நம் திவ்ய அன்னை பற்றிய தந்தை பியோவின் போதனைகள் 1 :

ஆன்மாக்கள் கன்னிமாமரி மீது பக்தி கொள்ள வேண்டும் என்று தனிப்பட்ட விதமாக சேசு விரும்புகிறார் என்று பாத்ரே பியோ போதித்தார். இந்த உண்மைதான் அவரது தேவமாதா பக்திக்கு ஆணி வேராக இருந்தது. மாமரியின் மீதான பக்தி பற்றி பியோ கொண்டிருந்த சிந்தனைகளையும், அவரது போதனைகளையும் இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

மாமரியின் வழியாக உலகிற்கு வருவதையே சேசு தேர்ந்து கொண்டார். அதே போல, நாம் இந்த அன்னை வழியாக அவரிடம் செல்லுவதையே சேசு தேர்ந்து கொள்கிறார். ஏனெனில் அவர்களுடைய ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகின்றது. பரிசுத்த நற்செய்தி அறிவிப்பது போல, “ என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது; என் இரட்சன்யமாகிய சர்வேசுவரனிடம் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது; ஏனெனில் தமது அடிமையின் தாழ்மையைத் தயவோடு பார்த்தருளினார். ஆகையால் இதோ, இக்காலமுதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். ஏனெனில் வல்லப மிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடம் செய்தருளினார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது “ என்று மாமரி பாடினார்கள் (லூக்.1: 46-49

எனவே “எல்லாத் தலைமுறைகளாகிய” கிறிஸ்தவர்கள் (கத்தோலிக்கர்கள்) தேவ அன்னைக்குக் காட்ட இருக்கும் பக்தியைப் பற்றி நற்செய்தி நமக்கு ஒரு தெளிவான இறைவார்த்தையைத் தருகிறது. கத்தோலிக்கர்கள் ஜெபிக்கும் அருள் நிறை மந்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் நற்செய்தியில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் திவ்ய கன்னிகை புதிய உடன்படிக்கைப் பெட்டகமாக இருக்கிறார்கள் என்று பரிசுத்த வேதாகமம் அறிவிக்கிறது. பழைய ஏற்பாட்டின் பெட்டகம் சீனாய் மலையில் கடவுள் மோயீசனுக்கு அளித்த பத்து கட்டளைகளைத் தன்னுள் கொண்டிருந்தது. கடவுளின் பிரசன்னம் அல்லது மகிமை, மேக வடிவில் அந்தப் பேழையின் மீது தங்கியிருந்தது. இதன் காரணமாக அந்தப் பேழை கடவுளின் எதிரிகளின் மீது சிறப்பான இரு வல்லமையைக் கொண்டிருந்தது. (1அர/1 சாமுவேல், அதிகாரங்கள் 5,6), யாத்திராகமம் 40:34-35 வசனங்கள் கடவுளின் மகிமை அல்லது அவரது பிரசன்னம் எவ்வாறு மேக வடிவத்தில் தேவாலயத்தையும், உடன்படிக்கைப் பேழையையும் என்பதைக் காட்ட “ நிழலிடுதல் “ என்ற வார்த்தையைப் பயன்படுத்தப்படுகின்றன.

இனி, புதிய ஏற்பாட்டிலும் இதே வார்த்தையை நாம் காண்கிறோம்.: 

லூக்காஸ் 1:35-ல் பரிசுத்த ஆவியானவர் மாமரியை நிரப்புவதை விளக்க இதே வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது: “ பரிசுத்த ஆவியானவர் உமது மேல் எழுந்தருளி வருவார் ; உன்னதருடைய வல்லமை உம்மீது நிழலிடும்; ஆகையால் பிறக்கும் பரிசுத்தர் தேவ சுதன் எனப்படுவார் “ என்று கபரியேல் தூதர் மாமரிக்கு அறிவிக்கிறார், அவர்களே தேவ வார்த்தையானவரின் ( சேசு கிறிஸ்துவின்) உயிருள்ள தேவாலயமாக இருக்கிறார்கள் என்று பரிசுத்த நற்செய்தி நமக்குக் கற்பிக்கிறது.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787

மாமரியே… வாழ்க !

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே… ஜெபிப்போம்…ஜெபிப்போம் ஜெபமாலை….ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை.. கடவுளின் உயிருள்ள உடன்படிக்கைப் பேழையே வாழ்க…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !