இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரலோகத்திலுள்ள ஆசீர்வதிக்கப்பட்ட ஆத்துமங்களின் சந்தோஷம்

பாக்கியவான்களை ஆட்கொள்ளும் பேரின்பத்தையும், சந்தோஷத்தையும் கொண்டு நிரப்பும்படி, தேவ காட்சியும், கடவுளைச் சொந்தமாகக் கொண்டிருத்தலும், மறுரூபமடைதலு மாகிய அனைத்தும் ஒன்றாக இணையும்.

இந்தப் பேரின்பத்தையும், சந்தோஷத்தையும் ஓரளவாவது விளக்கிக் கூற நாம் விரும்புகிறோம் என்றாலும், மிகவும் மேலோட்டமானதும், திருப்தி தராததுமான முறையிலாவது அதைத் தொட்டுக் காட்டுவதும் கூட நமக்கு சாத்தியமேயில்லை என்பதை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

சந்தோஷம் என்னும் கருத்தை ஆய்வு செய்து பார்ப்போம். ஏக்கத்தோடு தேடப்பட்டதும், இறுதியாக அடைந்து கொள்ளப் பட்டதுமான ஒரு பொருளைச் சொந்தமாக்கிக் கொள்வதன் விளைவாக ஆத்துமத்தில் எழுகிற ஒரு வித உணர்வே சந்தோஷம் ஆகும். இது எளிமையானதாகத் தோன்றினாலும், இந்த உணர்வு பல்வேறு உணர்வுகளால் உருவாக்கப்படுவதாக இருக்கிறது. மேலும், முதலில் அது இளைப்பாற்றியை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிறது; தான் அடைய விரும்பியதற்காக ஏங்கிக் கொண்டிருந் ததும், அதற்காக இரந்து மன்றாடிக் கொண்டிருந்ததும், அதை எண்ணிச் சோர்ந்து உருகிக் கொண்டிருந்ததுமான சத்துவம், அதன் மீதான ஆர்வமிக்க ஆசையால் உருகித் தேய்ந்துகொண்டிருந்த சத்துவம் இப்போது இறுதியாக அதைச் சொந்தமாக்கிக் கொண் டிருக்கிறது. இதனால் ஆத்துமத்தில் உண்டாகும் முதல் உணர்வு ஓய்வினுடையவும், அமைதியினுடையவும், இளைப்பாற்றியினுடை யவும், திருப்தியினுடையவும் உணர்வாக இருக்கிறது.

மேலும், தான் ஏங்கித் தேடிக் கண்டடைந்த பொருள் தனக்கு நிரந்தரமாகவும், பாதுகாப்பான முறையிலும் சொந்தமாயிருக்கும் என்ற உறுதி ஆத்துமத்திற்கு இல்லாவிட்டால், இந்த உணர்வு உருக்குலைந்து போகும். அந்த நிரந்தரத்தன்மை பற்றிய அறிவு பாதுகாப்பினுடையவும், சமாதானத்தினுடையவும் உணர்வை உண்டாக்குகிறது.

இறுதியாக, அந்தப் பொருளின் எல்லா குணங்களோடும் இலட்சணங்களோடும் அதைச் சொந்தமாகக் கொண்டிருப்பது ஆத்துமத்திற்கு ஒரு புதிய உயிரைக் கொடுக்கிறது; அது விரிவடைகிறது, அது அதை அக்களிக்கச் செய்கிறது. ஆத்துமம் இனி தன் சொந்த உயிரோடு மட்டும் தனியாக இருப்பதில்லை. அது ஒரு புதிய உயிரைக் கொண்டிருக்கிறது; தேடப்பட்ட பொருளின் அளவின்படி அதன் உயிர் இருமடங்காக்கப்படுகிறது; அது உயிரால் பொங்கி வழிகிறது; அது தனக்குள் அடக்கிக்கொள்ள முடியாத உயிரின் முழுமையைக் கொண்டிருக்கிறது.

