இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆத்துமத்தின் சுபாவக் கொடைகள் : புத்தி

மேலே குறிப்பிடப்பட்ட விதிகளின் காரணமாக, கடவுளின் தாயாராகவும், படைப்பின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்ட வர்கள் என்ற முறையில் ஞான ஒழுங்கின் அனைத்திலும் மேலான கொடைகளை மாமரி பெற்றிருந்தார்கள் என்று நாம் கூற வேண்டும். இவற்றில் முதலாவது, புத்தி என்னும் கொடையாகும். அனைத் திலும் உயர்ந்ததும், அகன்றதும், விரைவானதும், ஆழ்ந்ததுமான அறிவு மாமரிக்குத் தரப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கூற்றுக்கு ஆதரவாக எந்த ஒரு சாட்சியத்தையும் நாம் தர வேண்டிய அவசிய மில்லை. மேலே குறிப்பிடப்பட்ட கொள்கைகளின்படி, கடவுள் தமது நோக்கத்திற்கேற்ற வழியைத் தேர்ந்து கொள்கிறார் என்பதும், மாமரியின் மனது அனைத்திலும் உயர்ந்த, சுபாவத்திற்கு மேலான ஞானத்தின் திருப்பேழையாகவும், பாத்திரமாகவும் இருந்தது என்பது அறிவுக்கு உகந்ததாக இருக்கிறது, எந்த மனத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் அளவுக்கு இது எளியதாக இருக்கிறது. ஆகவே மனித சிருஷ்டிகளுக்கு ஒருபோதும் தந்தருளப்படாத அளவுக்கு, மிகப் பெரும் அறிவோடு மாமரியைப் படைத்ததன் மூலம் கடவுள் தமது நோக்கத்திற்கான வழியை ஆயத்தப்படுத்தினார். நாம் எதைப் பற்றிப் பேசுகிறோமோ, அந்த தியானக் கருத்தை முடிந்த வரை போதுமான அளவுக்கு எப்போதும் விளக்கிக் காட்டுவதாகிய நம்முடைய நோக்கத்திற்கு நாம் உண்மையாக இருக்கும்படியாக, இத்தகைய அறிவின் தன்மை மற்றும் பண்புகளைப் பற்றிய ஓர் உள்ளொளியை நம் வாசகர்களுக்குத் தர நாம் முயற்சி செய்யப் போகிறோம்.

அனைத்திலும் உயர்ந்ததும், அகன்றதும், விரைவானதும், ஆழ்ந்ததுமான அறிவு என்று நாம் சொல்லும் காரியத்தை விளக்கும் படியாக, முதலில், அறிவு என்றால் என்ன, அளவற்றதும், அளவுக்கு உட்பட்டதுமான புத்தி என்பதன் பொருள் என்ன என்று விளக்கு வோம். அதன்பின் நம் விளக்கங்களை மாமரிக்குப் பொருத்திக் காட்டுவோம்.

அறிவு என்றால் என்ன, புத்தியைப் பயன்படுத்தும் செயல் என்பதற்கு என்ன பொருள்? புத்தியுள்ளவற்றையும் புத்தியற்றவை களையும் வேறுபடுத்துவது எது என்பதைக் கண்டுபிடிக்கும்படி அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் இந்தக் கேள்விக்கு நாம் விடை காண முடியும். இனி, புத்தியுள்ளவற்றிலிருந்து புத்தி யற்றவைகளை வேறுபடுத்துவது என்னவெனில் புத்தியற்றவை தங்கள் சொந்த வடிவத்தைக் கொண்டிருக்க மட்டுமே திறனுள் ளவையாயிருக்க, புத்தியுள்ளவையோ, தங்கள் சொந்த வடிவம் தவிர, மற்ற ஜீவராசிகளின் வடிவத்தையும் எடுக்க வல்லவையாக இருக்கின்றன. உதாரணமாக சடத்தன்மையுள்ள எல்லாப் பொருட்களும் சடத்தன்மையில் ஒரு வடிவத்தைக் கொண் டுள்ளன, என்றாலும் தங்கள் கலைத் திறனாலும், திறமையாலும் வேறு வடிவங்களை எடுக்கக் கூடியவையாக அவை ஆக முடியும். இவற்றில் ஒன்றே ஒன்றை மட்டும் ஒரு நேரத்தில் கொண்டிருக்க அவற்றால் முடியும். தாதுக்களும், தாவரங்களும் இயல்பாக ஒரே ஒரு வடிவத்தை மட்டுமே கொண்டுள்ளன, அவை ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களை ஒரே சமயத்தில் கொண்டிருக்க இயலாது. செயற்கை வழிகளைக் கொண்டு, அவை வேறொரு வடிவத்தை எடுக்கும்படி செய்ய முடியும் என்றால், அவை ஒரு நேரத்திற்கு ஒரே ஒரு வடிவத்தை மட்டுமே கொண்டிருக்க முடியும். ஒரு சிற்பி ஒரு கல்லை எடுத்து, அதற்கு ஒரு மனிதனின் வடிவத்தைத் தருகிறான் என்றால், அந்தக் கல் அந்த வடிவத்தில் இருக்கும்போது, வேறு ஒரு வடிவத்தை எடுக்க முடியாது, தனது முந்தின வடிவத்திற்குத் திரும்பவும் முடியாது.

