இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

செய்யப்பட்ட செயல்களின் வெளியரங்க மதிப்பிலிருந்து மாமரியின் பேறுபலனின் மேன்மை அல்லது, முதல் விதியால் தீர்மானிக்கப்படும் மாமரியின் பேறுபலன்

இந்தப் பிரிவை எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை; ஏனெனில் மாமரி செய்த செயல்களின் மிகப் பிரமாண்டமான வெளி மதிப்பைப் பற்றிச் சிந்திக்கவும், இன்னும் குறைவாக, அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தவும் யாரால் முடியும்? அவர்களது செயல்கள் எண்ணற்றவை என்றாலும், அவை அனைத்தும், அவர்களுடைய மங்கள வார்த்தை நிகழ்ச்சியில் செய்யப்பட்ட மலைக்கச் செய்வதும், நிகரற்றதுமான அந்த ஒரு செயலில் சுருக்கப்பட்டிருப்பதாக நாம் நினைத்துக் கொள்ளலாம். அது படைக்கப்பட்ட ஒரு ஆளுமையால் செய்யப்பட்ட அனைத்திலும் அதிக பக்திக்குரியதும், மிகவும் அதியற்புதமானதுமான செயலாக இருந்தது, அதை யாராலும் ஒருபோதும் கண்டுபாவிக்க முடியாது, அதுவே சம்மனசானவரின் வார்த்தைகளுக்குப் பதிலாக அவர்கள் தந்த ஃபியாத் ஆகும்.

அந்தச் செயலுக்கு முன்பும் பின்பும் அவர்களுடைய வாழ்வில் செய்யப்பட்ட எல்லாச் செயல்களும், இந்தச் செயலையே நோக்க மாகக் கொண்டவையாகவும், இந்தச் செயலுக்குக் கீழ்ப்பட்டிருப் பவையாகவும் இருந்தன. அவை அந்தச் செயலுக்கு அடங்கியவை யாக ஆக்கப்பட்டதன் மூலம் உயர்த்தப்பட்டு, மேன்மைப்படுத்தப் பட்டு, அழகுள்ளவையாக்கப்பட்டன. மாமரி அந்தச் செயலில் வாழ்ந்தார்கள். அதுவே அவர்களுடைய ஆளுமையின் அடையாளச் சின்னமாகவும், அவர்களுடைய தனிப்பட்ட அடையாளமாகவும் இருந்தது. அவர்களுடைய முந்தின வாழ்வு அந்தச் செயலுக்கான ஆயத்தமாக இருந்தது; அவர்களுடைய பிந்தைய வாழ்வு அந்தச் செயலின் தனிப்பட்ட நிறைவேற்றமாகவும், அந்தச் செயலைச் செய்யக் கடவுள் தனக்கு உதவி செய்ததால் அவர்கள் கடவுளுக்குப் பாடிய ஒரு தொடர்ச்சியான நன்றியறிந்த தோத்திரப் பாடலாகவும், ஒரு புகழ்ச்சிப் பாடலாகவும் இருந்தது. மாமரியின் வாழ்வு முழுவதும் அவர்களுடைய ஃபியாத்தாலேயே அடையாளம் காணப் படுகிறது. நம் ஆண்டவரின் சுயவிருப்ப ஒப்புக்கொடுத்தலையும், கடவுளின் மகிமைக்கும், மனித இரட்சணியத்திற்கும் உரிய பலிப் பொருளாக இருக்கும்படியான அவருடைய ஒட்டுமொத்த, முழுமை யான அர்ப்பணத்தையும் எடுத்துரைக்கிற ‘‘''எக்சே ஏகோ, மித்தே மே'' என்ற வார்த்தைகளை அவருடைய வாழ்வு மையமாகக் கொண் டிருந்தது போல, மாமரியின் வாழ்வு அந்த ஃபியாத்தை மையமாகக் கொண்டிருந்தது, அது அந்தப் பரம இரகசியங்களில் அவர் களுடைய சொந்த ஒத்துழைப்பை எடுத்துரைக்கிறது.

