இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த மனப்பாங்கின் அசாதாரண வரப்பிரசாதம்

இது வரை, மாமரியின் உற்பவத்தின் முதல் கணத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்த மனப்பாங்கின் வரப் பிரசாதத்தைப் பற்றியும், அவர்களது பேறுபலன்களுள்ள செயல்களால் அது அடைந்த வளர்ச்சி பற்றியும் நாம் பேசினோம்; இந்த அத்தியாயத்தில் பரிசுத்த மனப்பாங்கின் அசாதாரண வரப்பிரசாதங்களைப் பற்றி, அல்லது ஒரு தேவ ஆளின் உத்தமமான தாயாராக மாமரி இருக்கும்படியாக, தமது திருக்கரங்களின் இந்த அற்புதத்தை, தமது கருணையின் இந்த அதியற்புதப் படைப்பை முழுமையடையச் செய்வதில் உன்னதக் கலைஞராகிய சர்வேசுரன் செய்த கடைசி அலங்கார வேலைகளைப் பற்றி, நாம் பார்க்கப் போகிறோம்.

மாமரி, தேவ சுதனின் மனிதாவதாரத்திற்கும், உற்பவத் திற்கும் முன்பாக, ஒரு முற்றிலும் அசாதாரணமான வரப்பிரசாத அதிகரிப்பைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது வேதசாஸ்திரி களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது பின்வரும் வாதங்களைக் கொண்டு எண்பிக்கப்படுகிறது:

முதலாவதாக: ‘‘இஸ்பிரீத்துசாந்து உம்மீது வருவார்'' என்ற சம்மனசானவரின் மங்கள வார்த்தைகளின் வலிமையால் மாமரியின் வரப்பிரசாதம் அதிகரித்தது. இனி, ‘‘பிரியதத்தத்தினால் பூரண மானவளே, வாழ்க!'' என்ற சம்மனசானவரின் முதல் வார்த்தைகள் முழுமையாகக் குறித்துக் காட்டுகிறபடி, மாமரி ஏற்கெனவே ஓர் அளப்பரிய வரப்பிரசாத நிறைவைச் சொந்தமாகக் கொண்டிருந் தார்கள் என்று நாம் நிரூபித்திருக்கிறோம். இந்த முதல் வாக்கியம் வரப்பிரசாதப் பூரணத்துவத்தைப் பற்றிய அறிவை நமக்குத் தருகிறது. ஆகவே, அவர் புதிய கொடைகளோடும், சீராட்டல்களோடும் ஓர் அசாதாரணமான முறையில் மாமரியில் தலையிடுவார் என்பதைத் தவிர, ‘‘இஸ்பிரீத்து சாந்து உம்மீது வருவார்'' என்ற வார்த்தைகளுக்கு வேறு என்ன பொருள் இருக்க முடியும்?

இரண்டாவதாக: தேவ சுதனாகிய வார்த்தையானவரின் மனித உற்பவம் நிகழ்ந்த முறையும் இதே காரியத்தை நமக்கு எண்பிக்கிறது. இது அதே இஸ்பிரீத்துசாந்துவானவரின் நற்பயனுள்ள, உன்னதமான செயலால் நிகழ வேண்டியிருந்தது; அதாவது தேவ சுதனின் இவ்வுலக உற்பவத்தின் செயல்பூர்வமான காரணராக இருக்க வேண்டியது மட்டுமின்றி, இந்த உற்பவம் அவருடைய அச்சிலும் அவருடைய சொந்த மாதிரிகைப்படியும் செயல்படுத்தப்பட வேண்டியதாகவும் இருந்தது. இந்த மாதிரிகை அவரையும் மற்ற ஆட்களையும் பிரித்துக் காட்டுவதாக இருக்கிறது. இதை அவருடைய ஆள்தன்மையை உருவாக்கும் சாராம்ச முழுமை என்று நாம் அழைக்கலாம். அவர் இருக்கிறபடியே இத்தகைய ஒரு தேவ ஆளாக அவரை இருக்கச் செய்கிற இந்த சாராம்ச முழுமை என்பது என்ன?

சர்வேசுரனுடைய மூன்றாம் ஆள் தமத்திரித்துவத்தில் அடங்கியுள்ள நேசமாக அல்லது அர்ச்சியசிஷ்ட தனமாக இருக் கிறார். இதன் காரணமாக, மரியாயின் திருவுதரத்தில் கடவுளின் திருச்சுதனின் உற்பவம் தேவ இஷ்டப்பிரசாதத்தின் ஓர் அசாதாரணப் பொழிவால் நிகழ வேண்டியிருந்தது.