ஆனால் புத்தியுள்ள படைப்புகளில் இது நேர் எதிராக நிகழ்கிறது. அதே நேரத்தில் அவை தங்கள் சொந்த வடிவத்தை, அல்லது தங்களுக்கு நிதர்சன நிலையை அல்லது தங்கள் சொந்த நிலையைத் தரும் வடிவத்தைக் கொண்டுள்ளன. அவற்றால் வேறு சிருஷ்டிகளின் வடிவத்தை எடுத்துக் கொள்ள முடியும். உதாரண மாக, மனித மனம், தனக்கு சுயதன்மையையும், நிஜத்தன்மையையும் தரும் தனது சுபாவமான சொந்த வடிவம் தவிர, தான் புரிந்து கொள்கிற எந்த ஒரு சிருஷ்டியின் வடிவத்தையும், அது ஒரு தாது வாக, ஒரு தாவரமாக, ஒரு மிருகமாக, இன்னும் வேறு எந்த சிருஷ்டி யாக இருந்தாலும், அதன் வடிவத்தையும் எடுக்கக் கூடியதாக இருக்கிறது.

இனி இந்த வேறுபாடு எங்கிருந்து எழுகிறது? புத்தியற்ற சிருஷ்டிகளின் சுபாவம் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அதிகமாக அடக்கப்பட்டதாக இருக்கிறது. ஆனால் புத்தியுள்ள சிருஷ்டிகளின் சுபாவமோ குறைந்த அளவே வரம்புக்குட்பட்டதாகவும், விரிவான தன்மையுள்ளதாகவும் இருக்கிறது. இதனாலேயே அரிஸ்டாட்டில், ஆத்துமமே ஒரு விதத்தில் எல்லாமுமாக இருக்கிறது என்றார். இனி, வரம்பு என்பது சடப்பொருளிலிருந்து வருகிறது. ஆகவே, ஏதாவது ஒன்றின் சடத்தன்மையின்மையே அது புத்தியுள்ளதாக இருப்பதற் கான காரணமாக இருக்கிறது. ஒரு பேச்சு வகைக்கு, புத்தியின் அளவு, ஒரு சிருஷ்டியின் சடத்தன்மையின்மையின் அளவுக்குத் தக்கதாக இருக்கிறது.

ஆகவே, தன் சொந்த வடிவத்தை இழக்காமல், மற்றொன்றின் வடிவத்தை எடுக்க வல்லதாக புத்தி இருக்கிறது. அது ஒரு சிருஷ்டி யின் சடத்தன்மையின்மையிலிருந்து வருகிறது. புத்தி, சிருஷ்டியின் சடத்தன்மையின்மையின் அளவுக்குத் தக்கதாக இருக்கிறது, அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அது அதிகமாக வரம்புக்குள் அடக்கப்பட்டதாகவும், சுருக்கப்பட்டதாகவும் இராத காரியத்தின் அளவுக்குத் தக்கதாக இருக்கிறது; இதன் காரணமாக ஒரு சிருஷ்டி எந்த அளவுக்கு சடத்தன்மையற்றதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது அளவற்றதனத்தை அதிகமாக நெருங்கிச் செல்கிறது. என்றாலும் மற்றொன்றின் வடிவத்தை எடுக்க வல்லதாக இருப்பது மட்டும் புத்தியாக இருப்பதில்லை. உணர்வுள்ள சிருஷ்டிகள் தங்கள் சொந்த வடிவம் தவிர மற்ற வடிவங்களையும் எடுக்கின்றன. ஏனெனில் அவை தங்கள் புலன்களின் தொடுதல் மற்றும் கவனிப்பின் கீழ் வரும் எந்த ஒரு பொருளையும் உணர்ந்து, புரிந்துகொள்கின்றன. என்றாலும் இந்தக் காரணத்தால் அவை புத்தியுள்ளவை என்று சொல்ல முடியாது.