இப்போது, மாமரியின் அந்த உன்னதமான, பொதுவான, முற்றிலும் விரிவான செயலின் வெளியரங்க மதிப்பை நம்மால் முடிந்த வரை நன்றாக ஆய்வு செய்து பார்ப்போமாக.

கடவுள் மனிதாவதாரம் மற்றும் இரட்சணியம் ஆகிய பரம இரகசியங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு, அவருக்கு ஓர் இன்றியமையாத நிபந்தனையாக, நாம் விளக்கியுள்ள காரணங்களுக்காக மாமரியின் சம்மதம் தேவைப்பட்டது என்றும், அர்ச். அகுஸ்தீனாரின் கூற்றுப்படி, அவர் இந்த இரண்டு மகா உன்னதப் பரம இரகசியங்களின் மத்தியஸ்தியாக அவர்களை ஸ்தாபித்தார் என்றும் இந்தப் புத்தகத்தில் நாம் எண்பித்திருக் கிறோம். ஆகவே, இந்தச் சம்மதம் ஒரு பேறுபலனுள்ள செயலாக இருந்தது. அது இருமடங்கான ஒரு விளைவை மறைமுகமாகக் குறித்துக் காட்டியது. முதலாவது, தேவ திருச்சுதனின் மனிதா வதாரம்; இரண் டாவது, மனிதாவதாரம் மற்றும் இரட்சணியத்தின் எல்லா விளைவு களும். ஆகவே அந்தச் செயலின் மதிப்பு அதனால் நிறைவேற்றப் பட்ட காரியத்தின் வெளியரங்க மதிப்பிலிருந்தே அளவிடப்பட வேண்டும்.

முதலாவதாக, அது மனிதாவதாரத்தை நிறைவேறச் செய்தது; ஏனெனில் அந்தச் சம்மதம், ஒரு தெய்வீக ஆளுமையில், நம் ஆண்டவரின் மனித உற்பவத்தில் முடிவடைந்தது. ஏனெனில் மாமரியின் கருத்தரித்தல் ஒரு மனித ஆளில் அல்லாமல், ஒரு தேவ ஆளில் நிறைவுபெற்றது. இதன் அடிப்படையில் மாமரியின் ஃபியாத் ஏறக்குறைய ஓர் அளவற்ற பேறுபலனைக் கொண்டிருந்தது. ஏனெனில் யாரில் அந்தச் செயல் முற்றுப் பெற்றதோ, அவர் ஓர் அளவற்ற ஆளாக, தம்மில் சர்வேசுரனாகவே இருந்தார். நாம் ஏறக்குறைய ஓர் அளவற்ற பேறுபலன் என்று சொல்வது ஏனெனில், மாமரி ஒரு மூலாதார, அல்லது முதன்மைக் காரணராகச் செயல்படாமல், ஒரு கருவியாகவும், இதில் ஒத்துழைப்பவர் களாகவுமே செயல்பட்டார்கள். இந்த அடிப்படையில் கட்டுப் படுத்தப்பட்டு, அவர்களுடைய செயல், வரப்பிரசாதத்தினுடைய வும், அர்ச்சியசிஷ்டதனத்தினுடையவும், சத்தியத்தினுடையவும் பாதாளமுமானவரின், யாரில் மாம்ச ரீதியில் தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்கிறதோ அந்த நம் ஆண்டவரின் ஆள்தன்மையின் மதிப்பைக் கொண்டதாக இருக்கிறது.