மூன்றாவது காரணம், மனிதாவதாரப் பரம இரகசியத்திற்கு மாமரி தந்த சம்மதத்தால் அவர்கள் பெற்றுக்கொண்ட அசாதாரண மான பேறுபலன் ஆகும். இதன் மூலம், நமதாண்டவர் நீதியின் பெயரால் தாம் சம்பாதித்ததை, மாமரி தகுதி, பொருத்தம் ஆகியவற்றின் பெயரால் சம்பாதித்தார்கள்.

அர்ச்சியசிஷ்டதனம் எப்போதும் அறிவைக் குறித்துக் காட்டு கிறது; ஏனெனில் அது தேவசிநேகமாக இருக்கிறது. ஆத்துமத்தில் அறிவு வளர்ச்சியின்றி, தேவசிநேகம் அதில் ஒருபோதும் அதிகரிப்பதில்லை. அப்படியிருக்க, மரியாயின் ஆத்துமத்தில் இஸ்பிரீத்துசாந்துவின் இந்த வரப்பிரசாதப் பொழிவு, அவர்களுக்குத் தரப்பட்ட ஒரு மிகப் பெரும் பேரொளியாக இருந்தது. இதன் காரணமாகவே அர்ச். அகுஸ்தினார், ‘‘மாமரி தேவ சுதனானவரை முதல் தனது மனதிலும், அதன்பின் தமது சரீரத்திலும் கருத்தரிக்க வேண்டியிருந்தது'' (‘‘ப்ரியுஸ் கொன்சிபெரேத் மெந்த்தே குவாம் கோர்ப்போரே.'') என்கிறார்.

இந்த அறிவு கடவுளை நோக்கியும், விசேஷமாக மாமரி கருத்தாங்க இருந்த தேவ வார்த்தையானவரின் ஆள்தன்மையை நோக்கியும் திரும்பியது. இதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். தேவ சுதனானவர் முதலாவதாக, வார்த்தையானவர் என்று அழைக்கப்படுகிறார். இனி, இந்த வார்த்தையின் வலிமை எப்படிப்பட்டது என்று காண்பதற்கு, ஒரு காரியத்தை நாம் இங்கு குறிப்பிட வேண்டும். கத்தோலிக்கத் தத்துவவாதத்தின்படி, வார்த்தைகள் அல்லது ஒலிகள் ஆத்துமத்தின் நாட்டங்கள் அல்லது மாற்றங்களின் அடையாளங்களாக இருக்கின்றன. வேதாகமங்களில், சொல்லப்பட வேண்டிய காரியங்களை, அதை எடுத்துரைக்கக் கூடிய பெயர்களால் அல்லது ஒலிகளால் எடுத்துரைப்பது வழக்கமான காரியமாக இருக்கிறது. வெளி ஒலிகளால் எடுத்துரைக்கப்படும் நம் ஆத்துமத்தின் உள்ளரங்க மாற்றங்கள், வார்த்தை என்று அழைக்கப்படுவது அவசியமாக இருக்கிறது. ஆனால் வார்த்தை என்ற இந்த சொல்லை முதலாவதாக, வார்த்தையால் எடுத்துரைக்கப்படும் வெளிக் காரியத்திற்குப் பயன்படுத்த வேண்டுமா, அல்லது எதிலிருந்து பிறக்கிறதோ, அந்த மனதின் உள்ளரங்க எண்ணத்திற்குப் பயன்படுத்த வேண்டுமா என்பதைப் பற்றி இப்போது ஆராய்வது அவசியமற்றது. என்றாலும், குரலால் குறித்துக்காட்டப்படுவதும், ஆத்துமத்தில் உள்ளரங்கமாக இருப்பதுமான காரியம் வெளிக் குரலால் உச்சரிக்கப்படும் வார்த்தைக்கு முன்பே இருந்தது என்பது தெளிவு. ஏனெனில் அது வெளிக்குரலின் இருத்தலின் மூலாதாரமாக இருக்கிறது. ஆகவே, உள்ளரங்க வார்த்தை என்பதன் பொருளை அறிய நாம் விரும்புவோ மானால், வெளிக் குரலால் உச்சரிக்கப்படுவதில் மறைந்திருப்பது என்ன என்று நாம் ஆராய வேண்டும்.

