இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சுபாவத்திற்கு மேலான காரியம்

அத்தியாயம் 3

சுபாவத்திற்கு மேலான இலட்சணங்கள்

இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில், மாமரிக்கு நியமிக்கப்பட்டிருந்த இரு விதமான மகத்துவத்திற்கு அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்கத் தேவையாயிருந்த சுபாவ இலட்சணங் களைப் பற்றி நாம் விவாதித்தோம். இனி, இந்த அத்தியாயத்தில் இத்தகைய ஒரு பணிக்கு இன்னும் அதிக அவசியமானவையும், முக்கியமானவையுமான தகுதிகளைப் பற்றி நாம் பேசப் போகிறோம். அவைதான் சுபாவத்திற்கு மேலான இலட்சங்கள் ஆகும். அவை நன்றாகப் புரிந்துகொள்ளப்படும்படி, பொதுவில் சுபாவத்திற்கு மேலானது பற்றிய ஒரு பொது சிந்தனையையும், தனிப்பட்ட முறையில் தேவ இஷ்டப்பிரசாதத்தையும், அதன் எல்லா விளைவுகள் மற்றும் சூழ்நிலைகளையும் பற்றி நாம் விளக்கப் போகிறோம். இந்த அத்தியாயம் முழுவதையும் சரியாகப் புரிந்து கொள்ள ஒரு முன்னுரையாக இது உதவும்.

பிரிவு 1

சுபாவத்திற்கு மேலான காரியம்

நாம் சுபாவத்திற்கு மேலான காரியம் என்று பேசும்போது, நம் மனங்களில் தோன்றும் முதல் சிந்தனை, சுபாவத்திற்கு மேலானதும், அப்பாற்பட்டதுமான ஒன்றாக இருக்கிறது. இதைப் பற்றி நம் மனதில் எழும் முதல் கேள்வி: சுபாவத்திற்கு மேலான காரியத்திற்கு என்ன அவசியம் இருக்கிறது? அது இல்லாமல் மனிதன் தனது இறுதிக் கதியை நோக்கி வளர்ச்சிபெற்று அதை வந்தடைய முடியாதா?

மனித மனம் ஏன் இவ்வளவு அதிகமாக சுபாவத்திறகு மேலானதை வெறுக்கிறது என்பதற்கான காரணத்தை நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள இயலவில்லை. அறியாமையும், சுபாவத்திற்கு மேலானது பற்றி உண்மையான, போதுமான அறிவைக் கொண்டிருக்கத் தவறுவதும்தான் இதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது. சுபாவத்திற்கு மேற்பட்டதோ மிக எளிமையானது, அதே சமயத்தில் மிக ஆணித்தரமானது, மிகவும் வசீகரமானது. அதை முடிந்த வரை மிகச் சிறந்த ஒளியிலும், அதன் மிகத் துணிச்சலான முறையிலும் நாம் எடுத்துக்காட்ட முயற்சி செய்வோம்.

