இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சகல வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாகிய மாமரி

போசுவே தம்முடைய பிரசங்கங்களில் ஒன்றில் இப்படிச் சொல்கிறார்: ‘‘எப்போதும் தியானிக்கப்பட வேண்டிய மாமரியின் தாய்மையின் விளைவு ஒன்றைப் பற்றி நான் உங்களிடம் பேசாமல் இருக்க மாட்டேன். அது இதுதான்: கடவுள் பரிசுத்த கன்னிகையின் வழியாக சேசுக்கிறீஸ்துநாதரை நமக்குத் தரப் பிரியங்கொண்ட பின்பு, அவருடைய தேவ பராமரிப்பின் இந்த ஒழுங்கு மாற்றப்பட முடியாது, ஏனெனில் அவர் தம் கொடைகளை அளித்தது பற்றி மனம் வருந்துவதில்லை.'' அவர்கள் வழியாக வரப்பிரசாதத்தின் பொதுவான மூலாதாரத்தை நாம் பெற்றிருக்கும்போது, அவர்கள் வழியாகத்தான் கிறீஸ்தவ வாழ்வை உருவாக்கும் பல்வேறு நிலைகள் அனைத்திலும் அதன் பலதரப்பட்ட பயன்பாடுகளையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். ‘‘திருச்சபைக்கென பச்சிளங்குழந்தை களைப் பிறப்பிக்கிற அவர்களுடைய தாய்க்குரிய சிநேகம், வரப்பிரசாதத்தின் பொது மூலாதாரமான மனிதாவதாரப் பரம இரகசியத்தில் நம் இரட்சணியத்திற்குத் தன் பங்களிப்பைச் செய்தது; அதைச் சார்ந்திருப்பவையக இருக்கிற அதனுடைய மற்ற எல்லாச் செயல்பாடுகளிலும் அவர்கள் நித்தியத்திற்கும் ஒத்துழைப்பார்கள்'' என்று அர்ச். அகுஸ்தினார் குறிப்பிடுகிறார். இந்த உண்மை மிகுந்த முக்கியத்துவமுள்ளது. திருச்சபையில் மாமரி பெற்றுக் கொள்ளும் விதிவிலக்கான வழிபாடு இதைத்தான் அடிப்படையாகக் கொண் டுள்ளது.

இது அர்ச்சியசிஷ்டவர்களின் பரம இரகசியத்திலிருந்து வேறுபட்ட ஒரு பரம இரகசியத்தை உருவாக்குகிறது, அவர்களால் நமக்கு வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தர முடியும், ஆனால் அவர்கள் மாமரியைப் போல் அவற்றிற்கென நிறுவப்பட்டுள்ள வாய்க்கால்கள் அல்ல. மரியாயின் வழியாகத்தான் நாம் சகல வரப் பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டோம், அவர்கள் வழியாகத் தான் நாம் அவற்றை சேசுநாதரிடமிருந்து கேட்க வேண்டும். அவர்கள் பகிர்ந்தளிக்கும் வல்லமையைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஜெர்ச¼னோடும், மற்ற பிரசித்தி பெற்ற வேத பாரகர்களோடும் சேர்ந்து அவர்களை நம் மத்தியஸ்தி என்று அழைக்கத் தயங்கக் கூடாது. அவர்களுடைய கரங்கள் வழியாகத் தான், மனுக்குலத்திற்குத் தாம் தந்தருளும் அனைத்தையும் வழங்கக் கடவுள் தீர்மானித்திருக்கிறார். 

ஆனால் அப்போது கிறீஸ்துநாதரின் வல்லமையும், ஒரே ஒரு மத்தியஸ்தர்தான் உண்டு என்னும் கிறீஸ்தவத்தின் அடிப்படை சத்தியமும் என்ன ஆவது என்று ஒருவன் கேட்கலாம். ஒன்றில் நாம் மற்ற எல்லாப் புனிதர்களின் வரிசையில் மாமரியையும் வைத்து, அவர்களுக்குரிய தனிப்பட்ட முக்கியத்துவத்தை, ஆனாலும் அதே வரிசையில், அவர்களுக்குத் தர வேண்டும்; அல்லது, அர்ச்சியசிஷ்ட வர்களின் வரிசையிலிருந்து அவர்களைப் பிரித்தெடுத்து, ஒரு பொது மத்தியஸ்த ஊழியத்தை அவர்களுக்குத் தர வேண்டும். அப்போது நாம் ஒரே மத்தியஸ்தரான சேசுக்கிறீஸ்துநாதரோடு மாமரியையும் வைத்துக் குழப்பிக்கொள்கிறோம்.

ஆனால் நாம் மாமரியை சேசுக்கிறீஸ்துநாதருடனோ, அல்லது அர்ச்சியசிஷ்டவர்களுடனோ சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது; இந்த இரட்டையான தனித்தன்மைக்கான விளக்கம் பின்வருமாறு:

சேசுக்கிறீஸ்துநாதரைப் பொறுத்த வரை, மிக எளிதாகப் பிரித்தறியக்கூடிய மத்தியஸ்தத்தின் இரு வகைகள் இருக்கின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். மிக எளிய மனங்கள் இவற்றின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்: நீதி மற்றும் பேறுபலன்களின் வழியாக நம் இரட்சணியத்தைக் கையாள்வதாகிய, அல்லது தன்னுடைய பலனுள்ள ஆதிகாரணத்திலிருந்து வருவதாகிய மத்தியஸ்தம்; தாழ்ச்சியுள்ள ஜெபம் மற்றும் மன்றாட்டின் வழியாக நம் இரட்சணியத்தை விளைவிப்பதும், துணைக் காரணியிலிருந்து வருவதுமான மற்றொரு மத்தியஸ்தம். முதல் மத்தியஸ்தத்தின்படி சேசுக்கிறீஸ்துநாதரைத் தவிர நமக்கு வேறு மத்தியஸ்தர் இல்லை என்று கிறீஸ்தவர்கள் அனைவருமே அறிக்கையிடுகிறார்கள், ஏனெனில் அவரே நீதியின் கண்டிப்பான முழுமையில் அகில உலகின் பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்தார், மனுக்குலத்திற்கான பிணைத் தொகைக்காகத் தம் பேறுபலன்களைப் போதுமான அளவில், அல்லது இன்னும் மேலாக, மிக அபரிமிதமான அளவில் தம்முடைய நித்தியப் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார்.

ஆனால் திருச்சபை இரண்டாவதான ஒரு ஊழியத்தை அங்கீகரிக்கிறது. அது ஜெபம் மற்றும் மன்றாட்டின் ஊழியமாகும். அது அர்ச்சியசிஷ்டவர்களுக்கு உரியதாகும். மாமரி இந்த ஊழியத்தின் பங்குபெறுகிறார்கள். ஆயினும், அவர்களுடைய ஊழியம் மற்ற எந்த ஓர் அர்ச்சியசிஷ்டவரிடமிருந்தும், அல்லது எல்லா அர்ச்சியசிஷ்டவர்களிடமிருந்தும் பொதுத் தன்மை மற்றும் நற்பயன்மிக்க தன்மை என்னும் இரு ஒப்பற்ற தனிச் சலுகைகளால் வேறுபடுகிறது.