மூன்று காரியங்கள் நம் அறிவில் சிந்திக்கப்பட வேண்டும். அவை: புத்தியின் சத்துவம்; கருத்து, அல்லது அறிவு ஒன்றைக் கருக்கொள்வதில் புரிந்துகொள்ளும் வடிவம் (உதாரணமாக, கண் தான் உள்வாங்கும் பொருளின் வடிவத்தைப் புரிந்து கொள்வது போல), மற்றும் கருக்கொள்ளுதல் அல்லது புரிந்துகொள்ளுதல். இனி, குரலால் வெளியரங்கமாக உச்சரிக்கப்படும் ஒலி இந்த மூன்றில் எதையும் குறிப்பதில்லை. ஏனெனில் நாம் கல் என்ற வார்த்தையை உச்சரிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்; இது அறிவின் பொருண்மையையோ, அல்லது வடிவத்தையோ, அல்லது புரிந்து கொள்ளும் செயலையோ குறிப்பதில்லை. எனவே, இது உள்ளரங்க வார்த்தை என்று அழைக்கப்படுகிறது. இதை அறிவு புத்தியின் செயலில் வடிவமைக்கிறது. இனி, அறிவுக்கு இரண்டு செயல் பாடுகள் இருக்கின்றன--ஒன்று சிந்தனை, மற்றொன்று தீர்மானம். சிந்தனை என்பது ஒரு காரியத்தின் சாராம்சத்தைப் பகுத்துணர்வது ஆகும்; தீர்மானம் என்பது இரு சிந்தனைகள் ஒன்றோடொன்று ஒத்துப் போவது அல்லது ஒத்துப் போகாதிருப்பது பற்றிய பகுத் துணர்தலாகும். அறிவில் உருவாகும் சிந்தனை அல்லது தீர்மானம் வெளிக்குரலால் எடுத்துரைக்கப்படுகிறது; ஆனால் வெளிக்குரலால் எடுத்துரைக்கப்படும் காரியம் உள்ளரங்க வார்த்தை எனப்படுகிறது. இது அறிவோடு தொடர்புள்ளது, அறிவு எதைக் கொண்டு புரிந்து கொள்கிறதோ அந்தக் காரியமாக அல்ல, மாறாக, அது எதில் புரிந்து கொள்கிறதோ, அந்தக் காரியம் என்ற முறையில் இது அறிவோடு தொடர்புள்ளதாக இருக்கிறது. ஏனெனில் இவ்வாறு உருவான, அல்லது எடுத்துரைக்கப்பட்ட காரியத்தில் அது புரிந்து கொள்ளப்பட்ட அந்தக் காரியத்தின் தன்மையைக் காண்கிறது. இவ்வாறு, வார்த்தை என்ற ஒலி குறித்துக் காட்டும் காரியத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.

இரண்டாவதாக, நாம் ஏற்கெனவே சொல்லியிருப் பதிலிருந்து, வார்த்தை என்பது உண்மையில், இருப்பதாகிய ஓர் அறிவிலிருந்து புறப்படும் ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது என்று நாம் காண்கிறோம். மேலும் வார்த்தையானது புரிந்துகொள்ளப்படும் காரியத்தின் காரணமும், ஒத்த தன்மையுமாக இருக்கிறது என்றும் நாம் காண்கிறோம். அறிவும், புரிந்து கொள்ளப்படும் காரியமும் ஒன்றுக்கொன்று சமமாகவும், ஒன்றாகவும் இருக்கும் என்றால், வார்த்தை தான் எதிலிருந்து புறப்படுகிறதோ அந்த அறிவின் காரணமாகவும், அதற்கு ஒத்த தன்மையாகவும் இருக்கிறது; இது வேறு விதமாக இருக்கும் என்றால் வார்த்தை, தான் எதிலிருந்து புறப்படுகிறதோ அந்த அறிவோடு ஒத்த தன்மையுள்ளதாக இராமல், புரிந்துகொள்ளப்படும் காரியத்தோடு ஒத்திருப்பதாக இருக்கும்.

அறிவு சார்ந்த ஒவ்வொரு சுபாவத்திலும் ஒரு வார்த்தையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில் அறிவு தன்னையே செயல்படுத்துவதில் ஒரு காரியத்தை உருவாக்க வேண்டும் என்பது புத்தியின் சாராம்சமாக இருக்கிறது. இந்த உருவாக்கம், அதாவது, அறிவின் செயல்பூர்வ வெளிப்பாடுதான் வார்த்தை எனப்படுகிறது. ஆகவே புத்தியுள்ள ஒவ்வொரு சுபாவத்திலும் நாம் ஒரு வார்த்தையை ஒப்புக்கொள்ள வேண்டும். மூன்று அறிவுசார்ந்த சுபாவங்கள் இருக்கின்றன. அவை: மனித அறிவின் சுபாவம், சம்மனசுக்களின் அறிவின் சுபாவம் மற்றொன்று தேவ அறிவின் சுபாவம் ஆகும். ஆகவே, மூன்று வார்த்தைகள் இருக்கின்றன. அவை மனித வார்த்தை, சம்மனசுக்குரிய வார்த்தை மற்றும் தேவ வார்த்தை ஆகியவை ஆகும்.

