தீயச் சக்திகளை கட்டும் செபம்.

(இந்த செபங்கள் செபிக்கப்படும் வீடுகளிலும், இடங்களிலும் நிறைய கட்டுகள் உடைபட்டு வியாதிகள் நீங்கி, குடும்பத்தில் சமாதானம் உண்டாகி ஆசீர்வாதங்களால் நிரப்பப்படுகின்றார்கள். நீங்களும் செபித்து பயன் பெறுங்கள். மற்றவர்களையும் படிக்கச் செய்யுங்கள்.)

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், என்னையும் (அ) எங்களையும் நான் தங்கியிருக்கும் வீடு, பணி செய்யும் இடம், எனக்குரிய நிலம், சொத்து அனைத்தையும் கட்டி செபிக்கிறேன். கிறிஸ்துவின் இறை வார்த்தையால் கட்டி செபிக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எனக்கும், மற்றவர்களுக்கும் இடையே குழப்பத்தை வருவிக்கின்ற குழப்பத்தின் ஆவிகளையும், மனிதர்களின் சதித் திட்டங்களையும், குடும்பத்தை முன்னுக்கு வரவிடாமல் தடை செய்கின்ற தீய சக்திகளையும், எங்கள் குடும்பத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்ற எல்லா தீய சக்திகளையும் உமது நாமத்தினால் கட்டி, இயேசுவே உமது பாதத்தில் வைக்கிறேன்.

இயேசுவே உமது பரிசுத்த இரத்தத்தால் இவைகளை சுட்டெரித்து நிர்மூலமாக்கும். இயேசுவே, எங்களை உமது பரிசுத்த இரத்தக் கோட்டைக்குள் வைத்து மறைத்துக் கொள்ளும். தூய ஆவியால் எங்களை நிரப்பும். இயேசுவே, உமது வான தூதர்கள் உங்களைச் சுற்றி காவல் புரியும்படி கட்டளையிடும்.

இயேசுவின் இரத்தம் ஜெயம் (10 முறை).

ஆமென். 

(குறிப்பு: இந்த செபத்தை ஒவ்வொருவரும் தனக்காகவோ, மற்றவர்களுக்காகவோ காலையில் எழுந்தவுடனும், இரவு படுக்கப் போகும் முன்னும் செபிக்கலாம்.)