அர்ச்சியசிஷ்டவர்களின் மத்தியஸ்தம் சில குறிப்பிட்ட வரப்பிரசாதங்களோடும், குறிப்பிட்ட இடங்களோடும், குறிப்பிட்ட ஆட்களோடும் நின்று விடுகிறது. மாமரியோ ஒரு பொதுவான, உலகார்ந்த அதிகாரியாக இருக்கிறார்கள். அவர்களுடைய வல்லமை சகல இடங்களின் மீதும், சகல காலங்களின்மீதும், உலகம் முழுவதிலு முள்ள சகல நன்மை தீமைகளின் மீதும் பரவியுள்ள ஒன்றாக இருக்கிறது. மனுக்குலத்தின் பொதுப் பாதுகாவலி, மனிதர்களின் தாயார் என்ற முறையில், கடவுள் இந்த ஊழியத்திற்கு ஏற்ற அளவில் அவர்களுக்கு ஓர் இருதயத்தைத் தந்து, தன் எல்லாக் குழந்தைகள் மீதுமுள்ள கருணையிலும், கனிவுள்ள நேசத்திலும் அவர்களை அணைத்துக்கொள்ளும் ஒரு சிநேகத்தை அந்த இருதயத்தினுள் பொழிந்திருக்கிறார். நம் தாயார் ஒவ்வொருவருக்கும் சிறிய அளவில் தாம் செய்துள்ளதை அவர் ஒரு பிரமாண்டமான, முழுமையான அளவில் மகா பரிசுத்த கன்னிகையின்மீது செய்திருக்கிறார். தாம் தந்தையாக இருப்பது போல, அவர் அவர்களைத் தாயாக ஆக்கியிருக்கிறார்.

மாமரியின் இரண்டாவது தனிப்பட்ட பண்பு, தன்னுடைய நற்பயன் மிக்க தன்மையில் முதல் பண்புக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. அர்ச்சியசிஷ்டவர்கள் தங்கள் ஜெபம் கேட்கப் பட்டதா என்பதை எப்போதும் அறிவதில்லை, தாங்கள் யாருக்காக ஜெபிக்கிறார்களோ அவனுக்கான அனைத்திலும் பெரிய நன்மை எது என்று கடவுள் அவர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை. அல்லது யாருக்காக ஜெபிக்கிறார்களோ அவனுடைய பாவங்கள் அவர்கள் கேட்டதை அறிய முடியாத அளவுக்கு மிகப் பெரிதாயிருந்தாலும் அவர்களுடைய ஜெபம் கேட்கப்படுவதில்லை. மேலும் அர்ச்சிய சிஷ்டவர்களுக்கும், சேசுக்கிறீஸ்துநாதருக்கும் இடையே உள்ள பேறுபலன் சார்ந்த உறவு அளவுக்கு உட்பட்டதாக இருக்கிறது, அல்லது அவர்களுடைய பேறுபலன் அதிக விசேஷமாக சாதாரணப் பராமரிப்பின் ஒழுங்கிலும், வகையிலும் சேர்க்கப்பட்டுள்ளது, ஓர் அளவுக்கு மேல் அதை நகர்த்த முடியாதவர்களாக அவர்கள் இருக் கிறார்கள்.

ஆனால் மாமரியின் காரியம் வேறு. கடவுளின் இரகசியங்களை அறியவும், தன் திருச்சுதனாகிய சத்தியத்தின் கண்ணாடியில் அனைத் தையும் காணவும், கானாவூர்த் திருமணத்தில் நிகழ்ந்த புதுமை குறித்துக் காட்டுவது போல, ஒரு குறிப்பிட்ட விதத்தில் தேவ பராமரிப்பின் நியமங்களைக் கூட மாற்றப்படச் செய்யும் அளவுக்கு அவரோடு எல்லா அதிகாரமும் கொண்டிருக்கவும் அவர்களுடைய தாய்மையின் சிநேகத்திற்கு அருளப்பட்டிருக்கிறது. தேவ இஷ்டப் பிரசாதத்தால் பரிபூரணமாக நிரம்பியவர்கள் என்ற முறையில், அதன் ஆதாரமானவரோடு நேரடி உறவில் இருப்பவர்கள் என்பதால், அவர்களால் பெற்றுத் தர முடியாத வரப்பிரசாதம் ஏதுமில்லை. அவர்களுடைய இருதயத்திலிருந்து நம் இருதயங்களின் மீது வரப் பிரசாதம் பொழியப்படுகிறது. ‘‘இந்த அபரிமிதம் அவர்களை மேன்மேலும் நிரப்பும் அளவுக்கு மட்டுமின்றி, மனிதர்கள் மீது அபரிமிதமாகப் பொழியப்படும் அளவுக்கும் இருக்கிறது. ஒவ்வொரு அர்ச்சியசிஷ்டவரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆத்து மங்களை இரட்சிக்கப் போதுமான வரப்பிரசாதத்தைக் கொண் டிருப்பது போதுமானது; ஆனால் மனிதர்கள் அனைவரையும் இரட்சிக்கத் தேவையான அளவுக்கு அவர் வரப்பிரசாதத்தைக் கொண்டிருப்பார் என்றால், அதுவே சகல நிறைவுகளிலும், அபரி மிதத்திலும் மிகப் பெரியதாக இருந்திருக்கும். அதுவே சேசுக்கிறீஸ்து நாதரிலும், ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையிலும் காணப்படும் முழு நிறைவாக இருக்கிறது, கிறீஸ்துநாதரில் மூலாதாரம் என்ற முறை யிலும், மாமரியில் வாய்க்கால் என்ற முறையிலும் அது நிறைந் திருக்கிறது. ஏனெனில், எல்லா ஆபத்துக்களிலும் ஒருவன் மாமரியின் வழியாக இரட்சணியத்தைக் கண்டடைய முடியும், ஒவ்வொரு போராட்டத்திலும் அவர்களுடைய உதவியை அவன் பெற முடியும். இன் மே ஓம்னிஸ் ஸ்பெஸ் வீத்தாஸ் எத் வீர்த்துத்திஸ் - என்னிடத் தில்தான் ஜீவியத்தினுடையும், புண்ணியத்தினுடையவும் சகல நம்பிக்கையும் (சர்வப்பிரசங்கி.24:25)'' என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார் (றீமி. வீஜுலிதுழிவி., நுஸ்ரீற்வி ஸஷ்ஷ்ஷ்). அவருடைய இந்த வார்த்தைகள் மற்ற வேதபாரகர்களின் அதிகாரத்தை அவசிய மற்றவையாக ஆக்கிவிடுகின்றன. மாமரியின் இந்த வல்லமைக்கான காரணங்களை இங்கு தருவோம். அவை மூன்று காரணங்களாகும். அவை: அவர்களுடைய தாழ்ச்சி, அவர்களுடைய தாய்மை மற்றும் அவர்களுடைய ஒத்துழைப்பு ஆகியவையாகும்.

