மாமரியின் இரண்டாவது எதிர் உத்தமதனம், அவர்களது சுபாவமான சத்துவங்களைப் பொறுத்த வரை எந்தப் பாவமும், அல்லது தவறுதலும் இல்லாதிருந்தது ஆகும். ஏனெனில் ஒரு குறிப் பிட்ட தனி மனிதனில் தாம் நிறைவேற்ற எண்ணுகிற வரப்பிரசாதச் செயலுக்காக கடவுள் அந்த மனிதனின் சரீரத்தையும், ஆத்துமத் தையும், அல்லது அவனுடைய முழு சுபாவத்தையும், சத்துவங் களையும் சுவீகரித்துக் கொள்கிறார். இந்த விதி முற்றிலும் மாறாத ஒன்று அல்ல, ஏனெனில் தங்கள் சரீரத்திலும், ஆத்துமத்திலும் சுபாவமான குறைபாடுகளை ஏராளமாகக் கொண்டிருந்த அர்ச்சிய சிஷ்டவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் முதன்மையான அர்ச்சியசிஷ்டவர்களில் பெரும்பாலானோருக்கு மட்டும் இந்த விதியை நாம் பொருத்திப் பார்ப்போம் என்றால், அவர்கள் இந்தக் குறைபாடுகள் இன்றி இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய வரலாற்றின்படி,வரப்பிரசாதம் அவர்களில் செய்ய விரும்பிய அற்புதங்களுக்கு ஏற்ற விதத்தில் சுபாவமான சத்துவங்கள் அவர் களுக்குத் தரப்பட்டதை நாம் காண்கிறோம். இவ்வாறு, புறஜாதி யாரின் அப்போஸ்தலர் என்ற பதவிக்கு அர்ச். சின்னப்பர் பொருத்த மானவராக இருக்கும்படி அவருக்குத் தேவையாயிருந்த சுபாவமான பண்புகள் அனைத்தும் அவருக்குத் தரப்பட்டிருந்ததை நாம் காண்கிறோம். இவ்வாறே துறவற சபைகளின் ஸ்தாபகர்கள் அனைவர் மீதும் மாபெரும் சுபாவமான திறமைகள் இயற்கை யாகவே பொழியப்பட்டன. அவை வரப்பிரசாதத்தால் அர்ச்சிக்கப் பட்டு, அவர்களைத் தங்கள் தலைமுறையில் அதிசயமாக ஆக்கின. இனி, ஒரு மாசற்ற சிருஷ்டியில் இருக்கக் கூடிய அர்ச்சியசிஷ்டதனம் முழுவதினுடையவும் சிகரமாக இருக்க வேண்டியிருந்தது. ஆகவே, அவர்களது மனித சுபாவம், அதன் சகல சத்துவங்களோடும் அவர் களில் எந்தக் குறைபாடோ, தவறுதலோ இல்லாமல்தான் இருந் திருக்க வேண்டும்.
மேலும், கடவுளின் முதல் வேலைகள் எப்போதுமே எந்தப் பாவமும், குறைபாடுமின்றி உத்தமமானவையாக இருக்கின்றன என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் போதிக்கிறார். இதற்குக் காரணம், உத்தமமானது எப்போதும் குறைபாடுள்ளதற்கு முன்பாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, மாறாக, அவை மற்ற காரியங்களின் அடிப் படை விதிகளாக அல்லது காரணமாக இருக்க வேண்டும் என்பது மாகும்.
