© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா அப்போஸ்தலர்கள் சபை

நன்றிகள்: நமது இணையதளத்தினை ஆரம்பிக்கும்போது, தங்களது ஈடு இணையற்ற புத்தகங்களைப் பதிவேற்ற அனுமதி தந்து, இன்றும் ஆத்தும இரட்சண்யம் ஒன்றையே மையமாகக் கொண்டு இயங்கிவரும் மாதா அப்போஸ்தலர் சபைக்கும், சகோ.பால்ராஜ் அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமாதாப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில், தூத்துக்குடி-628 002, 

0461-2361989, 9487609983.


மீண்டும் ஜெபமாலைப் போர் :

அன்பான கத்தோலிக்க மக்களே! இப்போது மீண்டும் ஜெபமாலைப் போருக்கான காலமும், நேரமும் வந்துள்ளது… இருக்க இருக்க நிலைமை மோசமாக போவதுபோல் தெரிகிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாம் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை இன்னும் தள்ளிப்போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மேலும் இந்த கொரோனாவிலிருந்து நம்மையும், நம் நாட்டு மக்களையும், இந்த உலகையும் காப்பாற்ற ஜெபமாலைப்போரைத் தவிர வேறு உபாயம் இல்லை.

ஜெபமாலைகள் அதிகமாக ஜெபிக்கப்படவேண்டும். எவ்வளவு அதிகமாக ஜெபிக்கப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் நமக்கு விடுதலை கிடைக்கும். குடும்ப ஜெபமாலையும், தனி ஜெபமாலையும் அதிகரிக்கப்பட வேண்டும். தவ ஒறுத்தல் முயற்சிகளும் அதிகரிக்க வேண்டும்.. ஒறுத்தலோடு கூடிய ஜெபமாலைக்கு அதிக பயன் உண்டு..  ஜெப தவ பரிகாரமே நம்மை சீக்கிரம் இத்தீமையிலிருந்து விடுவிக்கும். எந்த நேரமும் நாம் டி.வி.க்கு முன்னால் உட்கார்ந்து சினிமாவையோ அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையோ பார்த்துக்கொண்டே இருந்தால் நிலமை சரியாகிவிடாது.. ஜெபிக்க வேண்டும்.. இன்னும் அதிகமாக ஜெபிக்க வேண்டும்.. குறைந்தது குடும்பத்தோடு காலையும், மாலையுமாவது குடும்ப ஜெபிக்க வேண்டும்.. அதே போல் பைபிள் வாசிக்கவும் தினமும் நேரம் ஒதுக்க வேண்டும். தினமும் ஒரு அதிகாரமாவது வாசிக்க வேண்டும்.

தினமும் செய்தி பார்க்கிறோம் அதில் இன்னும் அதிகரிக்கிறது என்றுதான் செய்திகள் வருகிறதே தவிர குறைவதாக செய்திகள் இன்னும் வரவில்லை.. அன்று நோவா பெட்டகம்  தரையே தெறியாமல் நீரிலே மிதந்து கொண்டிருந்ததது போலவே நாமும் தரையே தெறியாமல் தண்ணீரில் தள்ளளித்து வருகிறோம்..

காலையில் எழுந்தோமா டி.வி.பார்த்தோமா என்றிருந்தால் நிலைமை சரியாகாது.. நம் பரம பிதாவின் இரக்கத்தைப் பெற அதிகமாக ஜெபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்..

ஆகையால் நாம் தினமும் கீழ்வரும் கருத்துக்களுக்காக ஜெபமாலை ஒப்புக்கொடுக்க வேண்டும் :

பரிசுத்த தேவ மாதா கூறிய கருத்துக்கள்... 

1. சேசு விரும்பியபடி உலகில் மரியாயின் மாசற்ற இருதயப்பக்தி நிறுவ,

2. மரியாயின் மாசற்ற இருதய வெற்றிக்காக,

3. பரிசுத்த பாப்பரசர் உலக ஆயர்களோடு சேர்ந்து ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கும்படியாக.

4. பாவிகள் மனம் திரும்ப.

5. உலக சமாதானத்திற்காக.

விசேஷக் கருத்து :

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பூரணமாக குணமாகவும், அந்த வைரஸ் நம் நாட்டையும், இந்த உலகையையும் விட்டு நீங்கி மக்கள் நிம்மதியாக கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்க்கை வாழவும், கொரோனாவால் மரித்த ஆன்மாக்கள் நித்திய இளைப்பாற்றியடையவும் ஜெபிப்போம்..