வல்லமைக் குறைவால் அல்ல, மாறாக, மகத்துவம் மற்றும் மிகுந்த தாராளமுள்ள நன்மைத்தனத்தின் வழியாகவே கடவுள் தம்முடைய படைப்புகள் தம்மை வலுவந்தப்படுத்த அவர்களை அனுமதிக்கிறார். யோசுவாவைப் பற்றி, கடவுள் ஒரு மனிதனின் குரலுக்குக் கீழ்ப்படிந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது: ‘‘ஒபேதியெந்தே தோமினோ வோச்சி ஹோமினிஸ் - கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்லுக்கடங்கினார்...'' (யோசுவா.10:14). ‘‘அவர் தமக்குப் பயப்படுகிறவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்'' (சங்கீதம்). வல்லமையோடு இணைந்துள்ள நன்மைத்தனத்தின் இயல்பு அச்சமுள்ள பலவீனத்திற்கும் தாழ்ச்சிக்கும் விட்டுக் கொடுப்பதும், அதே அளவுக்கு ஆங்காரத்தை எதிர்த்து நிற்பதும், கலகத்தை ஒடுக்குவதுமாகும். இந்தச் சட்டம் அகச் செயல்பாடு தொடர்பானதும், பொதுவானதுமாக இருக்கிறது. அதுவே பலவீனமுள்ள அனைத்தினுடையவும் பலமாக இருக்கிறது, அது உலகத்தைச் சமநிலையில் காப்பாற்றுகிறது, மிருகங்களின் பழக்க வழக்கங்களிலும் கூட இது காணப்படுகிறது. பரிசுத்த வேதத்தில், கடவுளின் மகிமையின் பாதிப்பாக எல்லா இடங்களிலும் வைக்கப் பட்டுள்ள இந்தச் சட்டம், அனைத்திலும் அதிகப் பிரகாசமுள்ள பேரொளியோடு பிரகாசிக்க வேண்டியதாக இருந்தது. 

இந்தக் கடவுள் சிலுவையின் வெற்றியிலும், உலகத்தின் மீது வெற்றிகொண்டவராகிய செம்மறிப்புருவையானவரின் இராச்சியத் திலும் நம்மால் காண முடிகிறபடி, பயன்படுத்தப்படும் கருவியின் பலவீனத்திற்கும், அற்பத் தன்மைக்கும் ஏற்றபடி தம் வல்லமை வெளிப்படச் செய்திருக்கிறார். இதையே அர்ச். சின்னப்பரும்: ‘‘பலம் குன்றிப் போகும்போதுதான் நான் பலமுள்ளவனாயிருக்கிறேன்'' என்கிறார். இவ்வாக்கியம் கிறீஸ்தவம் முழுவதையும் சுருக்கிக் கூறுகிறது. இந்தச் சட்டத்தை அனுசரிப்பதற்கு, சிருஷ்டிகள் அனைத் திலும் அதிக பலவீனமாகவும், அதிகம் தாழ்ந்ததாகவும் இருப்பது கடவுளின் இருதயத்தின் மீது அனைத்திலும் பெரிய வல்லமை யையும், ஒரு இராஜரீக இராச்சியத்தையும் சொந்தமாகக் கொண்டிருப்பது அவசியம்.

அந்தப் புறா போருக்கு அணிவகுத்திருக்கிற படையைப் போல பயங்கரமுள்ளதாக இருக்க வேண்டியிருந்தது. படைப்புகளுக்குள் அதிக இனிமையுள்ளவர்களும், அதிகத் தாழ்ச்சியுள்ளவர்களுமான மாமரி, ஒரு குறிப்பிட்ட விதத்தில், தன் சிருஷ்டிகருக்கே உத்தரவிடக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களே கூட அதைப் பற்றி அழகாகப் பாடியிருக்கிறார்கள்: ‘‘வல்லபமுடையவர்களை ஆசனத் திலே நின்று தள்ளி, தாழ்ந்தவர்களை உயர்த்தினார். ... தமது அடிமையானவளுடைய தாழ்மையைக் கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார்.... வல்லபமிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார்'' (லூக்.2).

இரண்டாவதாக, மாமரி தாயாராக இருக்கிறார்கள், அவர் களிலும் அவர்களுடைய திருமகனிலும், இந்த உறவு நாம் கற்பனை செய்யக் கூடிய அனைத்திலும் பெரிய உத்தமதனத்தைக் கொண் டிருந்திருக்க வேண்டும். திருத்தாயாரும் அவர்களுடைய திருக் குழந்தையானவரும் மிக அற்புதமான முறையில் தங்களை வெளிப் படுத்த வேண்டும். தாமே இந்த உறவுக்குப் பிரமாணிக்கமாயிருப் பதாகக் காட்டவும், அதை நம்பியிருக்க நம்மை அனுமதிக்கவும் அவர் திட்டமிட்டிருக்கவில்லை என்றால், இத்தகைய உறவை அவர் ஏற்படுத்தியிருந்திருக்க மாட்டார். மிகுந்த நம்பிக்கையை நம்மில் தூண்டும்படியாக, வேண்டுமென்றே இந்த உறவை அவர் ஏற்படுத்தி யிருக்கிறார். இதிலிருந்து விளையும் பலன்கள் எல்லாம் நாம் சற்றும் எதிர்பாராதவை, முன்னறியப்படாதவை, நன்கு சிந்திக்கப் படாதவை, ஆயினும் தம்முடைய அளவற்ற ஞானத்தில் அவர் தமக்குத்தாமே திட்டமிட்டுக் கொண்ட நோக்கங்களாக இவை இருக்கின்றன.

இனி, இந்த உறவின் பலன்களில் அனைத்திலும் அதிகம் அவசிய மானது, எல்லாக் குழந்தைகளிலும் அதிக உத்தமமான குழந்தை யானவர், அனைத்து தாய்மாரிலும் மிக உயர்ந்தவர்களும் மகிமை யுள்ளவர்களுமாகிய தாயிடம் கொண்டிருக்க வேண்டியதும், ஒரு குழந்தை தன் தாய்க்குக் காட்ட வேண்டியதுமான மரியாதை வணக்கமேயல்லாமல் வேறு எது? இந்தக் கடமைக்குப் பிரமாணிக் கமாயிருப்பது, இஸ்பிரீத்துசாந்துவானவர் நமக்கு உறுதிப்படுத்துவது போல, பொக்கிஷங்களைக் குவிப்பது போன்றது: ‘‘சீக்குத் குயி தெசாவ்ரிசாத், ஈத்தா எத் குயி ஓனோரிஃபிக்காத் மாத்ரெம் சூவாம் - தன் தாயைச் சங்கிக்கிறவன் திரவியங்களைச் சேர்க்கிறவன் போலாம்'' (சீராக்.3:5). இந்தப் பழமொழியை எழுதத் தந்த இஸ்பிரீத்துசாந்துவானவர், தம் வார்த்தைகளுக்கு விளக்கம் தருபவர்களில் எல்லாம் அதிக ஞானமுள்ளவர்களில் ஒருவரும், மாமரி, சேசுநாதர் ஆகிய இருவருடைய முன்னோரும், அவர்களுடைய ஆள்தன்மையின் உருவமுமான சாலமோன் அரசரின் செயல்பாட்டில் இதைக் காட்ட சித்தங்கொண்டிருக் கிறார். சாலமோன் தம் தாயாரிடம்: ‘‘என் தாயாரே, கேளும், உமக்கு மறுப்பது எனக்கு நியாயமில்லை'' என்றார் (3அரசர்.2:20) என்றார். ஒரு பரிசுத்த நூலாசிரியர் கூறுவதாவது: இனி, ஒரு மகன், தேவ சுதனைப் பிதாவிடம் மத்தியஸ்தராகவும், தேவ தாயாரை அவர்களுடைய மகனிடம் மத்தியஸ்தியாகவும் கொண்டிருக்கும் போது, அவன் உறுதியோடு கடவுளை நெருங்கிச் செல்ல முடியும். சேசுநாதர் தம் பிதாவிடம் தம் காயங்களையும், தம் திருவிலாவையும் காண்பிக்கிறார். தேவ மாதா தம் திருமகனிடம், அவரைத் தாங்கிய திருவுதரத்தையும், அவர் பாலுண்ட கொங்கைகளையும் காண்பிக் கிறார்கள். இரக்கம் மற்றும் தயாளத்தின் இவ்வளவு அதிகமான அடையாளங்களால், தம்மிடம் கேட்கப்படுவதைத் தம் திருச்சுதனுக்கு மறுத்துக் கூறுவது பிதாவுக்கு இயலாத காரியம். இந்த அடையாளங்கள் மகா வாய்ச் சாலகமுள்ள நாவுகளை விட அதிக பலமான முறையில் நமக்காக மன்றாடுகின்றன. அதே போல, இத்தகைய கனிவு மற்றும் பாசத்தின் அடையாளங்களால் தம்மிடம் கேட்கப்படுவதை மறுப்பது தேவ சுதனுக்கும் அதே அளவுக்கு சாத்தியமில்லாத காரியமே.

