இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மனிதன் கடவுளின் மீதான அதீத பயத்திலிருந்து காப்பாற்றப்படவும், தேவ நம்பிக்கைக்குத் திரும்பக் கொண்டு வரப்படவும் வேண்டும்.

மனிதன் ஆங்காரத்தின் வழியாகப் பாவம் செய்கிறான், அவநம்பிக்கையின் வழியாகப் பாவத்தில் நிலைத்திருக்கிறான். நம் ஒவ்வொருவரின் வரலாறும் மனுக்குலத்தின் வரலாறாக இருக்கிறது. முதல் மனிதத் தம்பதியர் எவ்வளவு எளிதாகக் கடவுளின் கட்டளையை உடைத்து, அவருடைய தடையை மீறினார்கள் என்று பார்க்கும்போது, பயம் அவர்களைத் தயங்கச் செய்யவில்லை என்று நாம் நினைக்கலாம், ஆங்காரம் தருகிற பொய்யான நம்பிக்கை அவ்வளவு பெரிதாயிருக்கிறது. ஆனால் குற்றம் கட்டிக்கொள்ளப் பட்டவுடன் இந்த கர்வமிக்க நம்பிக்கை, இருட்டான ஓர் அவநம்பிக்கைக்கு இடம் கொடுத்து விலகிக் கொள்கிறது. நீதியுள்ள பழிவாங்குவதில் விசுவாசம் கொள்ளாத குற்றமுள்ள மனிதன் இப்போது இரக்கத்தில் அவநம்பிக்கை கொள்கிறான். இடியாக முழங்கும் கடவுளின் குரல் அவனை அச்சப்படுத்துகிறது, அதன் கர்ஜனைகளைக் குற்றமுள்ள மனச்சான்று இன்னும் அதிகரிக்கிறது. அவன் பயந்து, கடவுளின் திருமுகத்திடமிருந்து ஒளிந்து கொள் கிறான்.

இந்த பயம் மனுக்குலம் முழுவதற்கும் கடத்தப்படுகிறது. எல்லாப் பழமையும் கடவுளின் திருமுகத்தினின்று தன்னை மறைத்துக்கொண்டது. அதன் சொந்த ஆசாபாசங்களுக்கும் துர்க் குணங்களுக்கும் மட்டுமே அடையாளமாக இருக்கிற அதன் பொய்த் தெய்வங்கள் அனைத்தோடும் அதற்குள்ள பரிச்சயத்தின் காரண மாக, தெய்வீகத்தின் மீது தான் அழிக்கப்படுவது பற்றிய ஒரு திகில் உணர்வை அது எப்போதும் வளர்த்துக்கொள்கிறது. மனுஷீகத்தின் உருவகங்களாகிய அதன் புராண வீரநாயகர்கள், ஏதாவது ஒரு தெய்வத்தால் எப்போதும் துன்புறுத்தப்படுகிறார்கள். இது பழமையின் ஒவ்வொரு கவிதையினுடையவும் சதித் திட்டத்தை உருவாக்குகிறது. இலியட் இதிகாசத்தில் அப்பொல்லோவின் கோபமும், ஒடிஸியில் நெப்டியூனின் கோபமும், ஜெனேயிதில் ஜூனோவின் கோபமும், அந்தந்தக் கவிதையின் சதித் திட்டத்தை உருவாக்குகின்றன. ஒவ்வொரு மக்களினத்தினுடையவும் தொடக்கம் ஸ்ஃபிங்க்ஸ், மினோட்டார் போன்ற ஏதாவது ஒரு அசுர ஜந்துவின் இருத்தலால் குறித்துக் காட்டப்படுகிறது, அல்லது ஏதாவது ஒரு பொய்த் தெய்வத்தின் கோபம் அதில் வெளிப்படுகிறது, அதற்கு அவர்கள் நரபலிகள் கொடுக்க வேண்டியிருந்தது. எல்லா உணர்வுகளிலும் அதிக இனிமையான உணர்வாகிய காதலும், எல்லாக் கவர்ச்சிகளிலும் அதிகம் கெடுப்பதாயிருக்கிற அழகும், கொடூரம் மற்றும் பழிவாங்குதலின் சாந்தப்படுத்தப்பட முடியாத ஒரு பொய்த் தெய்வத்தின் உருவில் தெய்வீகமாக்கப்பட்டன. ஷேவுஸ் ஆமோர் ஷேவா மாத்தெர் கூப்பிதினிஸ்: பழமையில் உள்ள சகல காரியங்களும் அந்தக் கோபமும், நரபலிகளும் நிரம்பிவையாக இருக்கின்றன, அதனுடைய பொது வெளிப்பாடு அடையாளத் தன்மையுள்ளதாகவும், மிகப் பெரும்பாலும் நிஜமானதாகவும் இருந்தது. எப்போதும் இந்தக் கோபம் தொடக்கத்திலுள்ள ஒரு பெரிய குற்றத்தால் தூண்டப்படுவதாக இருக்கிறது. அதற்குரிய தண்டனை ஓர் அதிகாரபூர்வமான பரிகாரம் நிகழும் வரை தொடர்கிறது.

