இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி இஸ்பிரீத்துசாந்துவானவரை முழுமைப்படுத்துகிறார்கள்.

பரிசுத்த தமத்திரித்துவத்தின் மகத்துவமுள்ள மூன்றாம் ஆள், தெய்வீகத்தின் அந்தரங்க ஜீவியத்தில் முற்றிலும் எதையும் பிறப்பிக்க இயலாதவராக இருக்கிறார். அவர் தெய்வீகத்தின் அந்தரங்க ஜீவியத்தை முடித்து வைப்பவராக இருக்கிறார். அது பின்வருமாறு: சகல ஜீவியத்தினுடையவும் தொடக்கமாக இருப்பவரும், தாமே ஜெனிப்பிக்கப்படாதவராக இருப்பவரும், எந்த ஆதித் துவக்கமோ, காரணமோ இல்லாதவருமான நித்திய பிதாவானவர் தம்மையே அறிகிறார். இச்செயலின் மூலம் பொருண்மை சார்ந்தவரும், முற்றிலும் பரிபூரணருமான தம் சொந்த சாயலான ஒருவரை, வார்த்தையானவரை அவர் ஜெனிப்பிக்கிறார். பிதாவானவர், தம்முடைய இந்த மகா உத்தமமான சாயலைக் கண்டு தியானிக் கிறார். பிதாவின் இந்த உத்தமமான சாயலாக இருக்கிற தேவ திருச்சுதனானவர், பிதாவின் சுபாவத்தினுடைய சகல பிரமாண்ட மானவையும், வாக்குக்கெட்டாதவையுமான அழகுகளையெல்லாம் பரிபூரண மாசற்றதும், கறைதிரையற்றதுமான கண்ணாடியைப் போலப் பிரதிபலிக்கிறார். பிதாவானவர், தம்மையே நோக்கி ஈர்க்கப்பட்டு, தம்முடைய பரிபூரண பொருண்மை சார்ந்த சாயலாக இருக்கிறவரை நேசிக்கிறார். தம்மிலே இந்த அழகுகளைக் கண்டு தியானிப்பவரும், ஆனால் பிதாவின் பிரதிபிம்பமாக இருப்பவரு மான திருச்சுதன் தம்மை நோக்கியும், பிதாவை நோக்கியும் ஈர்க்கப் படுகிறார். பிதாவினுடையவும், சுதனுடையதுமான இந்தப் பொது வான, பரஸ்பர நேசம் தற்செயலானதாக இல்லாமல், பொருண்மை சார்ந்ததாக இருக்கிறது, இதன் விளைவாக ஒரு மூன்றாவது தேவ ஆள் புறப்பட்டு வருகிறார். இவர் பிதாவினுடையவும் சுதனுடையவும் அந்தப் பரஸ்பர, நித்தியமான, பொருண்மை சார்ந்த நேசத்தையே தம் ஆள்தன்மையாகக் கொண்டிருக்கிறார். அவர்கள் ஒருவரில் ஒருவர் எடுத்துக்கொள்ளும் அளவற்ற, பொருண்மை சார்ந்த பரிபூரண சுய திருப்தியை வெளிப்படுத்துபவராகவும், அவர்கள் ஒருவர் மற்றவரின் அரவணைப்பில் கொள்ளும் அளவற்றதும், நித்தியமானதும், பொருண்மை சார்ந்ததுமான பேரின்பத்தையும், ஆனந்த சந்தோஷத்தையும் வெளிப்படுத்துபவராக அவர் இருக்கிறார்.

