இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

காணிக்கை இன்று தரவந்தோம் இறைவா ***

காணிக்கை இன்று தரவந்தோம் இறைவா
வாழ்வைப் பலியாக்க வந்தோம் நாதா
எமைப் பலியாக்கவே உம் பதம் வருகின்றோம்
கனிவுடன் ஏற்றிடுவாயே கருணை தேவா

1. புழுதி படிந்த கரங்களில் என் பொன்னான
வேர்வைத்துளி உம் பாதம் எடுத்து வந்தோம்
நீலக்கடலில் கரையும் எம் முத்தான குருதித்துளி
பொற்பாதம் கொண்டு வந்தோம்
உழைப்பின் உயர் பலன் யாவும் பீடம் வைத்தோம்
உம் உடலாய் இரத்தமாய் மாறச் செய்வாயே

2. விடியற்காலை ஏங்கும் எங்களின் விழிகளில்
கண்ணீர்த்துளி உம் பாதம் எடுத்து வந்தோம்
இருள் அகலும் ஒளி ஏற்ற யாம் சிந்தும் ஈரத்துளி
பொற்பாதம் கொண்டு வந்தோம்