இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எந்த ஒரு சிருஷ்டியிடமிருந்தும், அல்லது ஒட்டுமொத்தமாக எல்லா சிருஷ்டிகளிடமிருந்தும் தான் ஒருபோதும் பெற்றுக் கொள்ளாத அளவுக்கு, கடவுள் மாமரியிடமிருந்து ஒரு மகிமையைப் பெற்றுக்கொண்டார்!

இந்தப் பிரிவு இந்த முழு அத்தியாயத்தினுடையவும் விளைவு ஆகும், இதற்கு மிகச் சிறியதொரு விளக்கம் மட்டுமே தேவைப் படுகிறது.

இனி, நாம் கூறியதை எண்பிப்பதற்கு, மாமரியின் ஊழியத்திற்கு முன்பாக கடவுள் மிகக் குறைவாகவே அறியப்பட்டிருந்தார் என்பதைச் சிந்திப்பது மட்டுமே தேவையாயிருக்கிறது. ஏனெனில் அவர் எந்த அளவுக்குத் தம்மையே வெளிப்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு மட்டுமே அவர் அறியப்படுகிறார், மனிதாவதாரத்திற்கு முன்பாக, அவருடைய ஐக்கியம் மட்டுமே தெளிவாகவும், தனிப்பட்ட விதமாகவும் அறியப்பட்டிருந்தது. மாமரியின் சம்மதம் மற்றும் ஊழியத்தின் வழியாக நிறைவேற்றப்பட்ட மனிதாவதாரத் தால், அவருடைய உள்ளரங்க ஜீவியத்தைப் பற்றிய பரம இரகசிய மும், மகா பரிசுத்த தமத்திரித்துவத்தைப் பற்றிய பக்திக்குரிய சத்தியமும், அவருடைய வல்லமை, ஞானம், அவருடைய நன்மைத்தனம், உன்னத தயாளம், அவருடைய இரக்கம், மற்றும் அவருடைய நீதி ஆகியவற்றின் பிரமாண்டமுள்ள மேன்மையும் காட்சிப்படுத்தப்பட்டன. மனிதர்கள் எதன் வழியாகக் கடவுளை அங்கீகரித்தார்களோ, அந்த அவர்களுடைய ஆராதனையும் மகிமையும், கடவுள் எதைக் கொண்டு தம்மைத் தாமே அங்கீகரிக் கிறாரோ, அந்த நித்திய மகிமையின் மகத்துவத்தின் அளவுக்கு மாமரியின் வழியாகவே உயர்த்தப்பட்டது. இந்த அங்கீகாரம் பக்திக்குரியதும் உயர்ந்ததுமான பலியின் சிகரத்திற்கு உயர்ந்து சென்றது, கடவுள் ஒரு கடவுளால் ஆராதிக்கவும், அங்கீகரிக்கவும், வழிபடவும்பட்டார்.

கடவுள் எந்த அளவுக்கு வெளிப்படுத்தப்பட்டாரோ அந்த அளவுக்கு நேசிக்கப்பட்டார், கடவுள் மீது மனுக்குலம் கொண்ட நேசம் பலியின் சிகரத்திற்கு ஏறிச் சென்றது, இவ்வாறு மனிதர்கள் கடவுளின் கனம் மகிமைக்காகவும், நேசத்திற்காகவும் தங்களையே பலியாக்க முயன்றார்கள். 

ஆகவே, எந்த ஒரு சிருஷ்டியிடமிருந்தும், அல்லது ஒட்டு மொத்தமாக எல்லா சிருஷ்டிகளிடமிருந்தும் கடவுள் ஒருபோதும் பெற்றுக்கொள்ளாத அளவுக்கு ஒரு மாபெரும் மகிமையை அவருக்கு அளித்தார்கள்.