இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இந்தக் கொள்கையின் விளைவு

மாமரிக்கு வழங்கப்பட்ட சுபாவத்திற்கு மேலான சாராம்சம், அல்லது புதிய ஆற்றல், அல்லது, உன்னதமான தனித்துவம், அல்லது வேறு எந்தப் பெயரிலாவது அழைக்கப்படக் கூடியதாயிருக்கிற அந்தக் காரியம், இருத்தலின் தீவிரத் தன்மையில் சகல சம்மனசுக்கள் மற்றும் புனிதர்களின் ஒருங்கிணைந்த சுபாவத்திற்கு மேலான சாராம்சத்தை விட மேலானதாக இருந்தது.

மற்ற சகல சிருஷ்டிகளின் விசுவாசத்தை விட மேலான ஒரு சுபாவத்திற்கு மேற்பட்ட புத்தி அல்லது விசுவாசம் அவர்களுடைய மனத்திற்கு ஒரு கொடையாகத் தரப்பட்டது.

மொத்தமாக மற்ற அனைத்து சிருஷ்டிகளையும் விட மாமரி அதிகமாக குழந்தைக்குரிய நம்பிக்கையோடு கடவுளைச் சார்ந் திருந்தார்கள். அவர்களது நம்பிக்கை உறுதியானதாகவும், அசை வுறாததாகவும் இருந்தது; அவர்கள் முற்றிலும் உத்தமமான விதத்தில் கடவுளை நேசித்தார்கள். அதைப் போன்ற ஒரு நேசத்தை எந்த ஒரு சிருஷ்டியிடமும், அல்லது எல்லா சிருஷ்டிகளிடமும் காண முடியா திருந்தது.

அதே கணத்தில் மாமரியின் மீது இஸ்பிரீத்துசாந்துவின் ஏழு கொடைகளோடு, எட்டுப் பாக்கியங்களும், இஸ்பிரீத்துவானவரின் கனிகளும் பொழியப்பட்டன.

அதே கணத்தில் சில அர்ச்சியசிஷ்டவர்களுக்கு இஸ்பிரீத்து சாந்துவால் தரப்பட்ட காட்சிதியான வரம், மெளன ஜெப வரம், நேசத்தின் போதை வரம், பரவச வரம், ஞான விவாக வரம் என்பன போன்ற அசாதாரண வரங்கள் அனைத்தும் மாமரிக்குக் கொடை யாக வழங்கப்பட்டன.

இந்த எல்லாக் கொடைகளும், வரப்பிரசாதங்களும் சிருஷ் டிக்கப்பட்ட மற்ற ஆட்கள் அனைவருக்கும் பரவலாக வழங்கப் பட்டதை விட அளவற்ற விதமாக மிக மேலான அளவில் மாமரிக்கு வழங்கப்பட்டன.

அப்படியிருக்க, இத்தகைய ஞான அழகின் மிகுதியை, இத்தகைய அர்ச்சியசிஷ்டதனத்தின் பிரமாண்டமான கோபுரத்தை, கடவுளின் அழகு மற்றும் கருணையின் இத்தகைய அதிசயத்திற்குரிய வெளிப்பாட்டை, நளின அழகின் ஆழங்காண முடியாத பாதாளத்தை, யாரால் கண்டுதியானிக்கவும், விளக்கிக் கூறவும் முடியும்? இத்தகைய ஈடிணையற்ற உன்னத மகத்துவத்தில் கோடியில் ஒரு பங்கை விளக்குவதற்கு ஒரு ஞானாதிக்கரின் மனமும், பக்திச்சுவாலகரின் இருதயமும், இருவருக்குமுரிய பேச்சு வன்மையும் தேவையாயிருக்கும்.