புத்தியுள்ளதாக இருப்பது என்பது மற்ற சிருஷ்டிகளின் வடிவத்தை எடுக்க வல்லதாக இருப்பது அல்ல, மாறாக, பொருட்களின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வது ஆகும். மிருகம் ஒரே ஒரு வடிவத்தை, தனி வடிவத்தை மட்டும் புரிந்துகொள்கிறது. ஆனால் அறிவோ பொருட்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள் கிறது. அது ஒரு பொதுவான வடிவத்தைக் கொண்டிருக்கக் கூடிய தாக இருக்கிறது.

புத்தி என்றால் என்ன என்று விளக்கிய பின், நாம் அடுத்த கேள்விக்குச் செல்வோம்: அளவற்ற புத்தி என்பதென்ன, அளவுக்கு உட்பட்ட புத்தி என்பதென்ன, எக்காரியத்தில் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருக்கின்றன?

அளவற்ற புத்தி என்பதென்ன? புத்தி என்பது மற்ற சிருஷ்டிகளின் வடிவங்களை எடுப்பதும், பொருட்களின் சாராம்சத்தையும், பொதுத் தன்மையையும் புரிந்துகொள்ளும் திறனுமாக இருக்கிறது என்றால், அளவற்ற புத்தியுள்ளதாக இருப்பது என்பது அளவற்றதன் வடிவத்தை எடுப்பதாக இருக்கிறது. இரண்டு அளவற்றவை இருக்க முடியாது என்பதால், அளவற்ற புத்தியுள்ளவராக இருத்தல் என்பதற்கு, அளவற்றவர் தம்மைத் தாமே புத்தியுள்ளவராக்கிக் கொள்கிறார் என்றும், எனவே, அளவற்ற புத்தி என்பதற்கு, எப்போதும் புத்தியைப் பயன்படுத்தும் புத்தி என்றும் பொருளாகும். அது தான் முழுமையாகப் புரிந்துகொள்கிற பொருளுக்கு ஒத்ததாக இருக்கிற புத்தியாகும்; அது, இறுதியாக, புத்தியைப் பயன்படுத்து வதில் தான் எடுத்துக்கொள்ளும் வடிவத்திற்கு ஒத்ததாக இருக்கும் புத்தியாகும்.

ஏனெனில், முதலாவதாக, அளவற்றதாகிய ஒரு புத்தி எப்போதும் தான் உள்ளபடியும், நிரந்தரமாகவும் புத்தியாக இருப்பதில்லை என்று வைத்துக் கொண்டால், இந்த புத்தி உண்மையான புத்தியாக இல்லாதிருக்கிற, ஆனால் ஒரு சத்துவமாக அல்லது ஒரு வல்லமையாக மட்டும் இருக்கிற ஒரு நிலை அல்லது கணம் இருப் பதாக நாம் அனுமானிக்க முடியும். இனி, புத்தியின இறுதி நிலை உத்தமதனமாகும். ஆகவே, அளவற்றதாகிய ஒரு புத்தி எப்போதும் புத்தியாக இருப்பதில்லை என்றால், புத்தியின் செயல்பாட்டில் அது உத்தமமானதாக்கப்படும். உத்தமமாக்கப்படக்கூடியதாக இருக்கிற ஓர் அளவற்றது இனி அளவற்றது என்று அனுமானிக்கப்பட முடியாது.

மேலும், ஓர் அளவற்ற புத்தி புரிந்து கொள்ளப்படும் பொருளோடு ஒத்திருப்பதாக இல்லை என்றால், ஒரு பொருளைப் பற்றிய அறிவும் ஓர் உத்தமதனமாக இருப்பதால், அளவற்றவர் தம்மிலேயே அல்ல, மாறாக, தமக்கு வெளியே உள்ள ஒரு பொருளின் வழியாக, உத்தமமானவராக இருப்பார். இதுவும் அவ்வாறே அளவற்றது என்னும் கருத்தை அழித்து விடும். 