இந்த மூன்றாம் தேவ ஆளே இஸ்பிரீத்துசாந்துவானவர் ஆவார். இவரோடு சர்வேசுரனில் நிகழும் அளவற்றவையாகிய புறப்படுதல்கள் முடிவுக்கு வருகின்றன. ஆகவே, இவர் பிதாவிட மிருந்தும் சுதனிடமிருந்தும் புறப்படுகிறார். இவர்கள் இருவரும் அவரைப் பிறப்பிப்பதில் செயல்வேகமுள்ளவர்களாக இருக் கிறார்கள். ஆனால் அவரோ செயல்பட இயலாதவராக, தம்மிலேயே பலனற்றவராகவும், புதிதாக யாரையும் பிறப்பிக்க இயலாத வராகவும் இருக்கிறார். பிதாவானவர் அளவற்ற ஜீவியத்தின் தொடக்கமாகவும், சுதனானவர் இடைநிலையாகவும், இஸ்பிரீத்து சாந்துவானவர் முடிவாகவும் இருக்கிறார்கள். இந்தப் பலனற்ற தன்மை நிச்சயமாக ஒரு குறைபாடு அல்ல, மாறாக, அது ஓர் உத்தமதனமாக இருக்கிறது. ஏனெனில், மற்ற இருவரைப் போலவே பிறப்பிக்கக் கூடியவராக இருந்திருந்தால்,, அவர் தாம் எப்படி இருக்கிறாரோ அந்த ஆளாக, அளவற்ற ஜீவியத்தின் தனிப்பட்ட முடிவாகவோ, அதை முடித்து வைப்பவராகவோ, இருக்க மாட்டார். ஆயினும், கடவுளின் ஜீவியத்தின் அந்தரங்கத்தில் அவர் பலனற்றவராகவும், பிறப்பிக்க இயலாதவராகவும் இருக்றிVர், ஏனெனில் அவரில் வாழ்வு முழுமையடைகிறது என்றாலும், சர்வேசுரனுக்கு வெளியே அவர் பிறப்பிக்கும் வளமையுள்ளவராக இருக்க முடியாதா? ஆனால் இந்தப் பிறப்பிக்கும் வளமையைக் கொண்டு ஒரு புதிய தேவ ஆளைப் பிறப்பிக்க அவரால் இயலாது. அதற்கு எந்த விதத்திலும் சாத்தியமேயில்லை. ஆனால், ஏற்கனவே இருக்கிற ஒரு தேவ ஆளை புதிய சூழ்நிலைகளில் பிறப்பிக்க அவரால் இயலாதா? ஓர் உறவை, ஒரு பேச்சு வகைக்கு, ஐக்கியத்தின் மூலம் ஒரு தேவ ஆளாக ஆகக் கூடிய புதிய சிருஷ்டியை ("ளீreழிஸஷ்மி ம்லிதுஷ்ஐற்வி ஐலிஸற்து விற்ஸ்ரீer மிerrழிது. யி லிeதுஷ்ஐழி உஷ்rஉற்துdழிணுஷ்மி ஸஷ்rற்து" - மூereதுஷ்ழிவி) அவரால் உருவாக்க முடிந்திருக்காதா? இது நிச்சயமாக சாத்தியம்தான். இது மாமரியிலும், மாமரியின் வழியாகவும்தான் நிறைவேற்றப்பட்டது. ஏனெனில் அவர்களுடைய மாசற்ற திருவுதரத்தில் ஓர் அற்புதச் செயலை இஸ்பிரீத்துசாந்துவானவரே நிறைவேற்றினார். மனிதாவதாரத்திற்கு அவர்களுடைய சம்மதத்தின் விளைவாக, அந்த ஐக்கியத்தின் அற்புதம், அந்த அற்புதமான வேலை, வார்த்தை யானவரின் தேவ சுபாவத்தோடு மனித சுபாவத்தின் அந்த அதிசய மான திருமணம் நிகழ்ந்தது! அதன் மூலமாக, இரண்டாம் தேவ ஆள் ஒரு புதிய சூழலில் இருத்தலைக் கொண்டிருந்தார். இஸ்பிரீத்து சாந்துவானவர் அந்தப் புதிய சிருஷ்டியை, கிறீஸ்துநாதர் எனப்பட்ட அந்தத் தனி ஜீவியரை, எம்மானுவேலை, தேவ-மனிதனை இருத்தலுக்குக் கொண்டு வந்தார்.

ஆகவே, திவ்விய கன்னிகையின் தேவ ஊழியத்தின் வழியாக, மனிதர்கள் அனைவரிலும் அதிக பக்திக்குரிய இந்த மாசற்ற சிருஷ்டியின் சுதந்திரமான சம்மதத்தின் விளைவாக, இஸ்பிரீத்து சாந்துவானவர் தமத்திரித்துவத்திற்கு வெளியே பிறப்பிக்கும் வளமை உள்ளவரானார், ஒரு புதிய சிருஷ்டியை, ஒரு புதிய தனி ஜீவியராகிய தேவ-மனிதரைப் பிறப்பிக்கும் வல்லமை உள்ளவரானார்.