இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் சித்தத்தின் வலிமை

அறிவைப் பற்றி நாம் சொல்லியுள்ளது, சித்தத்தைப் பற்றியும் சொல்லப்பட வேண்டும்.

கடவுளிலுள்ள சித்தம் அவருடைய சாராம்சத்தோடு ஒன்றா யிருக்கிறது. எனவே அது செயலாகவும், வல்லமையாகவும், ஆற்ற லாகவும், அளவற்ற விசையாகவும் இருக்கிறது. ஏனெனில் சித்தம் அறிவின் சுபாவத்தைப் பின்பற்றுகிறது.

தேவதூதரின் சித்தம், தன்னிலேயே விசையாக இல்லாவிடினும், அது தனது தீர்மானத்தில் அசைக்கப்பட இயலாததாக இருக்கிறது. ஏனெனில் அவரது அறிவு அசைக்கவியலாத வகையில் பூரிந்து கொள்கிறது.

ஆனால் மனிதனின் சித்தம் அசைக்கப்படக் கூடியதாக இருக் கிறது. ஏனெனில் அவன் தன் அறிவால் அசைக்கப்படக் கூடிய விதமாய்ப் புரிந்துகொள்கிறான், ஒரு காரியத்திலிருந்து மற்றொன் றுக்கு எளிதாக மாறுகிறான், எதிரெதிராக இருக்கிற காரியங்களைச் சென்றடைய தனித்தனி வழிகளைக் கொண்டிருக்கிறான்; எனவே மனித சித்தம் எதனோடும், ஆனால் அசையக்கூடிய விதத்தில் ஒட்டிக் கொள்கிறது, இவ்வாறு அது தன்னை எளிதாக அதிலிருந்து பிரித்துக்கொள்ளக் கூடியதாகவும், அதற்கு முற்றிலும் எதிரான மற்றொன்றோடு எளிதாக ஒட்டிக்கொள்ளக் கூடியதாகவும் இருக் கிறது.

தீர்மானத்தின் வலிமையும், அதனோடு தன்னை உறுதியாக இணைத்துக்கொள்வதும் மனிதனின் சித்தத்தை மேலானதாக ஆக்குகிறது.

மாமரியில், அவர்களது அறிவைப் பின்பற்றி சித்தம் அவர்களது புரிந்துகொள்ளுதலின் சத்துவத்திற்குத் தக்க ஒரு வலிமையை, ஒரு உறுதியான பற்றுதலைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.