சுபாவத்திற்கு மேலானதை வெறுப்பவர்கள் கடவுளின் வேலைகளைச் சிறு சிறு துண்டுகளாக உடைக்கிறார்கள். அவர்கள் மிகச் சிறந்ததைப் புறக்கணித்து விட்டு, மிகச் சிறிய, சற்றும் முக்கியத்துவமற்றவைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் இயற்கையையும், மனிதனையும் கடவுளின் கைவேலைகளின் ஓட்டு மொத்தக் கூட்டுத் தொகையாகவும், அவரது செயலின் ஒரே விளை வாகவும், அவரது சிருஷ்டிப்புக்கான திட்டமிடலின் முழு அளவாகவும் கருதுகிறார்கள். இயற்கையையும் மனிதனையும் கடவுளின் வேலைகளின் முழு அளவாகக் காண்பது, இயற்கை சக்திகள் மற்றும் காரணிகளையும் பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்வதற்கும், தங்கள் இறுதிக் கதியை அடைவதற்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் வேறு எதுவும் தேவையில்லை என்று சொல்வது போலாகும். இது இன்று சிலரால் ஒரு அனுமானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம்.ஆனால் பல தத்துவஞானிகள் இத்தகைய ஒரு முடிவுக்கு எதிரான வாதங்களை எழுப்புகிறார்கள். மனிதன்தான் கடவுளின் வேலைகளில் கடைசியானவன், மிகச் சிறந்தவன் என்றாலும், தன்னை வளர்த்துக்கொள்ள அவனுக்கு சுபாவத்துக்கு மேலானது தேவை என்று அவர்கள் வற்புறுத்து கிறார்கள்; ஏனெனில் சிருஷ்டிக்கப்பட்ட உண்மையை தியானிப் பதில் அறிவுள்ள சிருஷ்டிகளின் இயற்கையானதும், இறுதியானது மான கதி எட்டப்பட முடியாது--ஏனெனில் அது புத்தியின் ஏக்கத்தை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாததாயிருக்கும்-- அளவற்ற சத்தியத்தைக் கண்டு தியானிப்பதிலும் எதுவும் அலட்சியத்தின் காரணமாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை --ஏனெனில் இதுவும் அதனுடைய ஏக்கங்களைத் தணிக்க இயலாததாக இருக்கும்-- ஆனால் அது அளவற்றதாகிய சத்தியத்தின் மீதான நேரடி உள்ளொளியில் இருக்க வேண்டும். ஆகவே மனிதனின் இறுதிக் கதி, அளவற்ற சத்தியத்தை நேரடியாகக் கண்டு தியானித்துப் பேரின்பம் அனுபவிப்பதேயாகும் என்று இந்தத் தத்துவஞானிகள் வாதிடுகிறார்கள். இந்தச் செயல் சகல சுபாவ சக்திகளுக்கும் எட்டாததாக இருப்பதால், தனது சுபாவமான முடிவை அடைய மனிதனுக்கு உதவ சுபாவத்திற்கு மேலானது தேவையாயிருக்கிறது.

மனிதனின் சுபாவத்தை அதன் இறுதிநிலைக்கு வளர்க்கவும், அவனது இறுதி உத்தமதனத்தை அடைவதற்கும் இயற்கை சக்திகள் போதுமானவை என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டால், மனிதன் மட்டுமே கடவுளின் வேலைகளில் தலைசிறந்தவனாக இருந்தால் மட்டுமே அது ஒருவேளை சாத்தியமாகும்.

ஆனால் உண்மை அதுவல்ல. மனிதன் ஒரு மாபெரும் முழுமையினுடையவும், மிக விஸ்தாரமான திட்டத்தினுடையவும் ஒரு சிறு பாகமாக மட்டுமே இருக்கிறான். கடவுள் தேர்ந்துகொண் டிருப்பதும், மிகுந்த மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதுமான பிரபஞ்சத் திட்டமானது, அது மனிதனை உயர்த்துகிற அழகுக்காகவும், உன்னத நிலைக்காகவும் மட்டுமே என்றிருந்தால், அது பெருமளவுக்கு விஸ்தாரமானதாகவும், அதியற்புதமானதாகவும் இருந்திருக்கும். ஆனால் கடவுள் முதலில் சித்தங்கொண்டது, அளவுக்கு உட்பட்டதோடு அளவற்றதன் தனிப் பட்ட ஐக்கியமே. முதல் புத்தகத்தில் நாம் இதை விளக்கியபடி இதை மனிதாவதாரம் என்கிறோம். இதுவே கடவுளின் அனைத்திலும் மிகச்சிறந்த வேலையாக இருக்கிறோம். இதற்காகவே மற்ற அனைத்தும் உண்டாக்கப்பட்டன. இந்தத் தனிப்பட்ட ஐக்கியம் மேலும் இரண்டு ஐக்கியங்களை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிறது: ஒன்று மோட்சத்தில் தேவ காட்சியின் ஒன்றிப்பு, அல்லது அளவற்ற வரை அவர் இருக்கிறபடியே, அவரில் காண்பதன் நேரடி அகவொளியாகும். மற்றொன்று சுபாவத்துக்கு மேலான ஒன்றிப்பாகும்-- அதாவது, புத்தி மற்றும் சித்தம் ஆகிய சுபாவ சத்துவங்களுக்கு அப்பாலும், அவற்றிற்கு மேலாகவும் உள்ள (சுபாவத்துக்கு மேலான) புத்தி, சித்தம் ஆகியவற்றின் சக்தியைக் கொண்டு, அந்த சுபாவ சத்துவங்களின் காட்சி தியானம் மற்றும் நேசம் ஆகியவற்றை விடப் பெருமளவுக்கு மேலானதாக இருக்கிற ஒரு காட்சிதியானத்தாலும் நேசத்தாலும் அதே அளவற்றவரைக் கண்டுதியானித்து, அவரை நேசிப்பதாகும். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இப்போதுதான் தொடங்கி யுள்ளதும், வளர்ச்சி பெறாததுமான (மோட்ச) தேவ காட்சியாக இது இருக்கிறது. அவதரித்த வார்த்தையானவர் தமது தேவ ஆளுமையோடு மனித சுபாவத்தின் தனிப்பட்ட ஐக்கியம் தவிர இந்த வேறு இரண்டு ஐக்கியங்களையும் தம்மில் கொண்டிருக்கிறார். கடவுளின் மற்ற எல்லா வேலைகளும் இதற் காகவே, இதற்காக மட்டுமே உண்டாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இது மட்டுமே கடவுளுக்கு வெளியே செயல்படுவதில், கடவுளின் நோக்கத்தை அடைகிறது, இது மட்டுமே அவரது அளவற்ற மகத்துவம் மற்றும் நன்மைத்தனத்தின் அதியுன்னத வெளிப்பாடாக இருக்கிறது. ஆகவே மனிதன் கடவுளின் வேலைகளின் மொத்த அமைப்பின் ஒரு பாகம் என்ற முறையில் அதனோடு பின்னிப் பிணைந்திருப்பதாலும், இந்த அமைப்பு முழுவதினுடையவும் இறுதிக் கதி சுபாவத்திற்கு மேலான தாக இருப்பதாலும், மனிதனின் இறுதிக் கதியும் சுபாவத்திற்கு மேலானதாகவும், அதன் காரணமாக, சுபாவத்திற்கு மேலான வழிகளைக் கொண்டு எட்டப்பட வேண்டியதாகவும் இருப்பது அவசியம். 

