இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் காரணமாக மனிதாவதாரம் மற்றும் மனித இரட்சணியத்தின் பரம இரகசியங்களிலிருந்து மனிதனுக்கு வந்த மற்ற சகல நன்மைகள்

இந்த இரண்டு பரம இரகசியங்களாலும், சர்வேசுரனுடைய அளவற்ற மகத்துவம் அவருக்கு மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது, அவருடைய நீதி பாவத்திற்கு மிகுதியான பரிகாரத்தைப் பெற்றுக் கொண்டது.

தேவ உறவில் மீண்டும் நிலைநிறுத்தும் வரப்பிரசாதத்தால், ஜென்மப் பாவத்தின் வழியாகத் தன் மீது ஏற்படுத்தப்பட்ட காயங்களிலிருந்து மனிதன் குணமாக்கப்பட்டான்.

அவன் தேவ இஷ்டப்பிரசாதக் கொடையாலும், விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் என்னும் மூன்று புண்ணியங்களாலும் கடவுளில் நட்புறவுக்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டான். இவ்வாறு அவன் மீண்டும் கடவுளின் குழந்தையாகவும், நித்திய ஜீவியத்தின் வாரிசாகவும் ஆனான்.

இந்த வரப்பிரசாதங்கள் எல்லாம் திருச்சபையின் வழியாகவும், தேவத்திரவிய அனுமானங்களின் வழியாகவும் மனிதனின் மீது பொழியப்படுகின்றன. இவை எக்காலத்திலும், எல்லா இடங் களிலும் மனிதாவதாரம் மற்றும் இரட்சணியத்தின் தொடர்ச்சியே யன்றி வேறு எதுவுமில்லை. ஏனெனில் திருச்சபையும், தேவத்திரவிய அனுமானங்களும், புத்தியுள்ளவையும், புத்தியற்றவையுமான கருவிகளின் வழியாகச் செயல்பட்டு, தம்மோடும், தம் வழியாகவும், மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் மூன்று தேவ ஆட்களோடும் எல்லா மனிதர்களையும் ஓர் ஐக்கியத்திற்குக் கொண்டு வருகிற கிறீஸ்துநாதரேயன்றி வேறு எதுவுமில்லை.

உள்ளபடி, மனிதனை இரட்சணியத்திற்குக் கொண்டு வர அவசியமானவையும், இந்த இரண்டு பரம இரகசியங்களிலிருந்தும் அவனிடம் பாய்ந்து வருபவையுமான இந்த எல்லா வரப்பிரசாதங்களும், வரப்பிரசாதக் குவியல் முழுவதும் மகத்துவமுள்ள அற்புதக் கன்னிகையின் காரணமாகவே இவ்வாறு பாய்ந்து வருகின்றன, ஏனெனில் அவர்கள் கடவுளால் இந்த இரண்டு பரம இரகசியங் களிலும், அவற்றின் விளைவுகளிலும், இவற்றின் மத்தியஸ்தியாக ஆக்கப்பட்டார்கள். இந்த இரண்டு பரம இரகசியங்களுக்கும் தன் சம்மதத்தைத் தந்ததில், மாமரி அவற்றின் எல்லா விளைவுகளுக்கும் தன் சம்மதத்தைத் தந்தார்கள். அந்தச் சம்மதத்தை உறுதிப்படுத்தியதன் மூலம் அவர்கள் அவற்றின் எல்லா விளைவுகளையும் உறுதிப்படுத்தினார்கள்.

ஆகவே, மாமரி உலகத்தன்மையானதும், சரீரப்படியானதுமான அதீத நேசத்திலிருந்து மனிதனை வெளியே இழுக்கும்படியாக, அவர்கள் சர்வேசுரனை மனிதனால் காணப்படக் கூடியவராகவும், புலன்களால் அறியப்படக் கூடியவராகவும் ஆக்கினார்கள். அவருடைய அச்சம் தரும் மகத்துவத்தை மனுஷீக வடிவத்தின் கீழ் மறைத்ததன் மூலம் மனிதனுக்கு அவரை அணுகப்படக் கூடியவராக ஆக்கி, நம்பிக்கையில் மனிதனை மீண்டும் ஸ்தாபித்தார்கள். அவர்கள் கடவுளை மனிதனுக்கு ஒப்பான மனிதனாக்கியதன் மூலமாகவும், அவரை மனிதனின் உணவாகவும், ஆதரவாகவும் ஆக்கியதன் மூலமாகவும், மனிதனின் நன்மைக்காக அவரை நிரந்தரமான பலிப்பொருளாக ஆக்கியதன் மூலமாகவும், மனிதனுக்கு அவரை நேசிக்கப்படத் தக்கவராக ஆக்கினார்கள். அவர்கள் திருச்சபையின் வழியாகவும், தேவத்திரவிய அனுமானங் களின் வழியாகவும் கடவுளின் நட்புறவை மனிதனுக்கு மீண்டும் பெற்றுத் தந்தார்கள், அவர்கள் மனிதனை மோட்சத்திற்குக் கொண்டு வருவதற்கு அவசியமான வரப்பிரசாதம் முழுவதையும் அவனுக்குப் பெற்றுத் தந்தார்கள்.

எனவே, மாமரி மனுக்குலத்திற்கு அனைத்துமாக இருக் கிறார்கள். ‘‘நம் இனத்தின் இரட்சணியம் நீரே'' என்று மாமரியை மனிதர்கள் வியந்து போற்ற அவர்களுக்குக் காரணம் இருக்கிறது.