மற்ற எல்லா மதங்களிலிருந்தும் மிகவும் வேறுபட்டிருந்த மோயீசனின் திருச்சட்டத்திலும் கூட இதைக் காண முடிகிறது. அதில் கடவுள் அற்புதமான தந்தைக்குரிய வார்த்தைகளை மனிதர்கள் கேட்கச் செய்கிறார், அன்பு அதன் அடிப்படையாக இருக்கிறது, ஆனால் ஒரு பேச்சு வகைக்கு, அதுவும் கூட பயத்தால் சூழப்பட்டதாகவும், கட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஏறக்குறைய அடக்கி ஒடுக்குவதாகவும் இருந்தது. அன்பு எதிர்காலத்தில் இருக்கிறது, இடைப்பட்ட காலத்தில் கல்லின் மீது செதுக்கப் பட்டதும், பயங்கரமுள்ள அச்சுறுத்தல்களையும், தண்டனை களையும் கொண்டதுமான திருச்சட்டம் தனது கட்டளைகளில் இடிகளையும், மின்னல்களையும் சுமந்திருப்பதாகத் தோன்றுகிறது, இவை அது அமல்படுத்தப்படுவதோடு சேர்ந்திருந்தன. இஸ்ராயேலர்கள் மோயீசனிடம்: ‘‘நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம். நாங்கள் சாகாதபடிக்கு, கடவுள் எங்களோடு பேச வேண்டாம்'' என்று கதறும்படி இது செய்தது.

மனுஷீகத்தைத் துன்புறுத்திய இந்த அவநம்பிக்கையும், திகிலும், பயங்கரமும் தங்கள் தத்துவார்த்தத் தொடக்கத்தை, நாம் ஏற்கனவே குறித்துக் காட்டியபடி, ஆங்காரத்தின் தன்மையிலும், கடவுளைப் பற்றிய சிந்தனையிலும் கொண்டிருக்கிறது.