அளவற்ற புத்தியாக இருப்பவர் அளவற்றதாகிய பொருளையும் தமக்கு ஒப்பானதாகப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளுதல் என்பதற்கு, ஒரு பொருளின் புரிந்து கொள்ளும் தன்மையின் முடிவுக்கே வந்து சேருதல் அல்லது ஒரு பொருள் எவ்வளவு அறியப்படக் கூடியதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அதை அறிவது என்பது பொருள். இனி, ஒரு பொருள் தனது உள்ளபடித் தன்மை அல்லது உத்தமதனத்தின் தனிப்பட்ட முறையின் படி அறியப்படக் கூடியதாக இருக்கிறது. ஒரு பொருள் எவ்வளவு அதிகமாகத் தான் இருக்கிறபடியே இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது அறியப்படக் கூடியதாக இருக்கிறது; எனவே, அளவற்றது, அளவற்ற உள்ளபடித்தன்மையையும், உத்தமதனத்தையும் கொண்டிருப்பதால் அது அளவற்ற விதமாக அறியப்படத்தக்கதாக இருக்கிறது. இனி, அளவற்றவரில் உள்ள புத்தியின் வலிமை, அவரது உள்ளபடித் தன்மையைப் போலப் பெரியதாக, அதற்கு ஒப்பானதாக இருக்கிறது; எனவே அளவற்றவர் தம்மையே முழுவதுமாகப் புரிந்து கொள்கிறார்.

அவ்வாறே, அளவற்ற புத்தியானது, புத்தியைப் பயன்படுத்து வதில் தான் எடுக்கும் வடிவத்தோடு ஒத்த தன்மையுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் அந்த வடிவம் புத்தியைப் பயன்படுத்தும் செயலைத் தீர்மானிக்கிறது. ஏனெனில் புத்தி அந்த வடிவத்தை எடுக்கும்போது மட்டுமே புத்தியாக இருக்கிறது. எனவே, அளவற்ற புத்தியோடு ஒத்த தன்மையுள்ளதாக அது இல்லை என்றால், அளவற்றவர் தமக்கு வெளியே உள்ள ஏதோ ஒன்றின் வழியாக புத்தியாக ஆவார்.

மேலும், அளவற்றவர் தம்மிலிருந்து வேறுபட்ட மற்ற காரியங் களைப் புத்தியுள்ளவையாக்குகிறார், ஒரு பொதுவான முறையில் மட்டுமின்றி, அவை மற்றவைகளிலிருந்து வேறுபட்டவை என்பதாலும் அவர் இப்படிச் செய்கிறார். ஏனெனில் அளவற்றவர் தமக்குள் இருக்கும் சக்தியை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர் தம்மைத் தாமே புரிந்து கொள்ளாதவராக இருந்திருப்பார். இனி, இந்த சக்தி அவரிடமிருந்து வேறுபட்ட சிருஷ்டிகளை உருவாக்க வல்லதாக இருக்கிறது; ஆகவே அளவற்றவர் இந்த சக்தி எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதையும், தம்மிடமிருந்து வேறுபட்ட காரியங்களையும் புரிந்து கொள்ள வல்லவராக இருக்கிறார்.

அளவற்றவரும், அளவுக்கு உட்பட்டவையும் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபட்டிருப்பதற்கு இன்னுமொரு காரணம், இந்த அளவற்றவரில் சகல காரியங்களும் முன்னமே இருந்தன என்ப தாகும். இருத்தல் என்ற அனைத்திற்கும் பொதுவான காரியத்தில் மட்டுமின்றி, அவை தங்கள் சாராம்சத்திலும், சுபாவத்திலும் மட்டுமின்றி, தங்கள் தனிப்பட்ட வேறுபாடுகளிலும் வேறுபட் டிருக்கின்றன. ஆகவே, அளவற்றவர், இந்த அளவற்ற சக்தியைத் தம்முள் கொண்டவராக, தம்மிடமிருந்து வேறுபட்டவையும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையுமான சகல காரியங்களையும் தம்முள் கொண்டிருக்கிறார்.

ஆகவே அளவற்ற புத்தியானது, ஓர் அளவற்ற நோக்கத்தை உள்ளடக்கியுள்ள ஒரு புத்தியில் அடங்கியுள்ளது. இந்த நோக்கம், தானும் அளவற்றதாக இருக்கிற ஒரு சிந்தனையிலிருந்து தோன்று வதாக இருக்கிறது. ஏனெனில் புத்தியும், புரிந்துகொள்ளப்படும் நோக்கமும், அதைத் தோற்றுவிக்கும் சிந்தனையும் அளவற்றவரில் ஒன்றாகவும், ஒரே பொருளாகவும் இருக்கின்றன. அந்த அளவற்ற புத்தியானது, ஓர் அளவற்ற நோக்கத்தைப் பற்றித் தான் கொண் டுள்ள அந்த ஒற்றைச் சிந்தனையில் மற்ற எல்லாக் காரியங்க ளையும் தன்னுள் கொண்டுள்ளது. அது அவற்றை சிருஷ்டிகளாக அல்லது இருத்தல்களாக பொதுவில் மட்டுமின்றி, அவற்றின் சுபாவத்திலும் தனிப்பட்ட வேற்றுமைகளிலும் தன்னில் கொண் டுள்ளது.