இந்த தேவ வார்த்தை மனித வார்த்தையிலிருந்து மூன்று வெவ்வேறான முறைகளில் வேறுபடுகிறது; முதலாவதாக, மனித வார்த்தை உருவாக்கப்படுவதில்லை, ஆனால் உருவாக்கப்பட வல்லதாக இருக்கிறது; உதாரணமாக, ஒரு கல்லின் சாராம்சத்தைப் பகுத்துணர நான் விரும்புகிறேன் என்றால், உரையாடுதல், அறிவைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் கொண்டு நான் அந்தப் பகுத்துணர்தலை அடைய வேண்டும். ஆனால் தேவ வார்த்தை எப்போதும் செயலில் இருக்கிறது.

இரண்டாவதாக, மனித வார்த்தை குறைபாடுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் நம் எல்லாச் சிந்தனைகளையும் ஒரே வார்த்தையில் எடுத்துரைக்க நம்மால் இயலாது. மாறாக, நாம் நம் அறிவின் உள்ளடக்கத்தை எடுத்துரைக்கப் பல வகையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் கடவுளில் இது இப்படி இல்லை. அவர் தமது வார்த்தையால் தாம் அறிவது எதையும் எடுத்துரைக்கிறார்: ‘‘யஸமெல் லோக்குயித்துர் தேயுஸ்'' (‘‘'கடவுள் ஒரு முறை மட்டுமே பேசுகிறார்.'').

இறுதியாக, நம் வார்த்தை நம்மைப் போன்ற அதே சுபாவத்தைக் கொண்டது அல்ல. ஆனால் தேவ வார்த்தை தனது சுபாவத்தில் கடவுளோடு ஒரே பொருளாக இருக்கிறது. எனவே, அது தேவ சுபாவத்தில் அடங்கியிருப்பதாக இருக்கிறது.

இதை சுருங்கச் சொன்னால்: தேவ சாராம்சத்தில் இருக்கும் வார்த்தை ஓர் ஆளாக இருக்கிறது; அவர், தாம் யாரிடமிருந்து புறப்படுகிறாரோ, அவருக்கு ஒப்பானவராகவும், அவரோடு இணை- நித்தியராகவும் இருக்கிறார். மேலும், ஒரு மூலாதாரத்திடமிருந்து புறப்பட்டு வருகிற ஒவ்வொரு சுபாவத்திலும் உள்ளது போல, அவர் யாரிடம் இருந்து புறப்படுகிறாரோ அவருடைய சாயலைக் கொண்டவராக, கடவுளில் வார்த்தையானவர் என்று அழைக்கப் படுகிறார். இவர், தாம் யாரிடமிருந்து ஜெனித்து வருகிறாரோ, அந்தக் கடவுளோடு ஒரே சுபாவமுள்ளவராக இருக்கிறார், எனவே அவர் கடவுளின் சுதன் என்று அழைக்கப்பட வேண்டும்.

