✠ கத்தோலிக்க பேதகமறுத்தல்

பாயிரம். பொய் நிறைந்த பேதகமென்னும் பதிதர் சுவடியை மறுக்கிற இப்பிரபந்தத்துக்குப் பேதகமறுத்தலென்கிற பெயரே தகுதியாம்.

1. வேதாகமங்கள் தேவ வாக்கியமென்று நிச்சயிக்கிறதற்காகத் திருச்சபையின் அத்தாட்சி தேவையில்லை என்பதையும், விசுவசிக்கத்தகுஞ் சத்தியமெல்லாம் அதுகளில் அடங்கி இருக்கின்ற தென்பதையும் மறுத்தல்.

2. வேதப் புஸ்தகங்களை வாசிக்கிறதை அறியாமை வளரும் பொருட்டு உரோமான் திருச்சபை விலக்குகின்றதென்பதை மறுத்தல்.

3. தேவ வாக்கியத்தின் மெய் அர்த்தத்தை நிச்சயிக்கவும், வேத தர்க்கங்களைத் தீர்க்கவும், அர்ச். பாப்பு முதலிய நடுவர் தேவையில்லை யென்பதை மறுத்தல்.

4. அர்ச்சியசிஷ்டவர்களுடைய வணக்கத்துக்கு விரோதமாய்ச் சொன்னதை மறுத்தல்.

5. திருச்சபையின் முறைமைச் சடங்கு கற்பனைகளுக்கும், அர்ச். பாப்பானவருடைய அதிகாரக் கட்டளைகளுக்கும் விரோதமாய்ச் சொன்னதை மறுத்தல்.

6. திருச் சுரூபங்கள் வேதத்துக்கு ஒவ்வாதென்பதை மறுத்தல்.

7. அர்ச்சியசிஷ்டவர்களை வேண்டிக்கொள்ள லாகாதென்பதை மறுத்தல்.

8. சேசுநாதர் எல்லா மனிதர் பாவத்துக்காகப் பூரணமாய் உத்தரித்ததைப் பற்றி நம்மிடத்தில் தவமொறுத்தல் முதலிய புண்ணியக் கிரிகைகளால் உத்தரிப்புத் தேவையில்லையென்பதை மறுத்தல்.

9. சேசுநாதர் ஏக மத்தியஸ்தராய் இருக்கிறதைப் பற்றித் தேவமாதா முதலிய அர்ச்சிய சிஷ்டர்களுடைய மன்றாட்டின் உதவியைத்
தேடலாகாதென்பதை மறுத்தல்.

10. திவ்விய பூசைக்கு விரோதமாய்ச் சொன்னதை மறுத்த ல்.

11. விசுவாசமல்லாமல் நற்கிரியை ஈடேற்றத்துக்கு உதவாதென்பதை மறுத்தல்.

12. எவனானாலுந் தான் மோட்சத்தை அடைவேனென்கிறதின் மேல் ஐயப்படலாகாதென்பதை மறுத்தல்.

13. மனிதருடைய தருமமெல்லாம் எப்போதும் பாவமுள்ள தென்பதையும், கடமைக்கு மிஞ்சின உத்தம நல்வினையும், நற்கிரியைகளுக்குப் பேறுபலனும் இல்லையென்பதையும் மறுத்தல்.

14. அர்ச். பாப்பு பெற்ற தலைமைப் பட்டத்திற்கும், மோட்சத் திறவுகோல்களால் அடைந்த வல்லமைக்கும் விரோதமாய்ச் சொன்னதை மறுத்தல்.

15. பூசை லத்தின் பாஷையில் வழங்குதற்கும், திருச்சபைத் தலைவர்களின் கட்டளைகளுக்கும் விரோதமாய்ச் சொன்னதை மறுத் தல்.

16. தேவாராதனை லத்தீன் பாஷையில் வழங்கலாகாதென்பதை மறுத்தல்.

17. தேவத்திரவிய அநுமானங்கள் பத்தி விசுவாச முதலிய ஆயத்தமின்றிப் பலிக்குமென்று உரோமான் சபை படிப்பிக்கிற தென்பதை மறுத்த ல்.

18. யாவரும் இருவகையில் தேவநற்கருணை வாங்க வேண்டுமென்பதை மறுத்தல்.

19. குருக்களுக்கு விவாகத்தை விலக்கலாகா தென்பதை மறுத்தல் .

20. ஒருசந்தி சுத்தபோசன நாட்களுக்கு விரோதமாய்ச் சொன்னதை மறுத்தல்.

21. பதிதருக்கு வார்த்தைப்பாட்டைச் செலுத்தத் தேவையில்லையென்று உரோமான் திருச்சபை படிப்பிக்கிறதென்பதை மறுத்தல்.

22. குருக்களும், சந்நியாசிகளும் இராசாக்களுக்குக் கீழ்ப்படியத் தேவையில்லையென்று உரோமான் திருச்சபை போதிக்கிற தென்பதை மறுத்தல்.

23 அர்ச் . பாப்பானவரை அந்திக்கிறீஸ்து என்பதை மறுத்தல்.

24. நாகமும் மோட்சமுமன்றி உத்தரிக்கிற ஸ்தல முதலிய ஸ்தலங்கள் இல்லையென்பதை மறுத்தல்.

25. பேதகமறுத்தலின் கடைப் புணர்ச்சி பதிதர் எழுதிய பதின்மூவேட்டுச் சுவடியில் 78 பொய் விளங்குவதால், அவர்கள் சமயம் பொய் மதம் அல்லாதே ஈடேற்றத்துக்குரிய நெறி அல்லவென்று அறிக.