அளவுக்குட்பட்ட அறிவு, எப்போதும் புத்தியின் செயலில் இல்லாதிருப்பதும், மாறாக அடிக்கடி, வல்லமையாகவும், சத்துவ மாகவும் மட்டுமே இருப்பதுமான அறிவாக இருக்கிறது. இது தன்னைத் தானே புரிந்து கொள்ளாத வரை, புரிந்துகொள்ளப்பட்ட நோக்கத்திலிருந்து தனது சுபாவத்தில் வேறுபட்டுள்ள அறிவாக இருக்கிறது, அப்போது அது தன் சொந்த சுபாவத்தையே முற்றிலும் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கிறது. மேலும் இது பலதரப் பட்ட கருத்துக்கள் அல்லது வடிவங்களால் புரிந்து கொள்ளும் ஓர் அறிவாக இருக்கிறது.

சிருஷ்டிக்கப்பட்ட புத்திகளில், பல வகைகள் இருக்கின்றன. மேலான, வலிமையுள்ள அறிவைப் பிரித்தறிவதற்கான விதி, அளவற்ற அறிவோடு அது கூடக்குறைய கொண்டுள்ள ஒப்புமையாகும். ஆயினும் அளவற்றதற்கும் அளவுக்கு உட்பட்டதற்குமிடையே உள்ள பிரமாண்டமான சாராம்ச வேறுபாடு இந்த ஒப்புமையில் எப்போதும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இவ்வாறு, தானே நிதர்சனமாக இல்லாவிடினும், அதிகமாக, அல்லது எப்போதும் செயலில் இருப்பதும், அளவற்ற புத்திக்குத் தனிப்பட்ட முறையில் சொந்தமானதாக இருப்பதும், தனது சுபாவத்தால் புரிந்துகொள்ளக் கூடியதாக அல்லது அறியப்படக் கூடியதாக இருக்கிற அனைத்தையும் மிகச் சில கருத்துக்களைக் கொண்டு புரிந்துகொள்ளும் அறிவாக இருப்பதுமாகிய புத்தியானது, இத்தகைய குணங்களைக் கொண்டிராத புத்தியை விட மேலானதாக இருக்கிறது. அது தேவதூதர்களின் சுபாவத்திற்குச் சொந்தமானதாக இருக்கிறது.

மனித புத்தி செயலில் அல்ல, மாறாக, புரிந்துகொள்வதாகிய வல்லமை அல்லது சத்துவமாக இருக்கிறது; இந்த வல்லமை பின்வரும் முறையில் செயல்படுத்தப்படுகிறது: ஒரு வல்லமை யாகவும், சத்துவமாகவும் இருக்கிற அது, புலன்களால் தரப்படுவதும், பொதுப் புலன்கள் மூலம் மனித கற்பனைக்குக் கடத்தப்படுவதுமான ஓர் உணரக்கூடிய விசேஷ நிகழ்வால் செயலுக்குக் கொண்டு வரப் படுகிறது. இங்கே மனித அறிவின் ஒரு செயல்பாடு, இந்த உணரக் கூடிய விசேஷ நிகழ்வை, மனித கற்பனையில் அது இருக்கிறபடி செயல்படுத்துவதில் அடங்கியிருக்கிறது. இந்த விசேஷ நிகழ்வின் தனிப்பட்ட நிலைகள் அதிலிருந்து விலக்கப்பட்டு, முன்வைக்கப் படும் காரியத்தின் சாராம்சம் எட்டப்படுகிறது; அதன்பின் ஓர் இரண்டாவது செயல்பாட்டால், மற்ற விசேஷ நிகழ்வுகளோடு இந்த சாராம்சம் ஒப்பிடப்பட்டு, பொதுக் கருத்துக்கள் உருவாகும்படி அவையும் அதே சாராம்சம் உள்ளனவா என்பது கண்டுபிடிக்கப் படுகிறது.

