இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுள் அனைத்திற்கும் ஆதிகாரணராயிருக்கிறார் என்ற முறையில், அவருக்கேயுரிய ஆராதனை, மகிமையை அவருக்குச் செலுத்த உலகம் கடமைப்பட்டிருக்கிறது என்பதும், தெய்வீகத்தின் அளவற்ற மகத்துவத்திற்கு சிருஷ்டிகளால் செலுத்தப்படும் அந்த ஆராதனையும் மகிமையும் மாமரியின் வழியாகத் தகுதியுள்ளதாக்கப்பட்டது என்பதும்

கடவுளின் வெளியரங்கச் செயல்பாட்டிற்கான நோக்கம், அவருடைய அளவற்ற மகா மேன்மையையும், தேவ இலட்சணங் களையும் வெளிப்படுத்துவதில் அடங்கியுள்ளது. இந்த நோக்கம் சிருஷ்டிப்பால் இரு விதங்களில் நிறைவேறியது. முதலாவதாக, சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்களின் சுபாவம் அளவற்றவரின் வெளிப்பாடும், பாவனையுமாக இருக்கிறது. இந்தச் செயல்பாடு புத்தியுள்ளவையும், புத்தியற்றவையுமான இரு வகை சிருஷ்டி களாலும் தாறுமாறான ஒரு முறையில் நிறைவேற்றப்பட்டது. ஆயினும் புத்தியற்ற சிருஷ்டிகள், அறியாத விதத்தில் தங்கள் சுபாவத்திலும், குணங்களிலும் கடவுளின் உன்னதத் தன்மையை வெளிப்படுத்தக் காரணமாக இருந்த இதே அலுவல், புத்தியுள்ள சிருஷ்டிகளில் ஓர் அவசியத் தேவையான, ஒழுக்கம் சார்ந்த செயலாக இருக்கிறது, அது அனைத்திற்கும் ஆதிகாரணர் என்ற முறையில் கடவுளுக்கேயுரிய ஆராதனையை அவருக்குச் செலுத்தும் கடமையில் தனது தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஏனெனில் புத்தியுள்ள சிருஷ்டிகள் அவசியமான விதத்தில் சிருஷ்டிகரோடு தங்களைச் சேர்த்துக் கட்டுகிற உறவைக் கண்டுபிடிக்கவும், அதை ஒப்புக்கொள்ளும் கடமையை உணரவும் தவற வாய்ப்பில்லை. ஆகவே, கடவுளுக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துதல் என்பது புத்தியுள்ள சிருஷ்டிகளுக்கு ஒரு இன்றியமையாத, முழுமையான கடமையாக இருக்கிறது. அது எந்த அளவுக்கு அவசியமானதும், இன்றியமையாததுமாக இருக்கிறது என்றால், இதை மறுத்து வாதிடுவது ஒரு முரண்பாடாக இருக்கும், ஏனெனில் ஒரு சிருஷ்டி என்று சொல்வது, கடவுளின் இலட்சணங்களை வெளிப்படுத்துவதற்காகவே படைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது; புத்தியுள்ள சிருஷ்டி என்று சொல்வது, இந்த உறவைப் பகுத்துணர வல்லதாக அது இருக்கிறது என்பதையும், சிருஷ்டிகரால் சித்தங்கொள்ளப் பட்டதாகத் தான் உணரும் திட்டத்தை நிறைவேற்ற அது வல்லதாக இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துவதாகும். ஆகவே, கடவுளுக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்தும் கடமையில் இருந்து புத்தியுள்ள சிருஷ்டியை மன்னிப்பது அல்லது அதற்கு விலக்கு அளிப்பது என்பது, ஒரே அளவில் அவை புத்தியுள்ள சிருஷ்டிகள் என்பதை உறுதிப்படுத்துவதும், மறுதலிப்பதுமாக இருக்கிறது.