மாமரியின் மனம் இத்தகைய ஓர் ஒளிக்கடலின் சுகமான கதகதப்பில், இத்தகைய பிரகாசத்திலும், மகத்துவப் பேரொளி யிலும், அறிவின் பெருங்கடலிலும், அறிவுசார்ந்த காட்சிகள் மற்றும் வாக்குக்கெட்டாத காரியங்களின் விஸ்தாரமான வெளிப்பாட் டிலும், அமிழ்த்தப்பட்டிருக்க வேண்டும்--இவை ஒன்றை விட மற்றொன்று அதிக மேன்மையும், பக்திக்குரிய தன்மையும், உயர்வும் உள்ளவையாகவும், அதிக ஒளியும், கண்கூச வைக்கும் பிரகாசமும், அதிகக் கவர்ச்சியும், அதிக வசீகரமும் உள்ளவையாகவும், அதிக ஆழ்ந்த தன்மையும், அதிக ஆழங்காண இயலாத தன்மையும் உள்ளவையாகவும் இருந்திருக்க வேண்டும். இதன் காரணமாக, அதனோடு ஒப்பிடப்படக் கூடிய எதையும் காண்பது சாத்திய மற்றதாக இருந்தது. ஏன், காட்சிதியானத்தின் உச்சபட்ச அளவில் புனிதர்கள் மீது பொழியப்பட்ட சகல அறிவுசார்ந்த காட்சி களும், மரியாயின் காட்சியின் மகத்துவ ஒளியோடு ஒப்பிடும் போது, அவர்களுடைய அதிசயத்திற்குரிய அறிவுக்கு முன்னால் வைக்கப்படும்போது, அவை ஆழ்ந்த இரவாகவே இருந்திருக்க வேண்டும். இந்தத் தீவிரமான ஒளிப் பிரவாகம், மாமரியின் ஆத்துமத்தின் மையத்தில் வாசமாயிருந்த ஆராதனைக்குரிய தமத்திரித்துவ சர்வேசுரனால் உண்டாக்கப்பட்ட இந்த சுபாவத்திற்கு மேலான காட்சிகள், ஒரே பொருளின் மீது குவிக்கப்பட்ட ஒரு கோடி சூரியன்களின் பெரும் பேரொளியை விட அதிக மாசற்றதும், அதிகத் தெளிவானதும், அதிகமான மகத்துவமுள்ளதுமான பேரொளியால் மாமரி சுடர்வீசி இலங்கும் படி செய்திருக்க வேண்டும் என்னும் அளவுக்கு மாமரியின் ஆத்துமம் பரலோகப் பிரகாசத்தால் ஒளிர்விக்கப்பட்டும் நிரப்பப்பட்டும் இருந்திருக்க வேண்டும்.

கடவுளோடு இப்படிப்பட்ட ஒன்றிப்பின் மேன்மைக்கு உயர்த்தப்பட்ட ஆன்மாக்கள் தெய்வீக உணர்வை, கடவுளின் உணர்வை--அதாவது, நித்தியம், மாறாத்தன்மை, பிரமாண்டம், அளவற்றதனம், உன்னதமான புத்தியின் வல்லமை, ஞானம், நன்மைத்தனம், அழகு, இரக்கம், தயாளம், பரிவு, இனிமை, வனப்பு, அளவற்ற மகிழ்ச்சி மற்றும் பேரின்பம் ஆகிய சகல இலட்சணங் களின் பாதாளத்தின் உணர்வைக்--கொண்டிருக்கிறார்கள். மாமரியின் ஆத்துமத்தில், இவ்வளவு மகத்துவமும், பிரமாண்டமும், அழகும், சந்தோஷ உற்சாகமும் உள்ள கடவுளின் இந்த ஒளியும், உணர்வும், எல்லா சாயல்களுக்கும் மேலாக, மிக அரிதானதும், முற்றிலும் முழுமை பெற்றதும், மிக விஸ்தாரமானதும், முற்றிலும் உத்தமமானதும், பூரண அழகும் வனப்பும், வசீகரமும் வாய்ந்ததும், அனைத்திலும் சிறந்ததும், உத்தம மாசற்றதும், முற்றிலும் உண்மையானதுமான கடவுளின் சாயல்களைத் தந்து, அவர்களை மாற்றமடையச் செய்திருக்க வேண்டும்; அது கிட்டத்தட்ட, நிச்சயமாக அளவுக்கு உட்பட்ட முறையில், ஆனால் மற்ற அனைத்து சிருஷ்டிகளுக்கும் அப்பாற்பட்ட விதத்தில் ஒப்புமைப் படி மற்றொரு கடவுளாக அவர்கள் இருக்கும்படி செய்திருக்க வேண்டும்.