ஆகவே மனிதனிலுள்ள புத்தியின் மேன்மை, உணரக்கூடிய விசேஷ நிகழ்விடமிருந்து அதன் தனிப்பட்ட நிலைகளை விலக்குவதிலும், காரியங்களின் சாராம்சத்தைப் பகுத்துணர்வதிலும் துரிதமாகவும், விரைவாகவும் இருப்பதிலும்; பொதுவானதாக்க வல்லவனாக இருக்கும்படியாகவும், இந்தப் பொதுவானதாக்கும் வல்லமையால், ஒரு சில கருத்துக்களுக்கு அதன் அறிவைக் குறைக்கும்படியாகவும் அதே வேகத்துடன் மற்ற தனிப்பட்ட விசேஷ செயல்களின் சாராம்சத்தைக் கண்டுபிடிப்பதிலும், ஓர் அடிப்படை விதியின் உட்சாரத்திற்குள்ளேயே தேடி, அகவொளி யால் அதில் அடங்கியுள்ள அனைத்தையும் கண்டுபிடிப்பதிலும், அதனால் வரக்கூடிய மிகத் தொலைவான விளைவுகளையும், சாத்திய மான பயன்பாடுகள் அனைத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்வதிலும் அடங்கியுள்ளது.

இனி, சிருஷ்டிக்கப்பட்டவைகளிலேயே அதிக உயர்ந்ததும், விரைவானதும், அகன்றதும், ஆழ்ந்ததுமான அறிவை மாமரிதான் கொண்டிருந்தார்கள் என்று நாம் சொல்ல வேண்டும். அவர்களுடைய அறிவு எந்த ஒரு தனிப்பட்ட அறிவையும் விட மேலானதாக மட்டுமின்றி, மனுக்குலத்தின் சிருஷ்டிக்கப்பட்ட சகல அறிவுகளையும் விட மேலானதாக இருந்தது.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள பொதுவான அறிவு நீங்கலாக, நம் அறிவு இப்படிப்பட்டதாக இருக்கிறது: மாமரி நிறைவேற்றும்படி அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பணிக்காக அவர்களது மனித சத்துவங்களைக் கடவுள் ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். இனி, இந்தப் பணியின் ஒரு பகுதி, எந்த சிருஷ்டிக்கும், மனிதனுக்கு மட்டுமல்லாமல் சம்மனசுக்களுக்கும் கூட அருளப்பட்டுள்ள, உண்மையில் அனைத்து சம்மனசுக்களுக்கும், மனிதர்களுக்கும் ஒருசேர அருளப்பட்ட, அனைத்திலும் உயர்ந்த சுபாவத்திற்கு மேலான கடவுளின் அறிவாக இருந்தது. ஏனெனில் தமது அளவற்ற சுபாவத்தைப் பற்றிய ஒரு புரிதலால் நித்திய பிதாவானவர் தமது திருச்சுதனை ஜெனிப்பிக்கிறார், எனவே தேவ சுதனானவர் தேவ சாராம்சமுள்ள தெய்வீக சிந்தனையாக, அந்தரங்க வார்த்தையாக இருக்கிறார். அதுபோலவே அந்த அறிவுசார்ந்த ஜெனித்தலின் பாவனையாக, அதே வார்த்தையானவரைக் கருத்தரிக்க வேண்டிய வர்களாக இருந்த மாமரி, முதலில் அவரது அளவற்ற சுபாவத்தையும் உத்தமதனத்தையும் பற்றிய ஓர் அறிவால் தன் மனதில் அவரைக் கருததரிக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். இந்த தேவ திருச் சுதனின் உத்தமதனம் எவ்வளவு மேலானதாக இருந்தது என்றால், நித்திய வார்த்தையானவர் நித்தியத்திலிருந்தே தம்முடைய நித்திய பிதாவானவரின் அறிவின் கனியாக இருந்தது போலவே, அதே வார்த்தையானவர், காலத்தில், மாமரியில் இருந்த சுபாவத்திற்கு மேலான அறிவு அல்லது விசுவாசத்தின் கனியாக இருந்தார் என்று நாம் சொல்ல நமக்கு உதவக் கூடியதாக இருந்தது. இதன் காரண மாக, ஒரு சுபாவமான தயாரிப்பாக, ஓர் அறிவு தேவைப்பட்டது. அந்த அறிவு, மாமரியினுள் பொழியப்பட்ட சுபாவத்திற்கு மேலான அறிவின் வாக்குக் கெட்டாததும், ஆழங்காண முடியாததுமான பாதாளத்தின் பாத்திர மாக இருக்கக் கூடிய அறிவாக இருக்க வேண்டியிருந்தது.