இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மூன்றாவது விதியின் அடிப்படையில் மாமரியின் பேறுபலன்

மூன்றாவது விதி பின்வருமாறு: சுபாவத்திற்கு மேலானது எவ்வளவு கண்டிப்பான முறையில் நோக்கமாயிருக்கிறதோ, அவ்வளவுக்கு பேறுபலன் பெரிதாயிருக்கும். மேலும் ஒரு நோக்கத் தின் அதிகமான அல்லது குறைவான சுபாவத்திற்கு மேற்பட்ட தன்மையைத் தீர்மானிப்பதற்கு, வேறு இரண்டு விதிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்:

முதலாதாக, சுத்தக் கருத்து: இதில் செயலைச் செய்பவன் கடவுளின் ஆராதனையையும் மகிமையையும் தவிர வேறு எதையுமே நோக்கமாகக் கொள்ளாதிருக்கிறான். இரண்டாவது, ஆனால் ஏட்டளவிலான இந்தக் கருத்து, ஒரு பேச்சு வகைக்கு, ஒரு செயலைக் கூடக் குறைய சுபாவத்திற்கு மேலானதாக ஆக்குவதற்கு எந்த விதத்திலும் போதவே போதாது. அதற்குத் தூய்மையான நாட்டம் தேவைப்படுகிறது. ஏனெனில், செயல்படும்போது அந்தச் செயலில் ஒருவனுடைய இருதயம் தன் மனதின் நோக்கத்திலிருந்து கூடக் குறைய தொலைவாயிருக்கிற பல வகையான மனநிலைகளுக்கு இட்டுச் செல்லப்படுகிறது என்றால், கடவுளை மகிமைப்படுத்து வதை மட்டும் தன் செயலின் நோக்கமாக ஒருவன் கொள்ள விரும்புவதில் என்ன பயன் இருக்கும்? எல்லாவற்றையும் கடவுளின் ஆராதனைக்காகவும் மகிமைக்காகவும் மட்டுமே செய்ய மனதளவில் நினைப்பதும், இருதயத்தில் கடவுள் அல்லாததும், அல்லது கடவுளின் ஆராதனையோடு தொடர்பில்லாததுமான எதிலிருந்தும் முற்றிலுமாக விலகியிருப்பதும், கூடக் கூறைய உத்தமமானதாக இருக்கும் பற்றற்ற நிலையின் அளவிற்கேற்ப, ஒருசெயலின் சுபாவத்திற்கு மேலான தன்மையைக் கூடக் குறைய அதிகரிக்கிறது. இதன் காரணமாக, சுத்தக் கருத்து என்னும் புண்ணியத்தை மிக உத்தமமான விதத்தில் பயிற்சி செய்வது என்பது, கடவுளல்லாத எதனிடமிருந்தும் இருதயத்தில் மிக உத்தமமான பற்றின்மையோடு இருப்பதைக் குறிக்கிறது என்று ஞான ஆசிரியர்கள் போதிக் கிறார்கள்.

இனி, இந்தக் கருத்தின் அடிப்படையில் மாமரியின் செயல் களைப் பரிசோதிக்கும்போது, அவை முன்று எளிய காரணங்களால் மிகத் தீவிரமான, மிக உத்தமமான சுபாவத்திற்கு மேற்பட்ட தன்மையுள்ளவையாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளி வாகிறது.

முதல் காரணம்: தன்னுடைய மிகுந்த பக்திக்குரிய அறிவின் காரணமாக, அவர்கள் மிகவும் ஆச்சரியத்துக்குரிய முறையிலும், அற்புதமான விதததிலும், சிருஷ்டிகரின் ஆராதனைக்காகவும், மகிமைக்காகவும் எதையும் செய்ய ஒரு சிருஷ்டிக்குள்ள கடமையைக் கருத்தரித்தார்கள்; மேலும், அந்த சிருஷ்டிகரின் மகத்துவம், பிரமாண்டத்தன்மை மற்றும் அழகு ஆகியவற்றைப் பற்றிய தனது மிகப் பெரிதான அறிவால், அறிவின் அனைததிலும் உயர்ந்த உத்தமதனத்திற்கு உயர்த்தப்பட்ட ஒரு மாசற்ற சிருஷ்டி அறிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அவரை மதித்துப் போற்றும் நிலைக்கு அவர்கள் இட்டுச் செல்லப்பட்டார்கள்.

இரண்டாவது: பரலோகத்தின் மிகுந்த பக்திக்குரிய தேவதூதர் களின் உயர்ந்த அதிகாரப் படிநிலையினரின் மாசற்றதனத்தையும் கூட குப்பையாகத் தோன்றச் செய்கிற மாமரியின் நிகரில்லாத இருதய மாசற்றதனம், சிருஷ்டிகரின் மீது, அவர் மீது மட்டும் தன் முழு மனதையும், முழு இருதயத்தையும், முழு ஆத்துமத்தையும் குவித்து வைக்கச் செய்தது.

