இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அடையும் மாற்றம்

தேவ காட்சியும், தேவனையே சொந்தமாகக் கொண்டிருப்பதும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்துமங்களில் ஒரு மாற்றத்தைப் பிறப்பிக் கின்றன. இது அர்ச். அருளப்பரின் வார்த்தைகளில் சுட்டிக் காட்டப் படுகிறது: ‘‘அவர் தோன்றும்போது அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று அறிவோம். ஏனெனில் அவர் இருக்கிறமாதிரியே அவரைத் தரிசிப்போம்'' (1அரு.3:2).

இந்த மாற்றம் தேவ காட்சி, தேவனை சொந்தமாகக் கொண் டிருத்தல் என்னும் இரண்டிலும் தன் தொடக்கத்தைக் கொண் டுள்ளது. தேவ காட்சியைப் பொறுத்த வரை, புத்தி, தன்னுடைய இயல்பின்படி, தான் புரிந்து கொள்கிற அனைத்தினுடையவும் வடிவத்தையும், ஒப்பாயிருக்கும் தன்மையையும் எடுத்துக் கொள்கிறது என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸோடு நாம் இங்கே குறிப்பிட வேண்டும்; புரிந்துகொள்ளும் செயல் எவ்வளவுக்கு அதிக உத்தமமானதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு புரிந்துகொள்வதால் விளையும் பொருண்மைக்கு ஒப்பாயிருப்பதும் அதிக உத்தமமான தாக இருக்கும்.

இனி, பரலோகவாசிகளான ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்துமங்கள் கடவுளைத் தெளிவாக அறிகிறார்கள், அவரை முகமுகமாகக் காண்கிறார்கள், அவருடைய சொந்த சுபாவத்திலும், இலட்சணங் களிலும் அவரைக் கண்டுதியானிக்கிறார்கள் என்பதால், அவரைப் பற்றி அவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவு தற்செயலானதோ, மேம்போக்கானதாகவோ, அல்லது கடந்து போகக் கூடியதாகவோ இல்லாமல், அந்நியோந்நியமானதாகவும், சாரமுள்ளதாகவும், ஆழ்ந்ததாகவும், மிகுந்த பயனுள்ளதாகவும், நிரந்தரமானதும் இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், அர்ச். தாமஸ் அக்குயினாஸ் குறிப்பிடுவது போல, எவ்வளவோ உத்தமமானதாக இருக்கும் அறிவின் செயலால், கடவுள் ஒரு விதத்தில் பாக்கியவான்களின் ஆத்துமத்தின் மீது செதுக்கப்படுகிறார், மறு உருவாக்கப்படுகிறார். இவர்கள் அளவற்ற பேரழகுகளின் காட்சிதியானத்தில் கிரகித்துக் கொள்ளப்பட்டு, மாற்றமடைந்து, தெய்வீக மாதிரிக்கு, பொதுவான உத்தம மாதிரிகையானவருக்கு, ஒப்பானவர்களாக ஆகிறார்கள். தாங்கள் யாரைக் காண்கிறார்களோ அவராகவே அவர்கள் ஆகிறார்கள்: ‘‘இத் ஃபியுந்த் குவோத் வீதெந்த்'' (அர்ச். தாமஸ் அக்குயினாஸ்).

ஒரு பொருளுக்கு முன்பாக வைக்கப்படுகிற ஒரு கண்ணாடி அதன் உருவத்தைப் பிரதிபலிப்பது போல, நாமும் தேவ வரப் பிரசாதத்தால் சுத்திகரிக்கப்பட்டு, மகத்துவ ஒளியால் தெய்வீக மாக்கப்பட்டு, நேசத்தால் அழகுள்ளவர்களாக்கப்பட்டு, அவருடைய அளவற்ற மகத்துவத்தை மூடாமலே அவரைக் கண்டு பாவிக்கும்படியாகவும், மகா உன்னதரின் புண்ணியத்தின் விளைவாக, நாமும் மிக அநேக உயிருள்ள, உத்தமமான பிரதிபிம்பங் களாக மாற்றப்படுகிற ஒரு முறையில் மட்டும் அவருடைய மகத்துவத்தில் அவருக்கு ஒப்பானவர்களாக ஆக்கப்படும்படி யாகவும் கடவுளின் திருமுன் வைக்கப்படும் கண்ணாடிகளைப் போல் ஆவோம் என்று அர்ச். சின்னப்பர் சொன்னபோது, அவர் இந்தப் பரம இரகசியத்தை விளக்கப் பயன்படுத்திய அழகிய உபமானத்தின் பொருத்தமுள்ள தன்மையை இதிலிருந்து நம்மால் காண முடிகிறது.

