இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி நித்திய சுதனை முழுமைப்படுத்துகிறார்கள்.

நித்திய வார்த்தையானவர் சிருஷ்டிகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார், ஏனெனில் அவரே அவர்களுடைய மாதிரி யாகவும், அச்சாகவும் இருக்கிறார். தமக்கேயுரிய நிலையில் அவர் அவற்றின் புரிந்துகொள்ளப்படக் கூடிய வாழ்வாகவும் இருக் கிறார். என்றாலும், அவருடைய சிருஷ்டிகளைப் பற்றிய ஒரு வகையான அறிவு--பரீட்சார்த்த முறையிலான அறிவு--வார்த்தை யானவரிடம் இன்னும் குறைவாயிருக்கிறது. வார்த்தையானவரின் இந்தத் தேவையானது என்பது, வாஸ்தவமாகவே, ஒரு குறைபாடு அல்ல, ஏனெனில், ஒரு காரியத்தை அதன் காரணத்தில் அறிந்திருக்கிற ஒருவர், அக்காரியத்தில் அதை நேரடியாக உணர்ந்து அறியும் ஒருவனை விட அதிக உத்தமமான முறையில் அதை அறிந்திருக் கிறார். வார்த்தையானவர் பிரபஞ்சத்தின் ஆதித் தொடக்கமாகவும், அவற்றின் மாதிரிகையான ஜீவியமாகவும் இருக்கிறார் என்ற முறையில் அவர் தம்மிலேயே சகல காரியங் களையும் அறிந்திருக்கிறார். இதன் காரணமாக, அவற்றை நேரடி யாகக் கண்டுணர்வதால் எந்த அளவுக்கு அவற்றை அறிந்திருப் பாரோ, அதை விட அதிக உத்தமமான முறையில், அவர் அவற்றை அறிந்திருக்கிறார்.

என்றாலும், இந்த நேரடியான உணர்தலை, தம்முடைய சிருஷ்டிகளைப் பற்றிய இந்தப் பரீட்சார்த்த முறையிலான அறிவை அவருடைய சிருஷ்டிக்கும் செயல்பாடு வெகுவாக ஆசித்தது. ஏனெனில் அப்படிப்பட்ட ஓர் அறிவு, சிருஷ்டிகரைப் பொறுத்த வரை ஓர் அதிகப் பெரிதான விதத்தில் சிருஷ்டிகளை நோக்கித் தயவோடு இறங்கி வரும் செயலாகவும், அதிக மேலான ஓர் ஐக்கியமாகவும், அதிக நெருக்கமான ஓர் அந்நியோந்நியமாகவும், மாதிரியாக இருப்பவருக்கும், அவருடைய கைவேலைக்கும் இடையேயுள்ள அதிக பிரமாண்டமான ஒன்றிப்பாகவும் இருக் கிறது.

அறிவைப் பற்றி நாம் சொல்லியுள்ள காரியம், உணர்வு களைப் பற்றியும் சொல்லப்பட வேண்டும். வார்த்தையானவர், சர்வேசுரன் என்ற முறையில், எந்த விதமான வளர்ச்சிக்கும் உட்பட்டவர் அல்ல என்பதால், தம் படைப்பின் உணர்வுகளை அவர் கொண்டிருக்க முடியவில்லை. என்றாலும், படைக்கும் செயல், அதே காரணத்திற்காக, இந்த உணர்வுகளின் ஐக்கிய நிலையை வெகுவாக ஆசித்துத் தேடியது. ஏனெனில் மாதிரியாக இருப்பவருக்கும், அவருடைய கைவேலைக்கும் இடையே அதிக தாராளமானதும், அதிக அந்நியோந்நியமானதுமான ஓர் உறவை அது தேடுகிறது. ஒரு குறிப்பிட்ட காரியத்தில் அர்ச். தாமஸ் அக்குயினாஸின் ஒரு கொள்கை இந்தக் கோட்பாட்டை விளக்கிக் காட்டி அதைப் பலப்படுத்துவதாக இருக்கிறது: இந்த சம்மனசுக் கொத்த வேதபாரகர் கூறுவதாவது: ‘‘இரக்கம் என்னும் புண்ணியத்தில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, இரக்க மானது செயல்பட்டு ஒருவரை எவற்றிலிருந்து விடுவிக்கிறதோ அந்தத் தேவைகள் மற்றும் நிர்ப்பாக்கியங்களைக் கொஞ்சமும் உணராமல் நன்மையைச் செய்வதற்கான வல்லமை மற்றும் சித்தம் ஆகும். இரண்டாவது அம்சம் என்பது நன்மை செய்வதற்கான வல்லமையையும், சித்தத்தையும் கொண்டிருப்பது மட்டுமின்றி, இரக்கம் எவற்றிலிருந்து ஒருவனை விடுவிக்கிறதோ அந்த நிர்ப்பாக் கியங்களை உணரவும், துன்பப்படுபவனின் துயரத்தைக் கண்டு பரிதாபப்படவும், அதில் பங்குபெறவும் கூடியவராக இருப்பது ஆகும்.''

கடவுள் படைப்புகளை விடுவிப்பதற்கான வல்லமையையும், சித்தத்தையும் கொண்டிருப்பதால், முதலாவது அம்சத்தின்படி, சாத்தியமான மிக உன்னதமான, உத்தமமான முறையில் இரக்கமாகிய புண்ணியத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறார். என்றாலும், படைக்கும் செயல் இரக்கத்தின் இரண்டாவது அம்சத்தையும், அதாவது உணர்வுகளின் ஐக்கியத்தை, தம் சிருஷ்டிகளின் துக்கத்திலும், வேதனையிலும், சந்தோஷத்திலும், இன்பங்களிலும் பங்குபெறுவதையும் ஏக்கத்தோடு தேடியது. ஏனெனில் உணர்வுகளின் ஐக்கியம், இன்ப துன்பங்களில் இந்தப் பங்குபெறுதல், ஓர் அற்புதமான முறையில், கடவுளின் அளவற்ற நன்மைத்தனத்தை அதிகரிக்கிறது!

மகா பரிசுத்த கன்னிகை வார்த்தையானவரை மனித மாம்சத்தால் உடுத்தியபோது, தம் சிருஷ்டிகளைப் பற்றிய பரீட்சார்த்த முறையிலான அறிவையும், அவர்கள் உணர்வது போல உணரும் திறனையும் கொண்டிருக்க அவருக்கு உதவினார்கள்; அவர்களுடைய அதியற்புதமான ஊழியத்தின் வழியாகவே நாம் அர்ச். சின்னப்பரோடு சேர்ந்து: ‘‘நமக்கு உள்ள குருவானவர் நம்முடைய பலவீனங்களில் நமக்கு இரங்க முடியாதவர் அல்ல. ஆனால் பாவம் நீங்கலாக மற்ற எவ்விதத்திலும் அவர் நமக்கு ஒத்தவராய்ப் பரிசோதிக்கப்பட்டவராயிருக்கிறார்'' (எபி.4:15) என்று வியந்து கூறக் கூடியவர்களாக இருக்கிறோம்.