ஆங்காரம் என்னும் ஆசாபாசத்தால் மனிதன் தன்னுடைய மேன்மையையும், தன்னுடைய வல்லமையையும் பற்றி ஓர் ஒழுங்கற்றதும், போலியானதும், நியாயமற்றதுமான எண்ணத்தைக் கொண்டிருக்கிறான். அவன் இந்தக் கருத்தைப் பற்றி தியானித்து, அதையே அசைபோடுகிறான்; அதை அவன் உணவாகவும் கொள்கிறான், இதனோடு தொடர்பான உணர்வு அவனுக்கு இன்பம் தந்து அவனை வசீகரிக்கிறது. தப்பறை மற்றும் நிதர்சனமின்மை ஆகியவற்றின் இந்தப் பகுதிகளில் இருக்கும் போதும், இந்த நீர்க் குமிழியில் அவன் திருப்தி காணும்போதும் அவனுடைய மனம் வீங்குகிறது, அவனுடைய இருதயம் விரிவடைகிறது, அவனுடைய தைரியம் உயர்ந்திருக்கிறது, எதையும் செய்யத் தன்னால் முடியும் என்று அவன் உணர்கிறான். ஏதாவது ஒரு சமயத்தில் அவன் மோசமான முறையில் தவறி விழுகிறான், அவனுடைய மகத்துவத்தின் கட்டுமானம், அந்த எதையும் எதிர் கொள்ளும் வல்லமையுள்ள கோட்டை பிடிபட்டு, துண்டு துண்டாகச் சிதறடிக்கப்படுகிறது. இத்தகைய ஒரு காட்சி அந்தப் போலியான உயரத்திலிருந்து கீழே தள்ளுகிறது, அது அவனை மோசமாகக் காயப் படுத்துகிறது, அவன் தாழ்த்தப்பட்டவனாகவும், மனச்சோர்வடைந்தவனாகவும், பலவீன இருதயமுள்ளவனாகவும், கோழையாகவும் ஆகிறான்.

கடவுளைப் பற்றிய சிந்தனையில்: ஏனெனில் படைப்பு எப்படித் தான் கடவுளைப் பற்றிப் பேசினாலும், நமக்கு அவருடைய அருகாமையையும், அவருடைய அதீத தாராளமுள்ள அன்பையும் பற்றி அது என்னதான் பேசினாலும், அவர் எப்போதும் மனிதனுக்கு அறியப்படாதவராகவும், மறைவானவராகவும், அளவற்ற விதமாக மிகுந்த தூரத்தில் இருப்பவராகவும்தான் இருப்பார். அவருடைய இருத்தலைப் பற்றிய சிந்தனைக்கும், அவருடைய சுபாவம் மற்றும் இலட்சணங்களைப் பற்றிய தனது சிந்தனைக்கும் அப்பால் கடவுளைப் பற்றிப் படைப்பு எதைத்தான் அறிக்கையிட முடியும்? இதன் விளைவாக, கடவுள் எப்போதுமே மனிதனுக்கு ஒரு பரம இரகசியமாகவும், அவனது புத்திக்கெட்டும் தூரத்திற்கு வெகுவாக அப்பாற்பட்டவராகவுமே இருக்கிறார். இது அவரைப் புரிந்து கொள்ள அவன் எடுக்கும் எந்த முயற்சியையும் அடக்கி ஒடுக்கி விடுகிறது. கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் மிக அருகில் இருக்கிறார் என்பது பற்றியும், அவரில்தான் நாம் வாழ்கிறோம், இயங்குகிறோம், இருக்கிறோம் என்ற மிக மங்கலான ஒரு சிந்தனையை மனிதன் கொண்டிருந்தாலும் கூட, கடவுள் அளவற்றதாகிய ஒரு பெரும் பரப்பால், ஆழங்காண முடியாத ஒரு பாதாளத்தால், கடக்கப்பட முடியாத ஒரு பெரும் தடையால், அவனிடமிருந்து பிரிக்கப்பட்ட ஒருவராகவே அவனுடைய கற்பனையில் தோன்றுவார். கடவுள் நல்லவராகவும், கருணையுள்ளவராகவும், மென்மையுள்ளவராகவும், அளவற்ற தாராளமுள்ளவராகவும் இருக்கிறார் என்றாலும், அவர் ஓர் அளவற்ற வல்லமையாக இருக்கிறார் என்றும், எல்லாவற்றிற்கும் தான் அவரையே சார்ந்திருப்பதாகவும், அவருடைய அதிகாரத்தின் கீழ்தான் தான் இருப்பதாகவும், அவர் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் இருப்பதாகவும், அந்த வல்லமைக்குத் தன்னை உட்படுத்துவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் அவன் காண்கிறான். மனிதர்களின் மனங்களில் எழுபவையும், எழுந் துள்ளவையுமான இந்தச் சிந்தனைகளே மனுக்குலத்தைத் துன்புறுத்தி வந்திருக்கிற அந்தத் திகிலுக்கும் அச்சத்திற்கும் பிறப்பிடமாக இருந்து வந்துள்ளன. ஏனெனில் அறியப்படாத, பரம இரகசியமான ஒரு வல்லமையைப் பற்றிய சிந்தனை, ஓர் அளவற்ற பாதாளத்தால் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்டிருப்பதும், ஆனால் தான் விரும்பும்போது, எந்த நேரமும், எந்த இடத்திலும் தன்னை வந்தடையக் கூடியதுமான ஒரு வல்லமையைப் பற்றிய சிந்தனை, நாம் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கவும் வாழவும் செய்கிறோமோ, அந்த ஓர் அளவற்ற ஜீவியரைப் பற்றிய சிந்தனை அச்சத்தையும், திகிலையும், மனச்சோர்வையும் உண்டாக்காமல் இருக்க முடியாது.