ஆத்துமத்தின் இந்த விரிவாக்கமும், உயிரின் இந்த இரு மடங்காதலும், உயிர் இப்படிப் பொங்கி வழிவதும், இந்த அக்களிப்புமே சந்தோஷமாகவும், இன்பமாகவும், ஆனந்தமாகவும், பேரின்பமாகவும் இருக்கிறது.

இனி, நம் விவாதக் கருத்தோடு இந்தக் கருத்துக்களைப் பொருத்திப் பார்க்கும்போது, சகல மகத்துவத்தினுடையவும் பாதாளமும், முழு உத்தமதனத்தின் பெருங்கடலும், சகல வசீகரத் தினுடையவும் முழுமையும், மிகப் பரிபூரணமான ஜீவியமுமான சர்வேசுரனைச் சொந்தமாகக் கொண்டிருப்பது முதலில் பாக்கியவான்களின் ஆத்துமத்தில் ஓய்வு, அமைதி, அமரிக்கை மற்றும் இளைப்பாற்றியின் உணர்வை உண்டாக்குகிறது என்பது தெளிவாகிறது. தனது சுபாவத்தின் சகல ஆற்றல்களோடும், சுபாவத் திற்கு மேற்பட்ட வரப்பிரசாதத்தின் முழு விசையோடும் ஆத்துமம் கடவுளைத் தேடி அலைந்திருக்கிறது, அவர் மீதான ஆசையால் ஓய்ந்து தேய்ந்து போயிருக்கிறது, அவருக்காக ஏங்கித் தவித்திருக் கிறது. அவரிடமிருந்து தொலைவில் அது ஒரு வன்மையான நிலையில், ஏறக்குறைய இயல்பற்றதாகிய ஒரு நிலையில், தன் மையத்திலிருந்து விலகியிருந்தது போல் அது இருந்தது. ‘‘பூமியின் மீது மனிதனின் வாழ்வு போராட்டமாயிருக்கிறது'' என்ற வேதாகம வார்த்தைகளின் மிக ஆழ்ந்த பொருளின்படி, அது ஒரு தொடர்ச்சி யான சண்டையிலும் போராட்டத்திலும் இருந்தது. இப்போது அது கடவுளைச் சொந்தமாகக் கொண்டுள்ளது, அனைத்திலும் அதிக இனிமையானதும், அதிகம் தேடுவதும், அதிகம் இன்பம் தருவதுமான இளைப்பாற்றியும், அமைதியும் அதைச் சுதந்தரித்துக் கொண்டுள்ளன.

