புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தங்கள் புண்ணியங்களை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு ஒப்புக்கொடுக்கிறவர்களுக்கு கிடைக்கும் பெரும் பலன்

ஜெர்மனி நாட்டில் ஜெர்மருத்தம்மாள் என்ற ன்னியாஸ்திரீ உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் பேரில் மிகவும்  இரக்கமுள்ளவராக இருந்ததால் அவள் படுக்கையிவிருந்து காலையில் கண் விழிக்கும்போது முழங்காலிலிருந்து "என் ஆண்டவரே! உம்முடைய கிருபையினால் இன்று முழுக்க நான் செய்கிற புண்ணியங்கள் அனைத்தையும்  உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உண்டான வேதனை சீக்கிரமாய் முடியும்படிக்கு தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன்” என்று தினந்தோறும் வேண்டுதல் செய்வார்.

தினமும் திருப்பலி ஒப்புக்கொடுத்தல், பிச்சையிடுதல், செபித்தல், தவம் செய்தல் முதலான புண்ணியங்களைச் செய்து அவற்றை உத்தரிக்கிற  ஸ்தலத்து ஆத்துமங்கள் அதிக வேதனை அனுபவிக்கிறதென்று  அறிய, இயேசுநாதரை மன்றாடிக் கேட்டு வந்தாள்.

ஆண்டவர் அவள் கேட்டுக்கொண்டபடியே அறிவித்ததனால் தான் செய்கிற புண்ணியங்களை அந்த ஆத்துமங்களுக்காக விசேஷ விதமாய் ஒப்புக்கொடுப்பார். இப்படி ஜெர்த்ரூத்தம்மாள் செய்த புண்ணிய காரியங்களால் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் அநேகம் பேர் மோட்சத்தை சென்றடைந்தனர். அவர்கள் மோட்சம் செல்லும் முன் ஜெர்த்ரூத்தம்மாளுக்குத் தோன்றி நன்றி தெரிவித்தனர்.

அவர் இவ்வாறு வெகு காலமாகப் புண்ணியங்களைச் செய்து வருகையில் பசாசு ஒன்று அவர்மீது பொறாமைப்பட்டு அவர் மனதுக்குள் ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கச் செய்தது ஜெர்த்ரூத்தம்மாள் தனக்குள் நான் சிறிதுகாலத்துக்குள் இறந்து விடுவேன் ஆண்டவரின் தயவினால் நான் பல  ஆண்டுகளாகவே நிறைய புண்ணியங்களைச் செய்தாலும் நான்  அவற்றையெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு ஒப்புக்கொடுத்தேனேயல்லாது என்னுடைய பாவங்களுக்கு  பரிகாரமாக நான் எந்தப் புண்ணியத்தையும் செய்யவில்லை எனவே பிற ஆத்துமாக்கள் என்னால் வெகுகாலம் வேதனைப் படாமல் காப்பாற்றப் பட்டன ஆனால் என் ஆத்துமம் வெகுகாலம் நெருப்பில் துன்பப்பட வேண்டியிருக்குமே  ஒருவேளை நான் பைத்தியக்காரத்தனமாக நடந்து விட்டேனோ?' என்று கேட்டுக் கொண்டவராய் மிகப் துயரப்பட்டார்.

ஜெர்மருத்தமாளின் எண்ணத்தை உணர்ந்த ஆண்டவர் இயேசு அவருக்குக் காட்சி தந்து "என்ன உன் துயரம்?" என்று கேட்டார். அவரோ, "ஆண்டவரே! தேவரீர் உம் உதவியினால் நான் செய்த புண்ணியங்களையெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக ஒப்புக்கொடுத்தேன்  என்பது உமக்குத் தெரியுமே. நான் இறந்துவிட்டால் என் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒரு புண்ணியம்கூட ஒப்புக்கொடுக்கப்பட்டது என்று சொல்லக்கூட வழியில்லை. இதனால்தான் அநேக காலம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படுவேனென்று அஞ்சுகிறேன்" என்றார்.

இதைக் கேட்ட இயேசுவோ “என் மகளே, நீ செய்கிற புண்ணியங்களையெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்கு ஒப்புக்கொடுத்த உன் நற்குணத்தினால் உன்பேரில் நான் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறேனென்பதை நீ தெரிந்துகொள்ள ஒரு செய்தி சொல்கிறேன் கேள். உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களைக் குறித்து நீ செய்த உதவிகளையே உனக்கும் பலனாக்கி நீ உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனுபவிக்கவிருக்கிற துன்பங்களையெல்லாம் பொறுத்தருள்வேன்.

மேலும் மோட்சத்தில் உனக்கு பெரும் பாக்கியம் கிடைக்கச் செய்வேன். நீ இறந்து மோட்சத்துக்குச் செல்கையில் உன்னை வரவேற்க உன்னுடைய புண்ணிய காரியங்களால் ஈடேற்றம் பெற ஆன்மாக்களும் உன் எதிரில் வந்து மகிழ்ச்சியோடு   என்னை மோட்சத்துக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிடுவேன்” என்று திருவுளம் பற்றி மறைந்தார்.

கிறிஸ்தவர்களே! உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் பேரில் பசாசு பொறாமை கொண்டு உங்களால் அந்த ஆன்மாக்களுக்கு உதவி ஏதும் போய்ச் சேராதபடி உங்களைத் தடுத்து நிறுத்தப் பார்க்கும். இப்படிப்பட்ட நிலை ஜெர்த்ரூத்தம்மாளுக்கு ஏற்பட்டபோது எப்படி அதை ஆண்டவர் உதவியால் மீண்டு வந்தாரோ, அப்படியே நீங்களும் ஆண்டவர் இயேசு திருவுளம் பற்றின வார்த்தைகளை மனதில் பதித்துக் கொண்டு பசாசின் திசை திரும்பும் எண்ணங்களைத் தள்ளிவிடுங்கள். உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு தொடர்ந்து உதவுங்கள்.

அப்போதுதான் எந்த அளவையால் பிறருக்கு நீங்கள் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் என்ற இயேசுவின் வார்த்தைகள் உங்கள்  வாழ்விலும் இறப்புக்குப் பின்னும் பொருத்தமுடையதாக அமையும்