ஆனால் கடவுளுக்குத் தகுதியுள்ள இந்த மகிமையைத் தகுதியுள்ள முறையில் அவருக்குச் செலுத்த இவற்றால் முடியுமா? முடியவே முடியாது, இரண்டு விதங்களிலுமே இதைச் செய்ய இவற்றால் முடியாது. முதல் விதத்தில் அது முடியாது, ஏனெனில் பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள சகல சிருஷ்டிகளிலும் தனது சுபாவத் தாலும், குணங்களாலும் போதுமான அளவுக்கு சிருஷ்டிகரின் அளவற்ற மகத்துவத்தையும், இலட்சணங்களையும் வெளிப்படுத்தக் கூடிய எந்த ஜீவராசியும் இல்லை. இரண்டாவது விதத்திலும் இது முடியாது, ஏனெனில் சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஆளுமையும், அல்லது அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் கூட, சுதந்திரமான முறையிலும், தாங்களாகவே முன்வந்தும், கடவு ளுக்குத் தகுதியுள்ள ஒரு மகிமையை அவருக்குச் செலுத்த முடியாது, ஏனெனில் இப்படி கடவுளுக்குத் தகுதியுள்ள மகிமையைச் செலுத்துவது என்பது இரண்டு காரியங்களை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிறது: முதலாவது, கடவுளின் அளவற்ற மகத்துவத்திற்கு முற்றிலும் போதுமான அளவில் தன் மனதில் ஏட்டளவில் கடவுளை மதித்துப் போற்றுவது; இரண்டாவது, சிருஷ்டிகரின் அளவற்ற மதிப்புக்கு முற்றிலும் போதுமான ஒரு நடைமுறை சார்ந்த மகிமையை அவருக்குச் செலுத்துவது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடவுளைப் பற்றிய ஓர் அளவற்ற அறிவையும், அவர் மீதான ஓர் அளவற்ற நேசத்தையும் எந்த சிருஷ்டியும் கொண்டிருக்க முடியாது. இந்த இரு நிபந்தனைகளும் சிருஷ்டிப்பில் குறைவுபடுவதால், சிருஷ்டிகள் கடவுளுக்குச் செலுத்தும் மகிமை கடவுளுக்குத் தகுதியானதாகவும், அவருடைய அளவற்ற மகத்துவத்திற்குப் போதுமானதாகவும் இருப்பதில்லை. இனி, சிருஷ்டிக்கப்பட்ட ஆளுமைகள் கடவுளை அளவற்ற விதமாக அறியவும், அளவற்ற விதமாக நேசிக்கவும் இயலாதவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் கடவுளுக்கச் செலுத்தும் மகிமை, அந்த உத்தமமான தேவ இலட்சணங்களுக்குத் தகுதியுள்ளவையாக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது.

கடவுள் தமக்குத் தகுதியான விதத்தில் ஆராதிக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதுமான ஓர் இடத்தை நாம் அறிந்திருக்கிறோம். அது அவருடைய அளவற்ற அந்தரங்கமேயாகும்; கடவுளுக்கு முற்றிலும் தகுதியுள்ள ஓர் ஆராதனையைக் கொண்டு அவரை அங்கீகரிக்கக் கூடிய ஒரே ஒரு ஜீவியரை நாம் அறிந்திருக்கிறோம். அந்த ஜீவியர் அவரேதான். சுருங்கச் சொன்னால், என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவராயிருக்கிற தமத்திரித்துவப் பரம இரகசியத் தில்தான் நாம் நிஜமான, உண்மையான, கடவுளுக்குரிய மகிமை யைக் காண்கிறோம், அது நித்தியத்திற்கும் கடவுள் தமக்கெனக் கொண்டிருக்கிற சுய மகிமையாகும். கடவுள் உயிருள்ள தனி ஜீவியராக இருக்கிறார், அவர் பிறவாத, பெற்றெடுக்கப்படாத, புத்தி யுள்ள செயல்பாடாக, தெய்வீகத்தின் முதல் முழுமையாக இருக் கிறார். ஒரு நித்திய, நிரந்தரமான பார்வையால், ஒரு பேச்சு வகைக்கு, அவர் தம் சாராம்சத்தின் மிக உள்ளரங்கமான ஆழங்களை ஆராய்ந் தறிகிறார். இவ்வாறு, அவர் தம்மையே புரிந்துகொள்கிறார்--அதாவது, தம்மையே அவர் உள்ளரங்கமாகக் கருக்கொள்கிறார், வெளியிடுகிறார். 

