இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவமாதா HD+ வானொலியின் தினசரி ஒலிபரப்பு...

அதிகாலை 05.00-06.00 மணி - செபமாலை.
காலை 06.00-07.00 மணி - திருப்பலி நேரடி ஒலிபரப்பு (சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம் கீழச்சேரி திருஇருதய ஆண்டவர் தேவாலயம்)
நண்பகல் 12.00-01.00 மணி - செபமாலை.
பிற்பகல் 03.00-03.30 மணி - இறை இரக்க செபமாலை
இரவு 08.00-09.00 மணி - செபமாலை.
இரவு 10.00-12.00 மணி - காலத்தால் அழியாத பழைய பாடல்கள்.

வெள்ளிக்கிழமை மாலை 07.00-07.50 மணி - சிலுவைப்பாதை.

நேரடி ஒலிபரப்பு

தினமும் காலை 06.15-07.00 மணி - நற்கருணை ஆசீர், திருப்பலி

ஞாயிற்றுக்கிழமை காலை 06.30-07.30 மணி - முதல் திருப்பலி.

ஞாயிற்றுக்கிழமை காலை 08.30-09.30 மணி - இரண்டாம் திருப்பலி.

மாதத்தின் முதல்வெள்ளி மாலை 06.00-80.00 மணி - நற்கருணை ஆராதனை, ஆசீர்வாதம், திருப்பலி.

மாதத்தின் முதல்சனி மாலை 06.00-80.00 மணி - செபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி.

மேலும் ஆலயத்தின் நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒலிபரப்பாகும்.

மற்ற நேரங்களில் இனிமையான கத்தோலிக்கப் பாடல்கள் 24 மணி நேரமும் இடைவெளியின்றி ஒலிபரப்பு செய்யப்படும். (20,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன).  தொடர்ந்து இணைந்திருங்கள்.

Mobile App in Google Play Store : https://play.google.com/store/apps/details?id=com.dreams.onlineradio

பரிகார பக்தியை அனுசரிக்கும் விதம்

1925 டிசம்பர் 10 அன்று போன்ற வேத்ராவில் நடந்த காட்சியில், மாதா தனது மாசற்ற இருதய பரிகார பக்தி எவ்வாறு அனுசரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி அறிவித்தார்கள் :

"இதை நீ அறிவி. தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில், எனக்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் கருத்துடன் :

(1) பாவசங்கீர்த்தனம் செய்து, 
(2) பரிகார நன்மை உட்கொண்டு, 
(3) 53 மணி ஜெபமாலை சொல்லி, 
(4) ஜெபமாலைத் தேவ இரகசியங்களைத் தியானித்தபடி கால்மணி நேரம் என்னுடன் செலவிடுபவர்களுக்கு அவர்களுடைய மரண சமயத்தில் ஈடேற்றத்திற்குத் தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும் தந்து உதவி செய்வேன் என்று நான் வாக்களிக்கிறேன்.''

மாதா லூஸியாவிடம் தொடர்ந்து, "பாவங்கள் எனக்கு எதிராக செய்யப்படுகின்றன. ஆதலால் எனக்குப் பரிகாரம் செய்யும்படி கேட்க வந்திருக்கிறேன்" என்று அறிவித்தார்கள். 

தேவ கற்பனைகளை மீறுவதே பாவம். பாவம் கடவுளுக்கு எதிரானது. ஆனால் மாதா தனக்கு எதிராகப் பாவம் கட்டிக்கொள்ளப்படுவதால் தனக்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டுமென்று கேட்கக் காரணம் என்ன?


இணைந்த இருதயங்கள்!

1. சேசு மரியாயின் இருதயங்கள் ஒரே தசையிழைகளால் உருவானவை போன்று, பிரிக்க முடியாதபடி இணைந்திருக் கின்றன. இதன் காரணமாக ஆண்டவருக்கு எதிராகச் செய்யப் படும் ஒவ்வொரு பாவமும் மரியாயின் மாசற்ற இருதயத்தையும் பாதிக்கிறது. மாதாவுக்கு வேதனை தரும் எந்தப் பாவமும் சேசுவின் திரு இருதயத்தை அளவற்ற வேதனையில் ஆழ்த்துகிறது. இதனா லேயே, "என் திரு இருதயத்திற்கு இணையாக, மரியாயின் மாசற்ற இருதயமும் வணங்கப்பட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று லூஸியாவிடம் ஆண்டவர் கூறினார் (லூஸியாவின் கடிதம், 1936, மே 18).

2. எல்லாப் பாவங்களுமே இவ்வாறு மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தையாக இருந் தாலும், சர்வேசுரன் அவர்களுக்கு மட்டுமே அளித்துள்ள விசேஷ வரப்பிரசாத சலுகைகளை மனிதர்கள் நிந்தித்து வெறுப்பதன் மூலமாக, அவர்கள் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகத் தனிப்பட்ட முறையிலும் பாவம் செய்கிறார்கள். இது மாதாவின் உத்தமமான மகனாகிய சேசுவை வாதிப்பதால்தான் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டுமென்று அவர் கேட்கிறார் (1925, டிசம்பர் 10 போன்ற வேத்ரா காட்சி).