இவற்றை நிரந்தரமாகச் சொந்தமாகக் கொண்டிருப்பது பற்றிய அறிவு அதில் சமாதான உணர்வையும், மன அமரிக்கையின் உணர்வையும் உண்டாக்குகிறது. இறுதியாக, கடவுளைச் சுதந்தரித் திருத்தல், அவரோடு அந்நியோந்நியமாக ஐக்கியப்பட்டிருத்தல், ஆத்துமத்தை அளவற்ற ஜீவியத்தைக் கொண்டு, கடவுளின் ஜீவியத்தையே கொண்டு, பிதா, சுதன், பரிசுத்த ஆவியாகிய மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் மூன்று தேவ ஆட்களில் வெளிப்படு வதும், பிரத்தியேகப்படுத்தப்பட்டுள்ளதுமான உண்மையான நித்திய ஜீவியத்தைக் கொண்டு ஆத்துமத்தை நிரப்புகிறது. இந்தக் காரியத்தில் ஆத்துமத்தின் வாழ்வு அதிகரிப்பதோ, இரட்டிப் பாவதோ மட்டுமின்றி, அது அளவற்றதாகிறது, ஏனெனில் அது அளவற்றவரின் வாழ்விலிருந்து பருகுகிறது, ஏனெனில் அது அளவற்ற ஜீவியத்தின் நேச கதகதப்பிலும், ஒளியிலும் இளைப்பாறுகிறது, சந்தோஷ உற்சாகம் கொள்கிறது. இந்த ஐக்கியத்தின் பலனை யார் எடுத்துரைக்க முடியும்? இத்தகையதொரு வாழ்வின் உணர்வை யார் எடுத்துரைக்க முடியும்? இனிமையான முறையிலும், வல்லமையுள்ள முறையிலும் ஆத்துமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள அளவற்ற ஜீவியத்தின் மூழ்கடிக்கிற வேகமுள்ள அலைகளின் கீழ் ஆத்துமம் அனுபவிப்பது என்ன என்று யாரால் கூற முடியும்? இத்தகைய நீர்த் தாரைகளால், ஒரு பேச்சு வகைக்கு, அது எப்படி ஒடுக்கப்பட்ட தாகவும், அமிழ்த்தப்பட்டதாகவும் வளர்ச்சி பெற வேண்டும், உணர வேண்டும்! அது எப்படி ஜீவியத்தால் விரிவடைந்து, பொங்கி வழிய வேண்டும், எத்தகைய பேரின்பத்தின் பரவசங்களுக்கு, எத்தகைய பேரின்ப போதைக்கு அது தன்னையே விட்டுக்கொடுக்க வேண்டும்! பரிசுத்த வேதாகமம் இவ்வார்த்தைகளில் அதை அழகாக எடுத் துரைத்துள்ளது: 

‘அமுக்கவும் குலுக்கவும்பட்டுச் சரிந்துவிழும் நல்ல அளவை உங்கள் மடியில் போடுவார்கள்'' (லூக்.6:38). ஏனெனில் பாக்கியவான்களுக்குத் தரப்படும் கடவுளின் ஜீவியத்தின் அளவு நல்லதாக இருக்கும், அது ஆத்துமத்தின் சாராம்சத்துக்குள்ளேயே அமுக்கப்பட்டு, ஆத்துமத்தின் மீது தன்னையே அதிகமதிகமாகப் பதிக்கும்படி குலுக்கப்பட்டு, ஆத்துமத்திற்கு அப்பாலும் பரவும் படியாக சரிந்து விழுகிறது. இந்த அளவானது, சந்தோஷத்தின் சாராம்சத்தையே உருவாக்குகிற ஓர் அக்களிப்பையும், போதை யையும் உண்டாக்கும். கடவுளின் சொந்த ஜீவியமே பிதாவானவரின் உள்ளரங்கத்திலிருந்து சுதனுக்குள்ளும், இருவருடைய உள்ளரங்கத் திலிருந்து பரிசுத்த ஆவியானவரின் உள்ளரங்கத்தினுள்ளும் புத்துயிரளிக்கும் நீர் நிறைந்த ஆறுகளைப் போலப் பாய்ந்து வந்து, அளவற்ற சந்தோஷத்தைக் கொண்டும், கிளர்ச்சியூட்டும் அக்களிப் பைக் கொண்டும், மிக முழுமையான இன்பங்களைக் கொண்டும் அவர்களை நிரப்பி, பாக்கியவான்களின் உள்ளரங்கத்திற்குள் பாய்ந்து வருகிறது. அவர்கள் அந்தத் தண்ணீரில் அமிழ்த்தப்படுகிறார்கள்; அவர்கள் இந்த நீரோடைகளில் குளிக்கிறார்கள், விளையாடு கிறார்கள், அவற்றின் தண்ணீரைப் பருகி இன்பமான போதை கொள்கிறார்கள். ‘‘இனெப்ரியாபுந்த்தூர் அப் உபெர்த்தாத்தே தோமுஸ் துவே, தொரெந்த்தே வோலுப்தாத்திஸ் தூவாஸ் போத்தாபிஸ் ஏயோஸ்.''