அவருடைய இந்த அளவற்ற சுய வெளிப்பாடும், புரிந்து கொள்ளப்படக் கூடிய அவரைப் பற்றிய வெளிப்பாடும் தெய் வீகத்தின் ஒரு இரண்டாம் முழுமையாக இருக்கிறது. இந்த இரண்டாவது முழுமையாக இருப்பவர் வார்த்தையானவர் ஆவார். இவர் தெய்வீகத்தைப் புரிந்துகொள்ளும் முறையில் சித்தரிக்கிறார், வெளிப்படுத்துகிறார். தெய்வீக முழுமைகளின் இந்த இரட்டைத் தன்மை, இந்த இருவருடைய செயல்பாட்டின் விளைவான மூன்றாம் ஆளால் இணக்கமுள்ளதாக ஆக்கப்படுகிறது. ஏனெனில் தம்மையே வார்த்தையாக வெளியிடுகிற, புத்தியுள்ள முதன்மையான தேவ ஆளுக்கும், அவரால் புத்தி சார்ந்த உரையாடலாக வெளியிடப் படுகிற வார்த்தையானவருக்குமிடையே, அவசியமான முறையில் ஓர் அளவற்ற ஈர்ப்பும், பேரின்பமுள்ள, பரிவிரக்கமும், வாக்குக் கெட்டாத தயவும் இருக்கின்றன. பிதாவானவர் ஒரு பிரகாசமுள்ள அளவற்ற ஒளியின் தெளிந்த நீரோடையில், தம்முடைய தேவ இலட்சணங்களின் உரைக்கவியலாத அழகையும், இனிமையையும் காண்கிறார், அவற்றை அவர் தமக்குத் தாமே உச்சரிக்கிறார், அவர் தம்முடைய பொருண்மை சார்ந்த பிரதிபிம்பம் என்ற முறையில் அளவற்ற பிரியத்தோடு நேசிக்கிறவராகிய தம் திருச்சுதனாகிய வார்த்தையானவரைக் காண்கிறார். திருச்சுதன் அனைத்தையும் கடந்த அளவற்ற அழகாக தம்மைக் கண்டாலும், தம்மைப் பிதாவின் பிரதிபலிப்பாகவே காண்கிறார். கண்டு, அதே அளவற்ற நேசத்தை அவர் பிதாவுக்குத் திருப்பிச் செலுத்துகிறார். இந்தப் பொதுவான, சுய திருப்தியும், நேசமுமே இஸ்பிரீத்துசாந்துவாகிய மூன்றாம் ஆளாக இருக்கிறார். தமத்திரித்துவத்தைப் பற்றிய இந்த சிந்தனையில் நாம் நிஜமான, உண்மையான, கடவுளுக்குத் தகுதியான தெய்வீக மகிமையைக் காண்கிறோம். ஏனெனில் வார்த்தையானவர் அளவற்ற, புத்திசார்ந்த வெளிப்பாடாகவும், அங்கீகாரமாகவும் இருக்கிறார், இஸ்பிரீத்துசாந்துவானவர் பிதா வினுடையவும், சுதனுடையவும் நடைமுறை சார்ந்த அளவற்ற மதிப்பாக இருக்கிறார். சுதன் புத்தி சார்ந்த விதமாகக் கருக் கொள்ளப்படுகிற முழுமையான தெய்வீகமாகவும், இஸ்பிரீத்து சாந்துவானவர் அளவற்ற விதமாக நேசிக்கப்படுகிற முழுமையான தெய்வீகமாகவும் இருக்கிறார்கள். சுதன், ஒரு பேச்சு வகைக்கு, மனதிலும், இஸ்பிரீத்துசாந்துவானவர் இருதயத்திலும், இருவரும், கடவுளுக்கு முற்றிலும் தகுதியுள்ள ஓர் அளவற்ற முறையிலும் கடவுளை அங்கீகரிக்கின்றனர். ஏனெனில் வார்த்தையானவரை விட கடவுளின் சாராம்சத்தையும், தெய்வீக இலட்சணங்களையும் மேலான விதத்தில் மதித்துப் போற்றுகிற புத்திசார்ந்த வெளிப் பாட்டைக் கற்பனையிலும் காண முடியாது. அவ்வாறே பிதா வினுடையவும், சுதனுடையவும் அளவற்ற சுய நேசமாகிய இஸ்பிரீத்துசாந்துவானவரை விட மேலான நடைமுறை சார்ந்த தேவ வெளிப்பாட்டைக் கற்பனை செய்யவும் யாராலும் இயலாது.