இனி, மாமரி முதல் சிருஷ்டியாகவும், மற்ற அனைத்தினுடை யவும் கருவியும் மாதிரியுமான காரணமாகவும் இருந்தார்கள். மாமரி உள்ளபடி பின்னர்தான் சிருஷ்டிக்கப்பட்டார்கள் என்றாலும், அவர்கள் நித்தியத்திலிருந்தே கடவுளின் மனதில் முதலாவதாக இருந்தார்கள் என்பதால், அவர்கள் முதல் சிருஷ்டியாக இருந்தார்கள். கடவுளின் வெளிச் செயல்களின் மத்தியஸ்தி என்ற முறையில் மாமரியின் வழியாகத்தான் உலகம் உண்டாக்கப்பட்டது; இதனா லேயே அர்ச். பெர்னார்ட்: ‘‘ப்ரோப்தெர் இப்சாம் தோத்துஸ் முந்துஸ் ஃபாக்துஸ் எஸ்த்'' என்கிறார். கடவுளின் மனதில் மாதிரியாக இருந்த இந்த அதியற்புத சிருஷ்டியின் மாதிரிப்படியே உலகம் வடிவமைக்கப்பட்டது. ஏனெனில் சிருஷ்டிப்பின் ஒழுங்கு இப்படி இருந்தது: கடவுளின் சாராம்சம் கிறீஸ்துவின் மாதிரியாகவும், கிறீஸ்து தமது மகிமையுள்ள திருத்தாயாரின் மாதிரியாகவும் அச்சாகவும், மாமரி எஞ்சிய சிருஷ்டிப்பு முழுவதினுடையவும் மாதிரியாகவும் இருக்கிறார்கள்.
காரியம் இப்படியிருக்க, மாமரியின் சரீரத்தை அல்லது ஆத்துமத்தைப் பொறுத்த வரை, அவர்களுடைய சுபாவத்தில் அல்லது சத்துவங்களில் எந்த வகையான பாவமோ, குறைபாடோ இருந்திருக்க முடியும் என்று நாம் எப்படி நினைக்க முடியும்? மாமரியின் சுபாவமான சத்துவங்களைப் பொறுத்த வரை இதுவே உண்மையாக இருக்கிறது. ஆனால் நாம் குறிப்பிட்டுள்ள மூன்றாவது கொள்கையின்படி, மாமரியிடம் நல்லொழுக்கம் சார்ந்த சாவான அல்லது அற்பப் பாவங்களும், மிகத் தொலைவான, மிக அற்பமான, உணரக் கூட இயலாத குறைபாடுகளும் கூட முற்றிலுமாக இல்லா திருந்தன. கடவுளுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடியதும், ஏறக் குறைய அளவற்றதுமான ஒரு வரப்பிரசாதமும், ஒரு பரிசுத்ததனமும், ஓர் அர்ச்சியசிஷ்டதனமும் மாமரியின் மகத்துவத்திற்குத் தேவையா யிருந்தது என்ற உண்மை இதற்கு சாட்சியாக இருக்கிறது. இனி, இது எதைக் குறித்துக் காட்டுகிறது?
நாம் பிற்பாடு குறித்துக் காட்ட இருக்கிற மற்ற காரியங்கள் நீங்கலாக, இது கடவுளோடு மாமரி கொண்டுள்ள அனைத்திலும் அதிக கண்டிப்பானதும், அதிக அந்நியோந்நியமானதும், அதிக ஆர்வமுள்ளதும், அதிக நெருக்கமானதும், அனைத்தையும் விட அதிகமானதுமான ஐக்கியத்தைக் குறித்துக் காட்டுகிறது. இதற்குப் பிறகு ஒரு சிருஷ்டி தனது சொந்த ஆளுமையை இழந்து போகிறது. அது தனக்குச் சொந்தமாக இருப்பது நின்று போகிறது, கிறீஸ்துவின் மனித சுபாவத்திற்கு நிகழ்ந்தது போலவே, அது கடவுளாக (தேவ சுபாவமுள்ளதாக) ஆகிறது.