இதன் காரணமாக, நாம் மாமரியைச் சிருஷ்டிகளில் எல்லாம் அதிகத் தாழ்ச்சியுள்ளவர்களாகக் கண்டாலும் சரி, அல்லது அவர்களைத் தாயாராகக் கண்டாலும் சரி, அவர்கள் கடவுளிடம் ஓர் அரச வல்லமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் காண் கிறோம்.

இந்த வல்லமையை அதன் சிகரத்திற்கு உயர்த்துவது யாதெனில், மாமரி மனுக்குலத்தின் இணை இரட்சகியாக இருக் கிறார்கள் என்பதுதான் என்றும் நாம் தொடர்ந்து சொல்கிறோம். மாமரி மனுக்குலத்தின் இரட்சணியத்தின் காரணமாக இருந்திருக் கிறார்கள் என்கிறார் அர்ச். இரேனேயுஸ்: ‘‘மரியா ஜெனேரி ஹுமானோ கவுஸா ஃபாக்தா எஸ்த் ஸாலுத்திஸ்.'' இது எந்த விதத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று நாம் ஏற்கனவே விளக்கி விட்டோம். மனிதாவதாரம் மற்றும் இரட்சணியம் என்னும் பரம இரகசியங்களிலும், அவற்றின் விளைவுகளிலும், அவற்றின் மத்தியஸ்தியாக அவர்களை ஆக்குவது கடவுளுக்குப் பிரியமா யிருந்தது என்ற பொருளில் இது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

ஆகவே மாமரி வரப்பிரசாதம் சம்பாதிக்கப்படுவதற்கான காரணமாயிருந்ததால், அவர்கள் அதைப் பகிர்ந்தளிக்கும் காரண மாகவும் இருக்க வேண்டும் என்பது மிகவும் நீதியானது. அவர்கள் அதற்கு ஓர் உரிமை கொண்டிருந்தார்கள்; ஏனெனில் சம்பாதிப்பதில் ஒத்துழைத்த ஒருவன் அதைப் பகிர்ந்தளிக்க அனுமதிக்கப்படுவதை விட அதிக நீதியானது என்ன இருக்கிறது. மாமரியின் இந்த இரு மடங்கான மகத்துவத்தின் விளைவுதான் இந்தப் பிரிவில் நாம் எண்பிக்க முற்படும் காரியமாக இருக்கிறது. ஆகவே, மாமரியின் கரங்கள் வழியாகக் கடந்து வராத எந்த வகையான வரப்பிரசாதமும் மனிதனுக்கு ஒருபோதும் தரப்படுவதில்லை என்று நாம் வலியுறுத்திக் கூறுகிறோம். திருச்சபைத் தந்தையர் இந்த சத்தியத்தை வலியுறுத்தி யிருக்கிறார்கள்: ‘‘இஸ்பிரீத்துசாந்துவானவரின் சகல கொடைகளும், புண்ணியங்களும், வரப்பிரசாதங்களும், அவர்கள் (மாமரி) விரும்புகிற ஆளுக்கு, அவர்கள் விரும்பும் அளவிலும், முறையிலும், தந்தருளப்படுகின்றன'' என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார் (றீerது. de புஸுற்ழிd). ‘‘பரிசுத்த கன்னித் தாயார் தேவ வார்த்தையானவரைத் தன் திருவுதரத்தில் கருத்தாங்கிய நேரத்திலிருந்து, இதே பக்தியுள்ள தாயின் பகிர்ந்தளித்தலின்படியல்லாமல், எந்த ஒரு சிருஷ்டியும் ஒருபோதும் கடவுளிடமிருந்து வரப்பிரசாதத்தையோ, அல்லது புண்ணியத்தையோ பெற்றுக்கொண்டதில்லை என்ற விதத்தில், இவ்வுலகில் இஸ்பிரீத்துசாந்துவானவரின் வரப்பிரசாதப் பொழிவுகள் எல்லாவற்றின்மீதும் மாமரி ஓர் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டார்கள்'' என்று அதே அர்ச்சியசிஷ்டவர் கூறுகிறார் (றீமி. யerஐழிrd, றீerஷ்ஐ. ணூமுஷ். de ஹிழிமிஷ்ஸஷ்மிழிமிe V). அர்ச். சியென்னா பெர்னார்தீன், மங்கள வார்த்தையின் மீதான தம்முடைய பிரசங்கத்தில், ‘‘மரியாயின் கரங்கள் வழியாகக் கடந்து வராமல், எந்த வரப்பிரசாதமும் பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வருவதில்லை'' என்கிறார்.

திருச்சபைத் தந்தையரின் இந்த உணர்வுகளை பக்தியின் மிகைப் படுத்தல்களாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் இவை மாமரியின் இரு மடங்கான மகத்துவத்தின் ஒரு கண்டிப்பான, அறிவுபூர்வமான முடிவாக இருக்கின்றன; ஆகவே, தங்கள் பரிசுத்த வேதத்தின் முழு விஸ்தாரத்தையும் புரிந்து கொள்ள இயலாதவர்களுக்குத்தான் இவை மிகைப்படுத்தலாகத் தோன்றுகின்றன. ஆனால் தங்கள் அகன்ற புத்தியாகிய சத்துவத்தில், ஒவ்வொரு சத்தியத்தையும், அதன் முழுமையான பொதுத் தன்மையிலும், மற்ற சத்தியங்களோடு அது கொண்டுள்ள தொடர்பிலும், அதன் எல்லா அறிவுபூர்வமான முடிவுகளிலும் ஏற்றுக்கொண்ட திருச்சபைத் தந்தையருக்கு இவை மிகைப்படுத்தல்களாக இருக்கவில்லை.

