புனித இரண்டாம் ஜான் பால்

96. ஜெபமாலை ஜெபிப்பது என்பது கிறீஸ்து மற்றும் அவருடைய தாயாரின் இரக்கமுள்ள இருதயங்களிடம் நம் சுமைகளைக் கையளித்து விடுவதாகும்.

97. நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதபடியும், ஒருபோதும் சந்தேகம் கொள்ளாத படியும், ஒருபோதும் சோர்வுறாதபடியும், ஒருபோதும் அதைரியப்படாதபடியும் நான் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். பயப்படாதீர்கள்.

98. நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவில் கொண்டிருங்கள், கிறீஸ்து உங்கள் வாழ்வுகளில் ஒவ்வொரு நாளும், உங்கள் பயணத்தில் உங்களோடு இருக்கிறார்!

99. வன்முறை தான் உருவாக்க நினைப்பதைக் கொன்று விடுகிறது.

100. சத்தியமும், பெரும்பான்மையானவர்களின் தீர்மானமும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை.

101. கடவுள் ஒவ்வொரு பெண்ணின் மேன்மை என்னும் கடமையை ஒவ்வொரு ஆணுக்கும் நியமித்திருக்கிறார்.

102. நேசம் என்பது கடவுளால் நமக்குத் தரப்படும் ஒரு நிலையான சவாலாக இருக்கிறது.

103. பள்ளிக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ, வேலைக்கோ தெருவில் நடந்து செல்லும் போது, அல்லது ஒரு வாகனத்தில் பயணம் செய்யும்போது, தனியாக ஜெபமாலை செல்ல வெட்கப்படாதீர்கள்.

104. இது ஓர் அற்புதமான உண்மை, என் பிரியமுள்ள சகோதரரே: இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக மனிதனாக அவதரித்த வார்த்தையானவர், இன்று திவ்ய நற்கருணையில் பிரசன்னமாயிருக்கிறார்.

105. நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவில் கொண்டிருங்கள், கிறீஸ்து உங்கள் வாழ்வுகளில் ஒவ்வொரு நாளும், உங்கள் பயணத்தில் உங்களோடு இருக்கிறார்!

106. புனிதர்களாக இருக்க பயப்படாதீர்கள். சுதந்திரம் மற்றும் ஒளியின் ஆதாரமாக இருக்கும் இயேசு கிறீஸ்துவைப் பின்செல்லுங்கள். ஆண்டவர் உங்கள் வழிகளையயல் லாம் ஒளிர்விக்கும்படி அவருக்குத் திறப்பாயிருங்கள்.

107. உங்கள் ஜெபமாலையை மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

108. எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனதாகத் தோன்றும்போதும் கூட நம்பிக்கையோடு இருக்க நாம் மாமரியிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.

109. சுதந்திரம் நாம் விரும்புவதைச் செய்வதில் அல்ல,ங மாறாக, நாம் செய்ய வேண்டிய தைச் செய்ய உரிமையுள்ளவர்களாக இருப்பதில் அடங்கியிருக்கிறது.

110. அவநம்பிக்கைக்கு உங்களைக் கையளித்து விடாதீர்கள். நாம் உயிர்ப்பின் மக்களாகவும், நம் பாடலில் அல்லேலூயாவாகவும் இருக்கிறோம்.

111. இப்போது முதல், மிகத் தெளிவான தெரிவின் மூலமாகவும், தானே முன்வந்து எடுத்துக் கொள்கிற ஒரு கொள்கையின் வழியாகவும் மட்டுமே மனித குலம் பிழைத்திருக்க முடியும்.

112. சுதந்திரத்திற்கு நோக்கம் ஏதுமில்லாதபோது, ஆண்களின் இருதயங்களிலும் பெண்களின் இருதயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ள சட்ட விதிகளில் எதையும் அறிந்துகொள்ள அது விரும்பாதபோதும், மனச்சான்றின் குரலை அது கேட்காத போதும், அது மனுக்குலத்திற்கும், சமூகத்திற்கும் எதிராகத் திரும்புகிறது.

