இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியின் மடியில் மனிதம் மலர சுரங்கள் இசைக்கின்றேன்

மரியின் மடியில் மனிதம் மலர சுரங்கள் இசைக்கின்றேன்
ஏழை மனதின் ஏக்கம் தீர வரங்கள் கேட்கின்றேன்
மரியே தாய்மரியே மரியே அருள்மரியே

1. பாலைமணலில் பயணம் போலே
எந்தன் துணையே நீதானே
மரியே மரியே மரியே மரியே
அந்த சோலைமலர்கள் பூப்பது போல் - நீ
எந்தன் மனதுக்குள் பூத்திருந்தாய்
மரியே மரியே நீ எந்நாளும் தாய்மரியே
நீ எந்நாளும் அருள்மரியே

2. தேடும் போது வாழ்க்கை வந்தால்
உந்தன் கருணை அதுதானே
மரியே மரியே மரியே மரியே
அந்த காலைக்குயிலின் கீதம் போல் - நீ
எந்தன் நெஞ்சில் பதிந்திருந்தாய்