இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கொடிய நேய்வாய்ப்பட்ட காலத்தில் சொல்லத்தக்க ஜெபம்.

ஓ இயேசுவே! திவ்விய மீட்பரே, எங்கள் பேரிலும், உலகினர் பேரிலும் இரக்கமாய் இரும்!

ஓ வல்லபக் கடவுளே! ஓ பரம தேவனே! என்றும் வாழும் இறைவா, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் தயையாயிரும்.

என் இயேசுவே! எங்களுக்குப் பொறுத்தலும் இரக்கமும் அளித்து, இந்த ஆபத்தான காலத்தில் உமது விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை எங்கள் பேரில் தெளித்தருளும்.

என்றென்றும் வாழும் தந்தையே! உமது ஒரே பேறான இயேசுகிறிஸ்துவின் திரு இருதயத்தைப் பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிற எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

ஆமென்.