ஆகவே இஸ்பிரீத்துசாந்துவானவர் மிக அசாதாரணமான முறையில் மாமரியின் மீது வந்து, அவர்களுடைய அறிவை முற்றிலும் ஒப்பற்றதாகிய மகிமையின் ஒளியால் உயர்த்தினார். எந்த அளவுக்கு என்றால், ஒன்றுசேர்க்கப்பட்ட சகல பரலோகவாசிகளின் மகிமையொளிக்கு அது மிக மிக அதிகமாக அப்பாற்பட்டதாக இருந்தது. மேலும் அவர் மகா பரிசுத்த தமத்திரித்துவ சர்வேசுரனின் காட்சியையும், வார்த்தையானவர் பிதாவானவரால் கருத்தரிக்கப் படும் காட்சியையும், இஸ்பிரீத்துசாந்துவின் நேரடியானதும், மறைமுகமானதுமாகிய சுவாச ரீதியான வெளிப்பாட்டின் காட்சி யையும் மாமரி காண அவர்களை அனுமதித்தார். மாமரி தேவ சாராம்சம் மற்றும் தேவ உயிர் ஆகியவற்றின் பெரும் பாதாளத் திற்குள் அமிழ்த்தப்பட்டு, ஒரு தெளிவான பாதாளத்தில், மகிமை யொளியின் ஒரு பிரமாண்டமான பெருங்கடலில் காண்பது போல, தேவ சாராம்சத்தை அதன் அளவற்ற இலட்சணங்களோடு முகமுக மாய்க் கண்டார்கள். மிகத் தீவிரமானதும், வல்லமையுள்ளதுமான ஒரு மகிமையொளியால் உயர்த்தப்பட்ட ஒரு சிருஷ்டி எந்த அளவுக்குத் திறனுள்ளதாக ஆக்கப்படக் கூடுமோ, அந்த அளவுக்கு தேவ அறிவையும், தெய்வீகச் செயல்பாடுகளின் தொடக்கத்தையும், மூலத்தையும் மாமரி கண்டார்கள். மேலும், பிறவாதவரும், ஜெனிப்பிக்கப்படாதவரும், அளவற்றதாகிய தமது ஒரே பார்வையில் தமது சாராம்சம் மற்றும் திவ்ய இலட்சணங்களின் அளவற்ற பேராழத்தையும், ஆழ்ந்த தன்மையையும், தமது தெய்வீக இலட்சணங்களின் விஸ்தாரமான பெருங்கடலையும், தமது உன்னத மகத்துவத்தின் எல்லையற்ற கடலையும் ஆராய்ந்து அறிபவரும், தம்மோடு ஒரே சுபாவமுள்ளவராகவும், இணை-நித்தியராகவு மிருக்கும் வார்த்தையானவரை--தமது தெய்வீக சுயத்தின் பூரண உத்தமமான, பூரணப் பிரகாசமுள்ள வெளிப்பாடும், தம் சொந்த அளவற்ற அறிவின் ஒப்புதலுமாக இருக்கிற வார்த்தை யானவரை--ஜெனிப்பிக்கிறவராகவும் இருக்கும் பிதாவாகிய சர்வேசுரனை மாமரி கண்டார்கள். மேலும், பிதாவானவர் தம்முடைய இந்த வெளிப்பாட்டில், தமது பொருண்மையின் இந்த மகிமையொளியில், தமது சாராம்சத்தின் இந்த முத்திரையில், அதாவது தேவ சுதனில் எப்படி இன்பமும், திருப்தியும் அடைகிறார் என்பதையும்; தேவ சுதனானவர் எப்படித் தம்மையே பிதாவின் உற்பவமாகக் கண்டுதியானித்து, அவரில் இன்பமும், திருப்தியும் பெறுகிறார் என்பதையும்; எப்படி இவர்கள் இருவரும், ஒருவரில் ஒருவர் அனுபவிக்கும் இந்தப் பரஸ்பர இன்பத்தில், ஒரு பரஸ்பர, அளவற்ற, பேரின்பமுள்ள அரவணைப்பில் ஒருவரையொருவர் விரைவாக நெருங்கி வருகிறார்கள் என்பதையும்; இந்தப் பரஸ்பர நேசமும், அரவணைப்பும் எப்படி இருவரிடமிருந்தும் வெளிப்படும் சுவாசமாக, ஐக்கியத்தின் பந்தனமும், பொருண்மை சார்ந்த நேசமும், இருவருடையவும் நடைமுறையிலான ஒப்புதலும், அவர்களது அளவற்ற மகிழ்ச்சியுமாக இருக்கிற இஸ்பிரீத்துசாந்துவானவரைப் புறப்படச் செய்கின்றன என்பதையும் மாமரி கண்டார்கள். மனித புத்திக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு முறையில் மாமரி இவற்றைக் கண்டார்கள். அவர்கள் இதையெல்லாம் கண்டு, முதலில் தனது மனதில் கடவுளின் நித்திய வார்த்தையானவரைக் கருத்தரித்தார்கள். இந்தக் கருத்தரித்தல் அவர்களுடைய முழு சாராம்சத்தையும், அவர்களது சுபாவத்தையும், அவர்களது சத்துவங்களையும், அவர்களது இருதயத்தையும் நித்திய வார்த்தையானவரை நோக்கி ஈர்த்தது. இந்தக் கருத்தரிப்பின் செல்வாக்கின் கீழ் அவர்கள் தெய் வீகத்தில் பங்கெடுப்பதன் மூலம் மனிதத்தன்மையான ஒரு பிறவியாக அன்றி, தெய்வீகப் பிறவியாக மாற்றமடைந்தார்கள். அவர்கள் முழுவதும் ஒளியாகவும், மகத்துவப் பிரதாபமாகவும், மகிமையாகவும், பிரகாசமாகவும், முழு நேசமாகவும் ஆனார்கள்; அவர்களுடைய ஆத்துமம் பத்தாயிரம் சூரியன்களின் முழுமையான பெரும் பேரொளியின் கீழ் பிரகாசிக்கும் ஒரு படிகத் துண்டைப் போல் ஆனது. அந்கத் காட்சியிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்ட நிலை, அர்ச்சியசிஷ்டதனம், நேசம் ஆகியவற்றின் நீரோட்டங்களை, பாதாளங்களை, பெருங்கடல்களை அவர்கள் தன்னுள் இழுத்துக் கொண்டார்கள். இது அவர்களது சரரத்தில் நிரம்பி வழிந்து, அதை உயர்த்தி, முற்றிலும் ஆச்சரியத்திற்குரிய விதத்தில் அதை அர்ச் சித்தது. அந்த நித்திய உற்பவத்தின் தெய்வீகக் காட்சிதியானத்தில் நிலைபெற்றவர்களாக, அவர்கள் ஓர் ஆத்துமம் சிருஷ்டிக்கப் படுவதை--தனது தேவ மகனின் மனித ஆத்துமம் சிருஷ்டிக்கப் படுவதை--கண்டார்கள். அது தெய்வீக சர்வ வல்லபம் மற்றும் நன்மைத்தனத்தின் அதியுன்னதப் படைப்பாக, கிறீஸ்துநாதரின் திருச்சரீரத்தை உருவாக்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தனது மாசற்ற மாம்சத்தின் அர்ச்சிக்கப்பட்ட பாகத்தோடு இணைக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டார்கள்; அந்த பரலோகக் காட்சியின் பரவசத்திலும், தெய்வீக ஆக்கிரமிப்பிலும் நித்திய பிதாவானவர் தமது மடியிலிருந்து தம்முடைய அளவற்ற வார்த்தையானவரைத் தனக்குள் இறங்கச் செய்வதையும், வார்த்தையானவர் தனிப்பட்ட முறையில் தம்மோடு இணைக்கப் பட்ட அந்த ஆத்துமத்தையும், அந்த சரீரத்தையும் தம்மோடு இணைத்துக் கொள்வதையும் அவர்கள் கணடார்கள். அதே கணத்தில், கோடிக்கணக்கான சம்மனசுக்களின் சேனைகள், ‘‘வெர்பும் காரோ ஃபாக்தும் எஸ்த்'' என்று மனம் மயக்கும் இசை யோடும், ஸ்வர இனிமையோடும் பாடுவதை மாமரி கேட்டார்கள். அந்த அளவற்ற பரம இரகசியத்தின் பேரழகில், அதன் உன்னத மகத்துவத்தில் அவர்கள் கிரகிக்கப்பட்டவர்களாகவும், அமிழ்த்தப் பட்டவர்களாகவும், அதில் தொலைந்து போனவர்களாகவும், தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஏறக்குறைய எப்போதும் மெளன மாகவே இருந்தார்கள். ஏனெனில் இத்தகைய காரியங்கள் மனித வாக்குக்கெட்டாதவையாக, திருப்பிச் சொல்லக் கூடாதவையாக, இருக்கின்றன. இந்தக் கருத்தரித்தல் அவர்களுடைய முழு சாராம்சத்தையும், அவர்களது சுபாவத்தையும், அவர்களது சத்துவங்களையும், அவர்களது இருதயத்தையும் நித்திய வார்த்தையானவரை நோக்கி ஈர்த்தது. இந்தக் கருத்தரிப்பின் செல்வாக்கின் கீழ் அவர்கள் தெய் வீகத்தில் பங்கெடுப்பதன் மூலம் மனிதத்தன்மையான ஒரு பிறவியாக அன்றி, தெய்வீகப் பிறவியாக மாற்றமடைந்தார்கள். அவர்கள் முழுவதும் ஒளியாகவும், மகத்துவப் பிரதாபமாகவும், மகிமையாகவும், பிரகாசமாகவும், முழு நேசமாகவும் ஆனார்கள்; அவர்களுடைய ஆத்துமம் பத்தாயிரம் சூரியன்களின் முழுமையான பெரும் பேரொளியின் கீழ் பிரகாசிக்கும் ஒரு படிகத் துண்டைப் போல் ஆனது. அந்கத் காட்சியிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்ட நிலை, அர்ச்சியசிஷ்டதனம், நேசம் ஆகியவற்றின் நீரோட்டங்களை, பாதாளங்களை, பெருங்கடல்களை அவர்கள் தன்னுள் இழுத்துக் கொண்டார்கள். இது அவர்களது சரரத்தில் நிரம்பி வழிந்து, அதை உயர்த்தி, முற்றிலும் ஆச்சரியத்திற்குரிய விதத்தில் அதை அர்ச் சித்தது. அந்த நித்திய உற்பவத்தின் தெய்வீகக் காட்சிதியானத்தில் நிலைபெற்றவர்களாக, அவர்கள் ஓர் ஆத்துமம் சிருஷ்டிக்கப் படுவதை--தனது தேவ மகனின் மனித ஆத்துமம் சிருஷ்டிக்கப் படுவதை--கண்டார்கள். அது தெய்வீக சர்வ வல்லபம் மற்றும் நன்மைத்தனத்தின் அதியுன்னதப் படைப்பாக, கிறீஸ்துநாதரின் திருச்சரீரத்தை உருவாக்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தனது மாசற்ற மாம்சத்தின் அர்ச்சிக்கப்பட்ட பாகத்தோடு இணைக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டார்கள்; அந்த பரலோகக் காட்சியின் பரவசத்திலும், தெய்வீக ஆக்கிரமிப்பிலும் நித்திய பிதாவானவர் தமது மடியிலிருந்து தம்முடைய அளவற்ற வார்த்தையானவரைத் தனக்குள் இறங்கச் செய்வதையும், வார்த்தையானவர் தனிப்பட்ட முறையில் தம்மோடு இணைக்கப் பட்ட அந்த ஆத்துமத்தையும், அந்த சரீரத்தையும் தம்மோடு இணைத்துக் கொள்வதையும் அவர்கள் கணடார்கள். அதே கணத்தில், கோடிக்கணக்கான சம்மனசுக்களின் சேனைகள், ‘‘வெர்பும் காரோ ஃபாக்தும் எஸ்த்'' என்று மனம் மயக்கும் இசை யோடும், ஸ்வர இனிமையோடும் பாடுவதை மாமரி கேட்டார்கள். அந்த அளவற்ற பரம இரகசியத்தின் பேரழகில், அதன் உன்னத மகத்துவத்தில் அவர்கள் கிரகிக்கப்பட்டவர்களாகவும், அமிழ்த்தப் பட்டவர்களாகவும், அதில் தொலைந்து போனவர்களாகவும், தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஏறக்குறைய எப்போதும் மெளன மாகவே இருந்தார்கள். ஏனெனில் இத்தகைய காரியங்கள் மனித வாக்குக்கெட்டாதவையாக, திருப்பிச் சொல்லக் கூடாதவையாக, இருக்கின்றன. அந்த அளவற்ற பரம இரகசியத்தின் பேரழகில், அதன் உன்னத மகத்துவத்தில் அவர்கள் கிரகிக்கப்பட்டவர்களாகவும், அமிழ்த்தப் பட்டவர்களாகவும், அதில் தொலைந்து போனவர்களாகவும், தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஏறக்குறைய எப்போதும் மெளன மாகவே இருந்தார்கள். ஏனெனில் இத்தகைய காரியங்கள் மனித வாக்குக்கெட்டாதவையாக, திருப்பிச் சொல்லக் கூடாதவையாக, இருக்கின்றன.

