இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் வரப்பிரசாத அதிகரிப்பு -- அதன் தனிச் சட்டம்

மரியாயின் வரப்பிரசாதத்தைப் பற்றி விரிவாகப் பார்த்தபின் இப்போது நாம் அதன் சுபாவ அதிகரிப்பையும் வளர்ச்சியையும் பற்றிப் பேசப் போகிறோம். இதைத் தெளிவோடு செய்வதற்கு, ஒரு சில கொள்கைகளை நாம் தெளிவுபடுத்த வேண்டும்:

முதலாவதாக: மாமரி தான் அறியாத எந்த ஒரு செயலையும் அலட்சியமான முறையில் ஒருபோதும் செய்யவில்லை. அதாவது, ஒரு செயலின் நோக்கத்தைப் பற்றிய உணர்வும் அறிவுமின்றி அவர்கள் அதை ஒருபோதும் செய்ததில்லை. அந்தச் செயலின் தன்மை எதுவாக இருந்தாலும், அது தன்னிலேயே அசட்டைத் தனமுள்ளதாக அல்லது நல்லதாக இருந்தாலும் எப்போதும் அது கடவுளின் புகழ்ச்சியையும், மகிமையையும் மட்டுமே குறிக் கோளாகக் கொண்டிருந்தது.

இரண்டாவதாக: இதன் காரணமாக, மாமரியின் ஒவ்வொரு தனிச் செயலும் சுதந்திரமானதாகவும் பேறுபலன்கள் நிறைந்த தாகவும் இருந்தது.

மூன்றாவதாக: மாமரியின் பேறுபலனுக்கு, அவர்களுடைய உறக்கத்திலும் கூட, எந்த இடையூறும் ஒருபோதும் ஏற்படவில்லை, ஏனெனில் மாமரிக்கும் கடவுளுக்குமிடையே ஏற்படுத்தப்பட்டிருந்த அதீதமான ஐக்கியத்தின் விளைவாக, கடவுளால் இடைவிடாமல் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் நிலையிலிருந்து அவர்களது மனமும் இருதயமும் ஒரு கணம் கூட வெளியே வந்ததில்லை.

நான்காவதாக: மாமரி தான் செய்த ஒவ்வொரு செயலையும் தனது முழுமையான வரப்பிரசாதம், புண்ணியங்கள், ஆற்றல் ஆகியவற்றால் நிரப்பினார்கள். இதைச் செய்ய, அவர்களது வரப்பிரசாதத்தின் பிரமாண்டத்தின் அளவுக்கேற்ப கடவுள் அவர்களுக்கு உதவியாக இருந்தார்.

ஐந்தாவதாக: இதன் காரணமாக, மாமரி, தனது ஒவ்வொரு செயலிலும், அந்தச் செயலுக்கு முன்பாகத் தான் கொண்டிருந்த வரப்பிரசாதத்தின் அளவை இரு மடங்காக்கினார்கள்.

இந்தக் கடைசி இரண்டு கொள்கைகளையும் நாம் சற்று நிரூபிக்க வேண்டியுள்ளது.

மனிதர்களை அவர்களுடைய புண்ணியத்தின் முழுத் தீவிரத்தோடும் ஆற்றலோடும் செயல்பட விடாமல் தடுப்பவை நம் வீழ்ச்சியுற்ற சுபாவத்தாலும், இச்சையாலும் எழுப்பப்படுகிற தடைகளேயாகும். மாமரியில் இது நேருக்கு மாறாயிருந்தது. ஏனெனில் பாவத்தின் கொடுக்கு இன்றியும், முற்றிலும் அதிலிருந்து விடுபட்டவர்களாகவும் உற்பவித்ததால், தனது புண்ணியத்தின் முழுத் தீவிரத்தோடு அன்றி எந்தச் செயலையும் செய்வதற்கு எதிரான எந்த ஒரு தடையையும் எதிர்ப்பையும் அவர்கள் ஒருபோதும் சந்திக்கவில்லை.

புண்ணியப் பழக்கம், அதன் அளவுக்குத் தக்க விதத்தில் கடவுளின் செயல்பூர்வ ஒத்தாசையோடு சேரும்போது, வேதசாஸ்திரிகளின் கருத்துப்படி, அந்தப் பழக்கத்திற்குச் சமமான அளவுக்குத் தீவிரத்தன்மையுள்ள ஒரு செயலைப் பிறப்பிக்க முற்றிலும் போதுமானதாக இருக்கிறது என்ற உண்மையிலிருந்து ஐந்தாவது கொள்கை. இதன் காரணமாக, மாமரி, ஒவ்வொரு புதிய செயலிலும் அந்தச் செயலுக்கு முன் தான் கொண்டிருந்த வரப்பிரசாதத்தின் அளவை இருமடங்காக்கினார்கள்--அதாவது, ஒவ்வொரு புதுச் செயலும் அவர்களுடைய முந்திய பழக்கத்திற்குச் சமமானதாக இருந்தது.

இனி, இந்தக் கொள்கைகளை வழிகாட்டிகளாகக் கொண்டு, மாமரி தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் குவித்து வைத்த வரப்பிரசாதப் பொக்கிஷத்தைப் பற்றி ஓரளவுக்கு நாம் புரிந்து கொள்ளலாம். இந்த அதிகரிப்பை நம் வாசகர்கள் புரிந்துகொள்ளச் செய்யும்படி, மாமரி தன் வாழ்வின் முதல் கணத்திலிருந்து சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்களின் ஒட்டுமொத்த வரப்பிரசாதத்தை விட அதிகமான தேவ இஷ்டப்பிரசாதத்தை ஒரு மடங்கு (லிஐe deஆree) அதிகரிக்கத் தொடங்கினார்கள் என்ற அனுமானத்திற்கு நாம் வரலாம். 

மாமரியின் உற்பவத்தின் முதல் கணத்தில் சம்மனசுக்கள் மற்றும் அர்ச்சியசிஷ்டவர்களின் ஒட்டுமொத்த வரப்பிரசாதங்களை விட மாமரியின் வரப்பிரசாதம் பிரமாண்டமான முறையில் மிக அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அவர்களுடைய வாழ்வில் எல்லா ஆண்டுகளிலும், பிறர்சிநேகச் செயல்களிலும் மற்ற புண்ணியச் செயல்களிலும் செலவழிக்கப்பட்ட அவர்களது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அவர்கள் சம்பாதித்த வரப்பிரசாதங்களைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? அத்தகைய ஒரு வாழ்வின் எழுபத்திரண்டு வருடங்களைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? மாமரியின் உற்பவத்தின் முதல் கணத்திலும், அதன் இயல்பான வளர்ச்சியின் போதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட மனப்பாங்கின் வரப்பிரசாதத்தைப் பற்றி நாம் சிந்திக்கும்போதும் கூட, பரிசுத்தரான ஒரு திருச்சபைத் தந்தையோடு சேர்ந்து நாமும் மாமரியின் வரப்பிரசாதம் ‘‘பிரமாண்டமான பெரும் பாதாளமாகிய வரப்பிரசாதம்'' என்று வியந்து கூறலாம்.