ஆகவே, கடவுளின் அந்தரங்கத்தில்தான் அவருக்குத் தகுதியுள்ள ஒரே ஒரு ஆராதனை மகிமை இருக்கிறது.

மனிதர்கள் தங்கள் சுபாவ அந்தஸ்திலேயே விட்டுவிடப் பட்டிருந்தால், கடவுளின் உதவியைப் பெறாத தங்கள் சத்துவங்கள் தாங்கள் செலுத்த உதவியிருக்கும் ஆராதனை வணக்கத்தை மட்டுமே கடவுளுக்குச் செலுத்தியிருப்பார்கள், அதாவது, தங்களைச் சுற்றியிருந்து, தங்கள் சிருஷ்டிகரைப் பிரகடனம் செய்யும் பிரபஞ்சத்திலிருந்து தாங்கள் பெற்றிருக்கக் கூடிய கடவுளைப் பற்றிய அறிவையும், அதனோடு தொடர்புள்ள ஒரு நேசத்தையும் மட்டுமே அவர்கள் கொண்டிருந்திருக்க முடியும்.

ஆனால் தேவ உதவியற்ற தங்கள் சுபாவமான வல்லமை களால் தம்முடைய சிருஷ்டிகள் தமக்குத் தரக்கூடிய ஆராதனை மகிமையைக் கொண்டு திருப்தியடைந்துகொள்ள கடவுள் ஒருபோதும் கருதவில்லை. தமக்கு வெளியே செயல்பட அவர் தீர்மானித்தபோது, அவர் தம் மனதில் கொண்டிருந்த முதல் நோக்கம், மனிதாவதாரம் அல்லது தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளோடு மனித சுபாவம் ஒன்றிக்கப்படுவது ஆகும். விசேஷமாக, தமது அளவற்ற ஜீவியத்தில் தமக்கே தாம் தரும் அதே சங்கை வணக்கத்தைத் தம் சிருஷ்டிகளும் தமக்குத் தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. ஏனெனில், மனிதாவதாரத்தால் தேவனும் மனிதனுமாகிய கிறீஸ்து நாதர் என்னும் தனி ஜீவியர், ஒரு தெய்வீக ஆளுமையின் ஐக்கியத்தில், ஒரு மனிதனாகவும் கூட, கடவுளுக்குத் தகுதியுள்ள ஆராதனையையும் மகிமையையும் செலுத்த வல்லவராக இருப்பார்; ஏனெனில் அவருடைய மனித சுபாவத்தின் செயல்கள், அந்த சுபாவம் இணைக்கப்பட்டிருக்கிற அவருடைய தெய்வீக ஆளுமையின் அளவற்ற மதிப்பில் பங்குபெறுகின்றன; அந்த ஆள் அளவற்றவராகவும், தெய்வீகமானவராகவும் இருப்பதால், அவருடைய மனித சுபாவத்தின் செயல்கள் ஓர் அளவற்றதும், தெய்வீகமானதுமாகிய ஒரு மதிப்பைக் கொண்டுள்ளன. கிறீஸ்து நாதரின் மனித சுபாவம் எழுத்தளவிலும், நடைமுறையிலும் அளவற்ற விதமாகக் கடவுளை மகிமைப்படுத்துகிறது என்று சொல்லப்பட முடியும், ஏனெனில், அதன் செயல்கள், அடிப் படையில், அளவுக்கு உட்பட்ட ஒரு சுபாவத்திலிருந்து வருவதாக இருந்தாலும், அவை அளவற்றவரான ஒரு தேவ ஆளின் ஆளுமையிலிருந்து தங்கள் மதிப்பைப் பெற்றுக்கொள்கின்றன. ஒரே வாக்கியத்தில் கூற வேண்டுமானால், தேவ-மனிதராகிய கிறீஸ்து நாதர், ஓர் அளவற்ற அறிவைக் கொண்டு, கடவுளை அங்கீகரிப் பதோடு, ஓர் அளவற்ற நேசத்தைக் கொண்டு கடவுளை நேசிக்கவும் செய்கிறார். இந்த அவருடைய அளவற்ற அறிவும், நேசமும், நித்தியத்திலிருந்தே தம்முடைய அந்தரங்கத்தில் திருச்சுதனாகிய தேவ ஆளாகிய அவர் கொண்டிருந்த அதே அளவற்ற அறிவும், நேசமுமாகவே இருக்கின்றன. சிருஷ்டிக்கப்பட்ட ஆட்கள், கிறீஸ்துநாதரின் ஐக்கியத்தில், இனிமேல், கிறீஸ்து நாதரின் ஐக்கியத்தில் கடவுளுக்கு முழுவதுமாகவும், போதுமான அளவிலும் தகுதியாயிருக்கிற ஓர் ஆராதனை வணக்கத்தை அவருக்குச் செலுத்த முடியும், ஏனெனில் கிறீஸ்துநாதரின் அறிவைக் கொண்டு அவர்கள் கடவுளை மதித்துப் போற்ற முடியும். கிறீஸ்து நாதரின் திரு இருதயத்தில் பற்றியெரிகிற அளவற்ற நேசத்தைக் கொண்டு அவர்கள் கடவுளை நேசிக்கவும் முடியும். அவரிலும் அவர் வழியாகவும், அவராலுமே இவ்வாறு செய்ய அவர்கள் உதவி பெறுகிறார்கள்.