மாமரி மனிதாவதாரத்தின் கணத்தில் தேவ சுதனின் நித்திய ஜெனித்தலின் தேவ காட்சிக்கு உயர்த்தப் பட்டார்கள் என்று நாம் சொல்வது பற்றி வாசகர்கள் வியப்படைய மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம். இந்தக் கருத்து சில வேதபாரகர்களாலும், குறிப்பாக அர்ச். அந்தோனீன் மற்றும் அர்ச். பெரிய ஆல்பெர்ட் ஆகியவர்களாலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மோயீசனும் அர்ச். சின்னப்பரும் தற்காலிகமாக தேவ காட்சிக்கு உயர்த்தப்பட்டார்கள் என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸும், மற்ற வேதபாரகர்களும் வலியுறுத்திக் கூறுவதையும் இதனோடு நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனி, அர்ச்சியசிஷ்டவர்களுக்குத் தந்தருளப்பட்ட எல்லா வரப்பிரசாத சலுகைகளும் மாமரியையே அடித்தளமாகக் கொண்டுள்ளன என்பது இந்த தெய்வீக அறிவின் ஒரு கொள்கையாக இருக்கிறது. ஆகவே, மோயீசனுக்கும், அர்ச். சின்னப்பருக்கும் தேவகாட்சி அருளப்பட்டது என்றால், மனிதாவதாரத்தின் கணத்தில் மாமரிக்கும் இது தந்தருளப்பட்டது என்று இன்னும் எவ்வளவோ அதிகக் காரணத்தோடு நாம் அனுமானிக்கலாம். ஏனெனில் (வார்த்தையானவரின்) உலக உற்பவமானது முடிந்த வரைக்கும் அவரது நித்திய உற்பவத்தைப் போன்றதாகவே இருக்க வேண்டும் என்பது அறிவுக்குப் பொருத்தமானதாக இருந்தது. பிதாவானவர் தமது அளவற்ற சாராம்சம் மற்றும் தெய்வீக இலட்சணங்களின் காட்சியால் சுதனைக் கருத்தரிக்கிறார். ஆகவே, மாமரியும் அதே திருச்சுதனை, கடவுளின் சாராம்சம், அவருடைய இலட்சணங்கள், மற்றும் அந்தத் திருச்சுதனின் நித்திய உற்பவம் ஆகியவற்றின் காட்சியால் கருத்தரிக்க வேண்டும் என்பது முற்றிலும் முறையானதாக இருந்தது.