113. விஞ்ஞானம் மதத்தைத் தப்பறையிலிருந்தும், மூட நம்பிக்கையிலிருந்தும் சுத்திகரிக்க முடியும். மதம் விஞ்ஞானத்தை விக்கிரக வழிபாட்டிலிருந்தும், பொய்யான சார்பற்ற நிலைகளிலிருந்தும் சுத்திகரிக்க முடியும்.

114. பாடலிலும், இசையிலும் எனக்கு மிகப் பெரிய ஆர்வம் உள்ளது. இது என் போலந்து நாட்டுப் பாவமாகும்!

115. கூட்டு முதலாளித்துவம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அந்நியமாதலைப் போக்குவதற்குப் பதிலாக, அதை அதிகரிக்கிறது, அத்துடன் அத்தியாவசியத் தேவைகள் குறைவுபடுவதற்கும், பொருளாதார சீர்கேட்டுக்கும் அது காரணமாகிறது என்று சோஷலிஸ நாடுகளின் வரலாற்று அனுபவம் சோகமான முறையில் எடுத்துக் காட்டியுள்ளது.

116. அறியாதவர்களிடம் செல்ல பயப்படாதீர்கள். நான் உங்களோடு இருக்கிறேன், எனவே உங்களுக்கு எந்தத் தீமையும் நேராது என்று அறிந்து, அச்சமின்றி வெளியே வாருங்கள்; எல்லாமே மிக மிக நன்றாயிருக்கிறது. இதை முழு விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் செய்யுங்கள்.

117. மக்களோடு ஒன்றித்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன், அதுதான் அனைத் திலும் முக்கியமான காரியம்.

118. குடும்பம் எவ்வழியோ, அவ்வழியே நாடும்; நாம் வாழும் உலகம் முழுவதுமே அவ்வழியில்தான் செல்கிறது.

119. இன்று திருச்சபையைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் பிரச்சினை, தெருவில் வாழும் மனிதன் மதம் சார்ந்த ஒரு செய்தியை இனியும் புரிந்து கொள்ள முடியுமா என்பதல்ல, மாறாக, அவன் சுவிசேஷச் செய்தியின் முழுத் தாக்கத்திற்கும் உட்படச் செய்யும்படி தொலைத் தொடர்பு ஊடகத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதுதான்.

120. இன்று, வரலாற்றில் முதன்முறையாக உரோமையைச் சேர்ந்த ஓர் ஆயர் ஆங்கிலேயே மண்ணில் காலடியயடுத்து வைக்கிறார். ஒரு காலத்தில் அஞ்ஞான உலகத்தின் தொலைவான புறக்காவற்படைத் தளமாக இருந்த இந்தத் தொலைவான நாடு, சுவிசேஷ போதகத்தின் வழியாக, கிறீஸ்துவின் திராட்சைத் தோட்டத்தின் அன்பிற் குரியதும், சலுகை பெற்றதுமான பாகமாக ஆகியுள்ளது.

121. நான் உம்மிடம் பெயர் சொல்ல விரும்புகிற மக்களினங்களும், நாடுகளும் இருக்கின்றன, அன்னையே. நான் அவற்றை உம்மிடம் மெளனமாக ஒப்படைக்கிறேன். நீங்கள் மிக நன்றாக அறிந்துள்ள வழியில் நான் அவற்றை ஒப்படைக்கிறேன்.

122. வன்முறையும், ஆயுதப் பெருக்கமும் மனிதர்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது.

123. குடும்பத்தின் மகிழ்ச்சியைக் காத்துக் கொள்வதற்கு பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஆகிய இரு தரப்பாரின் ஒத்துழைப்பும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், ஒரு சிறப்பான முறையில் மற்றவர்களுக்கு ஊழியம் செய்பவராக ஆக வேண்டியுள்ளது.

124. சாக்குப்போக்கு என்பது வாழ்வை விட அதிக மோசமானது, அதிக பயங்கரமானது, ஏனெனில் சாக்குப்போக்கு என்பது பாதுகாக்கப்படும் பொய்யாக இருக்கிறது.

125. மனித குலம் அபத்தமானதும், எப்போதும் நியாயமற்றதுமான போர் என்னும் நிகழ்வைக் குறித்து, மீண்டும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும், மரணம் மற்றும் வேதனை என்னும் அதன் மேடையின் மீது, அதைத் தடுத்திருக்கக் கூடியதும், தடுத்திருக்க வேண்டியதுமான பேச்சுவார்த்தையின் மேஜை மட்டும் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.

