புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏலாக்குறிச்சி தூய அடைக்கல அன்னை பதிகம் மன்றாட்டுகள் - என்னுரை

பொன்னி நதி பாயும் கன்னித் தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டத்தில் கும்பகோணம் மறை மாவட்டத்தைச் சார்ந்துள்ள ஏலாக்குறிச்சி என்னும் சிற்றூர், கொள்ளிட நதியின் வடகரையில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலையிலுள்ள திருமானூரின் கிழக்கே ஏறத்தாழ 5 கல் தொலைவில் உள்ளது.

இந்தத் திருத்தலத்திற்கு யான் 1971 ஆம் ஆண்டு சென்றிருந்தேன். வீரமாமுனிவர் வாழ்ந்த அந்தத் திருத்தலத்தைக் கண்டு மகிழ்ந்தேன். அங்குத் திருக்கோயில் கொண்டிருக்கும் அடைக்கல அன்னையைக் கண்டு சிந்தை மகிழ்ந்து என் உள்ளமெல்லாம் உவகை பொங்க முனிவர் இயற்றியருளிய திருக்காவலூர்க் கலம்பகம் என் நாவு இனிக்கப் பாடி மகிழ்ந்தேன்.

முனிவருக்குப் பின் தொடர்ந்து மறைத் தொண்டு ஆற்றிவரும் மறைத் தொண்டர்களின் சேவைகளையும் கண்டு மிகவும் பெருமை அடைந்தேன். ஆயினும் முனிவருக்குப் பின் தூய மரியன்னை மீது யாரேனும் ஒரு பதிகம் பாடியுள்ளார்களா? என்பதை யான் அறிந்த வரையில் தெரியவில்லை இக்குறையை, தஞ்சைப் பெரும் புலவர் திரு. தாமசு உடையார் அவர்கள் நிறைவு செய்துள்ளார்கள் அன்னவருக்கும், அணிந்துரை வரைந்து கொடுத்த பன் மொழிப் புலவர் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரிப் பேராசிரியர் திரு. பா. வளன் அரசு M.A. அவர்களுக்கும், எமக்கு எவ்வேளையிலும் உடன் இருந்து உதவிவரும் தூய வளனார் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் திரு. ந.ம. அருள் பிரகாசம் M.A. அவர்களுக்கும், திருக்காவலூர் ஏலாக்குறிச்சி பங்குத்தந்தைY.அந்தோனிசாIMA.BT. அவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக! 

மரியன்னை பக்தன்