இனி, கடவுளோடுள்ள இந்த உச்சபட்சமான ஐக்கியம் மாமரியில் எந்த ஒரு நல்லொழுக்க ரீதியான குறைபாடும் இல்லா திருப்பதை எவ்வாறு குறித்துக் காட்டியது என்று காட்டும்படி, கடவுள் உண்மையாகவும், தார்மீக முறையில் ஏன் ஒருபோதும் தவறவே முடியாது என்ற காரணத்தை ஊன்றிக் கவனிக்கும்படி வாசகர்களை நாம் கேட்டுக்கொள்கிறோம். நிதர்சன ஒழுங்கிலோ, அல்லது தார்மீக ஒழுங்கிலோ மனிதர்கள் தங்கள் செயல்களில் தவறுவதன் காரணம் என்னவெனில், அவர்கள் தங்கள் செயலுக்கான விதியை உருவாக்கும் கொள்கையிலிருந்து விலகி நிற்கிறார்கள் என்பதே. தங்கள் சுபாவத்திலும், செயலிலும், தங்கள் செயலின் விதியோடு அவர்கள் ஒன்றித்திருந்தார்கள் என்றால், அவர்களது சுபாவம் அல்லது செயல் விதி தவறிப் போனாலன்றி, அல்லது மாற்றப் பட்டாலன்றி, அவர்கள் ஒருபோதும் தவறவே முடியாது. ஆனால் அவர்களது சுபாவமோ, செயலின் விதியோ தவறிப் போக எந்த வாய்ப்புமில்லை, ஏனெனில் இலெளகீகச் செயல்பாடு பற்றி நாம் பேசுவோம் என்றால் செயல்களின் விதிகள், கணிதக் கோட்பாடு களைப் போன்றவையாக இருக்கின்றன. அவை ஒருபோதும் மாற முடியாதவை. (உதாரணமாக 2 + 2 எப்போதுமே நான்குதான். அது ஒருபோதும் மாற இயலாது.) நல்லொழுக்க விதிகள், சுபாவ ஒழுங்கின் விதிகளாகவும் இருக்கின்றன. அவை ஒருபோதும் மாற இயலாதவை, ஏனெனில் சுபாவ ஒழுங்கு ஒருபோதும் மாறுவதில்லை. ஒரு கட்டடக் கலைஞன் சில சமயங்களில் ஒரு கட்டடத்தைக் கட்டு வதில், அல்லது அதைத் திட்டமிடுவதில் தவறிப் போகலாம். ஏனெனில் அவன் சுபாவத்திலும், செயல்பாட்டிலும் தனது கலையின் விதிகளுக்கு ஒத்திருக்காமல் அவற்றிலிருந்து வேறுபட்டு நிற்கிறான். அவன் அவற்றோடு ஒத்திருந்திருப்பான் என்றால், அவற்றோடு ஒரே பொருளாக இருந்திருப்பான் என்றால், அவன் ஒருபோதும் தவற முடியாது என்பது தெளிவு. ஏனெனில் அவை கணித வாய்ப்பாடு களைப் போல உறுதியானவையாகவும், தவறாதவையாகவும் இருக்கின்றன. அவன் தவறுவது ஏனெனில் அந்த விதிகளிலிருந்து வேறுபட்டும் பிரிந்தும் நிற்கிற அவன், நீதியான முறையிலும், சரியான விதத்திலும் அந்த விதிகளை அனுசரிக்காமல் இருக்கிறான். ஒருவேளை அவன் அவற்றோடு ஒத்துப் போயிருப்பான் என்றால், தவறு செய்வதற்கோ, தவறான அனுசரிப்புக்கோ வாய்ப்பே இல்லாமல் இருந்திருக்கும். கடவுளின் காரியத்தில் இதுவே உண்மை. நல்லொழுக்கத்தின் உன்னதமான அடிப்படை விதி அவரிடமிருந்து வேறுபட்டிருப்பதாக இல்லை, மாறாக, அது அவருடைய சாராம்சத் தோடு ஒத்துப் போவதாக இருககிறது; அவரது செயல் அவரது சாராம்சத்தோடும், அவரது உன்னதமான ஒழுக்க விதியோடும் ஒத்துப் போவதாக இருப்பது போலவே, அது அவருடைய சொந்த சாராம்சமாகவே இருக்கிறது. இவ்வாறு அவரில் சாராம்சம், நல்லொழுக்கத்தின் உன்னதக் கொள்கை, செயல்பாடு ஆகிய மூன்றுமே ஒன்றாகவும் ஒரே காரியமாகவும் இருக்கின்றன. ஆகவே, அவர் முழுமையாகவும், தமது சாராம்சத்திலும் ஒருபோதும் தவற முடியாதவராக இருக்கிறார்.
இந்தக் கோட்பாட்டிலிருந்து, ஒருவன் எவ்வளவு அதிகமாகக் கடவுளோடு இணைக்கப்பட்டிருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் உன்னத நல்லொழுக்க விதியோடு இணைக்கப்பட்டிருக் கிறான் என்பது விளங்குகிறது. அவன் குறைவான அளவில் அவரோடு இணைந்திருந்தான் என்றால், எளிதில் தவறக் கூடியவ னாக அவன் இருப்பான்; தன் சொந்த ஆளுமையில் அன்றி, கடவுளின் தெய்வீக ஆளுமையில் அடங்கியிருக்கிற ஒரு சுபாவத்தை நாம் கற்பனை செய்வோம் என்றால், சுபாவ ஒழுங்கின்படி, அத்தகைய ஒரு சுபாவம் தவறிப்போவதற்கோ, பாவம் செய் வதற்கோ வாய்ப்பே இருக்காது. கிறீஸ்துவின் மனித சுபாவத்தைப் பொறுத்த வரை இதுவே உண்மையாக இருந்தது.