இந்த விளைவுகளை நாம் வெளிப்படுத்தி, மாமரியின் திருக் கரங்கள் வழியாக அன்றி, யாருக்கும் எந்த வரப்பிரசாதமும் ஒருபோதும் கடந்து வருவதில்லை என்ற உணர்வு, அல்லது அர்ச். சியென்னா பெர்னார்தீன் எடுத்துரைப்பது போல: ‘‘இவ்வுலகிற்கு வழங்கப்படும் ஒவ்வொரு வரப்பிரசாதமும் மூன்று விதச் செயல் முறைகளுக்கு உட்படுகிறது, ஏனெனில் அது கடவுளிடமிருந்து கிறீஸ்துநாதரிடம் கடந்து வந்து, கிறீஸ்துநாதரிடமிருந்து திவ்ய கன்னிகையின் வழியாக நமக்கு வினியோகிக்கப்படுகிறது'' (றீerது. de ஹிழிமிமிதீ) என்ற உணர்வும் எவ்வளவு ஆழ்ந்த தத்துவஞானமுள்ள தாகவும், உண்மையாகவும் இருக்கிறது என்று காட்டவும் போகிறோம்.

மேலும், முதலாவதாக, வரப்பிரசாதத்தின் மூலாதாரமான வரைத் தருவதும், தன்னைப் படைத்தவருக்கே தாயாராக இருப் பதும், வரப்பிரசாதத்தின் வாய்க்காலாகவும், அது பகிர்ந்தளிக்கப் படுவதற்கான ஊடகமாகவும் இருக்கும் மகிமையை விட அதிகப் பெரிதான மகிமையாக இருக்கிறது என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள். இனி, உத்தமமான ஞானத்தின் செயல் பாட்டில், அதிகப் பெரிதானது, மிகச் சிறியதைக் குறித்துக் காட்டு கிறது. குறைந்ததாயிருப்பதை மறுப்பது பெரியதில் ஏற்கனவே தந்தருளப்பட்டதை விலக்கிக் கொள்வதாக இருக்கும். பரிசுத்த திருச்சபைத் தந்தையர் இந்தக் கோட்பாட்டிலிருந்து ஒரு பொது வான விளைவை வருவித்திருக்கிறார்கள். அதிலிருந்து, மாமரி தொடர்பான எல்லாக் கேள்விகளுக்கும் தீர்மானிக்கும் விதி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். கற்பனை செய்யக்கூடிய எல்லா மகிமை யும், கடவுளுக்குரிய ஆராதனையோடும், சேசுக்கிறீஸ்துநாதரின் மத்தியஸ்தத்தோடும் இணைந்திருக்கக் கூடிய, சாத்தியமான எல்லா மரியாதை வணக்கமும், கடவுளுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு பொரு ளுக்கும், ஒவவொரு ஆளுக்கும் மேலாக மாமரியை உயர்த்துகிற கடவுளின் திருத்தாயார் என்னும் வாக்குக்கெட்டாத மகத்துவத்தில் சேர்க்கப்பட்டு, அவற்றில் உட்பட்டு, மாமரிக்குப் பொருத்திக் கூறப் படவும், அவர்களுக்குச் செலுத்தப்படவும் வேண்டும் என்னும் இந்த அறிவின் முதல் கோட்பாடுகளில் ஒன்றாக நாம் தந்திருக்கிறோம். 

தற்போதைய தியானப் பொருளைப் பொறுத்த வரை, கடவுள் மாமரியின் வழியாக சேசுக்கிறீஸ்துநாதரை நமக்குத் தர சித்தங் கொண்டதால், இந்த ஒழுங்கு இனி மாற்றப்பட முடியாது, ஏனெனில் கடவுள் மனிதருக்குத் தம் கொடைகளைத் தந்துள்ளது பற்றி மனம் வருந்துவதில்லை என்றும், மாமரியின் வழியாக வரப்பிரசாதத்தின் பொது ஆதாரமானவரை நாம் பெற்றுக்கொண்டிருப்பதால், அவர்கள் வழியாகவே கிறீஸ்தவ வாழ்வை உருவாக்கும் வெவ் வேறான நிலைகள் அனைத்திலும், அதன் பலதரப்பட்ட பயன்பாடு களையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாம் போசுவேயின் வழியாக நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்.

ஆகவே, இந்த ஊழியம் தெய்வீகத் தாய்மையில் சேர்க்கப் பட்டுள்ளது. பரிசுத்த கன்னித் தாயார் தன் திருவுதரத்தில் தேவ வார்த்தையானவரைக் கருத்தாங்கிய கணத்திலிருந்து, அவர்கள் இஸ்பிரீத்துசாந்துவானவரின் வரப்பிரசாதங்களுடையவும், கொடை களுடையவும் பொழிவின் மீது ஒரு வகையான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள், அதில் அவர்கள் முழுமையடைந்திருந் தார்கள் என்றும் நாம் சொல்லலாம். வட்டப் பரிதியின் வழியாகச் செல்லாமல் வட்ட மையத்திலிருந்து எந்தக் கதிரும் வரைய முடியாதது போலவே, ‘‘ஒரு பெண் ஒரு மனிதனைத் தன்னுள் சூழ்ந்திருப்பாள் - ஃபெமினா சிர்கும்தாபித் வீரும்'' என்று பக்திக் குரிய முறையில் பரிசுத்த வேதாகமம் கூறுவதன்படி, சேசுநாதரைத் தன்னுள் சூழ்ந்திருந்தவர்கள் வழியாக அன்றி, சேசுநாதரின் திரு இருதயத்திலிருந்து எந்த வரப்பிரசாதமும் பெறப்பட முடியாது.

மேலும், கிறீஸ்தவ உலகம் முழுவதும் சேசுக்கிறீஸ்துநாதரின் நீட்சியேயன்றி வேறல்ல. நாம் அர்ச். சின்னப்பரின் போதகத்தின்படி, கிறீஸ்துநாதரோடு ஒரே சரீரமாயிருக்கிறோம். பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய கிறீஸ்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட திருச்சரீரத்தின் சிரசாக அவர் இருக்கிறார். நமதாண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதரும், கிறீஸ்தவர்கள் அனைவரும் இரு தனித்தனியான சரீரங்களை உருவாக்குகிறார்கள் என்று நாம் ஒருபோதும் நினைக்கக் கூடாது. மாறாக, அவர்கள் ஒரே சரீரத்தையே உருவாக்குகிறார்கள், ஏனெனில், கத்தோலிக்கத் திருச்சபையின் மகிமை முழுவதும், அதன் மகத்துவமுள்ள விசேஷ சலுகைகளுக்கான காரணமும் அதில்தான் அடங்கியிருக்கிறது. கத்தோலிக்கத் திருச்சபை என்பது என்ன? அது, புத்தியுள்ளவையும், சடத்தன்மையுள்ளவையுமான கருவிகளைக் கொண்டு, காலத்திலும், இடத்திலும் சகல மனிதர்களையும் தம்மோடு இணைத்துக் கொண்டு, தம்முடைய சொந்த அறிவையும், தம் அன்பையும், தம்முடைய மற்ற எல்லாப் புண்ணியங்களையும் அவர்களுக்குத் தந்து, அவர்களைத் தாம் நித்தியப் பேரின்பத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கும் வரையிலும் அவை அனைத்தையும் வளர்க்க அவர்களுக்கு உதவுபவராகிய கிறீஸ்துநாதர்தான். அது அவர்களிலும், அவர்கள் வழியாகவும் வாழ்ந்து செயலாற்றுகிற கிறீஸ்துநாதராகவே இருக்கிறது. ஆகவே, நாம் அனைவரும் கிறீஸ்து நாதரின் திருச்சரீரத்தின் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்பதும், அவரிலேதான் நாம் வாழ்கிறோம், இயங்குகிறோம், இருக்கிறோம் என்பதும் தெளிவாயிருக்கிறது. இனி, ஒரு சரீரத்தின் உறுப்புகள், சிரசு தன் உயிரைப் பெறும் வழியிலிருந்து வேறுபட்ட ஒரு வழியில் தங்கள் உயிரைப் பெறக் கூடாது. அவர் மரியாயின் வழியாகத் தம் மனித உயிரைப் பெற்றுக்கொண்டார் என்றால், உறுப்பினர்கள் அனை வரும் கூட, அவர்கள் வழியாகவே தங்கள் உயிரைப் பெற வேண்டும்.

