இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பேறுபலனின் அளவு

ஒரு செயலைப் பேறுபலனுள்ளதாக்க அவசியமான நிபந் தனைகள், மனித புத்திக்கு எட்டிய வரையில், ஒரு குறிப்பிட்ட மனிதனால் சம்பாதிக்கப்படும் பேறுபலனின் அளவைத் தீர்மானிப் பதற்கான சில விதிகளை ஏற்படுத்த நமக்கு உதவும்.

இந்த விதிகளில் முதலாவது பின்வருமாறு: எந்த விதத்திலும் சிந்தித்தாலும், ஒரு செயல் தன்னில் கொண்டுள்ள நன்மையின் உள்ளார்ந்த அளவு, அதனால் சம்பாதிக்கப்படும் பேறுபலனுடைய, அந்த நன்மைத்தனத்தின் அதிகரிப்பின் அளவுக்கு ஏற்ப அதிகரிக்கும் பேறுபலனுடைய அளவீடாக இருக்கிறது.

இந்த விதி தன்னிலேயே வெளிப்படையானதாக இருக்கிறது; ஏனெனில் தம்முடைய வணக்கத்திற்காகவும் மகிமைக்காகவும், இந்த அளவற்ற மகத்துவத்தின் வெளிப்பாட்டிற்காகவும், சுதந்திரமான முறையில் செய்யப்படும் ஒரு செயலுக்குக் கடவுள் நித்திய ஜீவியத்தைச் சம்பாவனையாகத் தருகிறார் என்றால், ஒரு செயல்பாடு எவ்வளவு அதிகமாக இந்த நோக்கத்தை அடைகிறதோ, அவ்வளவுக்கு, குறிப்பாக, எந்த ஒரு படைக்கப்பட்ட செயலினுடை யவும் வெளியரங்க நன்மை, சகல காரியங்களின் பொது நோக்க மாகிய கடவுளின் அளவற்ற மகத்துவத்தின் வெளிப்பாட்டில் அல்லாமல் வேறு எதிலும் இருக்க முடியாது என்பதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளும்போது, அது சம்பாதிக்கும் சம்பாவனையும் பெரிதாக இருக்கும் என்பது அறிவுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. ஆகவே, ஒரு செயலில் கடவுளின் மகிமையின் வெளிப்பாடுகள் எவ்வளவு பெரியவையாகவும், அதிக பக்திக்குரிய வையாகவும், அதிக அற்புதமானவையாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு அது தன்னில் கொண்டுள்ள நன்மையின் அளவும் பெரிதாக இருக்கும், ஆகவே பேறுபலனும், சம்பாவனையும் பெரிதாக இருக்கும்.

இரண்டாவது விதி: ஒருவன் எவ்வளவு அதிகமான அல்லது குறைவான தேவ இஷ்டப்பிரசாதத்தோடு செயல்படுகிறானோ, அந்த அளவுக்கு அவனுடைய செயலுக்கான பேறுபலனும் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.

ஏனெனில் நாம் பார்த்துள்ளது போல, தேவ இஷ்டப்பிரசாதம் பேறுபலன்களின் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஆகவேதான் அது அதிகமாயிருக்கும்போது, பேறுபலனும் அதிகரிக்கிறது; அது குறைவாயிருக்கும்போது, பேறுபலனும் குறைகிறது.

மூன்றாவது விதி: ஒரு செயல் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப் படுவதற்கான நோக்கம் எவ்வளவு அதிகக் கண்டிப்பான முறையில் சுபாவத்திற்கு மேற்பட்டதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு பேறுபலனும் பெரிதாக இருக்கும். தேவ இஷ்டப்பிரசாதம் பேறுபலனின் காரணியாக இருக்கிறது என்றால், சுபாவத்திற்கு மேலான நோக்கம், பேறுபலனின் இறுதிக் காரணியாக இருக்கிறது. ஆகவே, ஒன்று தீவிரப்படுத்தப்படுவதால் பேறுபலனை அதிகரிக்க, மற்றொன்றும், கண்டிப்பானதும், அதிகமானதுமான சுபாவத்திற்கு மேற்பட்ட தன்மையால் பேறுபலனை அதிகரிக்கிறது.

ஒரு நோக்கத்தில் சுபாவத்திற்கு மேலான தன்மை அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாயிருக்கிறதா என்பதை நாம் தீர்மானிக்க உதவும் விதிகள்:

முதலாவது: சாதாரணமாகவும், கண்டிப்பான முறையிலும், தேவ ஆராதனையையும், தேவ மகிமையையும் தவிர வேறு எந்த நோக்கமுமின்றிச் ஒரு செயல் செய்யப்படும்போது, அதன் மாசற்றதனம்;

இரண்டாவது: ஒரு செயல் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப் படுவதில் வெளிப்படும் தீவிரமும், நேசப் பற்றுதலும். ஏனெனில் ஒருவன் கடவுளின் மீது தான் உணர்கிற நேசத்தின் ஒரு பக்திக்குரிய முயற்சியால் ஒரு செயலைச் செய்யும்படி தூண்டப்படுகிறான் என்றால், அதிக அசட்டைத்தனமுள்ள நேசத்தோடும் குறைந்த தீவிரத்தோடும் அதைச் செய்திருந்தால் எவ்வளவு சுபாவத்திற்கு மேற்பட்ட தன்மை அதில் இருந்திருக்குமோ, அதை விட அதிகமான சுபாவத்திற்கு மேற்பட்ட தன்மை அவனுடைய செயலில் இருந் திருக்கும்.

நான்காவது விதி: ஒருவன் தன் பேறுபலனுள்ள செயல்களைச் செய்யும்போது, எங்கிருந்து எதிர்ப்பு வந்தாலும் சரி, அந்த எதிர்ப்பு எவ்வளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு பேறுபலனும் அதிகமாக இருக்கும். ஏனெனில் தன்னுடைய பேறுபலனுள்ள செயல்களைச் செய்பவன் எவ்வளவு அதிகமான எதிர்ப்பை எதிர் கொள்கிறானோ, அவ்வளவுக்கு அவன் அவற்றைச் செய்வதில் அதிக ஆற்றலையும், தைரியத்தையும், உத்தம தாராளத்தையும், நிலைத்த தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும்.

பேறுபலனின் தீவிரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் இந்த விதிகளைச் சுருக்கிக் கூறும்படி, ஒரு செயல் தன்னில் கொண்டுள்ள உத்தமதனத்தின் அளவைக் கொண்டும், அதன் மூல காரணியாகிய தேவ இஷ்டப்பிரசாதத்தின் தீவிரத்தைக் கொண்டும், அதைச் செய் பவனின் நோக்கத்திலுள்ள கூடக் குறைவான சுபாவத்திற்கு மேற் பட்ட தன்மையைக் கொண்டும், பேறுபலனைச் சம்பாதிக்க ஒருவன் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கொண்டும், பேறுபலன் அளவிடப் பட வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.