ஆனால் பாக்கியவான்களில் கடவுளின் இந்த ஒப்பான தன்மை வெறும் அறிவின் தன்மை மட்டும் கொண்டதாக இருக்காது; அது சித்தத்தின் மீது ஆளுகை கொண்டதாகவும், அதை இயக்குவ தாகவும், அதற்கு உயிரூட்டுவதாகவும் இருக்கும். அன்பின் தன்மையிலிருந்தும் இது விளங்குகிறது. நாம் எதை நேசிக்கிறோமோ, அதைப் போலவே ஆகிவிடுகிறோம்: நேசிக்கப்படும் பொருள் உயர்ந்ததாகவும், பக்திக்குரியதாகவும், தெய்வீகமானதாகவும் இருந்தால், நம் சித்தமும் உயர்ந்ததாகவும், பக்திக்குரியதாகவும், தெய்வீகமானதாகவும் ஆகிவிடுகிறது; அது தாழ்மையானதாகவும், தரந்தாழ்த்துவதாகவும் இருந்தால், நாமும் தாழ்மையானவர் களாகவும், தரந்தாழ்ந்தவர்களாகவும் ஆகிவிடுகிறோம். இதன் காரணமாகவே வேதாகமம்: ‘‘ஃபாக்தி சுந்த் அபோமிலாபிலெஸ் சீக்குத் ஏயா குவாஸே திலெக்ஸேருந்த்'' என்கிறது.

இனி, பரலோகத்தில் பாக்கியவான்கள் ஒரு மிக உத்தமமான அன்பைக் கொண்டு, உத்தமதனத்தின் பாதாளமும், சகல வசீகரத் தினுடையவும், அழகினுடையவும் பெருங்கடலுமாக அளவற்ற வரோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் அவரைப் போலவே ஆகி விடுகிறார்கள்.

இந்த ஒத்த தன்மை இந்த வாழ்வில் வரப்பிரசாதத்தால் கடவுளைப் பற்றி நாம் பெற்றுக்கொள்ளும் உபமானத்தைப் போல தொலைவானதாகவும், அடையாளத் தன்மையுள்ளதாகவும், உருவகத் தன்மையுள்ளதாகவும், அல்லது குறைபாடுள்ளதாகவும் இருக்காது. பரலோகத்தில் சிருஷ்டி கடவுளாக உண்மையாகவே மாற்றப்படுவது நிகழும். மனிதன் இயற்கையின் உலகைத் தாவிக் கடந்து, கடவுளுடையதாக ஆவான் என்று அர்ச். நாசியான்சென் கிரகோரியார் கூறுகிறார்: ‘‘எக்ஸ்சேதெத் ஹோமோ சுவாம் நாத்துராம் தேயுஸ் தே ஹோமினே எவாதென்ஸ்.'' இவ்வாறு தீர்க்கதரிசியானவர் பரலோகத்தில் கடவுளர் மத்தியில் வீற்றிருப் பவராகக் கடவுளைக் குறித்துக் காட்டுகிறார்: ‘‘தேயுஸ் ஸ்தேத்தித் இன் சினகோகா தேயோரும்.'' அங்கே எல்லா வேறுபாடுகளும் அழிக்கப்படுகின்றன, எல்லா மேடுபள்ளங்களும் சமமாக்கப் படுகின்றன. சிருஷ்டிகர் மற்றும் சிருஷ்டி என்னும் வேறுபாட்டைத் தவிர வேறு வேறுபாடு எதுவும் அங்கே நிலைத்திராது, மாறாக, உத்தமமான விதத்தில் தம்மைப் போல சிருஷ்டிகரால் உயர்த்தப் பட்டு, வரப்பிரசாதத்தால், தம் சொந்த சுபாவத்தில் அவர் இருக்கிற படியே, அவராக ஆக்கப்படுகிற ஒரு சிருஷ்டி அங்கே இருக்கும்.

உண்மையில், கடவுளின் நெஞ்சில் ஏற்றுக்கொள்ளப்படும் சிருஷ்டி கடவுளின் வாழ்வை வாழத் தொடங்குகிறது, கடவுளின் மூச்சு அதற்கு உயிரூட்டுகிறது, அவருடைய பொருண்மை அதன் உணவாக இருக்கிறது, அவருடைய இருத்தல் அதைத் தாங்குகிறது, அவருடைய தெய்வீகம் அதை அழித்து விடாமல், அதைத் தெய்வீக மானதாக்குகிறது, அதன் சுபாவத்தை அகற்றி விடாமலே அதரற்கு மற்றொரு வடிவத்தைத் தருகிறது, எந்த விதத்தில் என்றால், அது, தன் சாராம்சத்தில் ஒரு சிருஷ்டியாக இருப்பதை நிறுத்திக் கொள்ளாமலே பங்குபெறுதலின் மூலம் கடவுளைப் போலாகிறது.