சுபாவத்திற்கு மேலான காரியத்தின் அவசியத்தைப் பற்றிய இந்த ஒரு சில சிந்தனைகளை விளக்கிக் கூறிய பிறகு, "சுபாவத்துக்கு மேலான காரியம் என்பது, தனது காரணத்திலும், தனது சுபாவத்திலும், தனது நோக்கத்திலும், தனது இறுதிக்கதியிலும் எந்த ஒரு சிருஷ்டிக்கப்பட்ட சுபாவத்திற்கும், ஆற்றலுக்கும் அப்பாற் பட்ட, அவற்றிற்கு மேலான ஒன்று' என்று நாம் வரையறுக் கிறோம்.

அது தனது சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஒரு சுபாவத்திற்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டதாகவும், மேலானதாகவும் இருக்கிறது: ஏனெனில் கடவுள் பொருட்களின் படைப்பில் செய்வதை விட அதிகமான ஆற்றலை இதைச் செயல்படுத்துவதில் பயன்படுத்து கிறார்.

அது தனது சுபாவத்திலும் சத்துவங்களிலும் அப்படி இருப்பது ஏனெனில் சுபாவத்திற்கு மேலான காரியம் சுபாவத்தோடு சேர்க்கப்படும் ஒரு புதிய ஆற்றலாக இருக்கிறது என்பதாகும். ஆனால் இது தனது இருத்தலின் தீவிரத்தில் சுபாவ ஆற்றலுக்குப் பாரதூரமான அளவில் மேற்பட்டதாக இருக்கிறது.

தனது நோக்கத்தில்: ஏனெனில் கடவுளே இந்தப் புதிய ஆற்றலின் நோக்கமாக இருக்கிறார், புத்தியால் அறியப்படக் கூடியவராக அல்ல, சுபாவ புத்தியால் அறியப்பட முடியாதவராக அவர் இருக்கிறார்.

தனது இறுதிக் கதியில்: ஏனெனில் சுபாவத்துக்கு மேலான காரியத்தின் இறுதிக் கதி, மனிதனைக் கிறீஸ்துவோடு தொடர்பு படுத்தி, அவர் வழியாக. தேவ காட்சிக்கு, அல்லது தமத்திரித் துவத்துடனான நேரடித் தொடர்புக்குக் கொண்டு வருவதாக இருக்கிறது.