கருத்து விளக்கம் : ஏன் முதலில் மாதாவின் கருத்துக்கள் முன்னிலைப் படுத்தப்படுகிறது என்றால் அந்தக் கருத்துக்கள் வெற்றியடையும் போது இந்த கொரானா மட்டுமல்ல எந்த வித அச்சுறுத்தல்களும், வைரஸ்களும், அழிவுகளும் காணாமல் போய்விடும்.

நாம் தினமும் செய்ய வேண்டியது..

1.  தினமும் குடும்ப ஜெபமாலை, தனி ஜெபமாலை/குழு ஜெபமாலை ஜெபித்தல்

2.  நம்மால் முடிந்த சிறு சிறு ஒறுத்தல் முயற்சி செய்தல்.

3. தலைவெள்ளி, முதல் சனி பக்தி கடைப்பிடித்தல்.

4. உத்தரியம் அணிந்திருத்தல் (இப்போது உங்களிடம் இல்லாவிட்டால் பரவாயில்லை நிலமை சரியானதும் உத்தரியம் வாங்கி குருவானவர் மூலமாக அணிந்து கொள்ளுங்கள்)

5. அமல உற்பவ மாதா மெடல் அணிதல்.

6.  நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகள் பிறருக்கு செய்தல்.

7.  கீழே உள்ள ஜெபத்தை பயன்படுத்தி நம்மையும்,  நம் குடும்பங்களையும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணித்தல்

மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு தங்கள் இல்லங்களை அர்ப்பணிக்கும் ஜெபம் :

ஓ மரியாயின் மாசற்ற இருதயமே! சேசுவின் திருஇருதயத்தின் மாதாவே, எங்கள் இல்லத்தின் அரசியும் அன்னையுமாகிய மாமரியே, உமது அதிமிகு விருப்பத்தின்படி எங்களை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். நீரே எங்கள் குடும்பங்களை ஆண்டருளும். எங்கள் ஒவ்வொருவரையும் வழி நடத்தும். சேசுவின் திருஇருதயம் எவ்வாறு உம்மை ஆண்டு நடத்தினாரோ அது போல் எங்களையும் ஆண்டு வழிநடத்தும்படி செய்தருளும். 

ஓ அன்பு நிறைந்த அன்னையே, நாங்கள் எப்பொழுதும் வளமையிலும், வறுமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும், வாழ்விலும், மரணத்திலும் உம்முடையவர்களாகவே இருக்கும்படி செய்தருளும்.

ஓ இரக்கமுள்ள மாதாவே, கன்னியர் அரசியே, எங்கள் ஆன்மாக்களையும், இருதயங்களையும் காத்தரளும். அகங்காரம் கற்புக்கெதிரான சிந்தனைகள் அஞ்ஞானம் போன்ற தீமைகள் எங்களை நெருங்காதவாறு செய்தருளும். மாதாவே தேவரீருக்கும், தேவரீருடைய திருமகனுக்கும், எதிராக செய்யப்படும் எண்ணற்ற பாவங்களை பரிகரிக்க ஆவல் கொண்டுள்ளோம். தாயே எமது இல்லங்களிலும் உலகெங்குமுள்ள இல்லங்களிலும் கிறிஸ்து நாதரின் நேசமும், நீதியும் பிரகாசிக்கச் செய்தருளும்.

ஆண்டவளே, உமது புண்ணிய மாதிரிகையை நாங்கள் கண்டுபாவிக்கவும், ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழவும், அடிக்கடி தேவ நற்கருணை வாங்கவும், முகத்தாட்சன்யத்தை புறந்தள்ளவும் வாக்களிக்கிறோம். வரப்பிரசாதத்தின் சிம்மாசனமே, அரிய நேசத்தினுடைய மாதாவே, நம்பிக்கையோடு உம்மை அண்டி வருகிறோம். உமது மாசற்ற இருதயத்தில் பற்றியெரியும் தெய்வீக நெருப்பு எமது இருதயத்திலும் பற்றியெரியச் செய்யும்.

தாயே பரிசுத்தத்தனமும், ஆன்ம தாகமும், பரிசுத்த கிறிஸ்தவ வாழ்வும் எங்கள் இல்லத்தில் ஒளிரச்செய்யும். தூய கிறிஸ்தவ வாழ்வு எம்மேல் சுமத்தும் அத்தனை சுமைகளையும் பரிகார கருத்தோடு தவமுயற்சியாக நாங்கள் உமது மாசற்ற இருதயத்தின் வழியாக சேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். சேசுவின் திருஇருதயத்திற்கும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கும் முடிவில்லாத காலமும் நேசமும் புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக ! ஆமென்

சேசுவின் இராச்சியம் வரும்படியாக மாதாவின் இராச்சியம் வருக!  - அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட்.