ஆனால் இந்த ஒப்பான தன்மையில் எதுவும் குறைவுபடாத படியும், அதே சமயத்தில், பாக்கியவானின் ஆத்துமம் தெய்வீக ஐக்கியத்தில் மறுபிறப்படையும்படியும், தேவ ஆட்களின் திரித்துவமும் அதனுள் இழுத்துக்கொள்ளப்படுகிறது. மூன்று தேவ ஆட்களும் மனிதனுடைய படைப்பிலும், வரப்பிரசாதத்தின் எல்லாப் பரம இரகசியங்களிலும் ஒரே கருத்துள்ளவர்களாக இருந்ததைப் போன்ற அதே முறையில், இன்னும் அதிக பலமான காரணத்தோடு, இந்த மூன்று தேவ ஆட்களும் மகிமைப்படுத்தப் படுதலின் பரம இரகசியத்தில் தங்கள் பங்கைக் கொண்டிருப் பார்கள். இன்னும் எவ்வளவோ அதிக அற்புதமான, உத்தமமான முறையில், நித்தியப் பிதாவானவர் மகிமைப்படுத்தப்பட்ட ஆத்துமத்திற்குத் தம்முடைய அறிவின் வல்லமையையும், தேவ வார்த்தையானவர் தமது ஞானத்தின் பொக்கிஷங்களையும், பரிசுத்த ஆவியானவர் தமது நன்மைத்தனத்தின் இன்பங்களையும், அதன் பொழிதல்களையும் தந்தருள்வார்கள். இவ்வாறு அர்ச். சின்னப்பர் எடுத்துரைக்கிறபடி, பாக்கியவான்கள் கடவுளின் அந்தரங்கத்தினுள் அமிழ்த்தப்பட்டவர்களாக, அவருடைய பூரணத்துவத்தால் நிரப்பப்படுவார்கள். ஆகவே, அவர்களில் வல்லமையினுடையவும், ஞானத்தினுடையவும், நன்மைத்தனத்தினுடையவும் முழுமை இருக்கும். படைக்கப்பட்டதாகிய புத்தி, சிருஷ்டிக்கப்படாத அறிவின் ஆற்றலில் பங்கெடுப்பதன் மூலம் ஓர் உள்ளரங்க வார்த்தையை உருவாக்கும், அது சிருஷ்டிக்கப்படாத வார்த்தை யானவரின் எதிரொலியைப் போலிருக்கும்; இந்த புத்தியும், இந்த வார்த்தையும் படைக்கப்படாத நேசத்திற்கு மிகவும் ஒப்பான ஒரு தன்மையைத் தாங்கும் திருப்தியோடு ஒன்றில் ஒன்று இளைப்பாறும். அதாவது, ஆத்துமத்தின் சத்துவங்கள் ஏறக்குறைய தேவ ஆட்களுடையது போன்ற அதே உறவுகளோடு ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும், அளவற்ற சுபாவத்தின் பாதாளங்களில் நித்தியத்திலிருந்தே வாசம் செய்கிற மகா உன்னத தமத்திரித்துவ மாகிய வாக்குக்கெட்டாத பரம இரகசியம், உயிரற்ற சிருஷ்டிகளில் உள்ளது போல, வெறும் பிரதிபிம்பமாக மட்டுமின்றி, சகல புத்தியுள்ள சிருஷ்டிகளிலும் உள்ளதுபோல சுபாவமான ஒத்த தன்மையாக மட்டுமின்றி, உத்தமமானதும், நிரந்தரமானதுமான சுபாவத்திற்கு மேலான ஒத்த தன்மையில் ஆத்துமத்தில் மறுவுருவாக்கப்படும். இவ்வாறு மகிமைப்படுத்தப்பட்ட ஆத்துமம் படைக்கப்படாத தமத்திரித்துவத்தினுடைய உயிருள்ள பிம்ப மாகவும், அதன் உயிருள்ள சித்திரமாகவும், அவர்கள் சர்வ வல்லபராக இருப்பது போல் அதுவும் வல்லமையுள்ளதாகவும், அவர்கள் ஞானமாகவே இருப்பது போல் அதுவும் ஞானமுள்ள தாகவும், அவர்கள் நேசமாகவே இருப்பது போல் அதுவும் நேச முள்ளதாகவும், அதே மகிமைப் பிரதாபத்தால் கண்ணைப் பறிக்கும் சுடர் வீசுவதாகவும், அதே உயிரால் உயிரூட்டப்படுவதாகவும் இருக்கும்: ‘‘ஏகோ திக்ஸி தீயி எஸ்திஸ்'' (சங்கீதம்.).