இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - ஊர்

எழுசீராசிரிய விருத்தம். 

நயமான எண் ணூர் பணிவாக நின்று
நனிநாக ரேத்து புகழோன்
வயனாக வேரி மதுமாலை சூசை
வளமான ஊளரை வினவில்,
பயனான தொண்டை வள நாடனைத்தும்
பரிவாக தொண்டு புரியும்
வியனாக நீண்ட தெருவூடு சோலை
விரிகின்ற எண்ணு ரதுவே,

நேரிசை வெண்பா.

அச்சுத் தொழில்புரியும் ஆண்டகையி னாருடனே
தச்சுத் தொழில் புரிந்த தன்மையோ?- இச்சித்
தழுதாலும் ஏனென்னாய் ஐயா வென்றெண்ணூர்
தொழுதாலும் ஏனென் னாய் சூழ்ந்து.

மடக்கு- கட்டளைக்கலிப்பா.

சூழ்ந்த தும்மலர் மேவும் பராகமே
சொந்த மானது மேவும் பராகமே
வீழ்ந்த தும்பல வீனமா தங்கமே
வெறுத்த தும்பல வீனமா தங்கமே
ஆழ்ந்த தும்புன லாம்புரிக்கஞ்சமே
அடுத்த தும்பல போர் புரிக் கஞ்சமே
வாழ்ந்த துந்திரு எண்ணூரின் தானமே
வழங்கி நின் றதும் எண்ணூரின் தானமே.