அன்னை மரியாவைப் பற்றிய விசுவாசக் கோட்பாடுகள்

கத்தோலிக்கத் திருச்சபையில் அன்னை மரியாளின் வணக்கம், பக்தியானது கடந்த 21 நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையில் மரியாவின் வழிபாடு இரண்டறக் கலந்த ஒன்று. தந்தையாகிய கடவுள் தம் மகன் வழியாக இயேசு கிறிஸ்துவில் உலகிற்கு வெளிப்படுத்திய செய்தியை பறைசாற்றுகின்றது. நான்கு நற்செய்திகளும், திருத்தூதர்களும், தொடக்கத் திருச்சபை கிறிஸ்தவர்களும் இயேசுவைப் பற்றிய செய்திகளை வாய்வழியாக வழங்கியபோது அச்செய்திகளின் முக்கியப் பின்னனியாக விளங்கிவர் அன்னை மரியா.

மரியியல் சிந்தனைகளும், மரியா தொடக்கத் திருச்சபையினரிடையே பெற்றிருந்த பங்கும், இடமும் தான் மரியாளின் வணக்கத்தைக் கத்தோலிக்கத் திருச்சபையின் உயிரோட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக ஆக்கியுள்ளது. திருத்தூதர்களைத் தொடர்ந்து, திருத்தந்தையர்களும் மரியியல் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். புனிதர்களாகிய ஜஸ்டின், இரேனியுஸ், தெர்த்தூலியன், அலெக்ஸான்டிரியா கிளமெந்து, ஓரிஜன், நீசா நகர கிரகோரி, அம்புரோஸ், அகுஸ்தினார், இரேணிமுஸ் போன்றோரின் மரியியல் சிந்தனைகள் வணக்கத்திற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்தது. மரியாவைப் பற்றிய விசுவாசக் கோட்பபாடுகள்.

மரியாளைப் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் இருந்து வந்துள்ள போதிலும், நான்கு கோட்பாடுகள் விசுவாசக் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இறைவனின் தாய் மரியா – கி.பி 431

என்றும் கன்னி மரியா – கி.பி 553

அமல உற்பவி மரியா – கி.பி 1854

விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியா – கி.பி 1950

மேற்கண்ட நான்கில் காலத்தால் பழமையானதும், முதன்மையானதும் என்பது இறைவனின் தாய் (Theotokos)மரியா என்னும் விசுவாசக் கோட்பாடு.