இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜெபமாலை குறித்து தேவமாதா சொன்னவை!

தினமும் ஜெபமாலை ஜெபிக்கிறவர்களின் வாழ்வும், ஜெபிக்காதவர்கள் வாழ்வும் பற்றி தேவமாதா அர்ச் லூயிஸ் மான்போர்ட் அவர்களிடம் கூறிய செய்தி! அர்ச் லூயிஸ் மான்போர்ட் சொல்கிறார்...

ஜெபமாலை பாவத்திலிருப்பவர்களுக்கு ஒரு சிவந்த ரோஜா

பாவத்திலிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், உங்களிலும் பெரிய பாவியாகிய நான், இச் சிவந்த (ஜெபமாலையை) ரோஜாவைத் தர விரும்புகிறேன். ஏனென்றால் நமதாண்டவரின் திருஇரத்தம் அதில் தெளிக்கப்பட்டுள்ளது. இந்த ரோஜா மலர் உங்கள் வாழ்வில் உண்மையான நறுமணம் வீசட்டும். அதற்கும் மேலாக நீங்கள் இருக்கும் ஆபத்திலிருந்து உங்களை அது மீட்கட்டும்.

விசுவாசமற்றவர்களும்(ஜெபமாலை ஜெபிக்காதவர்கள் ) மனந்திரும்பாத பாவிகளும் தினமும் என்ன கூறுகிறார்கள்: 'ரோஜா. மலர்களால் நாம் முடி சூடிக் கொள்வோம் என்று. ஆனால் தினமும் ஜெபமாலை ஜெபிக்கிறவர்கள்  “மிகப் புனித ஜெபமாலையின் மலர்களால் முடி புனைவோம்" எனக்கூறுவோம்.

நாம் அணியும் இம்மலர்களுக்கும் அவர்களுடைய( ஜெபிக்காதவர்கள் ) மலர்களுக்கும் வேறுபாடுதான் எவ்வளவு அவர்களுடைய.சிறுமலர்கள் மாமிச இன்பம், உலக மகிமைகள் கடந்து செல்லும் செல்வங்கள் இவை வெகு விரைவில்தேய்ந்து அழிந்து போகின்றன ஜெபிப்பவர்கள்  புனையும் மலர்கள் அன்போடு  மீண்டும் மீண்டும் சொல்லி வரும் பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே . அருள் நிறைந்த மரியாயே என்ற ஜெபங்கள்  இந்த ஜெபங்களுடன் நாம் நல்ல தவ முயற்சிகளையும் சேர்க்கிறோம். இம்மலர்கள் தேய்ந்து முடிவதில்லை. இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றாலும் அவை இன்றுள்ளது போல் அழகுடன் விளங்கும்.

ஜெபமாலை ஜெபிக்காதவர்கள்  ரோஜா மலர்கள் உண்மையான  ரோஜா மலர் போல் தோற்றமளிக்கும். ஆனால் உண்மையிலே அவைகள் கொடிய முட்கள். இம்முட்கள் இவ்வுலகில் வாழும் போது மனச் சாட்சியின் தாக்குதல்களால் அவர்களைக் குத்துகின்றன. இறக்கும் வேளையில் கசந்த துயரத்தால் அவர்களைக் குத்திக் கிழிக்கின்றன. மேலும், இதை விட அதிகமாக நித்தியத்தில், நம்பிக்கையற்ற கோபம் எனும் எரியும் கூரிய வேல்களாக மாறுகின்றன.

ஆனால் தினமும் ஜெபமாலை தியனிப்பவர்களின் ரோஜா மலரில் முள் இருக்கிறதே அம்முட்கள் சேசு கிறீஸ்துவின் முட்களாம். அவர் அவற்றை ரோஜா மலர்களாக மாற்றுகிறார். நாம் அணியும் ரோஜா நம்மைக் குத்துவதாயிருந்தால், அது கொஞ்சக் காலத்துக்கு மட்டுமே. அதுவும் நம் பாவ நோயைப் போக்கவும் நம்மை மீட்கவுமே.

ஆதலால் நாம் இந்த பரலோக ரோஜா மலர்களை ஆவலுடன் சூடிக்கொள்ள
 வேண்டும். முழு ஜெபமாலையையும் ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டும். "அதாவது ஐந்து 10 மணிகள் கொண்ட மூன்று ஜெபமாலைகள் (153 மணிகள் அப்போது , இப்போது 203 மணிகள்) இம்மூன்று ஜெபமாலைகளும்  சிறிய மலர் வளையங்கள் அல்லது மூன்று பூ முடிகள் போலிருக்கின்றன

 இவ்வாறு நாம் செய்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் சேசுவினுடையவும் மரியாயினுடையவும் மூன்று மகுடங்களுக்கும் மகிமை செலுத்துவதற்காக; அதாவது சேசுவின் மனிதாவதாரத்தில் அவருடைய அருள் மகுடத்திற்கும்; அவர் பாடுபட்ட போது அவர் சூடிய முள் மகுடத்திற்கும்  பரலோகத்தில், சேசுவின் மாட்சி என்னும் மகுடத்திற்கும் மகிமையாக, மேலும், மாமரி அன்னைக்கு பரிசுத்த தமதிரித்துவம் மோட்சத்தில் சூடிய மும்மகுடத்திற்கும் மகிமையாகவும் நாம் மூன்று ஜெபமாலைகள் செய்கிறோம். '

இரண்டாவது சேசுவிடமும் மரியாயிடமிருந்து நாம் மூன்று கிரீடங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அப்படிச் செய்கிறோம், நம் வாழ்நாளில் நாம் அடையும் பேறுபலன்தான் முதல் கிரீடம், நமது மரண வேளையில் நாம் பெறும் அமைதி, இரண்டாம் கிரீடம். பரலோகத்தில் நாம் அடையும் மகிமை மூன்றாம் கிரீடம், இறக்கும் வரையிலும் தவறாமல் நீங்கள் ஜெபமாலை ஜெபித்து வந்தால் உங்கள் பாவங்களின் பளு எவ்வளவு கனமாக இருந்தாலும் நீங்கள் "மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்” (1 இரா. 5:4).

நரகத்தின் விளிம்பில் நீங்கள் நின்றாலும், நரகத்தில் ஒரு காலை வைத்து விட்டாலும், பில்லி சூனியக்காரரைப் போல் உங்கள் ஆன்மாவை பிசாசுக்கு விற்று விட்டிருந்தாலுங்கூட இது மட்டுமல்ல சாத்தானைப் போல் பிடிவாதத்தோடு பதித்தையே கைக்கொண்டிருந்தாலும், இன்றோ நாளையோ நீங்கள் மனந்திரும்பி வர, செய்வீர்கள். உங்கள் வாழ்க்கையைத் திருத்திக் கொள்வீர்கள். ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்வீர்கள் என்று என்னால் திட்டமாய்ச் சொல்ல முடியும். நன்றாகக் கவனியுங்கள் நான் சொல்வதை; பரிசுத்த ஜெபமாலையைப் பக்தியுடன், மரணம் வரை, தினமும் தியானிக்க வேண்டும், பாவங்களுக்கு மனஸ்தாபமும் மன்னிப்பும் அடைய வேண்டும் என்று தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் அவ்வாறு நடைபெறும்.