© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ப்பண ஜெபம்.

இந்த புதிய நாளுக்காக நன்றி ஆண்டவரே. என்னை அன்பு செய்து ஆதரிப்பவர்களுக்காக உமக்கு நன்றி.

இந்த நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் மிக சிறப்பாக பயன்படுத்த எனக்கு உதவியளும்.
பயம், சுயநலம் மற்றும் பேராசையிலிருந்து என்னைக் காப்பாற்றும்.

இன்று என்னால் யாரும் துன்புறாமல் இருப்பார்களாக.

எனது பேராசையால் யாரும் பசியால் வாடாதிருப்பார்களாக.

எனது ஆதரவு இல்லாததால் யாரும் தனிமையில் வாடாதிருப்பார்களாக.

நான் தேவைப்படுகறவர்களுக்கு எனது இதயம் திறந்திருப்பதாக.

என்னை கண்ணின் மணி போல் காப்பதற்காக நன்றி ஆண்டவரே

ஆமென்.