கணவன் மனைவியரின் செபம்.

கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள நேச ஐக்கியத்தை குறிக்கவும், உலக பரம்புதலுக்காகவும், நெருங்கிய அன்புக்காகவும் பனித திருமணவாழ்வை அர்ச்சித்தருளின இறைவா, அதன் ஆசீர்வாதத்தை இருவரும் வணக்கத்தோடு ஏற்றுக் கொண்டு அதன் கடமைகளை நடத்தக் கிருபைபுரியும்.

எங்களுடைய ஒன்றிப்பை இடைவிடாமல் ஆசீர்வதிக்கவும், அதனால் நாங்கள் இருவரும் எல்லா கடமைகளையும் சமாதானத்தோடும் அன்போடும் நிறைவேற்றவும், பிரமாணிக்கமாய் எங்களில் ஒருவருக்கொருவர் நடக்கவும் உம்மை மன்றாடுகிறேன்.

பிரிபடக்கூடாத கட்டினால் கட்டின அந்தப் புனித பந்தத்தை பலவீனப்படுத்தக்கூடிய எவ்விதக் கெட்ட குணத்திலும் பாவச் செயலிலும் இருந்து என்னை விடுவித்தருளும்.

தன்னலத்தை மறந்து, தியாக உள்ளத்தோடு வாழ்ந்து நான் உமக்குப் பிரியப்பட நடக்க சுறுசுறுப்பள்ளவனாகவும் ஆசையுள்ளவனாகவும் செய்தருளும்.

இவ்வுலக சோதனை துன்பங்களினால் உமது பேரில் முறுமுறுத்து எல்லாவற்றிற்கும் காரணரும் ஈகிறவருமாயிருக்கிற உம்மை உலக வாழ்வின் நிறைவால் மறந்து விடாமலிருக்கச் செய்தருளும்.

பொறுமையாலும் கடன் சாந்த குணத்தாலும், செபத்தாலும், நன்றியறிதலாலும் உமக்குக் கீழ்படிந்திருக்க என்னை ஆசீர்வதித்து உமக்குத் தகுந்தவனாகவும் செய்தருளும்.

ஆமென்.