இதுவே கிறீஸ்தவ ஆராதனையும் மகிமையுமாக, கிறீஸ்து நாதர் (தம்முடைய மனித சுபாவத்தில்) கடவுளுக்குச் செலுத்திய ஆராதனையும் மகிமையுமாக இருக்கிறது; கிறீஸ்தவ வேதம் என்பது தம்முடைய திருச்சபையில் நிரந்தரமானவராக்கப்பட்டுள்ள கிறீஸ்துநாதராகவே இருக்கிறது, அது பல நூற்றாண்டுகளாகவும், தலைமுறைகளாகவும் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, ஆட்களை உருவாக்கி, அவர்களை அவரோடு இணைத்து, ஒரு மிகப் பெரிய, பக்திக்குரிய, பிரமாண்டமான திருக்கூட்டமாக உருவாக அவர்களுக்கு உதவி வருகிறது, இந்தத் திருக்கூட்டத்திற்கு அவரே தலைவராகவும், அவர்களுடைய ஒலிபெருக்கியாகவும் இருந்து, கடவுளுக்குத் தகுதியுள்ள ஆராதனை மகிமையை அவருக்குச் செலுத்தி வருகிறார்.

இந்த விளக்கத்திலிருந்து கத்தோலிக்க ஆராதனையின் தனித்தன்மைக்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அதன் எல்லைகளுக்குள் நுழைய மறுப்பது, இரட்சணியத்திட மிருந்து ஒருவன் தன்னையே விலக்கிக் கொள்வதாக இருக் கிறது, ஏனெனில் ஒரு முழுமையான பொருளில் கடவுளுக்குத் தகுதியுள்ளதாக இருக்கிற ஒரே ஒரு பரிசுத்த வேதத்தை அரவணைத்துக் கொள்ள மறுப்பதாக அது இருக்கிறது. புத்தியுள்ள தம்முடைய சிருஷ்டி, திருச்சபையில் நிரந்தரமானவராக இருக் கிறவரும், மனிதனாக அவதரித்தவருமாகிய தம்முடைய திருச்சுதனின் மனதையும் இருதயத்தையும் கொண்டு தம்மை வழிபட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். தம்முடைய திருச்சபையில் தங்கி வசிக்கிற அவதரித்த வார்த்தையானவரோடு இணைக்கப்பட மனிதர்கள் மறுத்து, கடவுளால் உதவப்படாத தங்கள் சொந்த அறிவையும், தங்கள் பரிதாபத்திற்குரிய இருத யத்தின் அளவுக்கு உட்பட்ட மதிப்பையும் கொண்டு தாங்கள் சேகரிக்கக் கூடிய பரிதாபமான அறிவை மட்டுமே கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள், அல்லது ஒப்புக்கொடுப்பார்கள். இவர்களில் யாரையும் கடவுள் தம்முடையவர்களாகக் கொண் டிருக்க மாட்டார். கிறீஸ்துநாதருடைய அளவற்ற மனமும், இருதயமும் நம் மத்தியில் இருக்கின்றன. அந்த தெய்வீக மனதோடு