பயனுள்ள கருவியாய்ப் பயன்படுத்த பரிசுத்த ஆவியாரிடம் செபம்.

என்றும் வாழும் எல்லாம் வல்ல உன்னத இறைவனின் மகா பரிசுத்த ஆவியே, என்னுள் இறங்கி வாரும். துருபிடித்த இரும்பான என்னை உருக்கி, துரு நீக்கி தூய்மைப்படுத்தும். இயேசுவின் இலட்சியப் பாதையை எனது வாழ்வாக மாற்றும். உம் வரங்களாலும், கனிகளாலும், கொடைகளாலும் என்னை நிரப்பும். என்னுள் செயலாற்றும் தீய ஆவியை நீக்கி உமது ஆய ஆவியால் நிரப்பி, என்னைத் தூய்மைப்படுத்தும். பதரான என்னை பயனுள்ள கருவியாய்ப் பயன்படுத்தும்.

ஆமென்.