வீழ்ச்சிக்குப் பிறகு, மனிதனின் மனத்திலுள்ள இந்த மும்மடங் கான சிந்தனையின் பாதிப்போடு, குற்றத்தைப் பற்றிய அறிவும், உணர்வும், அவமானப்படுத்தப்பட்டு நிந்திக்கப்பட்ட ஓர் அளவற்ற மகத்துவத்தைப் பற்றிய அறிவும், உணர்வும், இதன் விளைவாக, மனிதனின் தலைமேல் தொங்குகிற பழிவாங்குதல் பற்றிய அறிவும், உணர்வும் சேரும்போது, மேற்கூறிய அச்சமும், திகிலும், மனச் சோர்வும், இன்னும் விசேஷமான முறையில் உண்மையாக இருக் கிறது.

அப்படியானால், இந்த நியாயமற்றதும், ஒழுங்கற்றதுமான பயத்திலிருந்து மனிதனைக் காப்பாற்றி, எதிர்பார்ப்பிலும், நம்பிக்கையிலும் அவனை மீண்டும் ஸ்தாபிக்க அவசியமானது எது? இரண்டு காரியங்கள் முற்றிலும் அவசியமானவையாக இருக்கின்றன: முதலாவது: கடவுளின் பங்கிற்கு, அவர் மனிதனுக்கு சாத்தியமான எல்லா மரியாதையும், மதிப்பும் காட்டுவது, ஏனெனில் வீழ்ச்சிக்குப் பிறகு, மனிதன் தன்னுடைய சுபாவத்தையும், சத்துவங்களையும், வல்லமையையும் பற்றிய இழிவானதும், உண்மையல்லாததும், அருவருப்புக்குரியதுமான ஒரு நேர் எதிரான துர்க்குணத்திற்குள் ஓடுகிறான். ஆகவே, மனிதனைப் பற்றிய ஓர் உண்மையான சிந்தனையில் அவனை மீண்டும் நிலைநிறுத்தும்படி அவனுக்கு மரியாதையும், மதிப்பும் காட்டப்பட வேண்டும்.

