நம் திவ்ய அன்னை பற்றிய தந்தை பியோவின் போதனைகள் 8 :

தந்தை பியோவின் ஞான மகன்கள் : கடவுளின் சித்தத்திற்கு பணிந்திருத்தல் எவ்வளவு மகிச்சிகரமானது..

பாத்ரே பியோவின் ஞான மகன் பியேத்ருக்ஸியோ கூகுனோ மரபு வழிக் குறைபாட்டினால் பதின்மூன்று வயதில் பார்வைத் திறனை இழந்தார். பாத்ரே பியோ அவரிடம்,, “ என்னிடம் உண்மையைச் சொல். நீ பார்வை பெற விரும்புகிறாயா? ஆம் என்றால், நாம் திவ்ய கன்னிகையிடம் ஜெபிப்போம். தன் திருமகன் சேசுவின் திருஇருதயத்தின் மீது அவர்கள் மிகுந்த வல்லமை கொண்டிருக்கிறார்கள்” என்றார் பியோ.

பியெத்ருக்ஸியோ பதிலளித்தார்:

“ தந்தாய், நான் பார்வையோடு பிறந்தேன். பதின்மூன்று வயதில் ஆண்டவர் அதை எடுத்துக் கொண்டார். அவர் காரணமின்றி எதையும் செய்ய மாட்டார். அப்படியிருக்க, நான் ஏன் கடவுளின் சித்தத்திற்கு எதிராக ஜெபிக்க வேண்டும்? முதலில் தந்துவிட்டு, பின்னர் அவர் திரும்பி எடுத்துக் கொண்ட காரியத்தை நான் ஏன் அவரிடம் கேட்க வேண்டும்?!”

ஆனால் பியோ மீண்டும் : “ நீ பார்வை பெற விரும்புகிறாயா இல்லையா? என்று வற்புறுத்திக் கேட்க,

இறுதியாக கூகினோ இப்படிப் பதிலளித்தார்:

“ தந்தாய், தாம் செய்வது இன்னதென்று ஆண்டவர் அறிந்திருக்கிறார். நான் எப்போதும் அவர் திருச் சித்தத்தை நிறைவேற்றவே விரும்புகிறேன். ஆண்டவர் எனக்குப் பார்வை தந்து, அது என் பாவங்களுக்குக் காரணமாக இருக்குமென்றால், அது எனக்கு வேண்டவே வேண்டாம்.

குருடரான மற்றொரு ஞான மகன்:

பாத்ரே பியோவுக்கு ஸால்வாத்தோர் என்ற பெயரில் மற்றுமொரு பார்வையற்ற ஞான மகன் இருந்தார். நடுத்தர வயதில் அவர் தன் பார்வைவை இழந்தார். மனைவியையும், சில குழந்தைகளையும் கவனிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்தாலும் அவர் விண்ணப்பித்திருந்த  ஊணமுற்றோருக்கான அரசாங்க உதவித்தொகை இன்னும் கிடைக்காததாலும் மிகுந்த மனச்சோர்வுடன் அவர் பாத்ரே பியோவைச் சந்திக்க வந்தார்.

பியோ அவரிடம்: “ கடவுளில் நம்பிக்கை வை. சிறிது காலத்திற்குள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் “ என்றார்.

விரைவிலேலே அவருக்கு உதவித்தொகை கிடைத்தது. பிரச்சனைகள் நீங்கின. ஒரு நாள் அவருடைய இளைய மகன் அவரிடம், “ நீங்கள் ஏன் பாத்ரே பியோவிடம் உங்களுக்கு பார்வை அளிக்கும்படி கேட்கக் கூடாது? “ என்றான். “ நீயே அவரிடம் கேள் “ என்றார் தந்தை. அடுத்த முறை அவர்கள் ஸான் ஜியோவான்னிக்குச் சென்ற போது மகன் பாத்ரே பியோவிடம் கேட்க, அவர் பதிலுக்கு, “ உன் தந்தையிடமே இதைப்பற்றிக் கேள் “ என்று சொல்லிவிட்டார்.

மகன் மனக்குழப்பத்துடன் தந்தையிடம் திரும்பி வந்தான். அவர் புண்ணகைத்தபடி,

“ நான் முதலில் தந்தை பியோவைக் காணச் சென்ற போது, நான் எந்த நேரம் விரும்பினாலும் குணம் பெறலாம் என்று அவர் கூறினார். ஆம் இந்த வரப்பிரசாதம் தயாராக இருக்கிறது. என்றாலும் சேசு நாதர் நமக்காக எவ்வளவு அதிகமாகத் துன்புற்றார் என்பது பற்றி நான் சிந்தித்தபோது, நான் சேசுவிடம் உமது மகிமைக்காக நான் என் பார்வைத் திறனை விட்டுக்கொடுக்கிறேன் “ என்று கூறிவிட்டேன் என்றார்.

சில சமையங்களில் இயல்புக்கு மேலான முறையில் கடவுளால் குணப்படுத்தப்படுவதை விட, அவருக்காக அமைந்த மனதோடு நோயை அனுபவிப்பதும், பாவ சோதனைகளை எதிர்த்துப் போராடுவதும் எவ்வளவோ மகிழ்ச்சினது!.

பாத்ரே பியோவின் வல்லமை நோயைக் குணப்படுத்துவதில் அல்ல, கடவுளின் சித்தத்திற்கு பணிந்திருப்பதிலேயே அடங்கியிருக்கிறது!. நன்மைகள் நிறைந்த வாழ்வுக்காகத் தமக்கு ஆராதனை செலுத்தி, தம்மை நேசிப்பவர்களை விட, தாம் தந்தருளும் வறுமை, தாழ்மை, நோய்களுக்காக நன்றி செலுத்தும் உள்ளங்கள் சேசுவுக்கு அதிகப் பிரியமானவை!.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !