புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - இரங்கல்

அறுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்.

பெற்ற தெலாம் அடியார்க்குத் தாவிருக்கு மெண்ணூரின் பெரியீர்! கேளீர்
கற்றதெலா மகற்குரைத்தீர் கன்னியெனு, மனையாட்குங் காவல் செய்தீர்
பற் றறவே பேச்சிலைகள் தகர்ந்துவிழத் திருவிழி பின் பார்வை தந்தீர்
உற்றவெனக் கென் தந்தீர் உம தடியே நச்சிநின்ற உண்மையாலே.

இரங்கல்.

கட்டளைக் கலித்துறை. 

நச்சுத் தொழிலரை யாட்கொளு மெண்ணூர் நரா திபரே!
அச்சுத் தொழில்செய் மகனையும் நல்ல அடியவர்க்காப்
பிச்சுத் தொழில்செய் கனியையும் விட்டுப் பிரியாமலே
தச்சுத் தொழில்புரிக் தில்ல றங் காத்ததென்? சாதனமே.

நேரிசை வெண்பா. 

சாமி பிறப்பதெங்கே தாய்மரிக்குக் காப்பெங்கே
பூமிபுரப்ப தெங்கே பொன் னெங்கே-நேமிவளர்
காட்டிற் றவத்தைக் கருதிசென்ற எண்ணூரார்
நாட்டில் வராவிடிலோ நன்கு.