இரண்டாவதாக, கடவுள், தாம் ஒரு மறைபொருளான, அளவற்ற, அணுக இயலாத வல்லமை என்று மனிதனின் மனதில் பதிந்துள்ள கருத்தைச் சிதறடிக்கும்படி, ஒரு தெரிந்த, வசீகரமான, பரிச்சயமான வடிவத்தின் கீழ் தம்முடைய தெய்வீக மகத்துவத்தை மறைத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எப்படிச் செய்யப்பட முடியும்? கடவுளின் திருச்சுதனில் மனிதன் கடவுளாகும்படியாக, அவர் மனித சுபாவத்தை எடுத்துக் கொண்டு, அதைத் தம்முடைய தாக்கிக்கொள்கிறார். மனித சுபாவத்தின் நிஜமான மதிப்பிற்கும், விலையேறப்பெற்ற தன்மைக்கும், கடவுள் அதை எத்தகைய மதிப்பு மிக்க நிலையில் வைத்திருந்தார் என்பதற்கும், இதை விட மேலானதும், அதிக பக்திக்குரியதும், அதிக பிரமாண்டமானதுமான ஒரு நிரூபணம் இருக்க முடியுமா?

அளவற்றவராகிய சர்வேசுரன் மனித சுபாவத்தைத் தம்முடைய தாக்கிக்கொண்டு, தம்மோடு ஒரு தனிப்பட்ட ஐக்கியத்திற்கு அதை உயர்த்தியிருக்கும் இந்தப் பரம இரகசியத்திற்குப் பிறகு, மனிதன் தன்னுடைய சுபாவம் இழிவானது என்றும், பரிதாபத்திற்குரியது என்றும் எப்படி நினைக்க முடியும்? பிதாவானவரின் அளவற்ற மகத்துவத்தின் மகிமைப் பிரதாபப் பேரொளியும், அவருடைய ஒளியின் பிரகாசமுமாகிய தேவ திருச்சுதனானவர், மிக நன்றாக அறியப்பட்டதும், மிக நன்கு பரிச்சயமானதும், மனிதனுக்கு மிக வசீகரமானதுமான வடிவத்தில் தம் சொந்த அம்சங்களையும், தம் சொந்த சரீரத்தையும், தம் சொந்த மாம்சத்தையும் கொண்டிருந்து, அதன் கீழ், அனைத்தையும் அடக்கியாளும் தம்முடைய மகத்துவ ஒளிக்கதிர்களை மறைத்துக் கொண்டிருக்கிறார். 

சர்வேசுரனுடைய அளவற்ற மகத்துவமானது, தான் மிக நன்றாக அறிந்திருக்கிற தன் சொந்த சுபாவத்தின் கீழ் மறைந்திருப்பதைக் மனிதன் காணும்போதும், அவர் ஒரு மனிதனாகத் தோன்றுவதையும், ஒரு மனிதனாக உரையாடுவதையும், பாவத்தைத் தவிர மனித னுடைய மற்ற எல்லா உணர்வுகளையும், எல்லா ஆசாபாசங் களையும் அவர் வெளிப்படுத்துவதையும் அவன் காணும்போதும், ஒரே வார்த்தையில் சொன்னால், மனிதத் தன்மையான இரக்கம் நிறைந்த தன்னைப் போன்ற ஒரு மனிதராக அவரைக் காணும் போதும், அவன் அவரில் மிகவும் மட்டில்லாத நம்பிக்கை கொள்ளாமல் இருக்க முடியாது.

வாசகர் இங்கே மீண்டும் பின்வருவதைக் குறித்துக் கொள்ள வேண்டும்: மாமரியில், அவர்களுடைய திருவுதரத்தில்தான் அளவற்றவராகிய ஒருவர் மனித சுபாவத்தோடு ஐக்கியமாகும் பேரதிசயம் நிறைவேற்றப்பட்டது, அதன் மூலம்தான் மனித சுபாவம் சம்மனசுக்களுக்கு மிகவும் மேலாக உயர்த்தப்பட்டது; மாமரியில் தான் தெய்வீகத்தின் அளவற்ற மகத்துவம் தன் மகிமைப் பேரொளி யையும், மகத்துவப் பிரதாபத்தையும் மறைத்துக்கொண்டு மனித னாக அவதரித்தது; ஓர் அவசிய நிபந்தனையாகத் தேவைப்பட்ட மரியாயின் நேரடி சம்மதத்தால்தான் இவையெல்லாம் நிறை வேறியது.