3. மாதாவைப் பற்றிய சத்தியங்களை மறுப்பவர்கள் உண்மையில் சேசுவின் தெய்வீகம் உட்பட அவரைப் பற்றிய எல்லா சத்தியங்களையுமே மறுதலிக்கத் துணிந்து விடுவதைத் திருச்சபையின் வரலாறு முழுவதிலும் நாம் காண்கிறோம். இதன் காரணமாக, மாதாவுக்கு நிந்தையாகச் செய்யப்படும் ஒவ்வொரு பாவமும் விசுவாச மறுதலிப்பின் பாவமாக ஆகி விடுகிறது. இவ்வாறு, இத்தகைய பாவிகள் மோட்ச பாக்கியத்திற்குத் தகுதியற்றவர்களாக ஆகிறார்கள். இந்த இழக்கப்படும் ஆன்மாக்கள் சேசு, மரியாயின் திரு இருதயங்களை அளவற்ற விதமாகக் காயப்படுத்து வதால், இவர்களை இரட்சிக்க சேசுவும் மாதாவும் பாவப் பரிகாரத்தைக் கேட்கிறார்கள் !

மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஏன் நிந்தைப் பரிகாரம் செய்யப்பட வேண்டும்?

1917-ம் ஆண்டு . பாப்பரசர் 15-ம் ஆசீர்வாதப்பர் முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவர தேவ உதவியை நாடி தேவதாயிடம் உலக சமாதானம் அருளுமாறு ஜெபித்தார். மே 5 அன்று உலகெங்குமுள்ள கத்தோலிக்க மக்களுக்கு சுற்றுமடல் எழுதி, அவர்களும் தேவ தாயிடம் மன்றாடுமாறு வேண்டினார். அதன் முன் முயற்சியாக, மாதா பிரார்த்தனையில், "Regina Pacis, Ora pro nobis - சமாதானத்தின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்'' என்ற மன்றாட்டை சேர்த்து ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பாப்பரசரின் மன்றாட்டு கேட்கப்பட்டது! சரியாக, எட்டு நாட்களுக்குப் பிறகு, 1917 மே 13 அன்று போர்த்துக்கலில், பாத்திமா, கோவா தா ஈரியா என்ற சிற்றூரில் மாதா மூன்று குழந்தைகளுக்குத் தோன்றி, கடவுளின் சமாதானத் திட்டத்தையும், அதன் மையமாகத் திகழும் தனது மாசற்ற இருதய பரிகார பக்தியையும் அறிவித்தார்கள்.

பாத்திமா காட்சிகளில் மரியாயின் மாசற்ற இருதயம் வெளிப்படுத்தப்பட்டது. வழக்கமாக, மலர்களால் சூழப்பட்டவாறு மாதாவின் இருதயம் சித்தரிக்கப்படும். திருச்சபையில் ஏழு வியாகுல வாட்களால் குத்தித் துளைக்கப்பட்ட வியாகுல மாதா பக்தியும் உண்டு. ஆனால் பாத்திமாவில் அது முட்களால் சூழப்பட்டபடி வெளிப்படுத்தப்படுகிறது! ஏனெனில் மாமரியின் பிள்ளைகளான உலகத்தார் தரும் நிந்தை, வேதனைகள், அவசங்கைகளை முட்கள் சுட்டிக் காட்டுகின்றன. பாத்திமாவில் இவ்வாறு மாதாவின் மாசற்ற இருதயம் தனது மகிமைக்கும் மேன்மைக்கும் விரோதமாகச் செய்யப்படும் பழிப்புகளுக்கும், மறுப்புகளுக்கும் ஈடு செய்யப்பட வேண்டும், அவற்றிற்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டுமென்று கேட்கிறது.

கோவா தா ஈரியாவில் நடைபெற்ற பாத்திமா காட்சிகளில் மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தி எதற்காக, எப்படி, எப்போது செய்யப்பட வேண்டும் என்பது விளக்கப்படவில்லை. ஆனால் இப்பரிகார பக்தியின் கனியாகிய ரஷ்ய ஐக்கிய அர்ப்பணத்தையும், அதற்காக மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்குவதையும் கேட்க பின்னர் மாதா வரவிருப்பது மட்டுமே அறிவிக்கப்பட்டது. "... ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டு மென்றும், முதல் சனிக்கிழமைகளில் பரிகார நன்மை வாங்க வேண்டும் என்றும் கேட்க வருவேன்" என்று ஜூலை 13 காட்சியில் மாதா அறிவித்தார்கள். பாத்திமா காட்சிகள் மற்றும் செய்திகளின் தொடர்ச்சி பின்னாளில் நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டவே மாதா இப்படி அறிவித்தார்கள்.

அதன்படியே, லூசியா அர்ச். டோரதியம்மாள் சபையில் நவகன்னிகையாக இருந்தபோது, பாத்திமாவில் மாதா அறிவித்தபடியே காட்சிகளும் செய்திகளும் அவளுக்கு வழங்கப்பட்டன. தான் வாக்களித்தபடியே மாதா 1925 டிசம்பர் 10 அன்று போன்ற வேத்ராவில் சகோதரி லூசியாவுக்குக் காட்சியளித்து, பரிகார பக்தியை அனுசரிக்கும் நடைமுறைகளை வழங்கினார்கள்.