மாமரியின் மனப்பாங்கின் இலட்சணங்களைப் பற்றிய இந்தப் பாகத்தை முடிக்குமுன் தெய்வீகத் தாய்மையின் வரப் பிரசாதத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்வோம். தெய்வீகத் தாய்மையின் வரப்பிரசாதம் என்று நாம் சொல்லும்போது, கண்டிப்பான முறையில் பேசும்போது, தேவ சுதனை மாமரி கருத்தரிக்கச் செய்த வரப்பிரசாதம் என்ற பொருளில் இப்படிச் சொல்கிறோம். இனி, வேதசாஸ்திரிகளின் கூற்றுப்படி, தாய்மையின் இந்த வரப்பிரசாதம் கடவுளின் ஒரு வடிவமாக, கடவுளுக்கு ஒப்பான ஒரு நிலையாக இருக்கிறது; இது வரப்பிரசாதத்தாலும், பரலோக தேவ காட்சியாலும் உண்டாக்கப்படுகிற தேவ ஐக்கியத்தை விடப் பாரதூரமான அளவுக்கு மேற்பட்டதாக இருக்கிற, கடவுளுக்கு ஒப்பானவர்களாக மாமரியை ஆக்குகிற ஓர் ஐக்கியம்; இது அனைத்திலும் அதிக உன்னதமான தேவ இஷ்டப்பிரசாதத்தின் வேராகவும், மூலாதாரமாகவும், தொடக்கமாகவும், தேவ காட்சியின் அனைத்திலும் உயர்ந்த நிலையாகவும் இருக்கிறது.