மாமரியில், வார்த்தையானவரோடு மனித சுபாவத்தின் தனிப் பட்ட ஐக்கியத்திற்குப் பிறகு, வரப்பிரசாதத்தால் அவர்கள் கடவுளோடு கொண்டிருந்த ஐக்கியம் முழுமையானதாக, உச்சபட்ச அளவுள்ளதாக இருந்தது. ஆகவே உன்னத நல்லொழுக்க விதி யோடும், நீதியோடும், அர்ச்சியசிஷ்டதனத்தோடும் அவர்களது ஐக்கியமும் உச்சபட்ச அளவில் இருந்தது. இதன் காரணமாக, தார்மீக முறையில் பேசும்போது, அவர்களில் எந்த விதமான பாவமும், மிக மிக அற்பமான, உணரக்கூடிய முடியாத குறைபாடும் கூட அவர்களில் அனுமதிக்கப்படுவதற்கு சாத்தியமே இல்லாதிருந்தது.
வேறொரு விதத்தில் நாம் விவாதிப்போம் என்றால், இது அதிகத் தெளிவாகத் தோன்றும். ஒரு மனிதன் இரு விதமான காரணத்தினால் பாவத்தில் விழக்கூடும்: ஒன்றில் அவன் வேண்டுமென்றே நல்லொழுக்க விதியை மீறி நடக்க விரும்புகிறான், அல்லது தன்னிடம் வலிமையும் ஆற்றலும் இல்லாததால் பாவத்தில் விழுகிறான். கடவுளில் சுபாவ ஒழுங்கின்படி இதற்கு சாத்தியமேயில்லை. ஏனெனில் அவரது சாராம்சமும், உன்னத நல்லொழுக்க விதியும், தமது சாராம்சத்தையும், இந்த விதியையும் பற்றிய அவரது அறிவும், அவரது செயல்பாடும் ஒன்றாயிருக்கின்றன. ஆகவே, ஒருவன் எவ்வளவு அதிகமாகக் கடவுளுடன் இணைந்திருக்கிறானோ அவ்வளவு அதிகமாக அவன் அவரது அறிவில் பங்குபெறுகிறான், அவ்வளவு அதிகமாக அவரது வல்லமையில் பங்குபெறுகிறான். அதிகபட்ச தார்மீக ஐக்கியம், அவரது அறிவிலும், வல்லமையிலும் அதிகபட்சமாகப் பங்குபெறுதலை மறைமுகமாகக் காட்டுகிறது. ஆனால் அவருடைய அறிவும், அவரது வல்லமையும் உன்னதமான நல்லொழுக்க விதியோடு ஒன்றாயிருக்கின்றன. எனவே, கடவுளோடு கொள்ளும் அதிகபட்ச ஐக்கியம் உன்னத நல்லொழுக்க விதியோடு கொள்ளும் அதிகபட்ச ஐக்கியத்தைக் குறித்துக் காட்டுகிறது, இந்த அதிகபட்ச ஐக்கியமானது ஒரு தார்மீகக் குறைபாடு இருக்க வாய்ப்பேயில்லாமல் செய்கிறது.
ஆயினும் இந்தக் கொடை மாமரியில் நிரந்தரமானதாக இருக்க வேண்டியிருந்தது என்பது, அது அவர்களது வரப்பிரசாதத்தைச் சார்ந் திருக்கிறது என்ற உண்மையிலிருந்து தெளிவாகிறது. மேலே விளக்கிக் கூறப்பட்ட அர்த்தத்தில் மாமரி தொடர்ந்து கடவுளின் பேழையாக இருக்கும் வரையிலும், எந்த விதமான குறைபாட்டிலும் விழுவது அவர்களுக்கு இயலாத காரியமாகவே இருக்கும்.