இரண்டாவதாக, அது இரட்சணியமாகிய பரம இரகசியத்தை, உலகின் பாவங்களுக்காகக் கடவுளின் நீதிக்குப் பரிகாரம் செய்தல், கடவுளின் மகத்துவத்திற்கு அளவற்ற மகிமை, ஆராதனை, சங்கை மரியாதை, மனுக்குலம் வரப்பிரசாதத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப் படுதல், விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்னும் தன்னுடைய மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்களோடு கூடிய தேவ இஷ்டப் பிரசாதம், இஸ்பிரீத்துசாந்துவானவரின் கொடைகள், அவருடைய கனிகள், பாக்கியங்கள், அசாதாரணமான, சுபாவத்திற்கு மேற்பட்ட வரப்பிரசாதங்கள், ஒரே வார்த்தையில் சொல்வதானால், முழுமை யான, ஞான, சுபாவத்திற்கு மேற்பட்ட உலகம்; மற்றும் காணக் கூடிய சுபாவத்திற்கு மேற்பட்ட உலகமாகிய திருச்சபை மற்றும் தேவத்திரவிய அனுமானங்கள், இறுதியாக, நித்திய மகிமை என்னும் இந்தப் பரம இரகசியத்தின் சகல விளைவுகளோடும் அது நிறைவேறச் செய்தது. இனி, இந்த எல்லாக் காரியங்களுடையவும் வெளியரங்க மதிப்பை யாரால் அளவிட அல்லது கணக்கிட முடியும்? என்றாலும், மாமரி அந்த பக்திக்குரிய ஃபியாத்தில் உரைக்கப்பட்ட தன்னுடைய சம்மதத்தால், ஒத்துழைக்கும் காரணியாக இந்தப் பேறுபலன்களைச் சம்பாதித்தார்கள்.

இனி, சுபாவமான உலகம் சுபாவத்திற்கு மேலான உலகத்திற்காக இருப்பது போல, சுபாவத்திற்கு மேலான உலகம் சுபாவமான உலகத்தின் இறுதி நோக்கமாகவும், காரணமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக, மாமரி சுபாவத்திற்கு மேலான உலகத்தைச் சம்பாதித்துக் கொண்டதால், அவர்கள் தன்னுடைய அற்புதமான ஃபியாத்தின் மூலம் உலகத்தின் படைப்பையும், அது பாதுகாக்கப் படுவதையும் தனது பேறுபலனாகப் பெற்றுக்கொண்டார்கள்.

இதுவும் தவிர, நம் ஆதிப் பெற்றோர் தங்கள் வீழ்ச்சியால் தங்களுக்காகவும், தங்கள் சந்ததிக்காகவும் மரணத்தையும், அழிவையும் சம்பாதித்துக் கொண்டாலும், அவர்கள் உயிரோடு பாதுகாக்கப்பட்டார்கள் என்றால், அது மாமரியின் ஃபியாத்தின் காரணமாகவே. ‘‘இந்த மேன்மை மிக்க சிருஷ்டியின் நிமித்த மாகவே, தங்கள் மீறுதலின் விளைவிலிருந்து நம் ஆதிப் பெற்றோர் பாதுகாக்கப்பட்டார்கள், நோவே பெருவெள்ளத்திலிருந்தும், ஆபிரகாம் கொதோர்லஹோமோரின் படுகொலையிலிருந்தும், ஈசாக் இஷ்மாயேலிடமிருந்தும், யாக்கோபு ஏசாவிடமிருந்தும், யூத மக்கள் எகிப்திலிருந்தும் பாரவோனின் அவபக்தியுள்ள கரங்களி லிருந்தும், செங்கடலிலிருந்தும், வனாந்தரத்தின் பொற்கன்றுக் குட்டியிடமிருந்தும், பலதரப்பட்ட அரசர்கள் மற்றும் கொடுங் கோலர்களின் கரங்களிலிருந்தும் இந்த சிருஷ்டியின் நிமித்தமாகவே காப்பாற்றப்பட்டார்கள். எல்லாவற்றையும் ஒரு சில வார்த்தைகளில் சுருக்கிச் சொல்வதானால், பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப் பட்டுள்ள எல்லா வகையான விடுதலைகளையும்,பலன்களையும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையின் அன்பிற்காகவும், வணக்கத்திற்காகவுமே கடவுள் தந்தருளினார் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த திவ்ய கன்னிகை தம் எல்லா வேலைகளிலும் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வேசுரன் நித்தியத்திலிருந்தே முன்குறித்திருந்தார்'' என்று அர்ச். சியென்னா பெர்னார்தீன் கூறுகிறார் (றீerது. ணூமு).

