல் புதல்வரின் நூற்றி ஐம்பது இராகமுள்ளதாய் அமைந்த ஒரு வாத்தியம் செபமாலைக்கு குறிப்பென்று திருச்சபையின் மறை வல்லுனர் தொரிவித்தபடியே அதனால் துதிக்கப்படுகின்ற இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- இதனைப் பக்தியுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் உச்சித கேடயமாக கைக்கொள்ளும்படி அருளிய தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலைப் பக்தியைக் கொண்டிருப்பவர்க்கு ஞான ஒளியாய் விளங்குகின்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- துருக்கரைத் தோற்கடித்துச் செபமாலைப் பக்தியாயிருந்த உமது தாசரை இரட்சித்தருளிய ஜெயசீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- மகத்துவமான திமிங்கு முனிந்திரனுக்குச் செபமாலைப் பக்தியை வளர்க்கும்படி கற்பித்தருளிய கருணையின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலைப் பக்தியால் ஆயிரக்கான மதபோதகரை சத்திய மறையில் சேர்த்த பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலையை எப்போதும் பக்தியுடன் ஓதிவந்த ஒரு பெண்ணின் கணவனை கடினமான அப விசுவாசத்திலிருந்து திருப்பிய கிருபையின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- வியாதியின் வருத்தத்தைப் பாராது செபமாலை தியானத்திற் சீவித்திருந்த ஒரு பெண்ணிற்கு ஈறாந்த உதவி செய்தருளிய கிருபாகரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- சனிக்கிழமை தோறும் உமது நாமத்தைக் குறித்து உபவாசம் இருந்து செபமாலை ஓதின ஒருவனைப் பாவதோஸத்தில் மாளாது அருள் புரிந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலைப் பக்தியோடு இருந்த சிரிமூ என்னும் அரசனுடைய சேவகன் ஒருவன் பாவத்தோடு மரித்தபோது அற்புதமாய் மீளவூம் பிராணனைக் கொடுத்துப் பாவத்தை அகற்றிவரும்படி கற்பித்த தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- வெஸ்த்தெயர் என்னும் சேவகன் ஒருவன் செபமாலை பக்தியாய் இருந்தமையால் ஒரு மகா ஆச்சரிய விசேசத்தை அவனுக்கு பிரத்தியட்சமாய் காண்பித்தருளிய கிருபாரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- எப்போதும் முழுச் செபமாலை ஓதி வந்ததால் பக்தியுள்ள ஒருவனுக்குப் பூ முடி சூட்டிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- உமது திருநாம மகிமைக்காச் செபமாலை ஓதுகிறவர்களுக்குப் பிரசித்தமாய் நலம் புரிந்தருளிய தர்ம பூரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- சமுத்திரத்தில் வீழ்ந்து மரித்த ஒரு குழந்தையை உயிர்ப்பித்து செபமாலைப் பக்தியோடு இருந்த அதன் பெற்ரோருக்கு ஈந்தருளிய அற்புத மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலைப் பக்தியில் பழகிய ஒரு எளிய இடையனுக்கு பிள்ளைகள் மூவரைச் சதி மரணத்திலிருந்து விலக்கி இரட்சித்த கிருபாரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலைப் பக்தியோடு இருந்த தரித்திரனுடைய இரண்டு வாலப் பெண்களுக்கு உமது விலை பெற்ற பாதரட்சைகளைக் கழற்றிக்கொடுத்து உதவின இராஜேஸ்வரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலைத் தியானத்தோடு இருந்த ஒரு விதவையின் பெண் பிள்ளைகள் இருவருக்குத் தாரிசனையாகி அவர்களுக்கு பூ முடி புனைந்தருளிய சுகிர்த செல்வியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- உமது செபமாலை வரத்தினால் உலகத்தில் அனேக அற்புதங்களை இயற்றிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- பக்தியோடு செபமாலையை தியானிப்போருக்கு அருள்புரியும்படி தயாள சித்தமாய் காத்திருக்கின்ற ஊரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- செபமாலைத் தியானத்தை முழுப்பக்தியோடு செய்தல் பரலோகநாட்டை அடைய ஒரு ஏணியாக காண்பித்தருளிய பரம நாயகியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- சந்நியாச இல்லங்களிலும் கன்னியர் மடங்களிலும் எப்போதும் இச்செபத்தினால் உம்மை துதிப்பதால் உமது சலுகையை அடையச்செய்கிற உத்தம விரத்தியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- பக்தியுள்ளோர் குடும்பங்களில் செபமாலை ஓதி உம்மை பிரார்த்தித்து தங்கள் அந்தஸ்த்துக்கு ஏற்ற பலன்களை பெறச் செய்கிற ஞான சஞ்சிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- விசுவாசிகளுடை நன்மார்க்கமாகிய செபமாலையைத் தந்தருளிய சுகிர்தசீலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- சகல தேவ இரகசியங்களையும் சம்பூரணமாய் கொண்டிருக்கிற செபமாலையைத் தந்த ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- பிதாப்பிதாக்களுடைய நம்பிக்கையாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- இறைவாக்கினர்களுடைய தியானமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- அப்போஸ்தலர்களுடைய ஆதாரமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- வேத சாட்சிகளுடைய ஜெயசீலியாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- சகல மோட்சவாசிகளுடைய இராக்கினியுமாகிய செபமாலை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.
- உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

யேசுகிறிஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக! பரிசுத்த செபமாலை மாதாவே!  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக:
அனந்த தயையுள்ள சர்வேசுரா! முத்திப்பேறுபெற்றவளும் நித்திய கன்னிகையுமாயிருக்கிற அமலோற்பவ மரியாயே, செபமாலை மாதா என்கிற திருநாமத்தால் குறித்து, பக்தியோடு செபித்து, அவளுடைய பாதுகாவலை அடைய விரும்புகிற எங்கள்மேல் கிருபை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஆமென்.

1.) மங்களம்! மங்களம்! புனித செபமாலை மாதாவே எசெக்கியேல் என்னும் இறைவாக்கினர் காட்சியாய்க் கண்ட மனுவூருவத்தின் குறிப்பினால் உமது மகிழ்ச்சியான மகிமையின் மறைபொருள் காணப்படுவதால் உம்முடைய ஆத்தும சாரிரத்தின் பரிசுத்தனமாகிய ஏழு ஆனந்த மகிமைகளும் வெளியாகின்றதாமே. நீர் அடைந்த இவ்வித மேன்மையான மகிமைகளை நாங்கள் செபமாலைத் தியானத்தில் சிந்தித்து அவைகளை பக்தியோடு தியானித்துப் பலனடையும்படி எங்களுக்காக பிரார்த்தித்தருளும்.
(1பர.1அருள்)

2.) மங்களம்! மங்களம்! புனித செபமாலை மாதாவே எசெக்கியேல் என்னும் இறைவாக்கினர் காட்சியாய்க் கண்ட இடத்தின் குறிப்பினால் உமது வியாகுலத்தின் மறைபொருள் காணப்படுவதால் நீர் உமது திருக்குமாரனுடைய சீவிய காலத்தில் அனுபவித்த சொல்லாரிய மனக்கிலேசம் பிரதியட்சமாகின்றதாமே. நாங்கள் எங்கள் இரட்சகருடைய பீடை மரணத்தின் துக்க நிகழ்ச்சிகளை இச்செபமாலைத் தியானத்தால் சிந்தித்து உமது வியாகுலத்தில் பங்குப்பேறு அடையும்படி எங்களுக்காக பிராத்தித்துக் கொள்ளும்.
(1பர,1அருள்)

3.) மங்களம்! மங்களம்! புனித செபமாலை மாதாவே எசெக்கியேல் என்னும் இறைவாக்கினர் காட்சியாய்க் கண்ட சிங்கத்தினதும் இராசாளிப் பட்சியினதுங் குறிப்பினால் நீர் சரிரத்தோடு மோட்ச பரம ஆனந்தம் அடைந்த மறைபொருள் பிரதியட்சமாகின்றதாமே. குறித்த மோட்ச சிம்மாசனத்தை சூழ்ந்திருந்த நாலுவித ஜீவ பிராணிகளைப்போல நாங்களும் திரித்ததுவத்தின் பத்திராசனமாகிய உம்மைச் சூழ்ந்து செபமாலைத் தியானத்தாற் கீர்த்தனை புரிந்து பேரின்ப பாக்கியத்தை அடையும்படி எங்களுக்காக பிரார்த்தித்துக்கொள்ளும்.
(1பர,1அருள்)

ஆமென்.