இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மனுக்குலம் தொடர்பாக மரியாயின் மேலான மகத்துவத்தின் விளைவுகள்

அத்தியாயம் 3

மனுக்குலம் தொடர்பாக மரியாயின் மேலான மகத்துவத்தின் விளைவுகள்

மனுக்குலம் தொடர்பாக மனிதாவதாரம் மற்றும் இரட்சணியத் தின் பரம இரகசியங்களிலிருந்து எழுந்த விளைவுகள் அனைத் தையும், மற்றும் அதனால் மனுக்குலம் அனுபவித்த நன்மையான விளைவுகள் அனைத்தையும், அவற்றின் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளும்போது, அவையெல்லாம் மாமரியின் சம்மதம் மற்றும் ஊழியத்திலிருந்தே பெறப்பட்ட என்று ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.

மரியாயின் ஊழியத்தின் வழியாக மனுக்குலத்தின் மீது பொழியப்பட்ட இந்த நன்மைகளைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனையை நம் வாசகர்களுக்குத் தரும்படியாக, நாம் பின்வரும் கட்டுரைகளில் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து விளக்க இருக்கிறோம்.

பிரிவு 1

இரட்சணியத்தைப் பற்றிய சிந்தனை

இரட்சணியம் என்பது சரியாகப் புரிந்துகொள்ளப்படச் செய்வதற்கு, இரட்சணியத்தை அவசியமானதாக்கிய காரியத்தின், அதாவது பாவத்தின் தன்மை மற்றும் விளைவுகளைப் பற்றி விவரிப்பது அவசியமானதாக இருக்கிறது. 

மனிதன் கடவுளின் கட்டளையை மீறினான், அதாவது, அவன் கலகத்தினுடையவும் போலியான சுதந்திரத்தினுடையவும் செயல் ஒன்றைச் செய்தான். இந்தக் கலகம் மற்றும் சுதந்திரத்தின் செயல், தவிர்க்க முடியாத விளைவாக, பின்வரும் காரியங்களை விளை வித்தது:

முதலாவதாக, கடவுள் அந்தச் செயலால் அவமானப்படுத்தப் பட்டார், அதனால் மனிதன் கடவுளுக்குப் பயப்படுகிறவன் ஆனான்.

இரண்டாவதாக, அந்தச் செயல் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட உறவை முறித்தது, இவ்வாறு, இதன் விளைவாக மனிதன் தேவ இஷ்டப்பிரசாதத்தை அதன் தொடக்கத் திலும், அதன் வளர்ச்சியிலும், அதன் இறுதி முழுமையிலும் இழந்து போனான்.

மூன்றாவதாக, மனிதனின் சுபாவமான சத்துவங்களும் கூட பாதிக்கப்பட்டன. அவனுடைய மனம் இருட்டடிக்கப்பட்டது, அவனுடைய சித்தம் பலவீனமாக்கப்பட்டு, தீமையின் மீது சார்புள்ளதாக மாறிப் போனது, அவனுடைய மேலாங்கிஷ, ஞான சத்துவங்கள், சரீரப் புலன்களுக்கு அடிமையாகிப் போயின.

நான்காவதாக: அவன் தீமைக்கு அடிமையானான்.

அப்படியிருக்க, மனிதனை இரட்சிப்பதற்கு அவசியமாக இருந்தது எது? பின்வரும் நிபந்தனைகள்:

முதலாவது: மனிதன் புலன்களின் அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்;

இரண்டாவது: அவன் கடவுளில் நம்பிக்கை கொள்ளும் நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும்.

மூன்றாவது: அவன் கடவுளுடனான சுபாவத்திற்கு மேலான தும், தனிப்பட்டதுமான உறவில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

நான்காவது: பாவத்தால் கடவுளிடமிருந்து அகற்றப்பட்ட அவருடைய அளவற்ற மகிமை, அவருக்கு மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

நாம் இந்தக் காரியங்களின் தன்மையை விளக்கி, இவை ஒவ்வொன்றிலும் மாமரியின் ஊழியத்தைப் பற்றிச் சிந்திப்போம்.