முதல் விதியின் அடிப்படையில் மாமரியின் பேறுபலனைப் பற்றி நாம் சொல்லியுள்ள எல்லாவற்றையும் சுருங்கக் கூறுகிற அதே அர்ச். பெர்னார்தீனின் வார்த்தைகளைக் கொண்டு இந்தப் பிரிவை நாம் முடிப்போம்: ‘‘இவ்வளவு பெரிதான ஒரு பரம இரகசியத்திற்குத் தரப்பட்ட கன்னிமையுள்ள சம்மதத்தின் கடைசி வார்த்தையை ஒருவன் சிந்திப்பான் என்றால், ஞான விதமாகவும், சரீர விதமாகவும் கடவுளின் தாயராக இருப்பதில் சேர்க்கப்பட்டுள்ள சகல மேன்மையும், உத்தமதனமும், அந்த சம்மதத்தோடும் தொடர் புள்ளதாக இருக்கிறது என்பதை அவன் தெளிவாகப் புரிந்துகொள் வான்.'' இது பேறுபலனில், கடவுளின் கீழ் சிந்திக்கப்பட்ட அல்லது பேசப்பட்ட எதற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. அப்படி யிருக்க, இத்தகைய வாக்குக்கெட்டாத வார்த்தை தனது பேறுபலனுக்குச் சரிவிகிதத்தில் இருந்தது என்றால், இத்தகைய சம்மதத்தின் உத்தமமான பேறுபலன், அதன் வார்த்தையின் உத்தம தனத்தோடு சரிவிகிதத்தில் இருக்க வேண்டியதும் அவசியம். இதிலிருந்து, மாமரி தனது திருமகனின் உற்பவத்திற்குச் சம்மதம் தெரிவித்ததன் மூலம், மனிதர்களாயினும் சரி, சம்மனசுக்களாயினும் சரி, எல்லா சிருஷ்டிகளையும் விட அதரிகமான பேறுபலனைச் சம்பாதித்துக் கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய செயல்களிலும், இயக்கங்களிலும் அல்லது சிந்தனைகளிலும் மாமரி பேறுபலன்களைச் சம்பாதித்துக் கொண்டார்கள், அதாவது, பேறுபலன்களைச் சம்பாதித்தவர்கள் தஙக்ள் பல்வேறு அந்தஸ்துகள் மற்றும் அவற்றின் அளவுகளின்படி, நித்தியப் பேரின்பத்தை விட அதிகமாக எதையும் சம்பாதித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் திவ்விய கன்னிகையோ, அந்த வியக்கத்தக்க சம்மதத்தில், அகில உலகத்தின் மீதும் ஆளும் அதிகாரத்தையும், சகல வரப்பிரசாதங்கள், சகல புண்ணியங்கள், சகல கொடைகள், சகல பாக்கியங்கள், பரிசுத்த ஆவியானவரின் சகல கனிகள் மற்றும் சகல அறிவினுடையவும் பூரணத்துவத்தையும், வார்த்தைகளுக்கு விளக்கம் கூறும் கொடையையும், தீர்க்கதரிசன வரத்தையும் அரூபிகளைப் பகுத்தறியும் கொடையையும், புதுமைகள் செய்யும் வரத்தையும், கன்னிமையில் வளப்படுத்தப்படுதலையும், தேவ திருச்சுதனுக்குத் தாயாயிருக்கும் மகா உன்னத மகிமையையும் சம்பாதித்துக் கொண் டார்கள்; மேலும் சமுத்திரத்தின் நட்சத்திரமாகவும், பரலோகத் தினுடைய வாசலாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, கிருபை தயாபத்தின் மாதாவாகவும் இருக்கும் பேறுபலனையும் அவர்கள் சம்பாதித்துக்கொண்டார்கள்'' (Vஷ்de 2 றீerது. ஸ.).