ஆயினும் மாமரியின் இந்த விசேஷ சலுகைக்கான காரணத் திற்குள் நாம் இன்னும் ஆழமாக நுழைவோமாக.

மூலாதாரங்களின் விளைவுகளை உண்டாக்குவதில் கடவுள் பயன்படுத்துகிற அந்த மூலாதாரங்கள் நிரந்தரமானவையாகவும், ஒரே தன்மையுள்ளவையாகவும் இருக்கின்றன, அதாவது, கடவுள் முதலில் ஒரு பொதுவான வழியில் ஒரு பொருளை உருவாக்கி விட்டு, அதன்பின் அதன் ஒவ்வொரு தனிப்பட்ட பயன்பாட்டிலும் வேறு பட்ட ஒரு ஆதாரத்தைப் பயன்படுத்தவதில்லை, மாறாக, பொதுவில் அதை உருவாக்கப் பயன்பட்ட அதே மூலாதாரம்தான் தனிப்பட்ட விதங்களிலும் அதற்குப் பயன்படுகிறது. இந்தச் சட்டம் பூரணமான தாகவும், நிலையானதாகவும் இருக்கிறது, எந்த ஒரு விதிவிலக்கையும் இது ஒப்புக்கொள்வதில்லை. 

கடவுளின் வேலைகளைப் பற்றிய ஒரு சித்திரம் இந்த விதி இருப்பதை நமக்கு விளக்கவும், அதை ஏற்றுக்கொள்ள நம்மை சம்மதிக்கச் செய்யவும் கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதையும் சிருஷ்டித்ததாகிய கடவுளின் சிருஷ்டிக்கும் செயலாகிய அதே மூலாதாரம், தனிப்பட்ட முறையில் எல்லாவற்றையும் அதில் விளை விக்கவும் செய்கிறது. நம் ஆத்துமங்களைப் போல கடவுளால் நேரடியாகவும், தனிப்பட்ட விதமாகவும் படைக்கப்படும் காரியங் களிலும், படைக்கப்பட்ட இடைநிலை ஒன்றின் தலையீட்டால் உண்டாக்கப்படும் காரியங்களிலும் இது வெளிப்படையாயிருக் கிறது; ஏனெனில், இரண்டாந்தரக் காரணிகளின் இருத்தலைப் பாது காப்பதும், அவை செயல்படத் தூண்டுவதும், செயல்பட உதவுவது மான நிரந்தரமான படைப்புச் செயல் ஒன்று இல்லாமல், படைக்கப் பட்ட இடைநிலை என்பது சாத்தியமேயில்லாமல் இருக்கும். இதன் காரணமாக, சிருஷ்டிக்கப்பட்ட உயிர்கள் அனைத்தினுடையவும் இருத்தலைப் பராமரித்தல் பாதுகாக்கப்படுவதும், அவை செயல்படத் தூண்டுவதும், செயல்பட உதவுவதும் ஒரு தொடர்ச்சி யான சிருஷ்டிப்பு என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் சிருஷ்டிப்பதாகிய அதே மூலாதாரம்தான் இருத்தலில் அவற்றைப் பராமரித்து, அவை செயல்பட உதவியும் செய்கிறது.

சுபாவத்திற்கு மேற்பட்ட உலகத்திலும் இது இப்படியே இருக்கிறது. மனிதாவதாரமும் இரட்சணியமும் சுபாவத்திற்கு மேலான உலகத்தின் இருத்தலின் ஆதிகாரணமாக இருக்கின்றன. சுபாவமான உலகத்திற்குக் கடவுளின் சிருஷ்டிப்புச் செயல் எப்படியோ, அதே உறவைத்தான் இவை சுபாவத்திற்கு மேற்பட்ட உலகத்தோடு கொண்டிருக்கின்றன. அவையே அதன் மூலமும், காரணமுமாக இருக்கின்றன. இனி, மனிதாவதாரமும், இரட்சணியமும்தான், தன்னிலும், பொதுவிலும் சுபாவத்திற்கு மேலான உலகம் என்று அழைக்கப்படும் வரப்பிரசாதக் குவியல் முழுவதையும் உண்டாக் கியது போலவே, மனிதாவதாரமும், இரட்சணியமும்தான் தனிப் பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் அந்தப் பொதுவான வரப் பிரசாதக் குவியலைப் பகிர்ந்தளிக்கிறது. ஆகவே, இவையே எக்காலத்திலும், எவ்விடத்திலும் நிரந்தரமான ஆதிகாரணங்களாக இருக்கின்றன.

மனிதாவதாரம் நிரந்தரமானதாகி, கத்தோலிக்கத் திருச்சபையை உண்டாக்கியுள்ளது. இந்தத் திருச்சபை, புத்தியுள்ளவையும், புத்தியற்றவையுமான கருவிகளில் இணைந்திருக்கிற கிறீஸ்துநாதரை விட எந்த விதத்திலும் தாழ்ந்ததல்ல. அவர், அவைகளிலும், அவற்றின் வழியாகவும் தலைமுறை தலைமுறையாக மனிதர்களைத் தம் திருச்சரீரத்தின் உறுப்பினர்களாக்கி, அவர்களை நித்திய ஜீவியத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கும்படியாக, அவர்களைச் சுத்திகரித்துப் பரிசுத்தப்படுத்தி, விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகத்தால் தம்மோடு அவர்களை இணைத்துக்கொள்கிறார்.

இரட்சணியம் என்பது நிரந்தரமானதாகவும் ஆகியுள்ளது, ஏனெனில், இரட்சணியமானது கல்வாரிப் பலியில் ஸ்திரப்படுத்தப் பட்டுள்ளது, அப்ப இரச குணங்களுக்குள் மறைந்திருக்கிறவரான கிறீஸ்துநாதர் எந்த நோக்கங்களுக்காகக் கல்வாரியில் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தாரோ, அதே நோக்கங்களுக்காக இப்போது அனுதினமும் நித்தியப் பிதாவுக்குத் தம்மையே ஒப்புக்கொடுத்து, எக்காலத்திலும், எவ்விடத்திலும், இந்தப் பொதுப் பலியின் பலன்களைத் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் தந்தருள்கிறார்.

ஆகவே, ஒரு பொதுவான முறையில் ஒரு பொருளை உண்டாக்கும் அதே மூல காரணம் ஒவ்வொரு தனிப்பட்ட காரியத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்பதும், இதுவே கடவுளின் கைவேலைகளின் திருச்சட்டமாக இருக்கிறது என்பதும், அவருடைய செயல்பாட்டின் மூலாதாரங்கள் நிரந்தரமானவை, ஒரே தன்மை யுடையவை என்பதும் தெளிவாகிறது.

