இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆராதனைப் பிரகரணம் 8.

பரலோகத்திலும் பூலோகத்திலும் சகலராலும் முழந்தாளிட்டு சர்வ ஆராதனை நமஸ்காரம் செய்யப்படத் தக்கவராகிய சகல லோகாதிகாரண கர்த்தாவே! மிகுந்த வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். தேவரீருக்கு நிந்தையாச் சொல்லப்பட்ட சகல தூஷணங்களுக்கும் பரிகராரமாக, பிராதமிகர் உமக்குச் செலுத்துகிற அனந்த புகழ்ச்சித் தோத்திரங்களை தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தேத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.