இந்தத் தாய்மையின் வரப்பிரசாதத்தின் காரணமாக, மாமரி சம்மனசுக்களுடையவும், புனிதர்களுடையவும் வரப்பிரசாதத்திற்கு மேற்பட்ட ஒரு தேவ இஷ்டப்பிரசாதத்திற்கு மட்டுமின்றி, புனிதர்கள், சம்மனசுக்கள் ஒவ்வொருவருடையவும், அனைவருடை யவும் தேவ காட்சியை விட பாரதூரமான முறையில் உயர்ந்திருக்கிற ஒரு தேவ காட்சிக்கு மட்டுமின்றி, முற்றிலும் வேறுபட்டதும், ஒப்பற்றதும், ஈடு இணையற்றதுமான ஒரு வரப்பிரசாதத்திற்கும், காட்சிக்கும் மாமரி தகுதியுள்ளவர்களாக ஆனார்கள்.

இந்தத் தாய்மையின் வரப்பிரசாதம் ஓர் ஒப்பற்ற வரப் பிரசாதம், ஒப்பற்ற பேரின்பம் என்று சொல்லப் பட்டாலும் இது இவை இரண்டுமே அல்ல, இவை இரண்டிலுமிருந்தும் இது வேறுபட்டது, இது தனக்கு இணையில்லாததான ஒன்றாக இருக் கிறது--அதாவது, கடவுளோடு கொள்ளும் ஐக்கியத்தின் மிக மேலானதும், மிக உயர்ந்ததும், மிக உயர்த்தப்பட்டதும், மிகுந்த பக்திக்குரியதும், அதியுன்னத மகத்துவமுள்ளதும், தனது அளவில் முற்றிலும் அதியற்புதமானதுமான வடிவமாக, அல்லது அவருக்கு ஒப்பானவர்களாக மாமரியை ஆக்குவதாக, இருக்கிறது. எந்த அளவுக்கெனில், இது சிருஷ்டிக்கப்பட்ட காட்சியின் பார்வையைக் குழப்புகிறது. அவர்களிடம் இருந்து மனித சுபாவத்தை எடுத்துக் கொண்டவரால் மட்டுமே அறியப்பட்டதாக இது இருக்கிறது. இங்கே அர்ச். சியென்னா பெர்னார்தினின் வார்த்தைகளை நாம் நினைவுகூரலாம்: ‘‘கடவுள் ஒரு கடவுளைக் கருத்தரிக்க எந்த ஒரு தகுதியும் தேவையாயிருக்கவில்லை. ஆனால் ஒரு பெண் கடவுளைக் கருத்தரிப்பது என்பது புதுமைகளில் எல்லாம் மேலான புதுமையாக இருந்தது. ஏனெனில், ஒரு பேச்சு முறைக்கு, திவ்ய கன்னிகை ஒரு குறிப்பிட்ட அளவற்றதனத்தாலும், இது வரை எந்த சிருஷ்டிக்கும் ஒருபோதும் தந்தருளப்படாத உத்தமதனத்தின் பிரமாண்டத்தாலும் ஒரு குறிப்பிட்ட தெய்வீக சமத்துவ நிலைக்கு உயர்த்தப்படுவது இதற்கு அவசியமாயிருந்தது.'' அர்ச். பெர்னார்தீன் கூறுகிற இந்த தேவ சமத்துவ நிலையே தெய்வீகத் தாய்மையின் வரப்பிரசாதமாக இருக்கிறது.