© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அன்பான வேண்டுகோள்...

நன்றிகள்: நமது இணையதளத்தினை ஆரம்பிக்கும்போது, தங்களது ஈடு இணையற்ற புத்தகங்களைப் பதிவேற்ற அனுமதி தந்து, இன்றும் ஆத்தும இரட்சண்யம் ஒன்றையே மையமாகக் கொண்டு இயங்கிவரும் மாதா அப்போஸ்தலர்கள் சபைக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம். 


நீயாவது எனக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு! 
- பாத்திமாவில் சகோதரி லூஸியாளிடம் மாதா கூறியது.

1917-ம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில் லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா ஆகிய சிறுவர்களிடம் தேவமாதா, உலகம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், மரியாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்யும்படி கேட்டார்கள். 1925-ல் சேசுவும் மாதாவும் சகோதரி லூஸியாவுக்குத் தனியாக காட்சி கொடுத்தார்கள். அப்போது சேசு லூஸியாவிடம்: "நன்றியற்ற மனிதர்களின் பாவ முட்களால் குத்தி ஊடுருவப்பட்டுள்ள உன் தாயின் இருதயத்தைப் பார். ஜெபமும், பரிகாரமும் செய்து இம்முட்களை (மாதாவின் வேதனைகளை) அகற்ற யாருமில்லை. நீயாவது அவர்களுக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு” என்று கேட்டார்.

இதே நோக்கத்திற்காக, மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் பக்தி முயற்சியாக நம் ஆண்டவராகிய சேசுநாதர்தாமே நமக்கு வழங்கியுள்ள முதல்சனி பக்தி தொடர்ச்சியாக தூத்துக்குடி, சகாயமாதா பட்டணத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் 1943-ல் நமதாண்டவர் சகோதரி நற்றாலியா என்ற கன்னிகையிடம், உலக ஜெயராக்கினி மாதா என்ற பெயரால் தம் அன்னைக்கு ஒரு தேவாலயம் கட்டும்படி கேட்டுக்கொண்டார். அங்கு தம் தாயின் மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எனவே மாதாவின் பிள்ளைகளே, மற்றும் அன்பர்களே! சேசுவுடையவும், மாதாவுடையவும் மகிமைக்காகவும், ஆன்மாக்களின் இரட்சிப்பிற்காகவும் மேற்கூறப்பட்டுள்ள சகாயமாதா பட்டணத்தில் உலக ஜெயராக்கினி சகாயமாதா ஆலயம் ஒன்றை விரைவில் கட்டி முடிக்க நாங்கள் தீர்மானித்து, அதற்காக முயன்று வருகிறோம். இந்த ஆலயம் விரைவில் கட்டி முடிக்க ஏதுவாக, உங்களால் இயன்ற ஜெப மற்றும் பொருள் உதவிகளை தாராள மனதோடு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம், 
மாதா அப்போஸ்தலர்கள் சபை,
ரோஸா மிஸ்திக்கா, 11/519 சகாயமாதா பட்டணம்,
2-வது தெரு, வி.வி.டி. மேல்நிலைப் பள்ளி எதிரில்.
தூத்துக்குடி - 628 002. தொலைபேசி: 0461 - 2361 989.
அலைபேசி : 94876 09983.

A/C: Name: SOCIETY OF APOSTLES OF MARY
A/C: No: 121802000000473
IFSC Code: IOBA0001218
INDIAN OVERSEAS BANK
MAPPILAIYURANI BRANCH, THOOTHUKUDI.

''இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும். உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்.''