வாசகர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்: பின்வரும் கட்டுரை புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை. இது கடினமான கட்டுரைதான் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில் இது நம்முடைய புத்திக்கெட்டாத, சர்வேசுரனுடைய மகா உன்னத சாதனையாகிய மனிதாவதாரம் என்னும் உன்னதமான பரம இரகசியத்தைப் பற்றிய விளக்கமாக இருக்கிறது. எனவே இஸ்பிரீத்துசாந்துவானவர் உங்கள் மனங்களைத் தமது தேவ சத்தியத்தால் ஒளிர்விக்கும்படி அவரிடம் ஜெபித்தபின், ஆழ்ந்த தியானத்தோடும், நேசத்தோடும் இந்தக் கட்டுரையை வாசியுங்கள். இது என் சொந்தக் கட்டுரையல்ல. சங்கைக்குரிய ஜே. த கொன்சீலியோ என்னும் குருவானவர் எழுதி 1878-ல் வெளியிட்ட “Knowledge Of Mary” என்னும் புத்தகத்திலிருந்து நான் தொகுத்துத் தரும் கட்டுரையாகும். எனவே நிதானமாகவும், மீண்டும் மீண்டும் வாசித்து இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
இந்த புத்தகம் நமது இணையத்தில் வெளிவர உதவிய தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...