புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - காட்சி

கைக்கிளை மருட்பா. 

தாதரும்புஞ் சோலை தவழெண்ணூர்ப் பொன்மலைமேல்
போதரும்புந் தீந்தேன் பொதும்பரின் கீழ் சீதக்
கரும்புயல் சுமந்து பெரும்பிறை யணிந்து
குமிழ்மிசை மறிந்து குழையெதிர் நடந்து
இருகணை தொடுத்த இ ருசிலை புனைந்து
வள்ளை யும் பவள வள்ளமு முத்தும்
அமைந்க கஞ்சமுஞ் சுமந்த சங்கமும்

இருபசுங் கழையும் இரு:பசுங் காந்தளும்
சுமந்ததோர் பொற்கொடி அமர்ந்திரு கமலமேல்
நின்றது கற்பக நீழலி னருகே
வியப்பிது என்னே விளங்கு மாறே.

கட்டளைக் கலித்துறை.

ஆறிருந் தம்பொன் மணிக்கு மெண் ணூர் அருந்தவனே!
மாறிருந் தைவர் பதிவிருக் கென் றனை வாட்டுகின்றார்
வேறிருந் தஞ்சொன் மடவாகுஞ் சேர்ந்து விரட்டுகின்றார்
தேறிருஞ் சோலைத் தனிமரம் தோப்பெனச் சேர்வரிதே.

வெண் கலிப்பா,

சேல்செய்த மதர்விழியார் சிலை செய்த முதலழகார்
மால் செய்த குழ லுடையார் மணியாங்க நிறைதோறும்
புரிமுறுக்கி னிசைகாம்பேழ் புதுக்கியயாழ் விர லுளறச்
சுரிமுகத்தின் குரலெடுத்துத் தொனித்தபல சுரப்பாடல்
அருகிருந்த புதுப்பூவை அமிழ் தயின்று தமிழ் பயில
முருகிருந்த வாவிந்த முகைவிரியு மணமணக்கும்
திருவெண் ஊர்த்திருக்கோயில் திருவடியான் திருவடியார்க்
கருள் வாங்க ளினை த்தென்ன எவர்மனத் தா னினைவாரே.

நேரிசை வெண்பா.

நினையாப் பிழையும் நின தடியை நாளும்
புனையாப் பிழையும் புதுமை-தனை யெடுத்துச்
சொல்லாப் பிழையினையுஞ் சூழ்ந்தெண்ணூ ராய் பொறுப்பாய்
எல்லாப் பிழையும் இனிது.

இரங்கல் தாழிசை.

இனியாது சொல்வன்? இனியாது என் சொல்
இனிமேலும் நம்பலழகோ?
கனியாது நின்ற மரமீது கற்கள்
கலவாது என்பரறிஞர்
முனியாது இன்னும் மொழி கூறிலென் னே
முனியாத பேரு முளரோ?
தனியாக எண்ணூர் வழிபோக வென்னில்
தகுமான பருவமிலையே,

எண் சீராசிரிய விருத்தம்.

இயலொன்று பலகலைகள் தெரிந்தாரேனும்
இனியகவி மழைபுரையப் பொழிந்தாரேனும்
மயலொன்று பொருள்கோடி படைத்தாரேனும்
மகுடமுடி சூடியுல காண்டாரேனும்
கயலொன்று புயல் பாய்ந்து மடையுடைத்துக்
கமலவி தழ்த் தோடரித்துக் கமழுந்தெய்வ
வயலொன்று மெண் ணூர் வாழ் பெரியோன் றன்னை
வணங்காரைப் பொருளென்று மதித்திடோமால்,

நேரிசை வெண்பா.

மதிக்குடையா யெண்ணூராய் வாழ்விக்கு மன்பர்
துதிக்குடையாய் வானோர் சுகிக்கும் - பதிக்குடையாய்
பாடினே னுன்னைப் பணிந்தே னெனைக் காக்கச்
சூடினே னுன் மலர்த்தாட் சூட்டு.

எண்சீராசிரிய விருத்தம்.

சூசையென்போன் முன்னொருவன் பார்வோன் கண்ட
சொப்பனத்தில் பலாபலனைச் சொன்னதாலே
ஆசையுடன் வேந் தவனைத் தனது நாட்டுக்
கதிபதியாக் கிப்பெருமை யளித்தாற்போலச்
சூசையெனு நீதெய்வ மகற்கும் தாய்க்குக்
துணை புரிந்த தா லுனக்கே தூயநாதன்
காசினியை முழுதாளும் பெருமை தந்த
காரணத்தை யுன்னிலது களிக்கும் பேறே.

நேரிசை வெண்பா.

பேர்பெற்றான் சூசை பெருகுவளத் தெண்ணூரென்
ஊர் பெற்றான் தேவசுத னோர் மகனாஞ் - சீர்பெற்றான்
உற்றான் மலர்க்கொடியோ டோர்கொடியை யென்னிலெவர்
பெற்றா ரிவன் பெற்ற பேறு.

நிலமண்டில ஆசிரியப்பா.

இமிர் தருவயலிற் றவழ்பெருஞ் சங்கம்
ஈன்ற வெண்டாளங் கான் றவெள் ளொளியால்
ஆம்பல் வாயவிழ்ந்த தேம்புனல் பரந்து
செந்நெல் விளைக்கும் திருத்தகு நன்னா

டெசித்தினிற்பஞ்ச மேழுவருடமாய்
வருத்தவே யுயிர்கள் வதைவது கண்டு
மன்னவன் பார்வோன் வழங்கிய மேன் மையால்
அருண்மடை திறந்த தனையசெங் கண்ணாள்
முன்னொரு சூசை முறை முறையாக
படியளந் துயிர்களைப் பாதுகாத்ததுபோல்
பின் னொரு சூசை நீபிறந்ததனால்
பற்பல வகையிற் பரவியபஞ்சப்
பரப்பினி லடியார் படுந்துயர்க் கிரங்கி
அத்தனேயுனக்கு அருளிய வாத்தால்
இத்ததி காக்கவென் றெண்ணியே யெண்ணூர்
வந்தனமெங்கள் மனக்குறை தீர்ப்பாய்
சந்தத முனக்கே சரண்புகுந் தனமே.

நேரிசை வெண்பா, 

சரணம் புகுந்தாரைத் தாபரிக்கு மெண் ஊணூர்க்
கருணை யுடையானைக் கண்டால் அரணியபல்
பத்தி வரும் புத்திவரும் பன்னு கலைஞான
சித்திவரும் எந்நாளுஞ் சேர்ந்து

கட்டளைக் கலித்துறை. 

சேவிக்கும் வானவர் கொண்டாடு மெண்ணூர்த் திருத்தகைமேல்
பாவிக்குட்பாவியேன் சொன் னே ன் கலம்பகப் பாட்டெனது
ஆவிக்குள் சேசு மரி சூசை மூவர் அமர்ந்திருக்க
மேவிக்கண் மூடுஞ் சாம தசையில்வான் வீடு றவே.

முற்றிற்று.