மாமரியின் ஆத்துமத்தில் நிகழ்த்தப்பட்ட கடவுளின் இந்தச் செயல்பாடுகளிலிருந்து, கடவுளின் மிக உன்னதமான இந்தச் சீராட்டல்களிலிருந்து விளையும் நேசத்தைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? ஞான விவாகத்தில் இஸ்பிரீத்துசாந்துவானவர் ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஆத்துமத்தோடு தொடர்பு கொண்டு, ஒரு தனிப்பட்ட முறையில் அதைத் தொடுகிறார் என்றும், அந்தக் கணத்தில் பிதாவிடமிருந்தும், சுதனிடமிருந்தும் அவர்களுடைய சுவாசமாக இஸ்பிரீத்துசாந்துவானவரின் புறப்படுதலை ஆத்துமம் உணர்கிறது என்றும், அந்தத் தொடுதலாலும், உணர்வாலும் இஸ்பிரீத்துசாந்துவானவர் சுபாவப்படி தாம் எப்படி இருக் கிறாரோ, அதற்கு ஒப்பாயிருக்கும் நிலைக்கு -- அதாவது சுவாசம், புறப்படுதல், முத்தம், ஐக்கிய பந்தம், ஆசீர்வதிக்கப்பட்ட நிலை, சந்தோஷம், பூரிப்பு, பிதாவினுடையவும், சுதனுடையவும் நித்திய அரவணைப்பு ஆகியவற்றின் நிலைக்கு--ஆத்துமத்தை உயர்த்து கிறார், ஆத்துமம் சுபாவப்படியோ, தனது சொந்த சாராம்சத்தின் படியோ அன்றி, மாற்றத்தின்படியும், ஒப்புமை நிலைப்படியும், பிதா சுதனுக்குள்ளும் சுதன் பிதாவுக்குள்ளும் வெளியிடும் அதே அன்பின் சுவாசத்தைத் தானும் சுவாசிக்கிறது என்றும், ஐக்கியம், இசைவு, சமாதானம், அளவற்ற இணக்க நிலை, அளவற்றதாகிய தெய்வீக இசை, அதே அரவணைப்பு, அதே நித்திய ஆசீர்வதிக்கப்பட்ட நிலை ஆகியவற்றை ஆத்துமமும் அனுபவிக்கிறது என்றும் அர்ச். பெர்னார்ட், அர்ச். சிலுவை அருளப்பர் போன்ற காட்சிதியான ஞான ஆசிரியர்கள் நமக்குக் கூறுகிறார்கள். இக்காரியத்தில் ஆத்துமம் வெறுமனே கடவுளை நேசிப்பதாக மட்டும் சொல்லப் பட முடியாது. இல்லை; அது அவருடைய நேசத்தையே சுவாசிக்கிறது; அது இஸ்பிரீத்துசாந்துவானவரை சுவாசிக்கிறது. ஓ! மாமரி தனது மாசற்ற உற்பவத்தின் முதல் கணத்திலேயே எந்த ஒரு சிருஷ்டிக்கும், அல்லது சகல சிருஷ்டிகளுக்கும் தந்தருளப் பட்டிருக்கிற சகல வரப்பிரசாதங்களையும், கொடைகளையும், சீராட்டல்களையும் சொந்தமாகக் கொண்டிருந்தார்கள் என்றால், அவர்களில் இந்த நேசம் எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்! அவர்கள் எந்த அளவுக்குக் கடவுளின் அளவற்ற சிகரங்களின் ஆளுகையின் பிரதேசங்களுக்கும், அங்கிருந்து, மாற்ற மடைதல், கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற் றாலும், அனைத்திலும் அதிக நெருக்கமான விவாக உறவாலும், மாமரி தன் ஆத்துமத்தில் மிக மேலானதும், மிகத் தீவிரமானதும், மிக மாசற்றதும், மிக உயர்ந்ததும், மிக பிரமாண்டமானதும், சிருஷ்டிக்கப்படாததும், உருவாக்கப்படாததும், ஆனால் கடவுளின் அதே நித்திய நேசமாயிருக்கிறதுமான நேசத்தை, அதே இஸ்பிரீத்துசாந்துவானவரைத் தனது ஆத்துமத்தில் சுவாசித் திருக்கவும் வேண்டும்!

‘இக் தாச்சேயாத் எத் கொந்த்ரேமிஸ்காத் ஓம்னிஸ் க்ரேயாத்துரா குயிஸ் ஏயும் ஆவ்தேயாத் தீச்செரே தாந்த்தே திக்னித்தாத்திஸ் இம்மென்ஸித்தாத்தெம்'' - அர்ச். தமியான் இராயப்பர்.