இனி, சுபாவத்திற்கு மேலான உலகத்திடம் எதிர்பார்க்கப்படும் விளைவைச் செயல்படுத்துவதில் மாமரியின் பங்கு என்ன? அது உண்டாக்கப்படுவதில் மாமரியின் பணி என்னவாக இருந்தது? அவர்கள் மனிதாவதாரம் மற்றும் இரட்சணியம் என்னும் பரம இரகசியங்களின் மத்தியஸ்தியாக ஆக்கப்பட்டார்கள். கடவுள் அவற்றை அவர்களுடைய கரங்களில் வைத்தார். மாமரியின் நேரடிச் சம்மதம் இல்லாமல் அவர் இந்த இரண்டு பரம இரகசியங்களையும் செயல்படுத்தியிருக்க மாட்டார். ஆகவே, இந்த இரு பரம இரகசியங்களும் தங்களிலும், தங்கள் பலன்களிலும் மாமரியின் சம்மதத்திற்கே கடன்பட்டிருக்கின்றன.

இனி, பொதுவில் ஒரு பொருளை உண்டாக்குகிற அதே மூல காரணி, ஒவ்வொரு தனிப்பட்ட காரியத்திலும் அதைப் பயன்படுத்து கிறது என்றும், கடவுள் தம் வேலைகளை உருவாக்குவதில் பயன் படுத்துகிற மூல காரணிகள் நிரந்தரமானவையாக இருக்கின்றன என்றும், மேலே விளக்கப்பட்டு, எண்பிக்கப்பட்ட சட்டத்தின்படி, சுபாவத்திற்கு மேலான உலகத்தை உண்டாக்குவதில் மாமரியின் பங்கும் நிரந்தரமானதாகவே இருக்க வேண்டும் என்றும், சுபாவத்திற்கு மேலான உலகத்தைச் சிருஷ்டித்தவையாகிய மனிதாவதாரம் மற்றும் இரட்சணியம் என்னும் பரம இரகசியங் களின் மத்தியஸ்தியாக அவர்களே இருப்பதால், சுபாவத்திற்கு மேலான உலகத்தை உருவாக்கும் வரப்பிரசாதத்தின் ஒவ்வொரு பயன்பாட்டிலும் அவர்களே மத்தியஸ்தியாக இருக்க வேண்டும் என்றும் நாம் முடிவு செய்ய வேண்டும்.

இந்த விளைவு நமக்கு அனைத்திலும் சிறந்த சாட்சியமாகத் தோன்றுகிறது. சுபாவமான, இயற்கையான உலகத்தை உண்டாக்கும் சிருஷ்டிப்பின் செயல் நிரந்தரமானதாக இருக்கிறது; மனிதாவதார மும், இரட்சணியமுமாகிய பரம இரகசியங்கள் நிரந்தரமானவை யாக இருக்கின்றன; இந்த இரு பரம இரகசியங்களையும் செயல்படுத்துவதற்கு மிக முக்கியமானதும், அவசியமானதாகவும் இருந்த மாமரியின் ஊழியம் மட்டும் நிரந்தரமானதாக இருக்காதா? இவர்களுடைய காரியத்தில், அதுவும் இவர்களுடைய காரியத்தில் மட்டும் கடவுள் தம் வேலை முழுவதினுடையவும் இந்தச் சட்டத்தை மாற்றிக் கொள்வாரா? மாமரியே மனிதாவதாரமும், இரட்சணிய முமாகிய பரம இரகசியத்தின் மத்தியஸ்தியாக இருந்தார்கள் என்பதால், அவற்றின் பயன்பாட்டிலும் அவர்களே மத்தியஸ்தியாக இருக்க வேண்டும், அந்தப் பரம இரகசியத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒவ்வொரு வரப்பிரசாதமும் அவர்களுடைய கரங்களின் வழியாகத்தான் கடந்து வர வேண்டும்.

முந்திய வாதத்தில் கூறப்பட்ட சட்டத்திற்கு ஆதரவாயிருக்கக் கூடிய மற்றொரு காரணத்தை நாம் தருவோம். அடுத்தடுத்த நிகழ்வு என்று எதுவும் கடவுளில் கிடையாது. தற்காலம் மட்டுமே அவருடைய ஒரே காலம். நாமே இருக்கிறவர். அவருடைய செயல்பாடு பற்றியும் இதை நாம் சொல்ல வேண்டும், அது அவசியமான விதத்தில் அவருடைய சுபாவத்தில் பங்கேற்பது அவசியம். இவ்வாறு, நாம் மேலே சொல்லியிருக்கிறபடி, அவருடைய மனிதாவதாரம் நிரந்தரமாக நிலைத்திருப்பதாக இருக்கிறது. சேசுக்கிறீஸ்துநாதர் ஒரு முறை மாமரியிடமிருந்து பிறந்தது போலவே, அவர் இடைவிடாமல் அவர்களிடமிருந்து பிறந்து கொண்டிருக்கிறார். இந்த சத்தியத்தை அர்ச். பெர்னார்ட் எப்படி விளக்குகிறார் என்று பார்ப்போம்: 

‘இன்று உங்களுக்காக இரட்சகர் பிறந்திருக்கிறார். இது ஒன்றும் புதிதல்ல, இது ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது என்று எந்த ஒரு பக்தியற்ற இஸ்பிரீத்துவும் நம்மிடம் சொல்லாதிருக்கக்கடவது; இது மற்ற காலங்களிலும், முன்பும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன். கிறீஸ்து நம்முடைய காலத்தில் மட்டும் பிறக்கவில்லை, மாறாக அவர் யுகங்களுக்கெல்லாம் முன்பே பிறந்தவராக இருக்கிறார். இநதப் பிறப்பு அணுக இயலாத ஒளியில் தங்கி வசிக்கிறது, அது பிதாவின் திருநெஞ்சத்தின் உள்ளாழங்களில் மறைந்திருக்கிறது. ஆனால் அது ஏதோ ஒரு வகையில் நமக்கு வெளிப்படுத்தப்படும்படியாக, அவர் பிறக்கிறார், காலத்தில் பிறக்கிறார்; மாம்சத்திடமிருந்து பிறக்கிறார். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு, ‘‘நமக்காக ஒரு பாலன் பிறந்திருக்கிறார்'' என்று சொல்லப்பட்டிருக்கும்போது, அவருடைய பிறப்பிலிருந்து இக்காலம் வரை அவர் திருச்சபையில் பிறப்பதாகச் சொல்லப்படு வதில் என்ன அதிசயம் இருக்கிறது? தேவ திருச்சுதனாகிய சேசுக் கிறீஸ்துநாதர் நேற்று இருந்தார், இன்று இருக்கிறார், என்றென்றும் இருப்பார் என்பது உண்மையில்லையா? ஒரு குறிப்பிட்ட விதத்தில் நித்தியத்தின் மாதிரிகையாகிய அவர் தம்முடைய விஸ்தாரமுள்ள தெய்வீக நெஞ்சத்தில் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வரவிருக்கும் காலத்தையும் சேர்ந்த காரியங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார் என்றால், எதுவும் அவரைத் தொடர்ந்து வருவதில்லை, எதுவும் அவருக்கு முன்பாக இருந்ததில்லை. ஆகவே, ஆத்துமங்களைத் தொடர்ச்சியாகப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் காரியத்தை நாம் எப்போதும் புதியதென்றே நினைப்போம், பலன் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தாதிருக்கும் காரியத்தைப் பழையது என்று நாம் ஒருபோதும் நினையாதிருப்போம். கிறீஸ்துநாதருடைய திருமரணத்தை நாம் எத்தனை முறை நினைவுகூர்கிறோமோ, அத்தனை முறை அவர் அனுதினமும் பலியாக்கப்படுவது போலவே, அவருடைய பிறப்பைப் பற்றி நாம் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் அவர் பிறப்பதாகவே கருதப்பட வேண்டும்'' (றீமி. யerஐ, ஷ்ஐ Vஷ்ஆ. ஹிழிமி., றீerது. ஸஷ்).