மூன்றாவதாக: அவர்களுடைய நிலைகளின் தனிப்பட்ட சலுகையால் அவர்களில் சுபாவமானது என்று அழைக்கப்படக் கூடிய அவர்களுடைய நாட்டங்களும் கூட, எந்த முயற்சியு மின்றியும், அவர்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரண மாகவும் சுபாவத்திற்கு மேற்பட்டவையாக மாற்றப்பட்டன. இதனால், அவர்கள் அந்த சுபாவமான நாட்டங்களுக்குத் தன்னை எந்த அளவுக்குக் கையளித்தார்களோ, அந்த அளவுக்கு அவை சுபாவத்திற்கு மேற்பட்டவையாக ஆயின.

உதாரணமாக, சுபாவமான முறையில் கடவுள் தனக்குத் தந்திருந்த கணவரிடம் மாமரி பற்று வைத்திருந்தார்கள், அவரை நேசித்தார்கள்; ஆனால், கடவுள் எதற்காக அவரைத் தனக்குத் தந்திருந்தாரோ, அந்தக் காரணத்திற்காகவும், அவர் மீது பொழியப் பட்டிருந்த புண்ணியங்களுக்காகவும் அவர்கள் அவரை நேசித் தார்கள். மாமரியின் மாசற்ற கன்னிமையின் வெளியரங்கப் பாது காவலராகவும், கவசமாகவும் இருக்கும்படியாகவும், அவர்களது இளம் வயதில் அவர்களுக்கும், அவர்களுடைய தெய்வீக மகனுக்கும் ஆதரவாகவும் இருக்கும்படியாக அவர் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்தார். இந்தக் காரணத்திற்காக அவர்களுடைய கணவர் பரிசுத்ததனத்தினுடையவும், கன்னிமையுள்ள அன்பினுடையவும், மிகத் தீவிரமான பக்தியினுடையவும் ஒரு புதுமையாக ஆக்கப்பட் டிருந்தார்.இதெல்லாவற்றிற்காகவும் அவர்கள் அவரை நேசித் தார்கள், எவ்வளவு அதிகம் நேசித்தார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்களுடைய நேசம் சுபாவத்திற்கு மேற்பட்டதாக ஆனது. ஏனெனில் அர்ச். சூசையப்பர் அவர்களுடைய கணவராக இருந்ததற்கான முழுக் காரணமும் சுபாவத்திற்கு மேற்பட்டதாக இருந்தது. ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணைவர் மீது கொண்டிருக்க வேண்டிய சுபாவமான பாசம் சூசையப்பர் மீது மாமரிக்கு இருக்கவில்லை என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் நாம் சொல்ல வருவது என்னவென்றால், எந்த நோக்கங்களுக்காக ஒரு மணவாளர் அவர்களுக்குத் தரப்பட்டிருந்தாரோ, அந்த, முற்றிலும் சுபாவத்திற்கு மேலானவையாக இருந்த நோக்கங்களின் தன்மை யோடு மாமரியின் அந்தப் பாசம் கலக்கப்பட்டிருந்தது என்பதுதான்.

அவர்களுடைய திருமகனைப் பொறுத்த வரை, இது அதிக வெளிப்படையாக இருக்கிறது. தன்னுடைய திவ்ய மகனில் தன் முழு இருதயமும் பதிந்திருக்கவும், அவரில் சுற்றப்பட்டிருக்கவும் அவர்கள் அதை அனுமதித்திருக்க முடிந்தது; அவர் மீதான மிகுந்த கனிவுள்ள பாசத்திற்கு வழிவிட அவர்களால் முடிந்தது; தன் திருக்குமாரன் கடவுளாயிருந்தார் என்ற ஒரே எளிய காரணத்திற்காக, அவருக்குத் தான் காண்பிக்கக்கூடிய சுபாவமான பாசத்தைப் பற்றி, தேவ சித்தத்தை மீறி நடக்கும் அச்சமின்றி, தன் முழு சுயத்தினுடையவும் ஒரே நோக்கமாக அவரை ஆக்கிக்கொள்ள அவர்களால் முடிந்தது. இதன் காரணமாக, அவர்களுடைய காரியத்தில், அவர்களுடைய தாய்மையுள்ள இருதயம் அவரை நோக்கி எவவ்வளவு அதிகமாக விளைக்கப்பட்டதோ, அவ்வளவு அதிகமாக அவரை அவர்கள் நேசித்தார்கள், அவ்வளவு அதிகமாக அவர்கள் தன் கடவுளை நேசித் தார்கள். அவரை உண்மையாகவே தன் இருதயத்தின் விக்கிரகமாக ஆக்கிக்கொள்ள அவர்களால் முடிந்தது, ஏனெனில் அந்தத் திருக் குமாரன் அவர்களுடைய கடவுளாகவும், அவர்களைப் படைத்தவர் என்ற முறையில் உண்மையாகவே ஓர் அளவற்ற நேசத்திற்குத் தகுதி யுள்ளவராக இருந்தார்.

 ஆகவே, மாமரியின் செயல்கள் கண்டிப்பானவையாகவும், மாசற்றவையாகவும், முற்றிலும் சுபாவத்திற்கு மேற்பட்டவை யாகவும் இருந்தன, ஆகவே அவர்களுடைய பேறுபலன் அந்த சுபாவத்திற்கு மேலான தீவிரத்திற்குச் சரி விகிதத்தில் இருந்தது, அது எந்த ஒரு படைக்கப்பட்ட புத்தியின் அளவையும் விட பாரதூரமான முறையில் அதிகரித்தது.