தங்களை இணைத்துக்கொண்டு, அந்த இருதயத்தின் அளவற்ற துடிப்புகளை உணராதவர்கள் கலகம் செய்யும் சிருஷ்டிகளாக இருக்கிறார்கள். தங்கள் சிருஷ்டிகர் விரும்பும் வகையிலும், அவருக்குத் தகுதியுள்ள விதத்திலும் அவரை ஒப்புக்கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள்.

ஆகவே, மனிதாவதாரத்தால் புத்தியுள்ள படைப்புகள் கடவுளுக்குச் செலுத்தும் ஆராதனையும் மகிமையும் கடவுள் நித்தியத்திலிருந்தே தமக்குத் தாமே செலுத்துகிற ஆராதனை மகிமையின் மகத்துவ மேன்மைக்கு உயர்த்தப்பட்டது, அவர் பரலோகத்தில் உள்ளது போலவே, பூலோகத்திலும் கனப்படுத்தப் பட்டு, ஆராதிக்கப்பட்டார்.

ஆனால் இதில் மாமரியின் பங்கு, அவர்களுடைய பணி என்ன? படைக்கப்பட்டதும், தற்காலிகமானதுமான ஆராதனை மகிமையை, படைக்கப்படாததும், நித்தியமானதுமான மகத்துவத் திற்கு உயர்த்துவதில் மாமரி கொண்ட பங்கு என்ன?

அவர்களுடைய ஊழியம் இரு வகையானது: முதலாவதாக, அவர்கள் சுதந்திரமான முறையிலும், தானாகவே முன்வந்தும் நித்திய வார்த்தையானவருக்கு அவருடைய மனித சுபாவத்தை வழங்கினார்கள்; இரண்டாவதாக, மனுக்குலத்தின் தலைவி யாகவும், பிரதிநிதியாகவும், இதே நோக்கத்திற்காக இந்த மனித சுபாவத்தை அவருக்குத் தர அவர்கள் சுதந்திரமான முறையில் சம்மதித்தார்கள்.

சர்வேசுரன் தம்முடைய எல்லா வேலைகளிலும், வாய்ப்புள்ள போதெல்லாம் படைப்புகளைப் பயன்படுத்துகிறார் என்றும், தமது வல்லமையின் அசாதாரணமான எந்த ஒரு முயற்சியாலும் அவர் ஒருபோதும் தனித்துச் செயல்படுவதில்லை என்றும், படைக்கப் பட்ட சக்திகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளபோது, அவர் அவற்றைச் செயல்பட அழைக்கிறார் என்றும் நாம் அடிக்கடி குறித்துக் காட்டியிருக்கிறோம். படைப்புகள் செய்ய முடியாத தைத்தான் அவர் செய்வார், ஆனால் அவை செய்யக் கூடியதை அவர் செய்ய மாட்டார். படைக்கப்பட்ட சக்திகளால் செய்யப்படக் கூடிய காரியத்தை அவர் தாமே நேரடியாகச் செய்வார் என்றால், அது அவர் பங்கிற்கு, தம் வல்லமையை அவர் வீணாகவும், பயனற்ற விதத்திலும் பயன்படுத்துவதாகவே இருக்கும்.

