புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேவமாதா அம்மானை - அவையடக்கம்

விருத்தம். 

கர்த்தனைப் பயின்ற தாயார் காதையைவழுத்து தற்குப் 
புத்தியற்றேன்றொடங்கிப் புறப்பட்டேனெனினுமந்தச் 
சுத்தமாஞ்சரித்திரத்தைச் சுகிர்தமென்றெண்ணிக்கொண்டு 
மெத்திய குற்றமெல்லாம் விலக்குவர் மேலோர் தாமே.

அம்மானை

எண்ணும்மனோவாக்குக் கெட்டாப்பராபானைப் 
புண்ணிய ஆலயமாய்ப் பூதலத்தில்வைத்திருந்த 

மன்னன் தாவிது மகாராசவங்கிஷத்தாள் 
கன்னியர்க்கு நாயகமாய்க் கற்போடிருந்தகதை

உள்ள வுயிரெல்லா மொருவாக்காய்ச்சொன்னாலும் 
தெள்ளிய நன்னீதி செறிதரையிற் சொல்லரிது 

நீதிமறையின் நிகழ்த்தரியகாரணங்கள் 
ஓதும்பொழுதிவ் வுலகமுங்கொள்ளாது 

ஆனாலுங்கன்னிமரி யம்புவியிற்றேன் றியதும் 
வானாதிதாயார் வயிற்றிலுதித்ததுவும் 

இந்தவுலக மிவளாலீடேறியதுவும் 
எந்தவிதமென்றுணர யான் சிறிது சொல்லுகிறேன் 

புத்தியில்லான் சொல்லைப் பொதுச்சபையிலுள்ளவர்கள்
பக்தியினாலே பொறுக்கப் பாதம்பணிந்து கொண்டேன் 

வானும்புவியும் வரை திரையும்மற்றுயிரும் 
தானேபடைத்த சருவதயாபரனார் 

உண்டாக்கும் போதிவளால் உலகமீடேறுமெனக் 
கண்டேமனதிற் கருதியகன்னிகையை

நாவிற்றரித்து நமஸ்கரித்து நாதனருள் 
பாவிற்பதித்திடவே பல்லோருங்கேட்டருளீர்.