கடவுளை நாம் புரிந்துகொள்ள முடியாது என்ற காரணத்தால், இந்தப் பரம இரகசியத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் கடவுளும் அவருடைய மனிதாவதாரமும் நமக்குத் தந்தருளப்பட்டுள்ளதால், நாம் அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நித்தியமானவர் காலத்திற்குள் வரும்போது, பெருங்கடல் ஒரு சிறிய ஜாடிக்குள் தன்னையே ஊற்றுவது போல, அவர் அதை நிரப்பவும், அதைக் கடந்து செல்லவும் கூட வேண்டும். அவரே அதன் பரிபூரண முழுமையாக இருக்க வேண்டும். அவரே தேவ-மனிதன் என்ற முறையில் தற்காலிக-நித்திய ஜீவியராக இருக்க வேண்டும். சேசுக்கிறீஸ்துநாதரின் மனிதாவதாரம், அவருடைய பிறப்பு, அவருடைய வாழ்வு, அவருடைய மரணம் ஆகிய பரம இரகசியங்கள் நிரந்தரமானவை, எல்லா நூற்றாண்டுகளிலும் பலன் தருபவை என்றும், அவர் பூமியில் வாழ்ந்த காலத்திற்காக மட்டும் அவை நிறைவேற்றப்படவில்லை, மாறாக, அதற்கு முந்திய காலங் களுக்காகவும், அதைத் தொடர்ந்து வந்த காலங்களுக்காகவும் அவை நிறைவேற்றப்படுகின்றன என்றும் வேத பிதாக்கள் கூறுகிறார்கள்.

இந்த மகத்துவமுள்ள சத்தியத்திலிருந்து, சேசுக்கிறீஸ்துநாதர் தொடர்ச்சியாகவும், தனிப்பட்ட விதமாகவும் தரப்படுவது என்பது மரியாயின் வழியாக நடந்தேறிய முதலாவதும், பொதுவானதுமான கொடையே தவிர வேறு எதுவுமில்லை என்பதும், மாமரி முன்பு அவரை உலகத்திற்குத் தந்துள்ளது போலவே, எப்போதும், தனிப்பட்ட விதமாக ஒவ்வொருவருக்கும் அவரைத் தருகிறார்கள் என்பதும் விளங்குகிறது. சேசுக்கிறீஸ்துநாதருக்கு முன்பும், பின்பும் இருந்த சகல மனிதர்களுடையவும் குற்றம் அவருடைய பலியின் போது அவர் மீது சுமத்தப்பட்டு, அவருடைய திருப்பாடுகளின் கிண்ணத்தில் தங்கள் கசப்பை ஊற்றியது போலவே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்துளிக்கப்பட வேண்டியதாயிருந்த வரப் பிரசாதங்கள் மாமரியிடமிருந்து அவருடைப பிறப்பிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. தம்முடைய தேவ பராமரிப்பின் ஒழுங்கில் மிக அதிகத் தொலைவான ஆதிகாரணிகளில் விளைவுகளை ஆயத்தம் செய்கிறவரான சர்வேசுரன், போஸுவே குறிப்பிடுவது போல, மனிதர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டியவை யாகிய சகல வரப்பிரசாதங்களையும் சேசுக்கிறீஸ்துநாதராகிய முதன்மையான மூல காரணத்திலும், மாமரியாகிய கருவியாகிய காரணத்திலும் ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். அவை பகிர்ந் தளிக்கப்படுவது இந்தத் திட்டத்தை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. மாமரியைப் பொறுத்த வரை, இது அவர்களுடைய தெய்வீகத் தாய்மையின் வளர்ச்சியும், விரிவுமே யன்றி வேறு எதுவுமில்லை. பிதாவாகிய சர்வேசுரனுடைய உள்ளரங்கத்தினின்று மாமரியின் தாழ்ச்சியுள்ள மாசற்ற இருதயத் தினுள் பாய்ந்து வருகிற வரப்பிரசாத நதி, ஒரு பொதுவான நீர்ச்சுனை யிலிருந்து வருவது போலப் பொங்கி வந்து, தன் ஆதிகாரணரின் உச்சத்தையும் கூட சென்றடைந்து, மீண்டும் அவர்களுடைய கன்னிமையினுள்ள ஆத்துமத்தினுள் விழுந்து, அதை முதலிலும், எல்லாப் படைப்புகளுக்கும் மேலாகவும் நிரப்புகிறது, அதிலிருந்து அது ஓராயிரம் சிற்றோடைகளாகப் பொங்கி வழிந்து, திருச்சபை யாகிய முழுச் சரீரத்திற்குள்ளும் ஜீவ ஆவியைப் பாய்ச்சுகிறது. இந்தப் பரம இரகசியம் இடையறாததாக இருப்பது போலவே, மாமரி பிரியதத்தத்தினாலே பூரணமானவர்களாக இருப்பதும் இடையறாத தாக இருக்கிறது. அவர்களே இந்த வரப்பிரசாதத்தின் இடைவிடாத நீர்த் தேக்கமாகவும், அதன் வாய்க்காலாகவும் இருக்கிறார்கள்.

ஓர் ஒப்புமையைக் கொண்டு இந்தப் பிரிவை நிறைவு செய்வோம். அது ரெபேக்காளைப் போல் அதே சமயத்தில் ஓர் உருவகமாகவும் இருக்கிறது. அவள் அற்புதமான நளினமும், மிகுந்த அழகும் உள்ளவளாகவும், மனிதனை அறியாத கன்னிகையாகவும் இருந்தாள். மாமரி தன் தாழ்ச்சியால், இரட்சகரின் நீரூற்றுகளுக்குள் இறங்கி, இடைவிடாமல் தன்னுடைய நீர்ச்சாடியை நிரப்பி, அதைத் தன் கரங்களில் வைத்துக் கொண்டு, அவர்களிடம் கேட்கிற பக்தியுள்ள ஊழியனுக்கு மட்டுமின்றி, மிருகங்களுக்கும் அவற்றைப் பருகத் தருகிறார்கள், இந்த மிருகங்களைப் பரிசுத்த வேதாகமம் பாவிகளுக்கு ஒப்பிடுகிறது. இவர்களும் மாமரியின் நிறைவினின்று பெற்றுக்கொள்கிறார்கள், அதனால் அவர்கள் தாகம் தீர்க்கப்பட்டுப் புத்துயிரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.