தற்போது நாம் கையாளும் காரியத்தில், கடவுள் படைக்கப்பட்ட ஆட்களின் ஆராதனை மகிமையைத் தம்முடைய அளவற் றதும், நித்தியமானதுமான ஆராதனை மகிமைக்கு உயர்த்த அவர் விரும்பினார். நித்திய வார்த்தையானவரை மனித சுபாவத்தோடு ஒன்றிப்பதன் மூலமாக மட்டுமே இது செயல்படுத்தப்பட முடியும்; இந்த ஐக்கியத்தைப் படைக்கப்பட்ட எந்த ஒரு சிருஷ்டியும் நிகழச் செய்ய முடியாது, மாறாக, இதற்கு மகா உன்னத சர்வேசுரனின் வல்லமை தேவைப்பட்டது. ஆனால் படைக்கப்பட்ட ஆட்கள் ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியும். வார்த்தை யானவரோடு ஒன்றிக்கப்பட இருந்த மனித சுபாவத்தை, அதன் நோக்கத்தைப் பற்றிய முழு அறிவோடும், ஒப்புக்கொடுத்தல் என்ற கருத்தோடும், சுதந்திரமாகவும், தாங்களே முன்வந்தும் கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதுமே அந்தக் காரியம். தேவ ஆளோடு இந்த மனித சுபாவம் ஒன்றிக்கப்படுவதன் வழியாகவே சர்வேசுரனுக்குத் தகுதியுள்ள ஆராதனையையும் மகிமையையும் அவருக்குச் செலுத்த அவர்கள் தேவ உதவியைப் பெற்றுக்கொள்வார்கள், இது மனுக்குலத்தின் பிரதிநிதி என்ற முறையில், மனித ஆட்கள் அனைவரிலும் மேலான ஓர் உன்னத சிருஷ்டியின் வழியாக சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்படும்.

மனுக்குலத்தின் மனிதத் தலைவியாகிய மாமரியே இந்தப் பிரதிநிதியாக இருந்தார்கள்; சர்வேசுரனுக்குத் தகுதியுள்ள முறையில் அவருக்கு வழிபாடு செலுத்தும் நேரடியான நோக்கத்திற்காக தேவ வார்த்தையானவரோடு ஒன்றிக்கப்பட இருந்த அந்த மனித சுபாவத்தைச் சர்வேசுரனுக்கு அவர்களே ஒப்புக்கொடுத்தார்கள். அவர்களே அந்த உன்னதமான ஆலயமாக இருந்தார்கள், இந்த ஆலயத்தில்தான் தற்காலிகமானதும் நித்தியமானதும், மனுஷீக மானதும் தெய்வீகமானதுமான இரு வேறு வழிபாடுகளும் மகிமையும் ஒன்றாகக் கலக்கப்பட்டு, பூலோகத்தில் கடவுள் அது வரை ஒருபோதும் பெற்றுக்கொண்டிராத அளவற்ற வழிபாட்டின் ஒரு வெளிப்பாடு விளைந்தது. அவர்களுடைய சொந்த சம்மதம் கேட்கப்பட்டது, ஏனெனில், மனுக்குலம் தன்னுடைய உன்னதமான பிரதிநிதியின் வழியாக, இந்த அளவற்ற வழிபாடு நிறைவேறுவதற்குத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும் வரைக்கும், பூலோகத்திலிருந்து இந்த அளவற்ற ஆராதனை மகிமையைக் கடவுள் பெற்றுக்கொள்ள மாட்டார்.

ஆகவே, மரியாயின் வழியாக, பிரபஞ்சம் சர்வேசுரனுக்குச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிற ஆராதனையும் மகிமையும், அவருடைய அளவற்ற மகத்துவத்திற்கு உண்மையாகவும், போதுமான அளவிலும் தகுதியுள்ளதாக ஆனது.