நமது புதிய தளங்கள்...

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! எங்களுக்கு வழிகாட்டி ஊக்கப்படுத்தும் அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களின் ஆசீரோடும், எங்களோடு உடனிருந்து எங்கள் அட்மின்கள் அனைவருக்காகவும் சிறப்பாக ஜெபித்து எங்களோடு துணைநிற்கும் அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் மேலான வழிகாட்டுதல்களோடும் இன்று நமது புதிய தளங்களை வெளியிட்டு அனைத்தையும் இலவசமாகவே கத்தோலிக்க விசுவாசிகளிடம் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அருட்தந்தை கிறிஸ்டோபர் அவர்களின் சிறப்பு ஆசீரோடு பின்வரும் தளங்களை வெளியிட்டுள்ளோம். பயன்பெற அன்போடு வேண்டுகிறோம்.

1. பைபிள் இணையதளம்
(ஆதிகால கத்தோலிக்க பைபிள் முதல் பிரிவினை சபையாரின் பைபிள் வரை 11 பைபிள்கள்! ஏன்? ஒப்புமை பார்த்து நம்மவர்களும், மற்றவர்களும் உண்மையை கண்டு கொள்ளவும், பைபிள் ஆராய்ச்சியில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கவும்!).

2. சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம் கீழச்சேரி பங்கு திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் இணையதளம்.

3. பைபிள் மொபைல் அப்ளிகேஷன்

4. தெலுங்கு வானொலி இணையதளம்
உலகளவில் 320kbps HD+ தரத்தில் ஒலிபரப்பாகும் ஒரே தமிழ் கத்தோலிக்க வானொலியான நமது தேவமாதா சர்வதேச வானொலியின் தெலுங்கு வெளியீடு இது. சுமார் 20000 பாடல்களைக் கொடுத்து இன்றும் USA'விலிருந்து உதவிவரும் அருட்தந்தை ஆரோக்கிய ஸ்தனிஸ்லாஸ் சாவியோ அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

5. தெலுங்கு வானொலி மொபைல் அப்ளிகேஷன்

6. ஆடியோ சி.டி. வெளியீடு.