இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மகிமையின் அளவு

அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறபடி, நம் ஆண்டவரின் பேறுபலன்களின் வழியாகத் தரப்படுவதாகிய முதல் தேவ இஷ்டப் பிரசாதத்திலிருந்து விடுபட்டவையாக, இரண்டு மூல காரணங்கள் மகிமையின் அளவீடாக நியமிக்கப்பட வேண்டும், அவற்றில் ஒன்று நேரடியானது, மற்றொன்று, மற்றொரு ஊடகத்தின் வழியாக வருவது, தொலைவானது. இவற்றில் முதலாவது, இரண்டாவதில் இருந்து பொங்கி வருகிறது.

மகிமையின் நேரடியானதும், மிக அருகிலுள்ளதுமான மூல காரணம் மகிமையின் ஒளியாகும். கடவுளின் சொந்த, அளவற்ற சுபாவத்தில் அவரை முகமுகமாய்த் தரிசிக்க ஆத்துமத்திற்கு உதவும் படியாக, இது அதற்குக் கடவுளால் தரப்படுகிறது. இனி, ஓர் ஆத்துமத்திலுள்ள மகிமையின் அளவு இந்த ஒளியின் தன்மையில் இருந்து அளவிடப்பட வேண்டும்; இந்த ஒளியின் தீவிரம் எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு மகிமையும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

ஆனால் ஓர் ஆத்துமத்திற்குத் தரப்படுகிற அதிகமான, அல்லது குறைவான ஒளியின் தீவிரம், தன் பங்கிற்கு, அது இவ்வுலக ஜீவியத்தில் சம்பாதித்துள்ள பேறுபலனின் அளவைக் கொண்டு அளவிடப்பட வேண்டும். ஓர் ஆத்துமத்தின் தனிப்பட்ட பேறு பலனின் அளவுக்கே கடவுள் அதற்குத் தம் ஒளியைத் தருகிறார். 

இவ்வாறு மகிமையின் அளவு, மகிமையின் ஒளியின் அளவிலிருந்தும், மகிமையின் ஒளியின் அளவு பேறுபலனின் அளவிலிருந்தும் எடுக்கப்பட வேண்டும்.

‘என் பிதாவின் இல்லத்திலே பல்வேறான மாளிகைகள் உண்டு'' என்ற நம் ஆண்டவரின் வார்த்தைகளை இது விளக்குகிறது. அதாவது, பாக்கியவான்கள் அனைவரிலும் மகிமை சமமானதாக இருப்பதில்லை, மாறாக, மோட்சப் பேரின்பத்தினுள் தாங்கள் முதலில் பிரவேசிக்கும்போது அவர்கள் பெற்றுக்கொண்ட மகிமையின் ஒளியைப் பொறுத்து அது வேறுபடுகிறது; இந்த மகிமையின் ஒளி, ஒவ்வொருவருடைய பேறுபலன்களின் அளவைப் பொறுத்தே அவர்களுக்குத் தரப்பட்டது.

ஆகவே, ஓர் ஆன்மாவின் மகிமையைப் பற்றி ஓரளவுக்கு நாம் புரிந்து கொள்வதற்கு, அதன் பேறுபலனின் அளவை நாம் பார்க்க வேண்டும், இது அதன் மகிமையைப் பற்றிய ஓர் அக ஒளியை நமக்குத் தரும்.