இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 13. பரலோக மந்திரம் (தொடர்ச்சி)

கர்த்தர் கற்பித்த ஜெபத்தின் ஒவ்வொரு வார்த்தையைக் கொண்டும், நாம் சர்வேசுரனுடைய குண இலட்சணங்களை வாழ்த்துகிறோம்.

பிதா என்ற பெயரால் அவரை அழைத்து அவருடைய தந்தைத் தன்மையைப் பாராட்டுகிறோம்.

தந்தாய், நித்திய காலமாக நீர் சுதனை ஜெனிப்பிக்கின்றீர். உம்மைப் போல் அவரும் சர்வேசுரனாயிருக்கிறார். நித்தியராகவும் உம்முடன் ஒரே பொருளாகவும் இருக்கிறார். தேவ தன்மையில் இருவரும் ஒரே ஒன்றாயிருக்கின்றீர்கள்.

உம்முடன் ஒரே வல்லமையும் நன்மைத் தனமும் ஞானமும் உம்மைப் போலவே உம்மோடு ஒன்றாகக் கொண்டிருக்கின்றார். பிதாவும் சுதனும் ஒருவரையொருவர் நேசிக்கும் அன்பால் பரிசுத்த ஆவி புறப்படுகின்றார். பரிசுத்த ஆவியும் உம்மைப் போலவே