126. கன்னிமை வார்த்தைப்பாடு என்பது, குருவின் உள்ளரங்க முதிர்ச்சி பற்றிய கடமை யையும், அந்த முதிர்ச்சியின் நிரூபணத்தையும் பற்றி கிறீஸ்துவுக்கும் திருச்சபைக்கும் ஒருவர் வாக்குறுதியாகத் தரும் வார்த்தையைப் பற்றிய காரியமாகும். அது அவருடைய தனிப்பட்ட மகத்துவத்தின் வெளிப்பாடாகும்.

127. அன்பு ஒருபோதும் வெல்லப்படுவதில்லை, அயர்லாந்தின் வரலாறு அதை எண்பிக்கிறது என்றும் நான் கூற முடியும்.

128. ஒவ்வொரு ஆசையும் உடனடியாகத் திருப்தி செய்யப்படுவது பற்றி வாக்களிப்பதன் மூலம் கடின உழைப்பைத் தவிர்த்து விடுவதற்கான இயல்பான நாட்டத்தைத் தூண்டுகிற விளம்பர உத்திகளைத் தீமையான முறையில் பயன்படுத்துவதன் மூலம்… இளம் பருவத்தினர் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

129. திருமணம் என்பது ஒரு பரஸ்பர கையளித்தலை முக்கியப்படுத்துவதும், அதனோடு தொடர்புள்ளதுமான சித்தத்தின் செயல்பாடு ஆகும், அது மணமக்களை இணைக்கிறது, இந்த இணைப்பில் விளையும் புதிய ஆன்மாக்களோடு அவர்களை சேர்த்துக் கட்டுகிறது. இந்த ஆன்மாக்களோடு அவர்கள் ஓர் ஒற்றைக் குடும்பத்தை -- ஒரு குடும்பத் திருச்சபையை -- உருவாக்குகிறார்கள்.

130. நாம் வாழும் இந்த உலகம் அவநம்பிக்கைக்குள் மூழ்கி விடாதபடி அதற்கு அழகு தேவைப்படுகிறது.

131. உங்கள் வாழ்வுகளில் பெரிதாக எதையாவது செய்யும் ஆசையை உங்களில் தூண்டுபவர் இயேசுவே. ஒரு கொள்கையைப் பின்பற்றும் சித்தம், தரக்குறைவின் மூலம் நொறுக்கப்பட உங்களை நீங்களே அனுமதிக்க மறுத்தல் (ஆகியவற்றை உங்களில் அவரே தூண்டுகிறார்).

132. உங்கள் மேன்மைக்கான உச்சபட்ச பரிசோதனை, நீங்கள் ஒவ்வொரு மனிதனையும் எப்படி நடத்துகிறீர்கள் என்பதே.

133. தொலைந்து போவது பற்றி பயப்படாதீர்கள்: நாம் எவ்வளவு அதிகமாக நம்மையே தருகிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்மையே கண்டுபிடிப்போம்.

134. ஜெபமாலை எனக்குப் பிரியமான ஜெபம், ஓர் அற்புதமான ஜெபம், தன் எளிமையிலும், தன் ஆழ்ந்த தன்மையிலும் அற்புதமானது அது.

135. இன்பம், சுகமான வாழ்வு, சார்பற்ற தன்மை ஆகிய விக்கிரகங்களைக் கொண்டு எந்த ஒரு சமூகத்திற்கு நடுவிலும் குடும்ப வாழ்வுக்கான பெரும் ஆபத்து, மனிதர்கள் தங்கள் இருதயங்களை மூடிக்கொண்டு, சுயநலமுள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்ற உண்மையில் அடங்கியிருக்கிறது.

136. குடும்பம் கடவுளுக்கும் தீமைக்கும் இடையிலும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலும், அன்பிற்கும் அன்பிற்கு எதிரான அனைத்திற்கும் இடையிலும் நிகழும் மாபெரும் போராட்டத்தின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

137. ஒவ்வொரு மனிதக் குடும்பத்தின் அடையாளமும், மாதிரியுமான திருக்குடும்பம், நாசரேத்தின் உணர்வைக் காத்துக்கொள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உதவுவதாக.